நேசம் மறவா நெஞ்சம்-13Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்

அத்தியாயம்-13



சகுந்தலா தன் மாமியாரிடம்

” அத்த..........இப்ப இங்க என்னதாத்த நடந்துச்சு..........ஆளாளுக்கு ஒன்னு சொல்லுறாங்க..........நீங்க ஏத்தே கயல இந்த மாப்ளக்கு கட்டிக்குடுக்க ஒத்துக்கிட்டீங்க...........எனக்கு அப்புடியே தலைய சுத்துது...........” என்று புலம்ப........



“இங்கன பாரு சகுந்தலா..............நான் என்னைக்கும் எம்பேரன் பேத்திகளுக்கு நல்லதுதான் செய்வேன்னு தெரியுமுல்ல............”



“ஆத்தி என்னத்த இப்படி சொல்லிபுட்டீங்க உங்களபத்தி எனக்கு தெரியாதா............ ஆனா அங்க என்ன நடந்துச்சுன்னு................”



“ஏன் ஒம்மக சுதா ஒன்னும் சொல்லலையா................”



“இல்லத்த இந்த வாசுபையன் திடீருன்னு கையப்புடிச்சு இழுத்து தாலிய கட்டிப்புட்டாருனு சொல்லுறா....................சொல்லிப்புட்டு ஒரே அழுகையா அழுகுறா............... அதப்பாத்துப்புட்டு கோபமே வராத ஒங்க மகனே வெட்டப்போறேன் குத்தப்போறேன் எடுடா அருவாளங்குறாரு............அழகர் மாமாதான் அவரை சமாதானப்படுத்திக் கூட்டிக்கிட்டு வராரு............”



“சரி கீழவா அங்க போயி பேசிக்குவோம்...ஆனா ஒன்னமட்டும் நினப்புல வச்சுக்க நான் என்ன பேசுனாலும் அதுல நம்ம குடும்பமானமும் இருக்கு உனக்கு இன்னும் ரெண்டு பொம்பளபிள்ளங்களுக்கு கல்யாணம் பண்ணனும் .........அவன்கிட்டயும் சொல்லிவை........தேவையில்லாம பேசி குட்டய குழப்பவேணாமுன்னு.............என்ன புரியுதா..........”.



காந்திமதி மெதுவாக படியில் இறங்க............வாசுவையும் சுதாவையும் சில உறவினர்கள் அழைத்துவர.....



கயலை தூக்கிக்கொண்டு இறங்கிய கண்ணன் கடைசி மூன்றுபடி இருக்கும்போது பாதையில் இருந்த கவனத்தை மீண்டும் கயல்மீது வைத்தான்..........அவளின் முகத்தை பார்த்தவன் அப்போதுதான் அந்த உதட்டின் மேலிருந்த அந்த மச்சத்தைப் பார்த்தான்............இந்த மச்சம் ஏற்கனவே இவளுக்கு இருந்துச்சா.............நாம இவள ரெண்டுதரம் பாத்தமே...........நாமதான் நல்லா கவனிக்கலயோ........... ப்ப்பா இந்த மச்சம் இவளுக்கு மாசுமரு இல்லாத இந்த முகத்துக்கு ரொம்ப சூப்பரா இருக்கு...........அடுத்து அவளின் உதட்டிற்கு பார்வை செலுத்தியவன் இவ இதுல லிப்ஸ்டிக் போட்டுருக்காளா இல்ல அவ உதடே ரோஸ்கலரா........( அப்பா சாமி இந்தபுள்ளய நீ இப்புடி ரசிக்குற.........நாங்க வேற நீ இந்தபுள்ள மேல கோபமா இருக்கியோன்னு பயந்துட்டோம்........... நீ நடத்துப்பா.........நடத்து.......).



கடைசி படிக்கு வந்த கண்ணன் இவளை எப்படி கூப்புடுறது..............என்று யோசித்தவன் அவள் முகத்தில் மெதுவாக ஊதினான்............ இதுவரை கண்ணை மூடியிருந்த கயல் தன் முகத்தில் சூடான காற்றுபடவும் ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்த்தாள்.............. இருமுறை கோபமாக மட்டுமே பார்த்திருந்த கண்ணனின் முகத்தை முதல்முறையாக இப்பொழுதுதான் சாதாரணமாக பார்த்தாள்.............பரவால்ல இவர சாதரணமா பாத்தா ஒன்னும் பயம் வரல.......... ஆனா இந்த மீசை கொஞ்சம் இவருக்கு அழகாத்தான்ல இருக்கு.............



“என்ன பாக்குற.............கீழே இறக்கிவிடவா......... இல்ல இன்னும் மயக்கம் வருதா..........”



