நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 52

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
ஏன்
எதனால்
என்று
பகுத்தறியமுடியாமல்
இன்றுவரை குழம்புகின்றது
உன் மீது காதல்
கொண்ட
என் மனம்...

இரண்டு மாதங்களுக்கு பிறகு ....

“அம்லு... லேட்டாகிடுச்சு அம்லு... நான் கிளம்பனும்... சீக்கிரம் வாம்மா” என்று தங்களறையிலிருந்த கட்டிலில் அமர்ந்தபடி குரல் கொடுத்துக்கொண்டிருந்தான் ரிஷி.... சுமார் பதினைந்து நிமிடங்களாக குரல் கொடுத்து களைத்தவன் அந்த அறையிலேயே இருந்த இன்னொரு அறைக்குள் நுழைந்து அங்கு லாப்டொப்பில் எதையோ மும்முரமாய் செய்து கொண்டிருந்த ஶ்ரீயை முறைத்தான் ரிஷி....
திருமணம் முடிந்ததும் ஶ்ரீ வேலையை ரிசைன் செய்துவிட ரிஷியோ வேலையை தொடருமாறு கூறினான்...
அதற்கு ஶ்ரீயோ
“என்னால வேலைக்கு போக முடியாது... உங்களால எனக்கு மூன்று வேளை சாப்பாடு போடமுடியாதா???”
“நீ தான் ஆறுவேளை சாப்பிடுவியே அம்லு....”
“என்ன நக்கலா??”
“சேசே..”
“நான் வேலைக்கு போக மாட்டேன்...அவ்வளவு தான்.. என்னை கம்பல் பண்ணாதீங்க..”
“என்ன அம்லு சின்னபிள்ளைகள் ஸ்கூலுக்கு போகமாட்டேன்னு அடம்பிடிக்கிற மாதிரி அடம்பிடிக்கிற?? அப்போ நீ படிச்சது எல்லாம் வேஸ்டா..”
“அதுக்கு தான் மூன்று வருஷமா வேலை பார்த்துட்டேனே.... அது போதும்...”
“என்ன அம்லு இது... உன்கிட்ட இருந்து இதை நான் எதிர்பார்க்கலை. நீ மேரேஜிற்கு பிறகும் வேலைக்கு போவேன்னு அடம்பிடிப்பேன்னு தான் நினைத்தேன்...”
“அதான் பிடிக்கலைனு சொல்றேனே அத்தான் விட்டுடுங்க...”
“சரி... நீ எதுக்கு வேலைக்கு போகமாட்டேன்னு சொல்லுற??”
“நமக்கு என்ன பணகஷ்டடமா??? இல்லையே... என்னோட பிளேசை கஷ்டபடுற யாராவது ரிப்ளேஸ் பண்ணட்டுமே...”
“ஓ... மேடமுக்கு அவ்வளவு தங்கமான மனசா... ஆனா நீ சொல்லுறது நம்புறமாதிரி இல்லையே... இதுல வேற ஏதோ ஒரு மேட்டர் இருக்க மாதிரி இருக்கே....” என்று ரிஷி சந்தேகமாய் வினவ ஶ்ரீயோ மறுபுறம் திரும்பு நின்றபடி மனதினுள்
“ஐயோ இந்த அய்த்தான் எப்படி கரெக்டா கண்டுபிடிக்கிது??? ஶ்ரீ... ஜாக்கிரதை... அத்தான்கிட்ட மாட்டிக்காத...” கூறிக்கொண்டு
“அது வந்து அத்தான்... ஆ... நான் வேலைக்கு போன உங்களுக்கு அவமானம் இல்லையா?? பிசினஸ் மேன் ரிஷிராஜோட வைய்ப் இன்னொருத்தருக்கு கீழே கைகட்டி வேலைபார்க்கிறதா?? நெவர்..” என்றவளை பின்னாலிருந்து இழுத்து அணைத்தவன் அவள் கேசத்தில் முகம் புதைத்தவாறு அவளது செவியருகே சென்றவன் தன் இதழ் பிரித்து
