நேசம் மறவா நெஞ்சம்-22Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-22

கயல் ஒரு மாதிரி முழிக்கவும்....காந்திமதி அங்கு பக்கத்தில் இருந்த வாளி தண்ணீரை எடுத்து கயலின் தலையில் ஊற்ற......



“அப்பத்தா..... உனக்கென்ன லூசா புடிச்சிருக்கு..... இப்ப ஏன் என் தலையில தண்ணிய ஊத்துன.....?” என்று தலையை சிலிர்த்தபடி கேள்வி கேட்க..... அவளை சுற்றி ராமனும் முத்துவும் சாவித்திரியும் சிரித்தபடி நின்றனர்.....



மாடிக்கு போன கண்ணன் காந்திமதி பேச ஆரம்பிக்கவும் பேப்பர் படிக்கும் சாக்கில் கீழே வந்து சேரில் அமர்ந்து கயலை ரசித்துக கொண்டிருந்தான்....



“ஆமாடி.... எனக்கு லூசு புடிச்சிருக்கு..... ஆனா உனக்கு பேயில்ல புடிச்சிருக்கு.....”



“என்னது பேயா......??? எனக்கு பேய் புடிச்சிருக்குன்னு யாரு சொன்னா...???.”



“ஏன் நாந்தான்.... ஊருல எம்புட்டு பேரு முகத்த பாத்தே..... நான் சொல்லிருக்கேன்.....”



“கிழிச்ச...... அதுக்காக உன்னைய எங்கிட்ட வந்து எம்புட்டு பேரு திட்டிட்டு போச்சுகன்னு எனக்குதான் தெரியும்.... உன் வேலைய எங்கிட்டயே காட்டாத..... நாந்தான் காலையிலேயே குளிச்சிட்டேன்ல....... இப்ப தலையில வேற தண்ணிய ஊத்தி வச்சிருக்க..... என் தலை முடி எப்ப காய.... ஒன்னைய கொல்லபோறேன் பாரு....”என்று அழுவது போல முகத்தை வைத்திருக்க........



“இதென்னடி கால கொடுமையா இருக்கு...... ஏதோ....பாவம் புள்ளைக்கு என்னாச்சோ.... ஏதாச்சோ....புள்ள ஒன்னும் பேசாம ஒருமாதிரியா இருக்கேன்னு உபகாரம் பண்ணுனா.....ம்கும்.....ரொம்பத்தான்.....பகுமானம் பண்ணுற..... இப்ப இம்புட்டு பேசுறவ...அப்ப உங்க அயித்த கூப்புடயில ஏன் பேசாம இருந்தே.....?”



இப்போது கயலுக்கு கண்ணன் முத்தமிட்டது ஞாபகத்திற்கு வர..... எங்க அவரு அம்புட்டுக்கும் காரணம் அவருதான்.... ஆனா ஒன்னுமே நடக்காத மாதிரி பேப்பர் படிச்சிக்கிட்டு இருக்காரு.....என்று கண்ணனை பார்த்தவள்......

“ அது ஒன்னுமில்ல....கொல்லயில ஒரு பாம்பு பாத்தேன்......”



“என்னது பாம்பா....”. என்றபடி காந்திமதி ஓடிப்போய் கதவு ஓரம் சாத்தியிருந்த உலக்கையை எடுத்து கொண்டு வந்து.....

“எங்க.... எங்க...... பாம்பு.....”

“அங்க என்ன மலைபாம்பா வந்துச்சு..... இவ்வளவு பெரிய உலக்கை.....அது இத்தூன்டு” என்றபடி கையில் ஒருஜான் அளவுக்கு வைத்துக் காட்ட....

“ அது இன்னேரம் பத்து ஊரு தாண்டி போயிருக்கும்........”ராமனும் முத்துவும் விழுந்து விழுந்து சிரிக்க..... கண்ணன் நைசாக மாடியேறி போனவன்....அங்கு போய் சிரித்து கொண்டிருந்தான்.....



சாவித்திரி சிரித்தபடி...”.போத்தா...போய் டிரஸ்ஸ மாத்து...அப்புடியே தலைய நல்லா காய...வை......”



“ம்ம்ம்....இந்தா போறத்தே.... இரு வந்து உன்னைய கவனிச்சுக்குறேன்......”என்றபடி மாடி ஏறி போனவள்....

கண்ணன் அலமாரியில் ஏதோ எடுத்து கொண்டிருக்கவும்.....
“ ஏன் இப்புடி பண்ணுனீங்க......”




“நான் என்ன பண்ணுனேன்......பாவம் கீழே விழுக போறன்னு காப்பாத்த வந்தேன்.... நல்லா யோசிச்சு பாரு எப்பவாச்சும் நானா வந்து உன்னைய கட்டிப்புடிச்சிருக்கனா.....இன்னைக்கும் நான் வந்து உன்னைய கட்டிபுடிச்சனா....”.கயல் யோசிக்க ஆரம்பிக்க.....(ஸ்ஸ்ஸ்....அப்பா....இவள நல்லா....குழப்பிவிட்டுட்டோம்)



“ஆமால்ல...பாவம் இவருமேல எந்த தப்பும் இல்ல கல்யாணத்துக்கு முன்னாடியும் நாமதான் ரெண்டுதடவ கட்டிப்புடிச்சோம்..... அன்னைக்கு அழுகும் போதும் நாமதான் கட்டிப் புடிச்சோம்..... இன்னைக்கும் நம்ம மேலதான் மிஸ்டேக்கோ...... ஆனா....

