நேசம் மறவா நெஞ்சம்-31Nesam Marava Nenjam(Final)

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-31



கயலுக்கு பரிட்சை ஆரம்பிக்க ஒரு வாரம் இருக்கையில் ஹால்டிக்கெட் கொடுக்கவும் கண்ணன் கயலை கூட்டிச்சென்று வாங்கி வந்தவன்..... அவளை படிக்கட்டும் தான் தொல்லை செய்யக்கூடாது என தன் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு கயலை விட்டு தள்ளியிருந்தான்......கயலுக்குத்தான் என்னவோ போல இருந்தது....... இவ்வளவுநாள் கண்ணன் கைபிடியிலேயே இருந்துவிட்டு இப்போது தள்ளியிருப்பது கஷ்டமாகவே இருந்தது....... இவரு வேணும்னா கட்டிப்புடுச்சுக்குவாரு.... அப்புறம் தள்ளியிருப்பாரு.... இனிமே கிட்ட வரட்டும் இருக்கு அவருக்கு........கயல் கண்ணன் மேல் கடுப்புடன் இருந்தாள்....



பரிட்சைக்கு கண்ணன் தான் கூட்டிச்சென்று கூட்டிவந்தான்..... கயலும் ஏதும் பேசாமல் இருக்கவும் கண்ணன் படிப்பு டென்சனில் இருப்பதாக நினைத்துக்கொண்டான்..... தேவைக்கு மட்டுமே பேசிக்கொண்டனர்......பரிட்சை அன்றுடன் முடியவும் கண்ணன் காலையில் வண்டியில் கூட்டிச்செல்கையில்...

“ என்னடி.... இன்னையோட பரிட்சை முடியுதா......”என்று சீட்டியடித்தபடி வர.....



“ஆமா மத்தியானம் நீங்க கூப்புட வரவேணாம்.... நான் அமுதாவோட எங்க அம்மாவீட்டுக்கு போறேன்.....”



வண்டியை கீரிச்சிட்டு நிப்பாட்டியவன்......” எதுக்கு .... என்ன விசயமா உங்க அம்மா வீட்டிக்கு போற..... என்கிட்ட கேட்டியா.....”



“அத்தைக்கிட்ட கேட்டுட்டேன்....”

“அத்தைகிட்ட கேட்டியா..... அவுகளா உனக்கு தாலி கட்டியிருக்காக..... நான்தான் தாலிகட்டியிருக்கேன்……”



போய்யா போ.....போ.. இவருக்கு வேலையில்லனா மட்டும் என்னைய கொஞ்சுவராம்... நாம இவரு என்ன சொன்னாலும் கேக்கனுமாம்.... என்று மெதுவாக முணங்கி கொண்டுவர..... கல்லூரிக்கு வந்தவன்....

“.என்ன என்னமோ பேசுற... காதுல கேக்குறமாதிரி பேசு உனக்கு மட்டும் கேக்குறமாதிரி பேசுனா என்ன அர்த்தம்....”



அப்போது பஸ்ஸில் இருந்து அமுதா இறங்கிவர.... கயல் கண்ணனை கண்டுகொள்ளாமலேயே சென்றாள்......



கண்ணனோ... இவ நம்ம மேல கோபமா இருக்காளா.....அடிப்பாவி ஒரு மனுசன் மெனக்கட்டு வேலையை விட்டுப்புட்டு காலேஜ்க்கு கூட்டிட்டு வாரானேன்னு இல்லாம... அம்மா வீட்டுக்கு போறாளாம்ல.... நாம பக்கத்து ஊருல பொண்ணு எடுத்துருக்கவே கூடாது.... அதுதான் இப்புடி பொசுக்கு பொசுக்குன்னு ஊருக்கு போறேன்னு சொல்லுறா.... பாப்போம்டி நீ எப்புடி ஊருக்கு போறன்னு..... என்றபடி கடைக்குச் சென்றவன் பரிட்சை முடியும் நேரத்தில் கரெக்டாக காலேஜ் வாசலில் நின்றான்.....



அமுதாவும் கயலும் பேசிக்கொண்டு வந்தவர்கள்.... கண்ணனை பார்க்கவும் அவன் அருகில் வந்தார்கள்....” என்னண்ணே இவ என்னோட ஊருக்கு வாரேன்னு சொன்னா.... அப்புறம் ஏன் நீங்க வந்திருக்கிங்க.....”



“ஆமாத்தா அவ ஊருக்கு போகட்டும்... நான் பாக்க வந்தது உன்னையதான்.... உங்க வீட்ல மாப்புள பாத்துட்டாங்களாம்ல..... ஜாதகம் எல்லாம் பொருத்தமா இருந்துச்சுன்னு கேள்விபட்டேன்.... மாப்புளய புடிச்சிருக்கா....”

