நேசம் மறவா நெஞ்சம் -12Nesam Marava Nenjam

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நேசம் மறவா நெஞ்சம்
அத்தியாயம்-12

மறுநாள் காலை அனைவரும் மூன்று வேனில் புறப்பட்டு கோவிலுக்குச் சென்றார்கள். அனைவரும் அங்கிருந்த நீண்ட படிக்கட்டுகளில் ஏறி மலைமீது இருக்கும் முருகன் சன்னதியை அடைய காந்திமதியோ மெதுவாக தன் பேத்தி கயல் கையைப்பிடித்துக்க கொண்டு ஏறிக்கொண்டிருந்தாள்..........

“என்னப்பத்தா.........உனக்கு இன்னைக்கு என்னாச்சு........?எப்பவும் கோயிலுக்கு வரும்போது நீதான் முன்னாடி ஏறுவ..............இன்னைக்கு என்னாச்சு..........?”

“ஒன்னுமில்லத்தா..........”

“சீக்கிரம் வா அப்பத்தா எல்லாரும் ஏறிப் போயிட்டாங்க...............நாமதான் கடைசி................”

“இல்லத்தா இன்னும் நேரமிருக்கு.........செத்தநேரம் இப்புடி உங்காந்துட்டு போவமா............”

“என்னாச்சு அப்பத்தா…….? உடம்புக்கு என்ன பன்னுது அம்மாவ போன்பண்ணி வரச்சொல்லவா...........?”என்று பதறியபடி......அவள் போனை எடுக்க..........

“இல்ல கயலு ஒன்னும்பண்ணல செத்தநேரம் நீயும் இப்புடி உக்காருத்தா............”என்றபடி அவளை தன் அருகில் அமரவைத்தாள்..........

“சரி…….” என்று உட்கார்ந்தவள்.......

.தன் கையில் இருந்த வாட்டர்கேனை கொடுத்தவள்

.” இந்த தண்ணீய கொஞ்சம் குடிங்கப்பத்தா .....................”என்று கொடுத்தவள்,தன் கையில் இருந்த கர்சீப்பால்அவர் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்து விட்டாள்.........

தன்பேத்தியை வாஞ்சையுடன் பார்த்தவர்.........அவளை மேலிருந்து கீழாக பார்த்தார்..............கண்ணன் எடுத்துக் கொடுத்த அந்த மெரூன் வண்ணப் பட்டுடித்தி காதில் அடுஅடுக்கான சிமிக்கிப்போட்டு, இருபக்கமும் அன்னம்வைத்த டாலர் போட்ட நீண்ட சங்கிலி போட்டு கழுத்தில் அழகான சிறிய நெக்லஸ் கையில் நான்கு காப்போடு அந்த சேலைக்கு மேட்சாக கண்ணாடி வளையல் அணிந்திருந்தாள்............அவள் கையை தூக்கும்போதெல்லாம் அது அழகான ஒலி எழுப்பியது...........தலையின் இருபக்கமும் முடி எடுத்து கிளிப்குத்தி அழகாக பின்னியிருந்தாள்.................... தன் நீண்ட ஜடையில் மல்லிகையும் கனகாம்பரமும் சூடி கண்ணுக்கு கண்மை இட்டு தன் சேலைக்கு மேட்சாக அடர்ந்த மெரூன் வண்ண பொட்டிட்டு நெற்றியில் திருநீறும் குங்குமமும் வைத்து பார்க்க அழகான மகாலெச்சுமியை போலிருந்தாள்..............

“என்னபத்தா இன்னைக்கு என்னமோ புதுசா பாக்குறமாதிரி பாக்குற................. ?”

“ஏத்தா உன்கிட்ட ஒன்னு கேக்கனுமே...........”

“கேளுப்பத்தா.......... என்கிட்ட கேக்க இப்புடி யோசிக்குற..........”