“இல்ல இல்ல .......”..என்றவள் அவன் கையில் இருந்து இறங்கியவள்.......லேசாக தடுமாற...........



எட்டி அவள் கையைப் பிடித்தவன்.........அவள் தோளில் கையை போட்டு அணைத்திருந்தான்...........வா என்றபடி நடக்க ஆரம்பிக்க.......



இவர்களை பார்த்த காந்திமதிக்கு மனது நிறைந்தது............ராத்திரி இந்த பையன் பேசுனத பாத்து கொஞ்சம் பயமா இருந்துச்சு............இன்னும் சின்னப்புள்ள மாதிரி இருக்க நம்ம கயலை இந்தபுள்ள பொறுப்பா பாத்துக்கும்முன்னு நினைக்கிறேன்.............என்று நினைத்தபடி பார்வையை திருப்பியவர் எதிரே சுதா வந்து கொண்டிருந்தாள்...........அவளை பார்த்தவுடன் இவருக்கு நேற்று இரவு நடந்தது நினைவிற்கு வந்தது.



சுதா போனில் பேசியதைக் கேட்டு மயங்கி விழுந்த காந்திமதியை கண்ணனும் சகுந்தலாவும் இருபுறமும் தாங்கிப்பிடித்தனர்...........



மண்டபத்தில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க கண்ணனிடம் வந்த சாவித்திரி

” தம்பி.........கண்ணா...... இந்த அப்பத்தா.......இந்த தாலியில கோக்குற நூல சாமி பாதத்துல வச்சு வாங்கித்தாறேன்னு சொன்னாங்க........... வேலையில மறந்துட்டாங்க போல............ வாப்பா நாம வாங்கியாந்து குடுத்துட்டமுன்னா நம்ம சொந்தகாரங்கள்ல இருக்குற ஏழு இல்லாட்டா ஒம்பது சுமங்கலிக சேந்து அத தாலியோட சேத்து கோர்த்து வச்சுருவாங்க...........”



“ஏம்மா இன்னேரத்துல எப்புடி அவுக வீட்டுக்குப் போறது........”.



“வீட்டுக்குள்ள போக வேணாம்பா........அப்புடியே கொல்லப்புறம் நின்னு ஒரு போன பன்னுனா அவுக வந்து குடுத்துட்டு போறாங்க............”





கொல்லப்புற வாசலுக்கு வந்தவர்கள் போனை எடுத்து பேசபோகும் போது காந்திமதியே கையில் ஏதோ ஒரு பொருளோடு வெளியில் வர கத்தி கூப்பிட்டு அடுத்தவர் கவனத்தை கவர வேண்டாம் என நினைத்து அவர் பின்னால் சென்றவர்களுக்கு சுதா பேசியது அப்படியே கேட்டது. கேட்டதும் இருவருக்கும் அதிர்ச்சியில் ஒன்றுமே பேசமுடியவில்லை..............



சுதாவின் பேச்சைக்கேட்டு அதிர்ச்சி அடைந்து மயங்கிவிழப்போன காந்திமதியை அப்போதுதான் சுயநினைவுக்கு வந்த கண்ணனும் சாவித்திரியும் இருபுறமும் தாங்கிப்பிடித்தனர.............



அவரை அப்படியே தூக்கிய கண்ணன் அங்கிருந்த கொல்லைப்புற வெளித்திண்ணையில் படுக்கவைத்தான்.......... சாவித்திரியோ அங்குள்ள செடிகளுக்கு செல்லும் தண்ணீர் குழாயிலிருந்து தண்ணீர் எடுத்து வந்து முகத்தில் தண்ணீரை தெளித்தார்.......”...ஆத்தா......ஆத்தா........எந்திரிங்க.......எந்திரிங்க...........”என்று காந்திமதி எழுப்ப........

.மயக்கம் தெளிந்து எழுந்த காந்திமதி சட்டென எழுந்து சென்று கொல்லைபுற கதவை வெளிப்புறமாக இழுத்து தாளிட்டார்......................

சாவித்திரியோ கோபத்துடன் காந்திமதியை பார்த்து......