“ம்ம்ம்..... அம்மா அப்பாவுக்கு புடிச்சா போதும்ணே......”

“நீ இப்புடி சொல்லுற... ஆனா உன்னைய பொண்ணு பாத்துட்டு போயிட்டு உன்னோட வாயால சம்மதத்தை சொன்னாதான் ஆச்சுன்னு ஒருத்தன் என்னைய தொந்தரவு செஞ்சுகிட்டு இருக்கான்மா.....”



“அவரு உங்களுக்கு தெரிஞ்சவராண்ணே.....”



“ம்ம்ம் அவர கயலுக்கும் தெரியும்தா....”

கயல்...திருதிருவென விழித்தபடி இருந்தாள்... இவரு எப்ப நம்மகிட்ட சொன்னாரு... இவுக ரெண்டுபேரும் என்ன பேசுராங்கன்னே தெரியலயே......



“அவனும் என்னோட ப்ரண்ட் தாம்மா....” போன் பண்ணி வரச்சொல்ல... அந்த டைரக்டர்தான் மாப்பிள்ளையே......அமுதா வெட்கப்பட்டுக்கொண்டே கீழே குனிய.....



“வாங்க ரோட்டுல நின்னுகிட்டு பேச வேணாம் ஏதாச்சும் ஒரு ஹோட்டலுக்கு போவோம்...”.என்றபடி பக்கத்திலிருந்த ஹோட்டலுக்கு சென்றார்கள்... ஆண்கள் இருவரும் வண்டியில் செல்ல பெண்கள் நடந்தே வந்தார்கள்.....நால்வரும் வர கண்ணன் தன் பக்கத்தில் இருந்த சேரில் கயலை அமர வைக்க.... அமுதாவும் கண்ணனின் நண்பனும் அருகில் அமர்ந்தார்கள்.......அமுதாவிடம் சம்மதத்தை வாங்குவதற்காக மெதுவாக பேச ஆரம்பிக்க...

.கண்ணன் மெதுவாக கயலை பிடித்தவன்...” வா......நாம அங்கிட்டு போயி உக்காருவோம்” என்றபடி வேறிடம் கூட்டிச்சென்றவன்.... தன் நண்பனிடம் கண்ணை காட்டிவிட்டு செல்ல..... அமுதாவுக்கு சற்று தள்ளி அவளுக்கு முதுகை காட்டியபடி கயல் அமர.... கண்ணன் அவர்களை பார்த்தபடி அமர்ந்திருந்தான்...... கண்ணன் கயலை பார்த்தபடி ஒன்றும் சொல்லாமல் இருக்க......கயலுக்கு வாய் பேசாமல் இருக்கவும் சுற்றிமுற்றி பார்த்தவளுக்கு தூக்கம் சுழற்றியது...... இவரு ஏன் பேசாம இருக்காரு..... இந்த அமுதா கொரங்கு வீட்ல மாப்ளே பாத்திருக்குன்னு சொல்லவேயில்லயே.... இருடி மகளே பஸ்ல வருவீல உன்னைய பாத்துக்குறேன்... என்று மனசுக்குள் கறுவியவள்.....பேசாமல் அந்த சமோசாவை எடுத்து சாப்பிட்டாள்..... பத்து நிமிடம் கழித்து பஸ்ஸுக்கு நேரம் ஆகவும் அமுதாவை திரும்பி பார்க்க அவர்கள் இருந்த மேஜை காலியாக இருக்கவும் படக்கென்று எழுந்தவள் அமுதாவுக்கு போன் பண்ன போக....



“இப்ப யாருக்கு போன் பண்ண போற.....”



“இந்த அமுதா கொரங்குக்குதான்..... சேந்து ஊருக்கு போலாமுன்னு சொன்னேன்.... பஸ்ஸு வரப்போகுது.......அவள ஆளக்காணோமே.....”



“அவ அப்பவே போயிட்டா.... உங்க ஊரு பஸ்ஸுல எம்ப்ரண்ட் இந்நேரம் ஏத்திவிட்டுருப்பான்.... வா நாம நம்ம வீட்டுக்கு போவோம்.....”என்றபடி வண்டியை கிளப்ப....
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கயல்..... மூஞ்சியை தூக்கிவைத்தபடி...கண்ணனோடு வண்டியில் சென்றாள்..... இந்த அமுதா பக்கி.... தனக்குன்னு ஒரு ஆளப்பாக்கவும் நம்மள இப்புடி கழட்டிவுட்டுட்டாளே.....