நீங்க ஏன் முத்தம் குடுத்தீங்க......”.

“ஏன் நீ ரெண்டுதரமும் கட்டிப்புடிச்சிட்டு எப்புடி கத்துன...... அதான் கத்தவுடாம பண்ணேன்......”

“அதுக்கு நீங்க கையால வாய மூடவேண்டியது தானே.......அன்னைக்கு அப்புடிதானே பண்ணீங்க.....?”


“ஏய் லூசு..... அன்னைக்கு கைல ஒன்னுமில்ல அதுனால கைல மூடுனேன்..... இன்னைக்கு கொல்லையில வேலை பாத்து கையெல்லாம் மண்ணாயிருந்துச்சுடி..... அதான் உதட்டால மூடுனேன்.....” என்றபடி நெருங்கி வந்தவன்..... முகத்தில் படிந்திருந்த தண்ணீர்துளிகளை.... அங்கிருந்த துண்டால் மெதுவாக ஒற்றி எடுத்தவன்......

“ஆனா உங்க அப்பத்தா சொன்னமாதிரி உனக்கு என்னமோ புடிச்சிருக்குடி......”



அப்ப அப்பத்தா சொன்னது உண்மையாயிருக்குமோ......” ஆத்தி அப்பநான் வித்தியாசமா நடந்துக்கிறனா.....?’

“ஆமா.....”

“யாரு மாதிரி.......”



“அது எனக்கு புடிச்சமாதிரி…..” அவளை தன் கை வளைவிற்குள் அவளை கொண்டுவந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டவன்.... அவள் இருகண்களுக்கு கொடுத்து கன்னத்திற்கு வர..... கயல் வெட்கத்துடன் அவன் மார்பில் முகத்தை பதிக்க........

“ஏய்.... என்னைய நிமிந்து பாரு “என்று கிசுகிசுத்தவன்...... அவள் முகத்தை தன்மார்பில் இருந்து அவள் முகத்தை தூக்க.....கயல் தன் முகத்தை இருகையால் மூடியவள்..... அவனுக்கு முதுகு காட்டியபடி நிற்க.....

“.. ஏய் ..... இங்கிட்டு ....திரும்பு........”



“ம்கூம்.....” என்று தலையை மட்டும் அசைத்தவளை......அவள் இடுப்பில் கைவைத்து இறுக்கியவன்...... அவள் பின் கழுத்திலிருந்து தன் முத்தத்தை ஆரம்பிக்க......கயலுக்கு இதயம் வெளியே வரும் அளவிற்கு படபடவென்று அடித்தது...... கை...காலெல்லாம் வெடவெடவென்று நடுங்க துவங்கியது...... அவள் நடுக்கத்தை உணர்ந்து கண்ணன் தன் சுய உணர்வுக்கு வந்தவன்.......

“ போ....ரொம்ப நேரம் ஈர டிரஸ்ஸோட நிக்காம போய் டிரஸ்ஸ மாத்து..... அப்புடியே.... இன்னைக்கு சேலைய கட்டிட்டு வாரியா......?”



“சேலையா...... நாம எங்கயாச்சும் வெளிய போறமா.....”

“ஆமா.....உனக்குதான் இன்னும் ரெண்டுநாளுள செமஸ்டர் ஆரம்பம்னு சொன்னில..... அதுனால இன்னைக்கு உனக்கு தீபாவளிக்கு டிரஸ் எடுத்துட்டு வரலாம்......”

“அப்ப கடைக்கு போக வேணாமா.....”



“இல்ல....தம்பிய போகச் சொல்லிட்டேன்.......நீ சீக்கிரம் கிளம்பா வா..... போ....”



கயல் கிளம்பி வரவும்..... கண்ணன் சாப்பிட்டு கொண்டிருக்க.....

“ அத்தே..நீங்களும் வாங்க போய் டிரஸ் எடுத்துட்டு வரலாம்.....”.



“இல்லத்தா....நான் கட்டுற கண்டாங்கி சேலை எல்லாம்......தம்பிக்கு தெரிஞ்சவுக ஒருத்தர் வீட்லயே கொண்டுவந்து மொத்தமா குடுத்துட்டு போயிருவாகத்தா...... வீட்லயே நெய்யிரதால நல்ல தரமா இருக்கும்தா.......”



“முத்து அப்ப நீயாச்சும் வரலாம்ல......”.



“இல்லண்ணி ஒரு நோட்ஸ் வாங்க என் பிரண்ட்டு ஒருத்தன் வீட்டுக்கு வாரேன்னு சொல்லியிருக்கான்....... நீங்க போய்ட்டு வாங்கண்ணி.....”.