“என்னத்தாயிது உங்க பேத்தி எவன்கிட்டயோ போன்ல பேசுது........அன்னைக்கு பொண்ணுகிட்ட சம்மதத்த கேளுங்கன்னு சொன்னதுக்கு உங்க பேத்தி என்னமோ நீங்க கிழிக்குற கோட்டைத்தாண்டாதுன்னு சொன்னீங்க............இப்ப இங்க என்ன நடக்குது...............”.என்று கேட்க



கண்ணனோ” அம்மா போதும் இதோட கல்யாணத்த நிப்பாட்டுங்க.........வாங்க எல்லாத்தயும் கூட்டிக்கிட்டு ஊருக்கு கிளம்புவோம்..........நல்ல வேள இந்த விசயம் இப்ப தெரிஞ்சுச்சு இல்லையினா நாளைக்கு நம்ம குடும்பமேயில்ல கோயிலுக்கு வந்து அசிங்கப்பட்டிருப்போம்............இந்த பொண்ணுக்கு எவ்வளவு திண்ணக்கம் இருந்தா இப்புடி அமுக்கினி மாதிரி இருந்துகிட்டு எவன்கிட்டயோ இப்புடி போன்ல பேசும்.........குடும்பமா இது.........அழகர் மாமா சொன்னாரேன்னு குடும்பத்தப்பத்தி விசாரிக்காம வந்ததுக்கு நமக்கு இந்த அசிங்கம் தேவைதான்........... இன்னைக்கே பஞ்சாயத்தக் கூட்டுறேன்............நாளைக்கு எப்புடி அந்த பொண்ணு எவனையோ கட்டுதுன்னு பாக்குறேன்...............”.



காந்திமதி இவர்கள் இருவரும் இவ்வளவு பேசும் போதும் எதுவும் பேசாமல் கூனிக்குறுகிப் போயி கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்..........கண்ணன் பஞ்சாயத்தை கூட்டுவேன் என்றதும் பதைபதைத்து


” ஐயா சாமி.......... பஞ்சாயத்த கிஞ்சாயத்த மட்டும் கூட்டிராதப்பா........... அப்பறம் நாங்க குடும்பத்தோட சாகுறத விட வேற வழியில்ல............”



சாவித்திரியோ” ஏம்பா பஞ்சாயத்தக் கூட்டியாவது இந்த பொண்ண நீ கல்யாணம் பண்ணுமா........”.



“ச்சீ.....ச்சீ ............இனி அந்த பொண்ணு சம்மதிச்சாக்கூட வேணாம்.........நம்மள இவ்வளவு தூரம் கொண்டு வந்து நிப்பாட்டுனாங்கள்ள.............அதுக்கு நமக்கு ஒரு நியாயம் கிடைக்க வேணாம்..........”.



“ஐயாசாமி நான் சொல்லுறத கொஞ்சம் கேளுங்க செத்தநேரம் பொறுமையா இருப்பா.............ஆத்தா சாவித்திரி கொஞ்சம் உன் மகன்கிட்ட சொல்லுத்தா........ இது இந்த வீட்டு பொண்ணுகளோட மானப்பிரச்சனை........கொஞ்சம் மனசு வைப்பா.........என்று கை எடுத்து கும்பிட்டு.............நான் போயி இந்த சுதாவ ஒரு நிமிசம் விசாரிச்சிட்டு வந்துருறேன்...............”.என்று கூற



சாவித்திரியும்” இருப்பா கண்ணா எதையும் எடுத்தோம் கவுத்தோமுன்னு செய்யக்கூடாது...........ஆத்தாவும் போயி விசாரிச்சுட்டு வரட்டும்.....”



“அம்மா............”



“கொஞ்சம் பொறுமையா இரு கண்ணா....................”.



காந்திமதி” கொஞ்சநேரம் இங்கனக்குள்ள உக்காருங்க.......”.என்றவர் வீட்டிற்குள் நுழைந்து நேராக சுதாவின் அறைக்குள் நுழைந்து கதவை தாளிட்டார்...........

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
“சுதா............ ஏ........... சுதா.................”



பீரோவில் எதையோ எடுத்துக்கொண்டிருந்தவள் நிமிர்ந்து அப்பத்தாவை பார்த்து எரிச்சலுடன்

” என்னப்பத்தா .............எதுக்கு இப்ப கத்துற...........”.


“ஏண்டி இப்ப உன்கிட்ட எவன்டி போன்ல பேசுனான்”


திடுக்கிட்ட சுதா.......”.என்கிட்டயா.........நான் எப்ப போன்ல பேசுனேன்...........”


“ஏய் குடிய கெடுத்தவளே எத்தன நாளா திட்டம் போட்ட எம்மகனோட மானத்தை சந்தி சிரிக்க வைக்கனுமுன்னு........நான் கேட்டன்டி.......நீ பேசுன எல்லாத்தையும் கேட்டேன்........”.


“ஏன் யாரா இருந்தா என்ன........”

“ஏண்டி உனக்குத்தான் மாப்புள பாத்துபேசி விடிஞ்சா கல்யாணங்குற நிலையில வந்து நிக்குறோமேடி...............”.