அவளுக்கு என்ன தெரியும் கண்ணன்தான் அமுதாவை போகச்சொன்னான் என்று.....



வீட்டுக்கு வந்தவர்கள்... எப்போதும் கண்ணன் வாசலில் விட்டுவிட்டு கடைக்கு சென்றுவிடுவான்....பரிட்சை என்பதால் மதியமே கயல் வந்துவிடுவாள்...... முத்துவும் ராமனும் மாலையில்தான் வீட்டிற்கு வருவார்கள்....பின்னாலேயே கண்ணன் வரவும்.... இவரு எதுக்கு இப்ப வாராரு....கடைக்கு போகலையா என்று நினைத்தவள் அத்தை.... அத்தை... என்று வீடுமுழுவதும் தேட....

கண்ணன் ஒன்றும் சொல்லாமல் மாடிக்கு சென்றவன்.... சட்டையை கழட்டிவிட்டு கைகால் முகத்தை கழுவிவிட்டு வந்தவன்.....” சாப்பாடு எடுத்து வை..... எனக்கு நேரமாச்சு..”



“இல்ல அத்தய காணோம்......”



“அம்மா தோப்புக்கு போயிருக்காங்க..... இன்னைக்கு தேங்கா வெட்ட ஆள்வந்திருக்கும்.... வா எனக்கு பசிக்குது.......”



ஐய்யோ பாவம் ..... பசிக்குதா.... ஏண்டி கயலு உனக்கு அறிவே இல்லடி..... பாவம் கஷ்டப்பட்டு வேலை பாத்துட்டு வாராக...... நாம இப்புடி குத்துகல்லு மாதிரி நின்னுகிட்டு இருக்கோம்.....என்று நினைத்தவள் வேகமாக சாப்பாடு எடுத்து வைக்க..........



“நீயும் சாப்புடு.....”



“இல்லை எனக்கு பசிக்கல... நான் அத்தே வந்தவுடனே சேந்து சாப்புட்டுக்குறேன்....”.



“அம்மா வர இன்னும் ரெண்டுமணி நேரமாச்சும் ஆகும்டி.......நீ சாப்புடு”



“பரவால்ல...அத்தே வரட்டும்...”

“ம்கூம்.... நீயெல்லாம் அடங்கவே மாட்ட....”..என்றவன் சாப்பிடவும் வெளிக்கதவை சாத்திவிட்டு கயலை தூக்கிக்கொண்டு மாடிக்குச் செல்ல......



அவனோடு வர முரண்டுபிடித்தவள்....”. என்ன எப்ப பாத்தாலும் சின்னபுள்ள மாதிரி தூக்கிகிட்டே போறிங்க......”



“ஓஓஓ..... அப்ப நீ வளந்திட்ட...”.

“ஆமா.... நான் இப்ப காலேஜே முடிச்சிட்டேன்ல.....”.



கயலை கட்டிலில் விட்டவன் அவள் மேல் படர்ந்தபடி” அப்ப ஏண்டி சின்னபுள்ள மாதிரி காலையில இருந்து மூஞ்சிய தூக்கிவச்சிகிட்டு திரியுர.....”.



அதுவரை கண்ணன் அணைப்பில் தன்னை மறந்து கொண்டிருந்தவள்...... கணவன் கேட்கவும்தான்.... நாம எதுக்கு இப்ப இவருமேல கோபப் பட்டோம் என யோசித்தவள்....... ஒரு கையால் அவள் மேல் அலைந்து கொண்டிருந்த கண்ணன் கையை பிடித்தவள் மறு கையால் முத்தமிட்டு கொண்டிருந்த அவன் வாயை அடைத்தவள்....” கொஞ்ச நேரம் சும்மா இருக்கிங்களா......... எனக்கு எதுக்கு கோபம்னு மறந்து போச்சு.........”



அவள் மேலிருந்து சற்று தள்ளி படுத்தவன் சிரித்து கொண்டு..... “என்னது கோபபட்டது எதுக்குன்னு மறந்து போச்சா.... அப்பநான் தான் தேவையில்லாம ஞாபகப் படுத்திட்டனா.....”



“ம்ம் ஞாபகம் வந்துருச்சு.... இப்ப எதுக்கு என்னை தொட்டிங்க..... பதினைஞ்சு நாளு எம்பக்கத்துல கூட வரமாட்டேன்னு தானே இருந்திங்க..... அப்புடியே இருக்க வேண்டியதுதானே..... இப்ப ஏன் என்கிட்ட வந்தீங்க…….. போங்க……… நான் எங்க அம்மாவீட்டுக்கே போறேன்... நீங்க இங்க இருங்க.......”



