நெஞ்சோரமாய்

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
#1
"நெஞ்சோரமாய்
நெருஞ்சி முள்
பாய்ந்ததோ
நினைவில் நீங்காத
இடம் பிடித்த
நீ தான்
யாரோ போல்
என்னை கடந்து சென்றபோது"


"நிம்மதி நீயே
என்னைக்கண்டு
நீ யார் எனக்கேட்டபோது
கண்ணாடியாய்
நான் நொறுங்குகையில்
நெஞ்சோரமாய்
நெருஞ்சி முள்
நெருக்கமாய் தைத்தது"


"வலி தந்த உறவே
நீ மறுமுறை
வாசல் வந்த போதும்
நூறுமுறை யோசிக்கிறது
என் நெஞ்சம்
ஒருமுறை பட்ட காயத்தின்
காரணத்தால்"


"ஏற்று கொள்ளவும்
முடியாமல்
மறக்கதாத
உன் முகத்தை
மனதில் இருந்து
மறைக்கவும்
முடியாமல்
நெஞ்சோரமாய்
நெருஞ்சிமுள் தான்
நித்தம் என்னை நீங்காது
தைக்கிறது
என் தவிப்புதான் தீருமா?
பட்டகாயம் தான் ஆறுமா?"
 
Advertisement

Sponsored