"யாருக்கு புடிச்ச மாப்புள்ளய பாத்தீங்க எனக்கு அந்த ஆளா சுத்தமா பிடிக்கல..........(..உன் ரேஞ்சுக்கு இதெல்லாம் ஓவர்மா............)..”


“அப்புறம் ஏண்டி சம்மதிச்ச..........”


“என்கிட்ட கேட்டா நாளக்குறிச்சீங்க..........அப்புடி பாத்தவுக நல்ல வசதியான மாப்புள்ளயா பாக்கக்கூடாது. தாமர அக்கா வீடு மாதிரி கூட்டுக்குடும்பமா பாத்துருக்கீங்க........ஏன் வருசம் பூராவும் போயி வடிச்சுக்கொட்டவா..........என்னால அப்புடியெல்லாம் போயி வேலைபாக்க முடியாது.........அப்பத்தா நீ பேசாம இரு என்னோட வழிய நான் பாத்துக்குறேன்.........எனக்கு புடிச்சமாதிரி மாப்புள்ளய நானே பாத்துருக்கேன்..........”


“யாருடி அது சீமையில இல்லாத மாப்புள.......இங்கனபாரு சுதா யாரையும் வெளி அழக வச்சு எட போடாத............இந்த மாப்ளய பத்தி ஒங்க அப்பா நல்லா விசாரிச்சிதான்டி கல்யாணம் பண்ணுறான்.......... கொஞ்சம் பொறுமையா யோசிடி............ நான் இப்ப சொல்லுறத கேளு சிரிக்க சிரிக்க சொல்லுறவன் சீரழியச் சொல்லுவான் .அழுக அழுக சொல்லுறவன் ஒன் நல்லதுக்கு சொல்லுவான்........(.இப்ப இந்த பழமொழி தேவையா............... நீ வேற சும்மாகிட அப்பத்தா...........). அடியேய் அவன் யாருன்னு சொல்லு..............”




“மாப்புள யாரு எவருன்னெல்லாம் என்னால சொல்லமுடியாது.........அவரு யாருன்னு கோயிலுல்ல வந்து பாத்துக்க......(.அதுதான் அந்த வாசுபய சொல்லிட்டானுல்ல நான் தாலி கட்டுறவரைக்கும் யாருகிட்டயும் சொல்லக்கூடாது......நானும் சொல்லமாட்டேன். தாலி கட்டும் போதுதான் விசயம் தெரியனும்..........அப்பதானே அந்த கண்ணனை என்னால பழி வாங்க முடியும்............ எனக்கு எப்புடி அந்த கடைய நீ கிடைக்கவிடாம பண்ணுன அது மாதிரி நீ தாலி கட்டப்போற பொண்ண உனக்கு கிடைக்கவிடாம பண்ணுறேன்டா.)................(..ரிவெஞ்சாமா................ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா..............).


“ஏண்டி அப்ப இந்த மாப்புளைக்கு என்ன வழி........”



“என்ன வழின்னா.............”


“நீ வேற ஆளா கல்யாணம் பண்ணிகிட்டா இவரு என்ன பண்ணுவாரு.........இதுக்கு நீ வீட்ல சொல்லி இந்த கல்யாணத்த நிப்பாட்டியிருக்கலாம்ல...............”


“நிறுத்தியிருந்தா ஒடனே எனக்கு புடிச்ச மாப்புளைக்கு என்னைய கல்யாணம் பண்ணி வச்சுருவீங்களா..............அப்பத்தா எனக்கு தெரியும் ஒங்கள பத்தி நீங்க கோயிலுல குறி சொன்னாதானே மாப்புளயே பாப்பீங்க........ என்னால இவர மறந்துட்டு வேற ஆள எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது..............”.


“ஏண்டி நீ இப்புடி கல்யாணம் பண்ணிக்கிட்டா உன்னய வீட்டுல எப்புடி சேப்பாங்க.................”.


“அதபத்தி உனக்கு என்ன கவலை..........உன் மகன்கிட்ட போயி தேவையில்லாம என்னத்தாயாவது பேசி பிரச்சனை ஆச்சுன்னு வச்சுக்க ஒனக்கு இன்னும் மூனு பேத்திக கல்யாணம் இருக்கு ஞாபகத்துல வச்சுக்க.......... நீ பேசாம இரு........ என்னைய கல்யாணம் பண்ணபோறவரு என்ன பிரச்சனை வந்தாலும் அவரு பாத்துக்குவாரு.........ஏன்னா அவரு என்னைய அவ்வளவு விரும்புறாரு எனக்காக என்ன வேணும்னாலும் செய்வாரு............,..”(..ஆமா இந்த அம்மா பெரிய ரீமாசென் அவரு பெரிய சிம்பு இவுக ரெண்டுபேருக்கும் மன்மதன் படத்துல வர்ற மாதிரி நீ என்னைய லவ் பண்ணுறீள..............அப்ப செய்ன்னு சொன்ன உடனே செய்யப்போறான்..........என்னால இந்த ரெண்டு கொசுத்தொல்லையும் தாங்க முடியலயேயேயே....................)