“அப்புடியா....சரி வாரேன்தே....... அப்பத்தா வரவா.....”

“ம்ம்ம் அங்க இங்க வேடிக்கை பாக்காம போயிட்டு வா......”
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
“ம்கூம்...... “ என்றபடி கயல் கிளம்ப இருவரும்.....கண்ணன் கடை வைத்திருக்கும் ஊரில் இருக்கும் அந்த பெரிய துணி கடையை அடைந்தனர்..... கயல் வந்ததிலிருந்து துணியை பார்க்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்திருந்தாள்........ அங்கிருக்கும் விற்பனை பெண்கள் சேலையை விரித்தபடி இருக்க..... இவள் அதை கவனிக்காமல் அங்கிட்டும் இங்கிட்டும வேடிக்கை பார்த்தபடி இருக்க.....

“ ஏய்.... இப்புடி பாத்தா நாம நாளைக்குதான் வீட்டுக்கு போக முடியும் உனக்கு வேண்டியதை பாத்து எடு.......”



“இல்ல நான் எப்ப கடைக்கு வந்தாலும் எங்கம்மாதான் எடுப்பாங்க.......இந்த கடையில இன்னும் மூனுமாடி இருக்கு நான் ஒவ்வொன்னா போய் சுத்திபாத்திட்டு வாரேன்.... நீங்க எடுத்து வைங்க.....”என்று கிளம்ப பார்க்க......



அங்கிருந்த சில ஆண்கள் கயலை சைட் அடிப்பதை கண்டவன்.....இவளை இன்னைக்கு சேலைகட்டி வரச் சொன்னது தப்பு......எப்ப பாத்தாலும் சுடிதார்ங்குற பேருல ஒரு அங்கிய போட்டிருக்காளேன்னு நினைச்சா...... என்னை தவிர எம்பொண்டாட்டிய ஊருபய பூரா சைட் அடிக்கிறான்...... என்று நினைத்தபடி கயலை நிமிர்ந்து பார்க்க...... எலுமிச்சை நிற சேலையில் ஒரு சூரியகாந்தி பூபோல இருந்தாள்..... எந்தவித அலங்காரமும் இல்லை......சாதாரணமாக தலை சீவி கண்ணன் வாங்கி கொடுத்த மல்லிகை பூவை வைத்திருந்தாள்...... உச்சி வகிட்டில் குங்குமம் வைத்து நெற்றியில் திறுநிறு குங்குமம் வைத்திருந்தாள்.... கழுத்தில் தாலி சங்கிலி மட்டும் போட்டு..... கையில் சேலைக்கு மேட்சாக கண்ணாடி வளையல் போட்டிருந்தாள்..



..தன் மனைவியோடு வந்திருந்தவர்கள்..... அவர்களை விட்டுவிட்டு கயலை பார்ப்பதை கண்டவனுக்கு......கோபம் பொங்கியது.....சும்மாவே பாதிபேர் நான் இருக்கும் போதே இவளை பாக்குறாங்க...... இதுல இந்தம்மா தனியா....சுத்தி பாக்க போறாங்களாம் ...என்று நினைத்தபடி கயலை.எட்டி பிடித்தவன்.....அவள் தோளில் கை போட்டு அங்கிருந்தவர்களை முறைத்து பார்க்க......



அவனை நிமிர்ந்து பார்த்தவள்......கண்ணன் முகத்தில் கோபத்தை பார்க்கவும் “என்னாச்சு....... நான் ஒன்னுமே பண்ணலயே.......”



கயலை பார்த்தவன்.....” ஆமா.......... நீதான் என்னைய ஒன்னும் பண்ண மாட்டேங்குறியே.......”



“ம்ம்ம்.... என்ன சொன்னிங்க....”

“ஒன்னுமில்ல....”. என்றபடி சேலையை எடுத்துக்காட்டச் சொல்ல அடுத்த ஒருமணி நேரத்தில்.....கயலுக்கு தேவையான சேலைகள்.....சுடிதார்கள்..... நைட்டி....பட்டு சேலை என அவ்வளவு துணிகள் வாங்கி இருந்தான்...... கயல் கண்ணனை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருக்க......



“என்ன பொண்டாட்டி ....... என்ன அப்புடி பாக்குற..... என்னை பாத்து கண்ணு வைக்குறியா......”



“இல்ல நீங்க எப்புடி இவ்வளவு பொறுமையா எடுக்குறீங்க...... எங்கப்பால்லாம்...காச குடுத்துட்டு கடைபக்கமே தலைவச்சு படுக்க மாட்டாங்க........”



“ஏண்டி நான் வச்சிருக்குறது எல்லா பொருளும் விக்குற மளிகைகடை..... அங்க ஒரு பொருளு வாங்குறவனும் வருவான்...... நிறைய பொருளு வாங்குறவனும் வருவான்.... நாமதான் பொறுமையா எடுத்து குடுக்கனும்...... அதுமாதிரி நாம வாங்குற பொருளும் குடுக்குற காசுக்கும் உள்ள தரம் இருக்கான்னு பாத்து வாங்கனும்....... நாம எல்லாம் வாங்கிட்டோம்னு நினைக்கிறேன்.... நீ உனக்கு வேண்டிய மத்ததை பாத்து வாங்கிட்டு வா....நான் பில் போடுற எடத்துக்கு போறேன்.......”