“அது ஒன்னுமில்லத்தா......நீயும் நாங்க சொல்லுற மாப்புளய தானத்தா கட்டுவ.........இல்ல ஒனக்கும் வேற ஏதாச்சும் நினப்பு இருக்கா............?”

“என்னாச்சு அப்பத்தா…..? நேத்துல இருந்து எல்லாரும் இந்த கேள்வியவே கேக்குறீங்க..........இல்ல நம்ம வீட்டுல யாரு நீஙக சொல்வுறத மீறீயிருக்கா......?”

“இல்ல கயலு இந்த அப்பத்தா என்ன செஞ்சாலும் அதுல ஒரு நியாயம் இருக்கும்னு தெரியுமில்லத்தா..................”

“ஆமா அதுல என்ன டவுட்டு.......... “

“சரித்தா அத மட்டும் என்னைக்கும் ஞாபகத்துல வச்சுக்க..................”என்று பேசிக்கொண்டிருக்கும் போது மல்லிகா வேகமாக படிக்கட்டுகளில் இறங்கி வந்தவள்...........

“என்னக்கா உங்கள எங்கயெல்லாம் தேடுறது...........?அம்மா உங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டு வரச்சொன்னாங்க................ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா.............. கோயிலுக்குள்ள என்ன கூட்டங்குற.................இன்னைக்கு இங்க நிறைய கல்யாணம் நடக்குதுக்கா..........
நிறைய பொண்ணு மாப்புள இருக்காங்க........ யாரு நம்ம சொந்தகாரங்க யாரு வேற கல்யாணத்துக்கு வந்தவுகன்னு தெரியலக்கா.............நானும் குத்துமதிப்பா எல்லாரையும் பாத்து கையெடுத்து கும்புட்டு சிரிச்சுவச்சேன்கா.............
எல்லாரும் என்னய லூசுன்னு நினைக்கப்போறாங்க.............பெரிய கார்த்திகைக்கு இங்க வருவோம்ல அப்ப எவ்வளவு கூட்டம் வரும் அதுமாதிரி இருக்குக்கா...................நம்ம மாமா வேற பொண்ணுகழுத்துல தாலி கட்டிராம பாத்துக்கணும்க்கா.............( உன்மையிலயே நீ கயல் தங்கச்சி தாம்மா............அவள மாதிரியே இப்படி பேசுற)................என்னக்கா நான் இம்புட்டு பேசுறேன்......... நீயும் அப்பத்தாவும் ஒன்னும் பேசாம இருக்கீங்க.............

கயலு இன்று ஏதோ நடக்கப்போகிறதோ என்று மனதிற்குள் சிறு சலனம் தோன்றியது..............

”ஒன்னுமில்லடி..........ஏதோ யோசனை சரி சரி வா போகலாம்.............”

கோயிலுக்கு மேலே ஏறியவர்கள் மாணிக்கம் சகுந்தலாவிடம் சென்றார்கள்......... சன்னதி முன்பு கண்ணனும் அவன் சொந்தகாரர்களோடு நின்று கொண்டிருந்தான்...............

“பொண்ண கூட்டிகிட்டு வாங்க.....”...என்ற சாவித்திரியின் குரல் கேட்டு மல்லிகாவும் சகுந்தலாவும் சுதாவை அழைத்துக்கொண்டுச்செல்ல.................. காந்திமதி கயலின் கையைப் பிடித்து அவர்களின் பின்னால் சென்றார்.........

கண்ணனின் முகம் இருகிப்போயிருந்தது. கண்ணனின் அருகில் சுதாவை நிறுத்திய சகுந்தலா தன் கணவரை அழைத்துவரச் சென்றார்.........

கண்ணனின் வலதுபுறம் சுதாவும் அவளுக்கு பக்கத்தில் கயலும் காந்திமதியும் நின்றிருந்தனர்..............ஐயரிடம் தாலியை கொடுக்க அவர் அதை சன்னதி உள்ளே கொண்டு சென்றார்..............