“ஏய் சுதா இன்னைக்கு சொல்லுறேன் கேட்டுக்க........... ஒரு தும்பி இருந்த தூணும் வாழாது ஒரு வம்பி இருந்த வீடும் வாழாது........இப்புடி வம்பி தனமாயிருந்து காரியம் சாதிக்குறநீ நினைக்குறதே என்னைக்கும் நடக்கும்ன்னு கனவுல கூட காங்காத............எப்படியும் அந்த கண்ணன் பையன் நம்ம வீட்டுக்கு மாப்புள்ளயா வரத்தான் போறாரு அத நீ பாக்கத்தான் போற “என்று சவால் விட்டபடி வெளியே வர.............


முற்றத்தில் அமர்ந்து பூ கட்டிக் கொண்டிருந்த பெண்களுக்கு கயல் காப்பி கொடுப்பதை கண்டவர்............”.ஆத்தா......கயலு..........”


“என்னப்பத்தா.........”



“போயி புதுசா பாலெடுத்து ஒரு மூனுகாப்பிய போட்டு கொல்லப்புறம் எடுத்துட்டு வாத்தா........”.



“சரிப்பத்தா.........”.



கொல்லைப்புறம் சென்ற காந்திமதி இறுகிப்போய் அமர்ந்திருந்த கண்ணனிடமும் சாவித்திரியிடமும் நடந்தவற்றை கூறினார்...........



சாவித்திரி "முதல்லயே இந்த பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லியிருந்தாக்கா............. இந்நேரத்துக்கு நாங்க வேற பொண்ணபாத்து முடிச்சிருப்போமே ஆத்தா ..........என் பையனுக்கு வேற நாளமறுநாளோட 27 வயசு முடியுது...............அது முடிஞ்சுட்டா அப்புறம் 32 வயசுல்லதான் கல்யாணம் பண்ணனும்னு ஜோசியக்காரரு சொல்லியிருக்காரு..............இப்ப தீடீருன்னு வேற பொண்ணுக்கு நான் எங்க போவேன்...........”



“ஆத்தா சாவித்திரி நான் உங்கிட்ட ஒன்னு சொல்லவா..........”



“என்னத்தா சொல்லுங்க.........”.



“இல்ல கோவிச்சுக்ககூடாது.....”.


.”.இல்லத்தா சொல்லுங்க...........”.

“அந்த முகூர்த்த நேரத்துலயே என்னோட அடுத்த பேத்திய கல்யாணம் பண்ணிக்கச்சொல்லுறீயா.......”

“அப்பத்தா............”.என்று கண்ணன் கர்ஜிக்க........சாவித்திரியோ யோசிக்க ஆரம்பித்தாள்.........


கண்ணனோ” வேணாம் அப்பத்தா.........நீங்க எதுவும் பேசாதீங்க........இனிமேலயும் உங்க வீட்ல பொண்ணு எடுப்போம்ன்னு கனவுல கூட காங்காதீங்க.........”.


சாவித்திரியோ” கண்ணா இது என்ன பழக்கம் பெரியமனசவுகள எதுத்து பேசுறது................இததான் உனக்கு சொல்லி வளத்தனா......... பொறுமையா இருப்பா...... பொறுமைதான் கடலவிட பெருசு...........”


“அய்யா சாமி கொஞ்சம் நான் சொல்லுறத கேளுப்பா.........இப்ப என்னோட பேத்திய வரச்சொல்லியிருக்கேன்...........பாத்து அவகிட்ட பேசுங்க...........அவ பச்ச மண்ணு அவளுக்கு இங்கன நடந்தது எதுவும் தெரியாது.......மத்தத அப்பறம் பேசிக்கலாம்...........”. அந்த நேரம் காப்பித் தட்தோடு வர மூவரும் அமைதியானார்கள்.........




கயலோ இன்னேரத்துல இந்த ஐயனாரும் அத்தயும் இங்கன என்ன பண்ணுறாங்க..........என்று நினைத்தபடி......காப்பித்தட்டை நீட்டினாள்.........