“ஆமா எனக்கெதுக்கு இவ்வளவு டிரஸ்ஸ்......பாத்தாலே மயக்கம் வர மாதிரி இருக்கு....... எனக்கு ஒரே ஒரு சேலைமட்டும் எடுத்துதாங்க போதும்......”



“ஏண்டி கடைகார பொண்ணுங்களே மயக்கம் போட்டு விழுகுற அளவுக்கு அந்த பாடு படுத்தி எம்பொண்டாட்டிக்கு எந்த கலருபோட்டா நல்லாயிருக்குமுன்னு பாத்து பாத்து சூஸ் பண்ணியிருக்கேன்....... இப்ப போய் வேணாமுன்னு சொல்லுற....... அடிங்க..... ஓடிரு.... இதெல்லாம் உனக்கு பிடிக்கலைன்னா விட்ரு எம்பொண்டாட்டிக்கு சூப்பரா இருக்கும்......”



கயல் கோபத்துடன்.....” அது யாருங்க உங்க பொண்டாட்டி.......”

“அது இங்கன ஒரு எலுமிச்சை கலருல சேலை கட்டியிருக்கும்பாரு அவதான்.......”

அவள் தன்னைச் சுற்றி பார்க்க.....

“ஏய் ..... அது நீதாண்டி.....”

“நானா.....??” என்றபடி.....சிரிக்க...

“என்ன பொறைமையா.......”

“ம்ம்ம்…..லைட்டா.... இவ்ளோ டிரஸ் வாங்கித்தாறிங்கள்ள அதான்.......”

கண்ணன் அங்கிருந்த ஒரு பொம்மை போட்டிருந்ததை காட்டி.....” அந்தா...அதுமாதிரி உனக்கு தேவையானத பாத்து வாங்கிட்டு வா.....”

அது வெறும் உள்ளாடையோடு நிற்க.......

“ச்சு...ச்சு... இதெல்லாம் பாக்காதிங்க....கண்ணை மூடுங்க...நான் போய் வாங்கிட்டு வாரேன்..... அதுவரைக்கும் கண்ணை திறக்காம இருங்க.....” என்றபடி அவள் உள்ளே செல்ல.....



கண்ணன்...... சிரித்தபடி பில் கவுண்டர்க்கு சென்றான்.....

அவளை அடுத்து நகை கடைக்கு கூட்டிச்சென்றவன்..... “ஒரு நெக்லஸ் ஒன்னு பாரு தோடு வளையல் எல்லாம் செட்டா இருக்குற மாதிரி.....பாரு...”



“எனக்கு நகை எல்லாம் ஒன்னும் வேணாம்....எனக்கு நகை ரொம்ப போட புடிக்காது.... அப்புடி போடனும்னா எங்க அப்பாதான் அறுவடை முடிஞ்சவுடன நகைய போடுறேன்னு சொன்னாருல.... அப்புறம் என்ன.....வாங்க வீட்டுக்கு போகலாம்....”. என்றபடி அவன் கையைபிடித்து இழுக்க.....



“நான் உங்க அப்பாட்ட நகைய கேட்டனா......அப்புறம் உன்னைய நான் கேக்கவே இல்லை... உனக்கு நகை புடிக்குமா....புடிக்காதான்னு..... எம் பொண்டாட்டிக்கு நான் வாங்கித் தாரேன்..... நீ வாய முடிக்கிட்டு பேசாம போய் உக்காரு ....” என்று கோபத்தில் கடுகடுத்தவன்.....உள்ளே செல்ல...முகத்தை தூக்கிவைத்தபடி கயலும் பின்னாலே சென்றாள்.......



கண்ணன் ஒவ்வொரு செட்டாக இவளிடம் அபிப்ராயம் கேட்க.... கயலோ யாருக்கு வந்த விருந்தோ.... என்று உட்கார்ந்திருந்தாள்..... வெறுத்து போன கண்ணன் அவளிடம் கேட்காமலே..... இருந்ததிலே மிகவும் அழகான பூ வேலை செய்த.... ஒரு செட்டை வாங்கிக் கொடுக்க.... கடைக்காரர் அதை போட்டு பார்க்க சொல்ல அவரிடம் ஒன்றும் சொல்ல முடியாமல் கயலும் போட்டு காட்டினாள்.......



இருவரும் கடையை விட்டு வெளியே வரவும்.......” ஏன் உங்க அக்கா சொன்னாலா..... இவன் ஒன்னுத்துக்கும் லாயக்கில்லாத வெறும்பயன்னு.......”.என்று கோபத்துடன் உறும....



கயலோ....” எந்தக்கா..... என்ன சொன்னாங்க........”



“ம்ம்ம் எல்லாம் உங்க நடு அக்காதான்.......”