“அம்லு.... நீ ஓவரெக்ட் பண்ணி அத்தான்கிட்ட மாட்டிக்கிட்ட... அதனால உண்மையை சொல்லு....” என்று சொல்ல அவனது அணைப்பில் மயங்கி நின்றவள் அவனது கேலியில் முறுக்கிக்கொண்டு விலகமுயல ரிஷியோ அவனது பிடியை தளர்த்தாது
“ஓய் பொண்டாட்டி... எங்க ஓட பார்க்குற??? இன்னைக்கு உன்னை விடுறதா இல்லை... சொல்லு என்ன விஷயம்??? “
“எனக்கு இந்த ஆபிஸ் போயிட்டு வர்க் பண்ண விருப்பம் இல்லை அத்தான்... உன்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண விரும்புறேன்... நீ எப்பவுமே பிசி... இதுல நானும் வர்க்னு பிசி ஆகிட்டா நம்ம லைப்பை என்ஜாய் பண்ணி வாழ நமக்கு டைம் இருக்காது.... அதோட நான் வர்க் பண்ணுறது ஐ.டி பீல்ட்... அவனுங்க பிராஜக்ட்னு வந்துட்டா எதையும் கன்சிடர் பண்ணமாட்டானுங்க... ஒரு லீவுக்கு கூட அவனுங்க பின்னுக்கு லோலோனு அலையனும்... இவ்வளவு நாள் வீட்டுல வெட்டியா இருக்க முடியாதுனு வேலைக்கு போனேன்.. ஆனா இப்போ என்னை எதிர்பார்த்துட்டு நீ இருப்ப... உன்னோட வர்க் லோடை பத்தி எனக்கு தெரியும்... உன்னால எதுவும் பண்ணமுடியாது.... ஆனா என்னால முடியும்... நான் வீட்டுல இருந்தா நீ ப்ரியா இருக்கும் போது நமக்கான நேரத்தை நாம உருவாக்கிக்கலாம்.... அதான் நான் வேலைக்கு போகலனு சொன்னேன்....”
“அம்லு அப்போ ஹஸ்பண்ட் என்ட் வைப் இரண்டு பேரும் வேலைக்கு போனா சந்தோஷமா இருக்கமுடியாதுனு சொல்லுறியா??”
“அப்படி இல்லை அத்தான்.... ஆனா எனக்கு அந்த ரெஸ்ட்லஸ்ஸான லைப் வேணாம்னு சொல்லுறேன்.... நினைச்ச நேரம் லீவ் எடுத்துக்கிற மாதிரி ஒரு வர்க் செட்டாகுனா அதுல ஜாயின் பண்ணிக்கிறேன்.... ப்ரீ லாண்சிங்( Freelancing) ஜாப்னா கூட பரவாயில்லை.... ஆனா இந்த ஐ.டி கம்பனியில என்னால குப்பை கொட்டமுடியாது.... அதோடு நான் நினைச்ச நேரம் உன்கூட வெளிய போகனும்.... என்னால இனி அந்த டபார் தலையன்கிட்டெல்லாம் போய் கெஞ்ச முடியாது...
ப்ளீஸ் அத்தான்... என்னை விட்டுடு... மீ பாவம்....” என்றவளது வார்த்தைகளில் இருந்த உண்மை ரிஷியிற்கு புரிந்தது.... என்னதான் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்றாளும் பெண்ணிற்கே அதிகளவான வேலைப்பளு..... அதிலும் அவள் ஏதாவது ஒன்றை சரியாக செய்யமுடியாவிட்டால் அதற்கும் அவளையே குறைகூறுகிறது இந்த சமூகம்..... ஆனால் அந்த பெண்ணின் இந்நிலைக்கான பின்புலத்தை யாரும் அறியமுயல்வதில்லை. சில நேரங்களில் அவளது கணவன் கூட அவளது உழைப்பை ஏற்கமறுக்கின்றான்... அவளும் அவளது ஆசாபாசங்களுக்கு தடை விதித்துள்ளாள் என்பதை யாரும் உணருவதில்லை...