அவளை பார்த்த சாவித்திரியோ.......... பொண்ணு அப்புடியோ பொம்ம மாதிரியில்ல இருக்கு........(.வேணாம் சாவித்திரி போன முறையும் இப்புடித்தான் பொண்ணோட அழகைப்பாத்து கவுந்த........ இப்பவாச்சும் ஏதாச்சும் ரெண்டு கேள்விய கேளு...........)



“ஆத்தா இங்க வாடா இங்கன வந்து செத்த உக்காரு...............”.என்று அவளை தன் அருகில் அமர்த்திக் கொண்டாள்........


“ஏத்தா அடுத்து உனக்குதான கல்யாணம்.....”

“எனக்கு என்ன அத்த இப்ப அவசரம்.......நான் இந்த டிகிரிய முடிச்சிட்டு டவுனுல போயி வேலை பாக்கனும்.......”

காந்திமதியோ” ஆமா இவ போயி வேல பாத்து சம்பாதிக்குற வரைக்கும் நாங்க இவளுக்கு கஞ்சி ஊத்தனும்............”

கயல் அவர் காதிற்குள் சென்று” ஏப்பத்தா கஞ்சி மட்டும்தான் ஊத்துவியா......இந்த இட்லி தோசையெல்லாம் என்னாச்சு..........”

“உன்னைய.........”

“ஏத்தா கயலு எங்க குடும்பம் உங்க சுதாவுக்கு ஏத்த குடும்பமா...... உனக்கும் இந்த மாதிரி குடும்பம் வந்தா கல்யாணம் பண்ணுக்கிவியா....”


“எனக்கெல்லாம் எதுவும் தெரியாதுத்த எங்க அப்பா அம்மா இந்த அப்பத்தா என்ன சொல்லுறாங்களோ...........அதுதான்......ஆமா உங்க குடும்பத்துக்கு என்னத்த குறை.”.........(.ஆனா...........மாப்புளதான் உம்முனாமூஞ்சி)



“இல்ல இப்புடி ரெண்டு மச்சினங்க......வயசான மாமியார்.....அவுகளுக்கும் சேத்து வேலை பாக்கனும்ல..........”



“ஏத்த பாத்தா என்ன........இந்தா எங்க தாமர அக்காவும்தான் கூட்டுக்குடும்பத்துல வாக்கப்பட்டுறுக்கா...........எவ்வளவு சந்தோசமா இருக்கா.......அவுக வீட்டுக்குப் போனா ரொம்ப ஜாலியா இருக்கும்த்த.......வீடு நல்லா கலகலன்னு இருக்கும் அத்த........உங்க வீட்டுலயும் ராமரும் முத்துவும் நல்லா பேசுறாங்க..........”(. ஆனா இவருதான் பேசுறதுக்கு காசு கேக்குறாரு......)உங்க வீடும் நல்லாயிருக்கும்ல........”



“நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்கக்கூடாது. ஒரு வேளை எங்க குடும்பமே உனக்கு புகுந்த வீடா இருந்தா என்னத்தா பண்ணுவ......... இல்ல நீ யாரையும் விரும்புரியாத்தா........”



“விரும்புறதா...............நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டேன் அத்த.......அப்பறம் உங்க வீட்டுக்கு வரதா............அதுக்குத்தான் எங்க அக்கா இருக்காளே அத்த.......”



அப்போது கயலை யாரோ உள்ளிருந்து கூப்பிட” சரித்த நான் உள்ள போகவா எனக்கு கொஞ்சம் அம்மா வேலைகுடுத்திருக்காங்க............நீங்க ஏத்த இங்கன இருக்கீங்க............... உள்ளே வாங்க....நீங்களும் வாங்க.....”.என்று கண்ணனையும் கூப்பிட்டாள்


“இல்லத்தா எங்களுக்கு உங்க அப்பத்தாகிட்ட கொஞ்சம் பேசவேண்டியது இருக்கு நீ உள்ள போத்தா.....”

இவ்வளவு பேச்சிற்கும் கண்ணனும் காந்திமதியும் எதுவுமே பேசவில்லை..........கண்ணன் அவளை ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டிருக்க காந்திமதியோ கயலை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்......... பரவாயில்ல நம்ம வளர்ப்பு சோட போகல.................


கயலோ கண்ணனை பார்த்து இவரு ஏன் இப்புடி விரப்பா இருக்காரு........ நம்ம அப்பா கறி சோறு தான போட்டாரு......என்னமோ கஞ்சி போட்ட மாதிரி விரப்பா உக்காந்து இருக்காரு...............