“ஏன் தேவையில்லாம அவுகளபத்தி இப்ப பேசுறிக..... நான் எப்பவும் யார்பேச்சயும் கேட்டுக்கிட்டு ஏதாவது தேவையில்லாம பேசியிருக்கனா....... நீங்கதான் இன்னும் எங்க அக்காவ மறக்கமுடியாம இருக்கிங்கன்னு நினைக்கிறேன்........”



வண்டியை கிரீச்சிட்டு நிப்பாட்டியவன்.....”. இதபார்..... இதுதான் உனக்கு கடைசி.... இனிமே தேவையில்லாம உங்க அக்காவோட என்னைய சேத்துவச்சு பேசுன அறைஞ்சுறுவேன் பாத்துக்க....... நீயெல்லாம் சரியான லூசுடி....புருசன் ஆசையா நகை வாங்கித்தாரானே அப்புடின்னு இல்லாம தேவையில்லாம என்னன்ன பேசி எனக்கு கோபத்தை உருவாக்குற....... இனிமே நான் என்ன சொல்றனோ....அத மட்டும் கேளு..... உன்னோட அபிப்ராயத்தை மனசுக்குள்ளயே வச்சுக்க “என்றபடி ஒரு ஹோட்டலில் நிப்பாட்ட அதன் பிறகு கயல் வாயை திறக்கவேயில்லை......



அவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது....... வீட்ல நாம பாட்டுக்கு இந்த அத்தையோடயும் அப்பத்தாவோடயும் பேசிக்கிட்டாச்சும் இருந்திருப்போம்..... சும்மா இருந்தவள கூட்டிக்கிட்டு வந்துட்டு இவரு அறைவாராம்ல..... கயலு இது உனக்கு தேவையே இல்லை..... அவரு என்னமோ வாங்குறாரு ..... வாங்காம போறாரு இது நமக்கு தேவையில்லை.... அம்மால்லாம் ஒரு பவுன் வாங்க எம்புட்டு யோசிச்சு யோசிச்சு வாங்குவாங்க.... நாமளே... இத்தத்தண்டி சங்கிலிய கழுத்துல போட்டுருக்கமே எந்த களவானி பயலாவது வந்து அத்துட்டு போயிருவானேன்னு பயந்து பயந்து போட்டுட்டு இருக்கோம்..... இப்ப இத வேற வாங்கி குடுத்தா.... எந்நேரமும் கழுத்துலயும் கையையும் புடிச்சுக்கிட்டே திரிய முடியுமா....

அதுனால தான் ஊருல அம்மா நகை குடுத்தாலே போட மாட்டோம்..... .போய்யா....போ.... நமக்கெல்லாம் வேடிக்கை பாக்குறதுதான் முக்கியம்...... அதவிட்டுட்டு எந்த பய எப்ப அத்துட்டு போவானோன்னு பயந்துகிட்டே திரியமுடியுமா....... பாவம் இந்த காசு இருந்தாலாவது இவரு வேற எதுக்காச்சும் யூஸ் பண்ணியிருக்கலாம்..... இவருக்கு போய் பாவம் பாத்தா.... அறைஞ்சுடுவாராம்ல...... என்று மனதிற்குள் அவனை தாளித்தபடி வந்தவளை கண்ணன் அங்குள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு கூட்டிக் கொண்டு வந்தவன்..... அங்கிருக்கும் பெண்கள் ஒட்டும் வண்டியை ஒவ்வொன்றாக பார்வையிட்டு கொண்டிருக்க..... கயலோ நமக்குதான் வண்டியே ஓட்டத் தெரியாதே.......பின்ன யாருக்கு வண்டி வாங்க போறாரு..... என்று யோசித்தபடி அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்....... அன்று முழுவதும் அலைந்ததால் அந்த ஏசி ரூமிற்கும் அதுக்கும் தூக்கம் கண்ணை சுழற்றியது...... சிறு குழந்தை தூக்கத்திற்கு கண்ணை கசக்குவது போல கண்ணை தேய்த்து கொண்டிருந்தவளை.....பின்னிருந்து “அண்ணி……..” என்ற குரல் கேட்டவுடன்....... திரும்பியவள் ராமன் நிற்கவும்...

“..வாங்க....வாங்க..... அதுக்குள்ள கடையை மூடிட்டிங்களா.... வீட்டுக்கு போக போறீங்களா.... அப்ப என்னையும் கூட்டிட்டு போங்க..... உங்க அண்ணன் கடைக்குள்ள போனாரு ஆள் அட்ரஸையே காணோம்.......நாம வேணா அவருகிட்ட சொல்லிட்டு போவமா.......”



“பின்னிருந்து எங்க போறீங்க....” என்ற குரல் கேட்கவும் கயல் வந்துட்டாருயா.. .வாத்தியாரு என்று மனதிற்குள் நினைத்தபடி.......



“இல்ல.....வீட்டுக்கு.....”





கண்ணன் தன் வண்டிசாவியை ராமனிடம் கொடுத்து” நீ கிளம்புடா....... நாங்க இன்னும் அஞ்சு நிமிசத்துல கிளம்பிருவோம்.....”.

“ம்ம்ம் சரிண்ணே..... அண்ணி வரவா......”