“அடிப்பாவி...... இதுதான் கோபமா.... நானே இந்த பதினைஞ்சு நாளா உனக்கு பரிட்சைன்னு எவ்வளவு கஷ்டப்பட்டு தள்ளியிருந்தேன்...... உன்னையெல்லாம் யோசிக்கவே விடக்கூடாதுடி..... யோசிச்சாதான் புத்தி இப்புடியெல்லாம் போகுது.... நீ சாதாரணமாவே இருத்தா அதுதான் மச்சானுக்கு சேப்.....”



இந்த பதினைஞ்சு நாள்பிரிவை கண்ணன் வன்மையாக காட்ட..... இத்தனைநாள் கயலை மென்மையாக கையாண்டவன்..... இன்று கண்ணன் வன்மையில் முதலில் மிரண்டவள் இப்போது கயலுக்கும் இது தேவையாக இருந்தது..... இருவராலும் ஒருவரை ஒருவர் விடவே மனசில்லை.....

“இனிமே ஊருக்கு போவேன்னு சொல்லுவியா......” என்றபடி அவளை பேச விடாமல் இரு கன்னத்தையும் கடித்து வைக்க.....
“போங்க “என்றவள் அவன் வெற்று மார்பில் தன் கன்னத்தை தேய்த்து கொண்டிருந்தாள்.....


ஒரு மாதம் ஒரு நொடியாக கழிய... கண்ணன் வீட்டுக்குள் வரும்போது கீழே கயலை காணவில்லை..... சாவித்திரிதான் கண்ணன் வரவும் அவன் வாயில் சீனியை அள்ளி போட்டவள்.........” என்னமா ஒரே சந்தோசமா இருக்கிங்க....... “



“பின்ன எனக்கு பேரனோ... பேத்தியோ வரப்போகுதுல்ல..... அதான்......”

கண்ணனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை....... அவன் மனசு அவன் வசத்தில் இல்லை..... கண்ணாலே கயலை தேட....



“புள்ள மாடியில இருக்குப்பா......போய் பாரு....”



ம்ம்...இரண்டிரண்டு படியாக தாவி மாடிக்கு சென்றவன்....மாடி கதவை திறக்க கயல் கட்டிலில் படுத்திருந்தாள்.... அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்தவன் அவள் முகத்தை வருடிக்கொடுக்க.... கண்விழித்த கயல் கண்ணனை பார்க்கவும் .......” என்னடி மச்சானுக்கு பொம்பளபுள்ள பெத்துகுடுக்க போற போல........”

கயல் வெட்கப் பட்டுக்கொண்டே...... முகத்தை மூட........”என்னடி இன்னும் வெக்கம் வருது......”அவள் நெற்றி.ல் முத்தமிட்டவன்........ கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்க..... அங்கே இருவருக்குள்ளும் ஒரு சந்தோச சங்கீதம் கேட்க ஆரம்பித்தது....

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஐந்து வருடங்கள் கழித்து......



இரவு எட்டு மணியிருக்கும் கண்ணன் வீட்டுக்கு வர கண்ணன் மகள் சௌந்தர்யா வாசலில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்திருந்தாள்...தன் குலதெய்வம் சௌந்தரநாயகி அம்மன் பெயரையே தன் மகளுக்கு வைத்திருந்தான்...அப்புடியே கயலின் மறுஉரு..... குணமெல்லாம் கண்ணன் கயலின் கலவை........கண்ணன் வண்டியை நிப்பாட்டிவிட்டு வர ஓடிச்சென்று தன் தந்தையின் காலை கட்டிப்பிடிக்க தன் மகளை தூக்கிப்போட்டு முத்தமிட்டவன்......” என்னடா வாசல்ல வந்து உக்காந்திருக்கிங்க......”



“ம்ம்... அதுவா.... எதுக்கு “என்று யோசித்தவள்..... “அப்பா எனக்கு மறந்து போச்சு... இருங்க” என்றவள் மீண்டும் வாசல்படியில் சென்று அமர்ந்து அதே போசில் யோசிக்க. ..கண்ணனுக்கு சிரிப்பு தாங்கவில்லை...... “அப்பா ...... அம்மா திட்டுனாங்க.....”