அப்போது இன்னொரு ஜோடி பொண்ணுமாப்பிள்ளை வர அவர்களோடு சேர்ந்து கூட்டமும் நெருக்கியது.........அந்த கூட்டத்தோடு கூட்டமாக வாசுவும் அந்த கூட்டத்தில் நெருக்கியடித்து வந்து கண்ணனின் முதுகுக்கு பின்னால் நின்றான்...............

அங்கிருந்த கயலோ சுதாவையும் கண்ணனையும் விட்டுவிட்டு அங்குள்ள மற்ற பொண்ணு மாப்பிள்ளைகளை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்...........

அங்கிருந்த ஐயர் ஒவ்வொரு மாப்பிள்ளையிடமும் தாலியை கொடுத்துக் கட்டச்சொல்ல அங்கிருந்த இளைஞர்கள் சீட்டி அடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய அங்கு நின்றிருந்த சுதாவோ மெதுவாக பின்னால் நகர்ந்து வாசுவின் அருகில் செல்ல காந்திமதி தன் பேத்தி கயலை கூட்டத்தோடு கூட்டமாக கண்ணன் அருகில் நகர்த்தியிருந்தார்...............

மாப்பிள்ளை கோலத்தில் வந்திருந்த வாசு சட்டென தன் பையில் இருந்த தாலியை எடுத்து கண்ணனை செறுக்குடன் பார்த்துக்கொண்டே சுதாவின் கழுத்தில் கட்டினான்............

ஐயர் வந்து கண்ணன் கையில் தாலியை கொடுக்க அதை பார்த்த வாசு “இது தான் உனக்கு இனி தேவபடாதுல்ல...........அப்படியே இந்த உண்டியல்ல போடு” என்றான்..........

கண்ணனின் முகத்தில் ஒன்றையும் காட்டிக்கொள்ளாவிட்டாலும் அவன் உள்ளே ஒரு பிரளயமே வெடித்துக்கொண்டிருந்தது...............கையில் தாலியை வாங்கிய கண்ணன் நிமிர்ந்து தன் அம்மாவையும் அப்பத்தாவையும் பார்க்க அவர்கள் தலையை அசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தனர்............

அதுவரை அங்கிருந்த மற்ற பொண்ணு மாப்பிள்ளைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கயல் ஐயர் கண்ணன் கையில் தாலியை கொடுக்கவும் பக்கத்தில் திரும்பிப்பார்த்தாள்..................தன் அக்காவை காணாமல் திகைத்தவள்..................நம்ம எப்படி இவரு பக்கத்தில் என்ற யோசித்தபடி கண்ணனை நிமிர்ந்து பார்க்க அதுவரை கையில் தாலியோடு நின்றிருந்தவன் அவளை பார்த்துக்கொண்டே தாலியை அவள் கழுத்தில் கட்டினான்....................தாலியை கட்டியவன் வாசுவிடம் திரும்பி

” நீ இப்ப என்னமோ சொன்னியே அது எனக்கு சரியா கேக்கல...............இப்ப திரும்பச்சொல்லு....................... “என்று கேட்க.................அங்கு கயல் மயங்கி சரிந்திருந்தாள்.................
 
Last edited:

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அவளை தாங்கிப்பிடித்த கண்ணன் அவளை தூக்கிக்கொண்டு அங்கிருந்த வெளி மண்டபத்துக்கு வந்தான்....................சாவித்திரியும் காந்திமதியும் பின்னே ஒடிவர அவளை தரையில் படுக்க வைக்க........காந்திமதி அவள் தலையை தன் மடியில் தாங்கினார்...............

வந்திருந்த உறவுக்கூட்டமோ “என்னடா ஒரு கல்யாணமுன்னு தானே பத்திரிக்கையில பேரு போட்டுருந்துச்சு.............ஆனா இப்ப ரெண்டு கல்யாணம் நடக்குதே................”