“ம்ம் சரி....” என்றபடி மீண்டும் அமர......ஐந்து நிமிடத்தில் ஸ்கூட்டியில் கிளம்பியிருந்தனர்.....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா..........
ஹோ, இந்த கயலுப்
புள்ள, சூப்பர் புள்ளயா
இருக்காளேப்பா?

ஹய்யோ, இந்த கயலுப்
புள்ள பண்ணுற சேட்டை
தாங்க முடியலையே,
பிரியா டியர்?
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கோவிலுக்கு சென்றவர்கள் வண்டியின் சாவியை வைத்து சாமி கும்பிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கயல் சாவித்திரியிடம் வண்டியை காட்டிக் கொண்டிருக்க கண்ணன் வண்டியை ஸ்டார்ட் பண்ணும் முறையை கற்று கொடுத்துக் கொண்டிருக்கும் போது போன்வர... அதை எடுத்து பேசிக் கொண்டிருக்க...கயல் விளையாட்டுபோல வண்டியை ஸ்டார்ட் பண்ணியிருந்தாள்..... சாவியை போட்டு பிரேக்கை பிடிக்காமல் ஆக்சிலேட்டரை வேகமாக திருகவும் வண்டி விக்கென்று கிளம்பி நேராக சென்று நான்குவீடு தள்ளி வீடு கட்டுவதற்காக குவித்திருந்த மணலில் மோதி கீழே விழுந்திருந்தது..... வண்டி வேகமாக கிளம்பவும் வண்டியில் இருந்து கையை எடுத்த கயலுக்கு கைகாலெல்லாம் வெடவெடத்தது.....



வண்டியின் சத்தத்தில் திரும்பிய கண்ணன் கயலின் இந்த செயலால் கோபத்தின் உச்சிக்கு சென்றவன்....... கயலை பளார் என்று..... ஓங்கி ஒரு அறை வைக்க..... கயல் சுருண்டு போய் கீழே விழ காந்திமதி வந்து தாங்கியிருந்தார்.....



“கண்ணன் உனக்கெல்லாம் அறிவே....சுத்தமா... இல்லயா.....இன்னேரம் ரோட்டுல யாராச்சும் இருந்திருந்தா .... என்னாயிருக்கும்......ச்சே..”.என்றபடி வண்டியை எடுக்கச் சென்றான்........



மணலில் மோதியிருந்ததால் வண்டிக்கு சேதாரம் எதுவும் இல்லை..... கயலு தான் செய்த முட்டாள் தனத்தை எண்ணி........ பயந்து போயிருந்தாள்......



கடவுளே...... இப்பதான அந்த பக்கத்து வீட்டு குழந்தை விளையாடிட்டு உள்ள போச்சு...... அது மட்டும் வெளிய நின்னுட்டு இருந்துச்சுன்னா...... என்னால...தாங்கவே முடியலயே...நல்லவேளை...நீதான்பா....காப்பாத்துன.....என்று அவள் மனம் யோசித்துக் கொண்டிருக்க......கண்ணன் அடித்ததால் அந்த வலியில் அவளறியாமல் கண்ணீர் வடிந்து கொண்டே....இருந்தது......



சாவித்திரிக்கு யார் பக்கம் பேசுவதென்றே புரியவில்லை...... கயல் செய்தது மிக பெரிய தவறுதான்...... அதுக்கு இப்புடி போட்டு அடிச்சிட்டானே........



காந்திமதிக்கு தன் பேத்தியை பார்க்க பார்க்க வயிற்குள் ஏதோ பண்ணியது.....நாம இந்த சின்ன குருத்த தேவையில்லாம கல்யாணம் பண்ணிட்டமோ...... என்றுதான் தோன்றியது..... கயலை தூக்க அவள் கன்னத்தில் கண்ணனின் அஞ்சு விரல் பதிவும் இருந்தது..... அவளை தாங்கிப் பிடித்து உள்ளே கூட்டி வர......கயலுக்கு தான் கண்ணீர் நின்ற பாடில்லை...... அவள் ஒன்றும் பேசாமல் மாடி ஏறி வந்தவள்..... சேலையை கூட மாற்றாமல் கட்டிலில் படுத்திருந்தாள்....... இரவு சாப்பிட கீழே இறங்கவுமில்லை......அப்படியே தூங்கி போயிருந்தாள்....



மாடிக்கு வந்த கண்ணனுக்கு மனசே ஆறவில்லை...... இவ இன்னைக்கு மட்டும் யார் மேலயாவது மோதியிருந்தா என்ன ஆகியிருக்கும்..... இன்னும் இப்புடி சின்னபுள்ள மாதிரியே இருக்காளே..... எப்பதான் விளையாட்டு தனத்த விடுவா......எதுலதான் விளையாடுறதுன்னு ஒரு அளவில்ல..... நல்ல வேள இவ வண்டியில ஏறி ஸ்டார்ட் பண்ணல..... ஏறியிருந்தா என்ன இவநிலைமை என்ன ஆகியிருக்கும் முருகா நீதாம்பா.... இவளை காப்பாத்துன..... என்று யோசித்தபடி படுத்திருந்தவன் லேசாக கயலை திரும்பி பார்க்க..... அதிர்ந்து போயிருந்தான்..... அவன் ஓங்கி அறைந்ததில்.... அவளின் கன்னத்தில் அஞ்சு விரலும் பதிந்த இடம் அப்புடியே....கருஞ்சிவப்பாக மாறி இருந்தது.....நாமளும் இப்புடி அடிச்சிருக்க கூடாது......அவள் கன்னத்தை தடவியவனுக்கு தன் கண்களில் கண்ணீர் வந்தது....