“எதுக்குடா...” என்றபடி அவளை தூக்கியபடி வீட்டுக்குள் செல்ல.... சாவித்திரியை பார்க்கவும் அப்பத்தா.... என்றபடி அவரிடம் ஓடினாள்.......சௌந்தர்யா இங்கு அனைவருக்கும் செல்லப்பிள்ளை.....தன் குடும்பத்து மேல் பாசம் என்றால் அப்படி ஒரு பாசம்.... சித்தப்பாக்கள் என்றால் உயிர்...... எந்த நேரம் பாத்தாலும் ஒவ்வொரு இடமாக ஓடிக்கொண்டே இருப்பாள்..... அவளுடைய் கொலுசு சத்தம் கேட்காவிட்டால் அவளை அனைவரும் தேட ஆரம்பித்துவிடுவார்கள்..... சாவித்திரிக்கு தன் பேத்தியை ஒருநிமிடம் கூட விட்டுட்டு இருக்கமாட்டார்...... இன்னும் இரண்டுநாளில் ராமனுக்கும் மல்லிகாவுக்கும் திருமணம்.... வீடெங்கும் உறவினர்கள்........ ராமன் தன் அண்ணியிடம் சொல்லியே ..... மல்லிகாவை பெண் கேட்கச் சொல்லியிருந்தான்.... கயலுக்கு ரொம்பவே சந்தோசம் தன் தங்கையும் தன்வீட்டுக்கே வருவது ராமனும் மல்லிகாவை விரும்புவதாக சொல்லாமல் முறைப்படி பெண்கேட்டு பின் திருமணத்திற்கு பின் மல்லிகாவிடம் தெரிவிக்கலாம் என்று இருந்தான்....... இவளுக்கே முறைமாமன்கள் அதிகம் அவன்ல எவனாவது ஒருத்தன் வந்து கல்யாணம் பண்ணிக்க போறாங்கன்னு காலேஜ் முடிக்கவுமே திருமண தேதியை முடிவு செய்ய சொல்லியிருந்தான்.... இந்த ஐந்து வருடத்தில் கண்ணன் நன்றாக முன்னேறி இருந்தான்.... டவுனில் மற்றொரு கடையை வாங்கி அதை தன் கடை மாதிரியே டெவலப் செய்து ராமனிடம் கொடுத்திருந்தான்.....சில மனையிடங்களை வாங்கிப்போட்டிருந்தான்....கயல் பேரிலும் சில இடங்களை பக்கத்து டவுனில் வாங்கிப் போட்டிருந்தான்.....



வினோத் சென்னையிலேயே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து அங்கேயே இருந்தான்..... சுதாவுக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரு குழந்தைகள்.... இப்போதெல்லாம் தன் மாமனார் மாமியாரோடு மிகவும் அன்பாக நடந்து கொள்ளவும் இருவரையும் தோப்பு வீட்டிலிருந்து அங்கு வீட்டுக்கு அழைக்க..... இருவரும் வர மறுத்து விட்டனர்...... வாசு ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டான்.....” முடிஞ்சா நீங்க அப்பப்ப வந்து பாத்துட்டு போங்க...... உங்க பேரன் பேத்திய வந்து கொஞ்சிட்டு போங்க...... உங்களுக்கு முடியாத காலத்துல நான் உங்கள வச்சு நல்லா பாத்துக்குறேன்.....” வாசுவின் தந்தைக்கு ரொம்ப சந்தோசம்.... ஊதாரியா சுத்திகிட்டு திரிஞ்சவன் இப்ப நல்ல பொறுப்பா வந்துட்டானே என்று....



மாணிக்கத்துக்குமே மல்லிகாவை கயல் வீட்டில் கொடுக்க ரொம்பவே சந்தோசம்.... அவருக்கு அவர்கள் குடும்பத்தை பற்றி நன்கு தெரிந்ததால் கல்யாணத்துக்கு உடனேயே சம்மதம் சொல்லியிருந்தார்..... ராமனும் திருமணம் நிச்சயம் செய்த நாளில் இருந்து மல்லிகாவிடம் பேச முயற்சிக்க... மல்லிகா ராமை கண்டு கொள்ளவேயில்லை.... கயலிடம் தூது விட்டாலும் மல்லிகா கேட்க வில்லை.... தன்னிடம் கேக்காம இவரா கல்யாணம் பேசுறாரு...... மீண்டும் கண்ணன் கயல் மாதிரி ஒரு ஜோடி உருவாகும் காலம் வந்தது......



தன் மகள் தன் தாயிடம் செல்லவும்.... கண்ணன் மாடிக்கு சென்றான்.... கயல் தன் இரண்டு வயது மகனை மடியில் போட்டு தட்டிக்கொடுத்துக் கொண்டிருக்க.... தன் மகனை தூக்கியவன் தன் மகன் படுத்திருந்த மடியில் தான் படுத்துக் கொண்டு தன் மகனை தன் நெஞ்சில் போட்டுக் கொள்ள.... கயல் கண்ணனை பார்த்து சிரித்தபடி அவன் தலையை கோதி கொடுத்தாள்......அவள் வருடலில் தன்னை மறந்து கண்ணை மூடியவன்......