“இந்த காந்திமதி கிழவிய பாத்தா.........இதுக்கு முன்னமே தெரியும் போலயிருக்கே............ இப்ப நாம ஏதாச்சும் கேக்கப் போனா நம்ம குடும்பத்துல மூனு தலைமுறைக்கு முன்னாடி ஒடி போனவங்களக்கூட இந்த கிழவி ஞாபகம்வச்சுல இப்ப எடுத்துவிடும்....................”என்று ஆளாளுக்கு ஒரு சிந்தனையில் இருக்க................

திருமணம் நடப்பதற்கு முன்பு தன் கணவரை தேடிச் சென்ற சகுந்தலா......... அவர் மலைகோயிலுக்கு செல்லும் முன் கடைசிபடியில் உள்ள அந்த பிள்ளையார் கோவிலில் அமர்ந்திருப்பதை கண்டவள்..............

“என்னங்க இங்க வந்து உக்காந்து இருக்கீங்க........ அங்க உங்கள தேடிக்கிட்டு இருக்காங்க...............?”என்று கூற

“ஒன்னுமில்ல சகுந்தலா அங்க உள்ள கூட்டம் ரொம்ப வரவும் எனக்கு அப்படியே சல்லுனு வேர்த்து ஒரு மாதிரி மூச்சடைக்க ஆரம்பிச்சிருச்சு அதான் இப்புடி செத்தநேரம் காத்தாட உக்காரலாம்னு வந்தேன்..................”

“என்னங்க இப்புடி சொல்லுறீங்க.............வாங்க ஆசுபத்திரிக்கு போவோம்” என்று அழ ஆரம்பிரக்க.........

“ஏய் நீவேற ஏண்டி ஒரு நல்ல காரியம் நடக்கும் போது இப்புடி அழுது ஊரக்கூட்டுற..............நம்ம அருணு இருந்தா......கூப்புடு.....,ஒரு சோடா குடிச்சா எல்லாம் சரியா போகும்.............போ” என்று அவரை போகச் சொல்ல........அப்போது அங்கு வந்து கொண்டிருந்த அருணிடமும் முத்துவுடமும் காசை கொடுத்துவிட்டாள்.............

கூட்டத்தின் நடுவில் சிக்கிக்கொண்ட மல்லிகா அங்கிட்டும் போகமுடியாமல் இங்கிட்டும் போகமுடியாமல் நடுவில் மாட்டிக்கொண்டாள். அப்போது வேறு கல்யாணத்திற்கு வந்திருந்த சில இளைஞர்கள் இவளை கேலி கிணடல் செய்து பாட ஆரம்பித்தனர்.........

காலையில் இருந்து இவளையே சைட் அடித்துக்கொண்டிருந்த ராமர் இவள் அந்த இளைஞர்கள் கேலி செய்வதற்கு எந்த பதிலும் கூறாமல் அழ ஆரம்பிக்க இவன் இந்த லூசு நம்மகிட்ட என்னமா வாய்பேசுச்சு.............. அங்கன போய் வாய மூடிக்கிட்டு இருக்கு

அந்த இளைஞர்களும் தேவையில்லாமல் எதுவும் பேசவில்லை.......சாதாரண கேலி தன் சக மாணவிகளிடம் எப்படி பேசுவார்களோ அப்படியே பேசினார்கள்...............

அவள் அழ ஆரம்பிக்கவும் அங்கிருந்த சில இளைஞர்கள்

” டேய் இந்த பொண்ணு அழுகறத அவுக சொந்தகாரங்க யாராச்சும் பாக்குறதுக்குள்ள வாங்க ஓடிருவோம் மேக்கொண்டு ஏதாச்சும் பிரச்சனை வந்து பஞ்சாயத்து கிஞ்சாயத்த கூட்டிற போறானுக...............”.என்ற படி ஆளாளுக்கு நழுவ ஆரம்பிக்க.............