கயல் உள்ளே செல்ல சாவித்திரி கண்ணனை பார்க்க” அம்மா எப்புடியிருந்தாலும் இந்த குடும்பத்து பொண்ணு வேணாம்மா.........நாம இப்ப ஊருக்கு கிளம்புவோம் வேற பொண்ண பாத்து பொறுமையா கல்யாணம் பண்ணுவோம்மா........”



“இல்ல கண்ணா இந்த பொண்ண எனக்குப் புடிச்சுப் போச்சு........”



“அம்மா நான் சொல்லுறத கொஞ்சம் கேளுங்க........”



“ஏப்பா வயசு போயி கல்யாணம் பண்ணுனதாலதான் உங்க அப்பா ஒரு பிள்ளைக்கு கூட ஒரு கல்யாணத்தை பண்ணிபாக்காம செத்துப் போனாரு இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சு கல்யாணம் நடக்கும்போது நான் உயிரோட இருக்கனோ இல்லயோ.......”.என்று அழ ஆரம்பிக்க......



கண்ணனோ பதறிப்போய்” அம்மா எதுக்கு இப்ப அழுகுறீங்க............இப்ப என்ன நீங்க சொல்லுற பொண்ணயே கல்யாணம் பண்ணிக்குறேன்........” என்ற படி அவர் கண்ணைத்துடைத்து


” ஆனா அப்பத்தா இப்ப இதப்பத்தி யாருகிட்டயும் ஒன்னும் சொல்ல வேணாம் நாளைக்கு உங்க பேத்திய கட்டுற அந்த கொம்பன் யாருன்னு நானும் பாக்குறேன்..... எனக்கு ஒரு டவுட்டு இருக்கு,பாக்குறேன்.................அது யாருன்னு.............”.

 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
எல்லோரும் கீழே இறங்கவும் கோவில் மண்டபத்தில் சலசலவென்று சத்தம் கேட்டது...........அதற்குள் சாவித்திரியும் கண்ணனும் அழகரிடம் ஏதோ கூறிக்கொண்டிருந்தனர்..............

சாவித்திரி எல்லோரிடமும்” இங்க பாருங்க..........என் பையனுக்குத்தான் இந்த பொண்ண முடிச்சிருந்தோம் ஆனா என்னமோ நடந்துபோச்சு..........நாங்க எல்லா விபரத்தையும் இந்த ஆத்தாகிட்டயும் அழகர் அண்ணன்கிட்டயும் பேசியிருக்கோம்...........அவுக அப்புறம் சொல்லுவாங்க.........அதுனால நாங்க பொண்ண கூட்டிக்கிட்டு கிளம்புறோம்............”

சகுந்தலாவோ” என்ன அத்தாச்சி இப்புடி சொல்லுறீங்க........பொண்ணு மாப்புள வீட்டுல போயி சாமி கும்புடனும்ல ஒருஎட்டு வீட்டுக்கு வந்துட்டு போங்க......... நம்ம உறவு காலம்காலமா தொடருனும்ல............வாங்க அத்தாச்சி.........”

மாணிக்கமும்” வாங்க மாப்புள...........”


“சரிண்ணே எங்களுக்கு ஊருல வேலையிருக்கு மதிய .விருந்து அங்க தானே.......அதுனால நாங்க ராமர கூட்டிக்கிட்டு வேனுல கிளம்புறோம்.பொண்ணுமாப்புளய நீங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டு போய் சாமி கும்பிட்டவுடன உடனே அனுப்பி வைங்கண்ணே..........தம்பி நம்ம வீட்டு காருல நீ கிளம்பிவாப்பா.............எல்லாரும் ஊருக்குள்ள ஒன்னையத் தான் கேப்பானுங்க...............”.என்றபடி கிளம்ப..........



காந்திமதி தாமரையையும் மல்லிகாவையும் கூப்பிட்டு” வீட்டுக்குப்போயி சாமி கும்பிடவும் துணைக்குபோயி அங்க விட்டுட்டு வாங்க............”


கண்ணன் தன் காரில் அவர்கள் மூவரோடு வீட்டிற்கு செல்ல...........வீட்டில் தாமரை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்று சாமி கும்பிடச்சொல்ல.......கயல் விளக்கேற்றி சாமி கும்பிட..........தாமரை சில முக்கியமான பொருட்களை ஒரு பையில் எடுத்து வைக்க மல்லிகாவும் சில பொருட்களை கொண்டுவந்தாள்..............அதை பார்த்த தாமரை

” ஏய் இது இப்ப முக்கியமாடி........”.

“அக்கா....... ப்ளிஸ்கா............ப்ளிஸ்கா.......”

“என்னமோ பண்ணித்தொலை.......”.