எவ்வாறியினும் ரிஷியிற்கு ஶ்ரீ வீட்டில் வீட்டுத்தலைவியாய் மட்டும் வலம் வருவதில் விருப்பமில்லை.... அதே நேரம் அவள் விரும்பும்படியும் வேலையிருக்க வேண்டும் என்று முடிவெடுத்தவன்
“சரி அம்லு.... நீ வேலைக்கு போக வேண்டாம்..... வீட்டுலயே இரு...” என்று ரிஷி கூற அவனை விழிவிரித்து பார்த்தவள்
“நிஜமாவா அத்தான்...?? “ என்று கேட்டவள் மறுநொடியே
“இல்லையே... நீ அவ்வளவு சீக்கிரம் இதுக்கு ஒத்துக்க மாட்டியே.... என்ன ஆல்டனேட்டிவ் ப்ளான் வச்சிருக்க அத்தான்....???” என்று கேட்க என்றும் போல் அன்றும் தன் மனையாளின் புத்திசாதூர்யத்தை எண்ணி சிரித்தவன்
“ஆமா ப்ளான் இருக்கு... நீ வீட்டுல இருந்தபடியே வர்க் பண்ண நான் ரித்விகிட்ட சொல்லி அரேன்ஜ் பண்ண சொல்லுறேன்...”
“தப்பிக்கலாம்னு பார்த்தா விடமாட்டேன்கிறியே...”
“இது வேண்டாம்னா இன்னொரு ஆப்ஷன் இருக்கு..”
“அது என்னா ஆப்ஷன்??”
“என்கூட ஆபிசுக்கு வா...”
“இந்த விளையாட்டுக்கு நான் வரலை... அதை நீயே கட்டி மேச்சுக்கோ... நான் வீட்டுல இருந்தே வர்க் பண்ணுறேன்..”
“ஏன் அம்லு நான் என்ன ஆபிஸ்ல ஆடுமாடா வளர்க்கிறேன்.. என்னமோ கட்டி மேய்னு சொல்லுற...”
“அப்போ இல்லையா?? நான் இவ்வளவு நாள் அப்படிதானே நினைச்சிருந்தேன்...” என்று போலியான வியப்புடன் ஶ்ரீ கூற ரிஷியோ செல்லலமாக முறைத்தபடி
“நக்கலு???”
“சேசே... உங்களை போய் நான் எப்படி அத்தான்...?” என்றவளை அடிக்கத்துரத்தினான் ரிஷி...
மறு வாரமே ரித்வியின் கம்பனிக்காக பணிபுரிய தொடங்கினாள் ஶ்ரீ...
இன்றும் அவ்வாறு வேலையில் மும்முரமாய் இருந்தவளை கண்டு கடுப்பான ரிஷி அவளது லாப்டொப்பினை அவள் எதிர்பாரா நேரம் மூடிவிட்டு அவளை முறைக்க அவளோ
“என்ன அத்தான் விளையாட்டு இது?? முக்கியமான ப்ரோஜெக்ட் போய்கிட்டு இருக்கு... இந்த நேரத்துல இப்படி விளையாடுறீங்க???” என்று வசைபாடியபடி மீண்டும் லாப்டொப்பினை திறக்க முயன்றவளை தடுத்த ரிஷி
“அம்லு பேசாமல் என்னை டைவஸ் பண்ணிட்டு இந்த லாப்டொப்பையே கல்யாணம் பண்ணிக்கோவேன்... அப்போ நானும் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்... லாப்டொப்பையும் எப்பவும் உன் கூடவே வச்சிக்கலாம்...” என்றவனை முறைத்த ஶ்ரீ
“உங்க ஜோக்கை கேட்டு சிரிக்க எனக்கு டைம் இல்லை இடத்தை காலிபண்ணுங்க....”
“அடிப்பாவி..... என்னை டைவஸ் பண்ணுறது உனக்கு ஜோக்கா போயிருச்சா...??? எனக்கு இது தேவைதான்...வேணாம்னு அடம்பிடிச்சவளை கட்டாயப்படுத்தினதுக்கு சரியான தண்டனை கொடுத்துட்ட...”
“அத்தான் மொக்க போடாம வந்த விஷயத்தை சொல்லுங்க..”
“நீ எதுக்காக காலங்காத்தாலேயே இதை கட்டிக்கிட்டு அழுற???”