அப்போது அவள் அருகில் வந்த ராமன் ....”..ஏய் லூசு அன்னைக்கு எப்புடி பேசுன.........இன்னைக்கு இப்புடி மூஞ்சிய மூடிக்கிட்டு அழுதுகிட்டு இருக்க........”.

அப்போது தன் முகத்தில் இருந்து கையை எடுத்தவள் அவனை பாத்து கண் அடித்தவள்.

” எங்க அந்த பயபுள்ளக எல்லாம் நான் சும்மா மூஞ்சிய மூடி சீனைப் போட்டவுடன எல்லாம் பயந்து ஓடிட்டாங்க...........அம்புட்டு பக்கிகளும் வேஸ்டு.................”

(அடிப்பாவி இம்புட்டு நேரமும் சீனப்போட்டீயா............ நல்ல வேள நாம ஊடால வந்து காப்பாத்தலாமுன்னு நினைச்சோம்.........தப்பிச்சோம்டா...........சாமி.).(.. ஏண்டா கல்யாணத்துக்கு வந்துட்டு ஆளுக்கு ஒரு பக்கட்டு திரிஞ்சா என்ன அர்த்தம் அங்க பொண்ணு மாப்புள மாறிப்போச்சு.............அத எவனும் பாக்காம திரியுறானுங்க...........).

அங்கு வாசுவோ இவன் சுதாவதானே கல்யாணம் பண்ணுறதா இருந்தான் ஆனா இப்புடி பொசுக்குன்னு அந்த கயலுப்புள்ள கழுத்துல தாலிய கட்டிப்புட்டான்............நான் வேற தேவையில்லாம காச செலவழிச்சு இந்த கல்யாணத்துல கூட்டத்த காண்பிக்குறதுக்கு அம்பது அறுபது பேர கூட்டிட்டு வந்தனே................. (ஓஓஓ அப்ப கடைசியா வந்த பொண்ணுமாப்புள நீ அனுப்புனதா....................ஏண்டா காச வச்சுகிட்டு இருக்கமுடியலயா................) ஆமா நான் அவன பழிவாங்குன்னனா இல்லையா...................? எப்படியோ நம்மளுக்கு இந்த சுதாவோட கல்யாணம் ஆச்சே அது போதும்......

அங்கு தன் மடியில் தலை வைத்திருந்த கயலின் முகத்தில் தண்ணீரை தெளித்த காந்திமதிக்கு அன்று தன் குலசாமி கோயிலில் அந்த பூசாரி சாமி ஆடி

” ஏய் ...............இங்க வா என்று அழைக்க.........காந்திமதியோ பய பக்தியுடன் அவர் அருகில் செல்ல...........

"என்ன உன் பேத்திகளுக்கு மாப்புள பாக்க குறிகேக்க வந்தியா...............?”.

“ஆமா சாமி நீங்கதான் நல்ல குறியா குடுத்திட்டீங்களே.............”

“ஆமா நான் சொன்னது ஒரு மாப்புள ஆனா இன்னொரு மாப்புள........”

“என்ன சாமி சொல்லுறீங்க........நாங்க ஒரு பேத்திக்குதான கல்யாணம் பண்ண போறோம்..........”

“நீ ஒரு மாப்புள பாத்துருக்க ஆனா இன்னொருத்தி அவளா பாத்துகிறுவாளே..........”

“ஆத்தி நான் என்ன பண்ணுவேன்........கருப்பா என்னப்பா எங்க குடும்பத்துக்கு இப்புடி ஒரு சோதனைய குடுக்குற.............”

“நீ என்ன சோதனை வந்தாலும் நான் குறி சொன்ன மாப்புளய விட்டுறாத.............உன் குடும்பம் இப்ப சோதனைய சந்திக்குற நேரம் நீ துணிஞ்சு நின்னு சமாளி..............”..என்றபடி பூசாரி மலையேற துவங்க................