கயலுக்கோ இங்கு நடப்பது எதுவுமே மனதில் பதிய வில்லை யார்யார் என்ன என்ன செய்யச்சொன்னார்களோ அதை எல்லாம் செய்தாள்........என்னடா இது நம்ம வாழ்க்கை ஒரே நாளில் இப்படி மாறியது என்ற எண்ணமே தோன்றியது..................


இவர்கள் நால்வரும் கண்ணன் வீட்டிற்கு கிளம்ப.......


கயலை கண்ணனோட அருகில் தாமரை அமரச்சொல்ல அது வரை எங்கு அமர்வது என்று மனதிற்குள் ஒத்தயா ரெட்டையா போட்டுக்கொண்டிருந்தவள்........கண்ணனை நிமிர்ந்து பார்க்க அவன் கண்ணாலே அடுத்தவர்க்கு தெரியாமல் முறைத்தபடி பக்கத்தில் அமர ஜாடைக்காட்ட .பட்டென்று அமர்ந்தாள்..............


அவர்கள் கண்ணன் வீட்டிற்குச் செல்ல அங்கிருந்த உறவினர்கள் அவர்களை அன்போடு வரவேற்று அமர வைத்தனர்.........


அங்கிருந்த அவன் ஊர் பெண்கள் கயலின் அழகில் வாயை பிளந்தனர்......... பெண் மாறியது பற்றி அரசல் புரசலாக விசயத்தை கேள்விப் பட்டவர்கள்........ ஏதோ ஏப்பசாப்பயாக இருக்குமென்று நினைத்தவர்களுக்கு கயலின் இந்த அழகில் மெய்மறந்தார்கள்................ அங்கிருந்தவர்களை கை எடுத்து கும்பிட்டவர்கள்............. பெரியவர்கள் வரவர அவர்களிடம் திருநீறு பூசி காலில் விழுந்து கும்பிட்டார்கள்............கூட்டம் வரவர கயலுக்கும் விழுந்து விழுந்து எழுந்ததில் இடுப்பெல்லாம் கடுக்க ஆரம்பித்தது..........இவள் ஒரு மாதிரி நெளியவும்..............அவளை பார்த்தவன்...........தன் அம்மாவை அழைத்து ஏதோ சொன்னான்..............

சாவித்திரியோ அங்கிருந்தவர்களை .சாப்பிட அழைத்துச் சென்றார்............

எல்லோரும் சென்றவுடன் அவளை பார்த்தவன்” என்னாச்சு............... எதுக்கு இப்புடி நெளியுற..........”


அவனை பார்த்தவள் இவன் ஏதாவது சொன்னா கோபப் படுவானோ......... “ஒன்னுமில்ல.........ஒன்னுமில்லயே...........”


அவளை ஆழ்ந்து பார்த்தவன் தன் தம்பியை அழைத்து குடிக்க கூல்டிரிங்ஸ் கொண்டுவரச்சொன்னவன்..............அவளை பார்த்து

” நீ குடிச்சிட்டு உக்காரு நான் இந்தா வாரேன்” என்று கூறிச்சென்றான்...........


இவர்களின் உறவினர்களும் ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டு கிளம்பினர்........ மாலை ஆறு ஆகவும் கண்ணன் தன் அம்மாவிடம் வந்து “அம்மா எனக்கு கடையில கொஞ்சம் வேலையிருக்கு கொஞ்சம் பொருளெல்லாம் வந்திருக்கு அத குடோன்ல இறக்கிவச்சிட்டு வரேன்மா வர கொஞ்சம் லேட்டாகும் நீங்க எல்லாரும் சாப்புட்டு படுங்க.................”


“என்ன கண்ணா இன்னைக்கும் வேலையா.............”

“இல்லம்மா கண்டிப்பா போகனும்.............”

“அப்ப சீக்கிரமாவது வரப்பாருப்பா............”

கண்ணன் திரும்பி வர மணி 11 ஆனது கை வேலைசெய்து கொண்டிருந்தாலும் மனதிற்குள் கயல் குடும்பத்தின் மீது கோபம் கனன்று கொண்டே இருந்தது.........இன்னைக்கு இந்த கல்யாணம் மட்டும் நடக்காமயிருந்தா நம்ம குடும்பம் இந்த சொந்த காரங்க முன்னாடி எவ்வளவு அசிங்கப்பட்டிருப்போம்.............

இன்னைக்கு இவ ஏதாச்சும் கிறுக்குத்தனமா பேசட்டும் இருக்கு அவளுக்கு.........

கோபத்துடன் தன் அறை கதவை திறந்தவன் திருதிருவென்று விழிக்க ஆரம்பித்தான்......

உள்ளே என்ன.................?

தொடரும்........

 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top