“ஒரு முக்கியமான அசைண்மென்ட்... இன்னைக்கு ஈவினிங் சப்மிட் பண்ணனும்... அதான் சீக்கிரம் முடிச்சிடலாம்னு காலையில இரண்டு மணிக்கே எழுந்து செய்துட்டு இருக்கேன்.... “
“என்னது காலையில இரண்டு மணிக்கே எழுந்துட்டியா??? நைட்டும் நீ தூங்கும் போது மணி ஒன்னாச்சே மா... இப்படி இருந்து உடம்பை கெடுத்துக்காத அம்லு.... நீ இனி வர்க் பண்ண வேண்டாம் அம்லு...” என்றவனின் கவலை தோய்ந்த குரலில் காதலும் தவிப்பும் ஒரு சேர வெளிப்பட அதை கேட்டவளுக்கு என்றும் போல் அன்றும் காதல் மேலோங்க தன் இருக்கையிலிருந்து எழுந்தவள் ரிஷியருகே வந்து அவன் கழுத்தினை கட்டிக்கொண்டவள்
“மை ஸ்வீட் புருஷன் ரொம்ப பீல் பண்ணுறாரு போலயே... இங்க பாரு புருஷா... நான் ஸ்ரெயின் பண்ணலை... இன்னைக்கு நைட் நாம வெளிய போகலாம்னு பிளான் பண்ணியிருக்கோம்... அது உங்களுக்கு நியாபகம் இருக்கா??”
“இருக்கு...”
“ம்ம்ம்... அதனால தான் இப்போ இந்த வர்க்கை கம்ப்ளீட் பண்ணிட்டா எனக்கு இன்னும் மூன்று நாளைக்கு எந்த வேலையும் இல்லை.... அதனால அதை சீக்கிரம் முடிச்சிடலாம்னு தான் சீக்கிரம் எழுந்தேன்.. இன்னும் கொஞ்சம் நேரத்துல முடிச்சிடுவேன்.. அதற்கு பிறகு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா நான் ப்ரெஸ்ஸா இருப்பேன்.. நீங்க பிளான் பண்ணபடி நைட் என்னை வெளிய கூட்டிட்டு போங்க... சரியா??” என்று அவன் கன்னத்தை கிள்ளியபடி ஶ்ரீ கேட்க அவனும் அதை ஏற்றுக்கொண்டவன்
“சரி சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு நீ நல்லா ரெஸ்ட் எடு... நான் ஈவினிங் வந்து உன்னை வெளிய கூட்டிட்டு போறேன்... சரி அம்லு எனக்கு ஆபிசுக்கு லேட்டாச்சு.... கொடுக்க வேண்டியதை கொடுத்து என்னை வழியனுப்பி வை...”என்று ரிஷி கூற ஶ்ரீயோ சிரித்தபடி அவனது இரண்டு கன்னத்திலும் அவளது இதழ் பதித்துவிட்டு அவனது அதரங்களுக்கு நேரே தன் உதடுகளை குவித்து காட்ட ரிஷியோ அவளது அதரங்களை கையால் வருடி தன் உதட்டில் வைத்துவிக்க ஶ்ரீயோ
“லவ்யூ டா புருஷா “ என்று அணைக்க ரிஷியும்
“லவ்யூ டூ டி பொண்டாட்டி... “ என்று கூறி அணைத்துவிட்டு கிளம்பத்தயாராக ஶ்ரீயோ
“அத்தான் இதுக்கு தான் அத்தனை தரம் என் பெயரை ஏலம் போட்டீங்களா???”
“என்ன பண்ணுறது அம்லு.... இதெல்லாம் செய்யாம ஆபிஸ் போனா என் பொண்டாட்டி கோவிச்சிக்கிட்டு என்னோட இரண்டு நாள் பேசமாட்டா.... அவளை சமாதானப்படுத்தனும்னா ஒரு வண்டி ஐஸ்கிரீமை கொண்டு வந்து நிறைச்சா தான் அவ சமாதானமாவா... இப்படி பல சிக்கல் இருக்கும் போது வேற என்னதான் பண்ணுறது???” என்று கேட்டவனது மண்டையில் கொட்டியவள்
“வரவர உங்களுக்கு லொள்ளு ரொம்ப கூடிப்போச்சு..”