காந்திமதிக்கு கைகாலெல்லாம் வெடவெடவென நடுங்கத்துவங்கியது..........அங்கயே சிறிது நேரம் அமர்ந்திருந்தார்............

சிறிது நேரம் கழித்து அங்கே வந்த மாணிக்கம்

” ஆத்தா போவமா” என்று கூப்பிட.............தன் மகனுடன் கூடச்சென்ற காந்திமதி பூசாரி சொன்ன குறியை பற்றி சொல்ல ஆரம்பிக்கும்போது...............

“ஆத்தா இப்பதான் மனசுக்கு ரொம்ப சந்தோசமாயிருக்கு............நம்ம கருப்பரே இந்த மாப்புளைக்கு சரின்னு சொல்லிட்டாரு........அழகர் அண்ணனும் இந்த மாப்புள ரொம்ப நல்லபிள்ளை நம்ம குடும்பத்துக்கு மாப்பிள்ளையா கிடைக்க நாம குடுத்து வச்சிருக்கனும்னு சொல்லுறாரு...........இந்த பையன் நமக்கு ஒரு பையன் மாதிரி இருப்பான்னு சொல்லுறாரு..............மாப்புளய பாக்கும்போது ஏதும் பேசாமல் ரொம்ப அமைதியா இருந்தாலும் அன்னைக்கு போன்பண்ணி நீங்க உங்க பொண்ணுக்கு ரொம்ப சீரு செய்ய வேணாம் அத உங்க மத்த பொண்ணுங்களுக்கு வச்சிக்குங்கன்னு சொன்னாருத்தா..............எனக்கு ரொம்ப சந்தோசம்......... நம்ம பொண்ணுக்கு நாம செய்யுறத செய்யத்தான் போறோம்.........எனக்கு மூத்த மாப்புள மாதிரியே இவரும் குணமா கிடச்சிருக்காரு..............அப்படியே நம்ம கயலுக்கும் ஒரு மாப்புள பாத்து உடனே முடிச்சிரனும்தா..............”

“ஏப்பா அவளுக்கென்ன அவசரம் படிப்பு முடிய இன்னும் ஒரு வருஷம் இருக்கே...............”

“இருக்கட்டும்தா எனக்கும் முன்னமாதிரி மேலுக்கு சுகமில்லத்தா.........இந்த பொம்பள பிள்ளங்கள நல்ல மொறையா மானம் போகாம கட்டிக்குடுத்துட்டா எனக்கு அதுவே போதும்தா...........”..என்று புலம்பியபடி வர......

காந்திமதியோ தன் மகனிடம் பூசாரி சொன்னதை சொல்லி மேலும் கவலையேற வைக்க வேண்டாம் என்று நினைத்து அமைதியாக வந்தார்..........

அன்றிலிருந்து கயலை உற்று கவனிக்க ஆரம்பித்தார்......அவள் மீது மிகுந்த நம்பிக்கை இருந்த போதும் யாரும் அவளை ஏமாற்றி அவள் மனதை கலைத்து விடுவார்களோ என்று பயந்து அவள் போன் பேசும் போதும் கல்லூரிக்குச் செல்லும்போதும் திரும்ப வரும்போதும் கவனித்துக் கொண்டேயிருந்தார்.................

அப்பொழுதுதான் மயக்கம் தெளிந்த கயல் மெதுவாக எழ அப்போதுதான் விசயம் அறிந்து வந்த மாணிக்கம் சகுந்தலாவோடு அவர்கள் உறவினர்களும் வர கூட்டம் சேர துவங்கியது..............

அவர்களை பாத்த காந்திமதி “எல்லாரும் இங்கன ஒன்னும் பேச வேணாம்....... கீழே இறங்கி அந்த கோயில் மண்டபத்துக்கு போவோம் “ என்று எல்லாரையும் கீழே போகச்சொல்ல.............