கயலுக்கு இரவெல்லாம் ஆழ்ந்த உறக்கமே இல்லை...... வண்டி யார் மீதோ மோதிய மாதிரியே கனவு வந்தது..... தூக்கத்தில் கண்ணனை நெருங்கிய கயல் அவன் மார்பு கூட்டிற்குள் ஒடுங்கியிருந்தாள்..... இரவெல்லாம் பயத்தில் அவளுக்கு காய்ச்சலே வந்திருந்தது...... தன் மீது படிந்திருந்த உடற்சூட்டினை உணர்ந்தவன்...... கயலின் நெற்றியில் கை வைத்து பார்க்க..... உடம்பு நெருப்பாய் கொதித்தது ...... கீழே இறங்கிப் போய் வென்னீர் கொண்டு வந்தவன் கயலை எழுப்ப அவளுக்கு கண்ணைகூட திறக்க முடியாமல் வெகுவாய் காந்தியது...... அவளுக்கு காய்ச்சலுக்கு உரிய மாத்திரையை கொடுத்தவன்.... அவளின் நெற்றியில் ஈர துணியை போட்டு மெதுவாக துடைத்து விட்டான்..... மறுநாள் காலை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்று வந்தவன்..... மருந்து மாத்திரை கொடுத்து கவனித்துக் கொண்டான்......



இருநாட்களில் காய்ச்சல் விடவும் காந்திமதி கயலிடம் வந்து.....” ஆத்தா வாறியாடா நாம நம்ம ஊருக்கு போவோம்....”



“ஏன் அப்பத்தா.... அதான் தீபாவளிக்கு இன்னும் பதினைஞ்சு நாளுதானே இருக்கு..... ஒருவாக்குல அப்ப வாரோம்ப்த்தா.......”



“இல்லத்தா..... எம்மனசு ஆறல.... கண்ணைமூடி கண்ணை திறந்தா... ஒம்புருசன் அடிச்சதே கண்ணுக்கு முன்னாடி வருதுத்தா.....உன்னைய வுட்டுட்டு போனா எம்மனசு ஆறாது......நீ வா.... அவுக தீபாவளிக்கு வருவாகள்ள அப்ப கூட வரலாம்......”



அப்பத்தாவும் பேத்தியும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட சாவித்திரிக்கு திக்கென்றது..... நம்ம மகன மருமக தப்பா நினைச்சிருவாளோ.....கூடவே போயிருவாளோ.....என்று பயந்து போயிருக்க.....



கயலோ..”.அப்பத்தா...நீ சின்னபுள்ளயில எத்தனதரம் அடிச்சிருக்க..... நான் உங்கிட்ட எம்புட்டு அடி வாங்கியிருக்கேன்.....”



“ஆமா.... நீ அம்புட்டு சேட்டை பண்ணுவ....அதேன் அடிச்சேன்.....”



“அதே மாதிரிதான் அப்பத்தா இப்ப நடந்துச்சு.... அன்னைக்கு மட்டும் யாராச்சும் குறுக்க வந்திருந்தா.... வண்டி போய் மோதுன வேகத்துக்கு அவுக கைகால் ஒடஞ்சு போயிருக்கும் நான் பண்ணுனது ரொம்ப கிறுக்கு தனம் அப்பத்தா.....அதுனால அவுக அடிச்சது ஒன்னும் தப்பில்ல......நீ அத மறந்திரு.....”



“இருந்தாலும்........”



“அப்பத்தா...இன்னும் ரெண்டு நாளுள எனக்கு பரிட்சை ஆரம்பிக்க போகுது..... அவுக என்னைய நல்லா பாத்துக்குவாக....நீ கவலைபடாத.......”

காந்திமதியும் கவனித்து கொண்டுதான் இருந்தார்...... இரண்டுநாட்களாக கயலை கண்ணன் கவனித்து கொள்வதை......” சரித்தா....அப்ப நீ ஒருவாக்குல தீபாவளிக்கே ஊருக்கு வா.... நான் இன்னைக்கு கிளம்புறேன்.....” என்று அனைவரிடமும் சொல்லிக் கொண்டவள்...

கண்ணனிடம் தனியாக சென்று........”எங்க கயலு கொஞ்சம் சின்னபுள்ள தனமா....தான் நடந்துக்குது..... ஆனா அது தப்பு பண்ணுனா கொஞ்சம் எடுத்து சொல்லுங்கப்பா....புரிஞ்சு நடந்துக்கும்.....அத அடிக்க வேணாம்..... உங்க அடியெல்லாம் அதால தாங்க முடியாதுப்பா......” என்றபடி கண்ணீர்வடிய அவர் கைஎடுத்து கும்பிட........