“ஏண்டி அம்முவ திட்டுன.... புள்ள பாவம் கொசுக்கடியில வந்து வாசல்ல உக்காந்திருக்கு...”



“ஆமா உங்க மகள நீங்கதான் மெச்சுக்கணும்.... இன்னைக்கு என்ன பண்ணுனான்னு தெரியுமா......”.



“அதுக்கு ஏன் கைய எடுக்குற....” மீண்டும் அவள் கையை எடுத்து தன் தலையில் வைத்தவன்........ “ம்ம்ம் இப்ப சொல்லு....”



“உங்க ஒன்னுவிட்ட சித்தப்பான்னு ஒருத்தர் வந்திருக்காரே.....எப்ப பாத்தாலும் உர்ருன்னு.... அவரு இன்னைக்கு மத்த புள்ளக கிட்ட சிசர் இல்லனா பில்டர் வாங்கிட்டு வரச் சொன்னாரு.....”



“ஏண்டி சின்ன புள்ளங்க கிட்ட யாராச்சும் சிகரெட் வாங்கிட்டு வரச் சொல்லுவாங்களா......”



“அத போய் அவருகிட்ட கேளுங்க.... பெரிய பசங்ககிட்டதான் சொன்னாரு. இந்தம்மாதான் நான் போறேன்னு சொல்லிட்டு போயி ஒரு பையோட வந்தா.....”



“ஏண்டி குடுத்த காசு பூராத்துக்கும் சிகரெட்டை வாங்கிட்டாலா.......”

“அது இல்லை..... இவ பக்கத்து தெருவுக்கு போயி அந்த டெய்லர் அண்ணகிட்ட அடம்புடிச்சு அவரு வெட்டுற கத்திரிக் கோலை வாங்கிட்டு வந்துட்டா... கேட்டா இதுதானம்மா சிசர்ன்னு ஒரே அடம் வேற....... திரும்ப கொண்டு போயி குடுன்னு சொன்னதுக்கு கீழ போட்டு அத ஒடைச்சு அதுக்கு வேற தண்டம் 500 ரூபாய்..... இப்புடி பண்ணுனா உங்க புள்ளைய திட்டாம கொஞ்சுவாங்களா........”



கண்ணன் மனம்விட்டு சிரித்தபடி....” உம்பொண்ணுல அதான்டி அறிவுல உன்னைய மாதிரியே இருக்கு.....”.



“ம்ம்ம் அறிவில்லாமத்தான் காலேஜ்ல பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணுனனா....”என்றபடி கண்ணன் தலையை எடுத்து கீழே வைக்கப் போக....

“ ஏய்... பொண்டாட்டி கோவிச்சுக்கிட்டியாடி.....”அவள் முகத்தை தன்னை நோக்கி இழுக்க.......... இவர்களின் மகளும் உள்ளே வந்தாள்.......



“அம்மா.......நானு....நானு...” என்றபடி கயலின் ஒரு பக்கம் கண்ணன் தலையை நகர்த்திவிட்டு தானும் கயலின் மடியில் தலை வைத்துப் படுத்தாள்......



அவள் அப்பாவை போல கயலின் கையை எடுத்து தன் தலையை கோத சொல்ல...... அப்பா.... அப்புடியே அப்பா மாதிரி......மறுகையால் மகளின் தலையை கோதினாள்......



“இப்புடி பண்ணுனாதானேப்பா........... நல்லாயிருக்கு......”தன் தகப்பனையும் துணைக்கழைத்தவள்....தன் தாயின் தலையை தன்னைநோக்கி இழுத்து தன் தாய்க்கு முத்தமிட்டாள்.....தன் தகப்பனுக்கும் முத்தமிட இவர்களின் மகனுக்கு என்ன புரிந்ததோ தன் பெற்றோரை பார்த்து பொக்கைவாய் திறந்து சிரித்தான்.......



 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
விடிந்தால் ராமனுக்கும் மல்லிகாவுக்கும் திருமணம்....... இவனும் என்ன பிட்டை போட்டாலும் மல்லிகாவோடு பேச முடியவில்லை...... மெசேஜ் அனுப்பினாலும் எந்த ரிப்ளையும் அனுப்பமாட்டாள்...... ராமனும் இருடி தாலிகட்டவும் இங்க தானே வந்தாகனும்....... உனக்கு இருக்கு......காலையில் விடியற்காலை முகூர்த்தம் என்பதால் கயலுக்கு வேலை சரியாக இருந்தது...... சௌந்தர்யா அப்பத்தாவோடு படுத்துக்கொள்ள தன் மகனை தூளியில் தூங்க வைத்தாள்..... அப்போதுதான் கண்ணனும் எல்லாவேலையையும் முடித்துவிட்டு உள்ளேவர......குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டி கொண்டிருக்கவும் சத்தம் எழுப்பாமல் சென்று குளித்து வந்தவன்..... படுக்க தயாராக....”.என்னங்க சாப்புடலையா..... வாங்க சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.....”