மெதுவாக எழுந்த கயல் அப்பத்தாவின் கையைப்பிடிக்க அப்பத்தாவோ மெதுவாக அவள் காதிற்குள்” உனக்கு இந்த அப்பத்தா மேல நம்பிக்கையிருந்தா நீ இப்ப எதுவும் பேச வேணாம் என்னைக்கும் உனக்கு நல்லது தான் செய்வேன்” என்றவர்

” சரி வா போவோம்..........”

கயல் மெதுவாக நடக்க ஆரம்பிக்க சாவித்திரியோ........”..ஏத்தா கயலு இப்பதான மயக்கம் போட்டு விழுந்த எப்புடி இம்புட்டு படியும் இறங்கிவருவ..........” என்றவர்

“கண்ணா தம்பி கண்ணா இங்க வாப்பா.........”...என்று அழைத்தவர்

” நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்.......... மருமகள அப்புடியே கீழ தூக்கிக்கிட்டு வா புள்ள எப்புடி இம்புட்டு படியும் இறங்கி வரும்.............”.

கண்ணன் மெதுவாக நிமிர்ந்து கயலை பார்க்க கயலோ அம்மா................. இன்னைக்கு செத்தேன்...........என்னது இவரு என்னய தூக்கிட்டு வரதா..............அம்மாடி கடவுளே எப்புடியாச்சும் என்னைய காப்பாத்து..........

“இல்லத்த எனக்கு இப்ப ஒன்னும் பண்ணல .........என்றபடி கை காலை நன்கு உதறியவள்............

"எனக்கு ஒன்னுமில்லத்த............வாங்க போகலாம்......” என்று நடக்க ஆரம்பிக்க........

“என்ன தம்பி இம்புட்டு யோசிக்குற............இவ ஒன்னோட பொண்டாட்டி இவள தூக்குப்பா இப்புடியே தவறிகிவறி கீழ விழுந்தா மேப்படியில உருள ஆரம்புச்சா கீப்படியில போயிதான் நிப்பா...............”

கண்ணன் சட்டென்று வேட்டியை மடித்துக்கட்டியவன் கயலை இடுப்பில் கை கொடுத்து தூக்கியிருந்தான். தூக்கியவன் விறுவிறுவென்று படியில் இறங்க ஆரம்பிக்க..........அவன் கையில் இருந்தபடி கீழே குனிந்து பார்த்தவளுக்கு உண்மையிலே மயக்கம் வரும் போல இருந்தது. கைக்கு எந்த பிடிமானமும் இல்லாததால் ............ உங்ககிட்ட ஒன்னு கேக்கவா ...............

“ம்ம்ம்.........என்ன.........”

“அதுல்ல இங்கயிருந்து பாக்கும்போது அப்படியே தலைய சுத்துது.........உண்மையிலே மயக்கம் வரமாதிரி பயமாயிருக்கு.........”

“இப்ப என்ன பயமாயிருக்குன்னு என்னோட கழுத்தப் புடிச்சி தொங்கப்போறீயா.........”.

“ஆமா.........”என்றவள் சட்டென அவன் கழுத்தில் இரு கையையும் மாலையாக கோர்த்து கண்களை இறுக மூடிக்கொண்டாள்.........

கண்ணனுக்கு அப்படியே மூச்சு அடைத்தது. அவளது மகம் இவன் முகத்தின் வெகு அருகில் இருந்தது.இருவர் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலந்தது. கயல் கண்ணை மூடியிருந்ததால் அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை.............கண்ணனுக்குதான் பெரும் அவஸ்த்தையாயிருந்தது. டேய் நீ இவ மேல கோவத்துல இருக்கடா.............. அவள பாக்காத..............என்று நினைத்துபடி கீழே இறங்கத்துவங்கினான்..........

மூடியிருக்கும் கயலின் கண்ணும் மனமும் கண்ணனுக்காக எப்போது திறக்கும்..........?

தொடரும்..............
 
Last edited:

muthu pandi

Well-Known Member

nice
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top