கண்ணன் பதறி போய் அவர் கையை பிடித்திருந்தான்....”.என்னைய மன்னிச்சுருங்க அப்பத்தா.... அன்னைக்கு நான் ஏதோ கோபத்துல அப்புடி நடந்துட்டேன்.......”



“இல்லப்பா.....அது சும்மா படிச்சுகிட்டு இருந்தபுள்ளயை எவளுக்காண்டியோ....நான் இவ வாழ்க்கைய பணயம் வச்சிட்டேன்..... அவ எங்க குலசாமி மாதிரிப்பா.... அன்னைக்கு நான் சொன்ன ஒரு வார்த்தைக்கு கட்டுபட்டு உங்க கூட வந்தா.... அவள பத்திரமா பாத்துக்குங்க.....நான் வாரேன்பா.....”என்றபடி ஊருக்கு கிளம்பியிருந்தார்......



அன்றிரவு தன் அறைக்கு வந்த கண்ணன் கயல் படித்துக் கொண்டிருக்கவும் கீழே சென்று சாப்பிட்டு வந்தவன்....படுக்க தயாரானான்.... அன்று நடந்த பிரச்சனைக்கு பிறகு இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை..... கண்ணன் மாத்திரை கொடுக்கும் போது ஒன்றும் பேசாமல் வாங்கி போட்டுக்கொள்வாள்.....



இன்று கண்ணன் படுக்க தயாராகவும்....”கயல் உங்ககிட்ட ஒன்னு சொல்லனுமே.....”



என்ன என்று கண்ணால் அவளை பார்த்தபடி பேசாமல் இருக்க.......



“என்னைய மன்னிச்சிருங்க.... நான் அன்னைக்கு பண்ணுனது ரொம்ப தப்பு.... இப்புடி வண்டி வேகமா போகுமுன்னு எனக்கு தெரியாது......” என்று அவனை பார்த்தபடி இருக்க....



வேகமாக எழுந்த கண்ணன்..... எட்டி அவளை அணைத்திருந்தான்......அவள் முகத்தை தன் மார்பில் புதைத்தவன்...”..நீதாண்டி என்னைய மன்னிக்கனும்...”. என்றபடி அன்று அறைந்த கன்னத்தை தடவிக் கொடுக்க.....

“ எனக்கு கோபம் வந்தா என்ன பண்ணுறேன்னே தெரியமாட்டேங்குது........”.



“அப்பா..... எங்கிட்ட பேசிட்டீங்களா..... எங்க எம்மேல இன்னும் ரொம்ப கோபத்துல இருக்கீங்களோன்னு நினைச்சேன்..... ஸ்ஸ்ஸ்...அப்பா..... இனிமேதான் நான் படிச்சதே எம்மண்டைல ஏறும்..... நானும் மூனுநாளா படிச்சு படிச்சு பாக்குறேன்..... எனக்கு அதுல எழுத்தே தெரியல.....”



“ஏண்டி கண்ணு வலிக்குதா....”.



“இல்ல உங்க கோபமான மூஞ்சியே என் முன்னாடி வந்துட்டே இருந்துச்சு..... இப்ப நீங்க பேசவும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு.....”



“போடி லூசு.....நான் பேச வேண்டிய டைலாக்கெல்லாம் நீ பேசுற..... நீ பேசாம இருக்கவும்தாண்டி.... எனக்கு கடையில ஒரு வேலையும் ஓடல.... உன்னோட முகமே என்கண்ணு முன்னாடி வந்துட்டே இருந்துச்சு.....” என்றபடி அவள் கன்னத்தை தடவியவன்...”.சாரிடி..... “என்று அவள் கன்னத்தில் முத்தமிட......

“ போங்க போங்க நான் போய் படிக்கனும்.....”



“படி....ஆனா இன்னும் ரெண்டுமுத்தத்த வாங்கிட்டு படி……” என்றபடி மீண்டும் மீண்டும் அந்த கன்னத்திலேயே முத்தமிட........



“போதும் போங்க..... கூசுது........”என்றபடி அவள் விலக எத்தனிக்க.... கண்ணன் அவளை இறுக்கி அணைத்து இரு கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டு ம்ம்ம் இப்ப போய் படி........ இப்பதாண்டி எனக்கு தூக்கம் வரும்......” அப்பா ரெண்டு மூனு நாளா எனக்கு தூக்கமே இல்லடி......” என்றபடி படுத்தவன்...உடனே உறங்கியிருந்தான்......



மறுநாளில் இருந்து கயலுக்கு பரிட்சையும் ஆரம்பித்ததால் கயல் அதிலேயே மூழ்கிப்போக...கண்ணனும் அவளை தொந்தரவு செய்யாமல் இருந்தான்...... பரிட்சை முடிந்தவுடன் சாவித்திரியுடன் சேர்ந்து தீபாவளி பலகாரங்களு சுட உதவியாக இருந்தாள்...... விடிந்தால் தீபாவளி...............



இனி......................?



தொடரும்......

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top