“அதை கொட்டாமல் சொன்னாதான் என்னவாம்...???” என்று தன் தலையை தடவியபடி ரிஷி கேட்க அவனது கேசத்தை லேசாக கலையாதவாறு கலத்துவிட்டவள்
“ஸ்வீட் அத்தான் நீ...” என்றவள் அவனை அறையிலிருந்து வழியனுப்பிவிட்டு மீண்டும் வேலையில் மூழ்க சற்று நேரத்தில் காபி கப்புடன் வந்த ரிஷி
“அம்லு இதை குடிச்சிட்டு வேலையை பாரு... நான் கிளம்புறேன்...” என்று சொல்லிச்சென்றவனின் அன்பை எண்ணி மகிழ்ந்தவள் அந்த காபியை குடித்துவிட்டு தன் வேலையில் இறங்கினாள்....
வேலையை முடித்துவிட்டு குளித்து முடித்து அறையிலிருந்து வெளியேறிவள் சமையலறையிற்கு சென்றாள்.... அங்கு சுபா சமையல் மேற்பார்வையில் மும்மரமாயிருக்க
“அத்தை...” என்றழைக்க
“வாம்மா ஶ்ரீ... வேலையை முடிச்சிட்டியா??”
“ஆமா அத்தை... முடிச்சிட்டேன்... அத்தான் சாப்பிட்டாரா அத்தை??”
“ஆமா மா.... சாப்பிட்டுட்டு தான் கிளம்பினான்... ரித்வி தான் சாப்பிடாமலே கிளம்பிட்டான்... இன்னைக்கு ஹேமாவை டாக்டர்ட கூட்டிட்டு போகனும்.. கொஞ்சம் வேலையெல்லாம் முடிக்க இருக்குனு ஏர்லியாவே கிளம்பிட்டான்...”
“அத்தை ஹேமா சாப்பிட்டாளா???”
“இல்லைமா.. காலையில குடிச்ச பாலோட இருக்கா... என்னான்னு தெரியலை.. டயர்டா இருக்குனு தூங்குறா... நீ போய் அவளை எழுப்பிட்டு வா... இவ்வளவு நேரம் வெறும் வயித்தோட இருக்கக்கூடாது....”
“சரி அத்தை அவளை கூட்டிட்டு வர்றேன்...” என்றவள் ஹேமா அறைக்கு செல்ல அவளோ அயர்ந்த சயனத்திலிருந்தாள்...
இடப்புறமாய் திரும்பிப் படுத்தபடி ஒரு கையை தலைக்கும் மறுகையை மேடிட்ட வயிற்றை பிடித்தபடியும் உறங்கிக்கொண்டிருந்தாள்.. ஏ.சி ஓடிக்கொண்டிருக்க உடலை குளிர் அதிகமாய் பாதிக்காத வண்ணம் தடிமனான பெட்சீட்டால் உடலை மூடியபடி நல்ல உறக்கத்திலிருந்தாள் ஹேமா..
அவளருகே வந்த ஶ்ரீ ஹேமா திடுக்கிட்டு எழாதா வண்ணம் மெதுவாக அவள் தலையை தடவியபடி எழுப்பினாள் ஶ்ரீ...
ஹேமாவோ
“கொஞ்ச நேரம் மாம்ஸ்... ரொம்ப டயர்டா இருக்கு...” என்று தூக்கத்தை தொடர முயல ஶ்ரீயோ
“உன் மாம்ஸ் கிளம்பி நான்கு மணிநேரம் ஆச்சு...” என்று சொல்ல மெதுவாக தன் விழிகளை திறந்து பார்த்த ஹேமா
“நீயா... குட்மார்னிங்டி.. ராஜ் எங்க???”
“அவரு ஏதோ வர்க் இருக்குனு ஏர்லியாவே கிளம்பிட்டாராம்... நீ எழுந்து ப்ரெஸ் ஆகிட்டு வா.. குட்டிப்பையனுக்கு ரொம்ப பசிக்கும்...”
“ஆமா டி... ரொம்ப பசிக்குது. ரொம்ப டயர்டா இருக்கு... “
“இது தான் ரொம்ப ஸ்ரெயின் பண்ணிக்காதனு சொன்னோம்... நீ தான் கேட்கமாட்டேங்கிற... நேற்று நைட் எத்தனை மணிக்கு தூங்குன???”