“இல்லடா பசிக்கல.... கொஞ்சம் பால் மட்டும் எடுத்துட்டு வாரியா........”



“ந்தா... போறேங்க.... உங்க பையன் அழுதாமட்டும் லேசா ஆட்டிவிடுங்க தூங்கிருவான்.......”



“ம்ம்ம் சரிடி.....”



பாலை எடுத்துவர” நீ சாப்புட்டியா..... அம்மு தூங்கிட்டாளா......”



“சாப்புட்டேங்க.... நான் சாப்புடலைனா அத்த எங்க விடுறாங்க...... அம்மு அத்தகிட்ட தூங்கிட்டா.......”



பாலை குடித்தவன் மறுகையால் கயலை அணைக்க........



“என்னங்க தூக்கம் வருதுன்னு சொன்னிங்க.....”

“இல்ல ஒரு பத்து பதினைஞ்சு நாளா வேலை வேலைன்னு உன்கிட்ட வரவே இல்லை நீ பாட்டுக்கு கோவிச்சுகிட்டு உங்க அம்மாவீட்டுக்கு போயிட்டா நான் என்ன பண்ணுறது.....”



“ஏங்க அது நான் எப்ப சொன்னது..... அதயே ஓயாம சொல்லிக் காட்டுறிங்க.....”



“சரிவிடு இனிமே சொல்லி காட்டலை.... ஆனா நீயா என்கிட்ட வரணும்டி எப்ப பாத்தாலும் புள்ளைங்க பின்னாடியே திரியுற.... அப்ப அப்ப மச்சானையும் கொஞ்சம் கவனி.....” கயல் இப்போதெல்லாம் சௌமி அப்பா என்றுதான் அழைப்பாள்..... மச்சான் என்று கண்ணன் அழைக்க சொல்லி ஓயாமல் சொல்லுவான்.......தனியாக இருக்கும் போதுமட்டும்தான் மச்சான் என்று அழைப்பாள்......அதுவே கண்ணனுக்கு கிறக்கமாக இருக்கும்...... இன்றும் கயலை கட்டி அணைத்தவன்...”. குழந்தை பொறக்கவும் சும்மா கும்முன்னு ஆயிட்டடி......”அவள் கன்னத்தில் வாசம் பிடித்தவன் மெதுவாக கீழே இறங்கிவர...”.நமக்கு கல்யாணம். ஆகி ஆறு வருசம் ஆகப்போகுதுன்னு நம்ப முடியலடி..... நேத்துதான் கல்யாணம் பண்ணி அந்த மலையில தூக்கிக்கிட்டு இறங்கிவந்த மாதிரி இருக்கு.... இப்ப நமக்கு ரெண்டு புள்ளைங்க நம்ப முடியலடி...”.என்றபடி அவள் உதட்டில் மூழ்கி முத்தமிட்டவன்...” ஆனா நாளாக நாளாக உம்மேல ஆசைதான் கூடுது...முன்னெல்லாம் வேலைவிசயமா வெளியூருக்கு போனா ஒரு வாரம் தங்கிட்டு கூட வருவேன்.... இப்ப ஒரு நாளு இருக்க முடியல.....உன்நினைப்பும் புள்ளைங்க நினைப்பும் என்னைய இருக்க விடமாட்டேங்குதுடி....” வாய் பேசி கொண்டிருந்தாலும் தன் வேலையை அவள் மேனியில் பார்த்துக் கொண்டிருந்தது ......கயலும் கொஞ்ச கொஞ்சமாக தன்னை மறந்து கொண்டிருந்தாள் ....கண்ணனும் கயலும் ஒருவருக்குள் ஒருவர் கரைந்து கொண்டிருந்தனர்......



மறுநாள் கண்ணனுக்கு கயலுக்கும் நடந்த அதே குன்றக்குடி முருகன் கோவிலில் கல்யாணம்..... கயல் தன் மகளுக்கு பச்சைநிற பட்டுப்பாவாடை போட்டு தலையை அழகாக பின்னி பூ வைத்து விட்டிருந்தாள்....தன் மகனுக்கு டிரஸ் மாத்தி தன் அப்பத்தாவிடம் கொடுக்க....... காந்திமதி தன் கொள்ளு பேரனை கொஞ்சிக் கொண்டிருந்தார் .......கோவிந்தனும் வாசுவும் தன் வீட்டு கல்யாணம்போல எடுத்துச் செய்ய... கண்ணனுக்கு பெரிய உதவியாக இருந்தது.... தாமரையும் சுதாவும் மல்லிகாவுக்கு அலங்காரம் செய்துவிட மல்லிகா அப்படி ஒரு அழகாக இருந்தாள்.... தாமரை...கயல்... சுதா... மூவரும் ஒரே மாதிரி சேலையை எடுத்திருந்தனர்..... சுதா எல்லாருக்கும் மேக்கப் பண்ணியிருந்தாள்...... வாசு சுதாவை பக்கத்தூரில் ப்யூட்டி பார்லரில் டிரைனிங் எடுக்க சொல்லி சொந்தமாக உள்ளுரிலே ஒரு ப்யூட்டி பார்லர் வைத்து கொடுத்திருந்தான்....... கண்ணனும் குழந்தைகள் வளரவும் கயலை அவளுக்கு பிடித்த வேலைக்கு அனுப்புவதாக சொல்லியிருந்தான்..... கயல்தான்..... என்னால புள்ளைங்கள விட்டுட்டு வேலைக்கு போக முடியாது என சொல்லி தன் மாமியாரிடம் ரெக்கமன்டேசன் செய்ய சொல்லி சொல்லியிருந்தாள்......



கோவில் பூசாரியும் தாலியை முருகன் பாதத்தில் வைத்து எடுத்து கொடுக்க ராமனும் மல்லிகாவின் கழுத்தில் கட்டினான்...... அவள் கட்டியிருந்த மெரூன் வண்ண பட்டு அவள் சிவந்த நிறத்திற்கு மேலும் மெருகேற்றியது.....”.ஏய் ஜாமூன் என்னடி ரொம்ப பண்ணுற... .இந்த சேலையில அப்படியே ஜீராவுல ஊருன ஜாமூன் மாதிரி இருக்கடி.... இரு உன்னைய அப்புடியே கடிச்சு திங்கப் போறேன்......”



ராமனின் பேச்சில் மல்லிகாவின் முகம் குப்பென வெட்கத்தால் சிவந்தது.....” என்னடி இப்புடி மொகம் சிவக்குது.... அப்ப இம்புட்டு நேரம் சும்மா கோபமா இருக்குற மாதிரி நடிச்சியா...... நான் நீ கோபமா இருக்கியோன்னு ரொம்ப டென்சனா இருந்தன்டி......” மல்லிகா அவன் கையை மெதுவாக பிடித்தவள்....

.” கொஞ்ச நேரம் சும்மா இருங்க எங்க மச்சான்க எல்லாம் வந்திருக்கானுக......”.என்று அவர்களை பார்த்து சிரிக்க......



காண்டுடன் நிமிர்ந்தவன்.... அங்கு நின்று கொண்டிருந்த அந்த எட்டு.... பத்து.... பனிரென்டு வயது பையன்களை பார்த்து திருதிருவென முழித்தான்......”.ஹாய் மல்லிகா......”



“ஹாய் மச்சான்ஸ்.....”.



“ஏய் எங்கள கட்டிக்குரேன்னு சொன்ன இப்ப இவர கட்டியிருக்குற.......”

“இவரு ரொம்ப கெஞ்சுனாரு பாவம் போனா போகுதுன்னு கல்யாணம் பண்ணிகிட்டேன்.... விடுங்க உங்களுக்கு வேற பொண்ண பாப்போம்.......”



ராமன் மல்லிகாவின் கையை நன்றாக அழுத்தி....” இவனுகதான் உன்னோட மச்சான்களா......”



“ஆமா.... எல்லாரும் சூப்பர்ல.......”



“நீ அடங்க மாட்டடி...”என்றபடி அவள் தோளை சுற்றி கையை போட்டான்.....அனைவரும் படியில் இறங்கிவர.....முத்து உதுரி பூவை கொண்டு வந்தவன் தடுமாறி பூவை கொட்ட...... அது கரெக்டாக அருணாவின் தலையில் சிதறியது.....



“டேய் லூசு...லூசு “என தலையில் இருந்த பூவை எடுக்க முத்துவின் மனதில் மணியடித்தது.... இவ என்ன பாவாடை தாவனியில சூப்பரா இருக்கா.....( டேய் போதும்டா... இதுக்கும் மேல நாங்க தாங்க மாட்டோம்........ நாங்க ஓடப் போறோம்.... .டாட்டா.... .பைபை. ....)



நன்றி..............

முற்றும்....................

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top