“தூக்கமா... எங்க தூங்க விட்டா தானே... வயித்துக்குள்ள உள்ள அம்முக்குட்டி நைட்டெல்லாம் டான்ஸ் ஆடுனாங்க போல இருக்கு... நைட்டெல்லாம் தூக்கமே இல்லடி.. வயிற்றுக்குள்ள ஏதோ குறுகுறுப்பா இருந்துச்சு.. அதனால தூக்கமே வரலை... காலையில தான் கண்ணசந்தேன்...”
“ஹாஹா குட்டிப்பையன் இப்பவே தன்னோட லூட்டியை தொடங்கிட்டானா??? சூப்பர்.... சரி ப்ரெஸ் ஆகிட்டு கீழே வா... அத்தை நமக்காக வெயிட்டிங்...” என்று ஶ்ரீ கூற மெதுவாக எழுந்து வாஷ்ரூம் சென்றவள் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு ஶ்ரீயுடன் அறையிலிருந்து வெளியேறினாள்...
அங்கே அவர்களுக்காக உணவை தயாராய் வைத்திருந்த சுபா இருவருக்கும் உணவு எடுத்து வைத்துவிட்டு அவர்களுடனே காலை உணவை முடித்துவிட்டு எழுந்தவர் பகல் உணவு தயார் செய்ய செல்ல ஹேமா தனதறைக்கு செல்ல ஶ்ரீ அனைவரது அறைகளிலும் இருந்து துவைக்கும் ஆடைகளை ஒரு கூடையில் எடுத்துக்கொண்டு மொட்டைமாடியிற்கு சென்றாள்... மொட்டைமாடியில் ஒரு புறமாய் அமைக்கப்பட்டிருந்த குளியலறையிலிருந்த வாஷிங் மெஷினினுள் அழுக்கான ஆடைகளை இட்டு கழுவியெடுத்தவள் அதை அங்கேயே கட்டப்பட்டிருந்த கயிற்றுக்கொடியில் உலர்த்தியெடுத்தாள்..
ஹேமாவும் ஶ்ரீயும் வந்தநாள் தொடக்கம் இவ்வாறு வேலைகளை பிரித்துக்கொண்டனர்.. வீட்டில் வேலையாட்கள்
இருந்த போதிலும் சில வேலைகளை அவர்களே செய்ய வேண்டுமென தீர்மானித்தவர்கள் சமையலை சுபாவிடம் ஒப்படைத்தவர்கள் தத்தமது அறைகளை சுத்தப்படுத்தல், துணிகளை உலர்த்துதல் போன்ற வேலைகளை ஶ்ரீயும் ஹேமாவும் செய்தனர்...
வழமையாய் இருவரும் சேர்ந்தே அந்த வேலையை செய்வர்.... ஆனால் இன்று ஹேமா களைப்பாயிருப்பதாய் கூற ஶ்ரீ அதை தனியே செய்து கொண்டிருந்தாள்...
வேலையை முடித்துக்கொண்டு கீழே இறங்கிய வேலையில் ரித்வி வந்தான்...
மதிய உணவை முடித்துக்கொண்டு ரித்வி ஹேமாவை அழைத்துக்கொண்டு ஆஸ்பிடல் சென்றுவிட ஶ்ரீயும் சுபாவும் ஹாலில் அமர்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருந்தனர்.... ஶ்ரீயோ சோபாவில் இருந்தபடியே சுபாவின் மடியில் தலைவைத்து உறங்கிவிட சுபாவும் ஶ்ரீயின் தலையை கோதியபடி படம் பார்த்துக்கொண்டிருந்தார்.....
ஹாஸ்பிடல் சென்ற ரித்வியும் ஹேமாவும் வந்துட அப்போதும் ஶ்ரீ உறங்கியபடியிருக்க அவள் உறக்கத்தை கலைக்காத வகையில் அவளை சோபாவிலேயே படுக்க வைத்த சுபா எழுந்து சென்று ரித்வியிடம் டாக்டர் என்ன கூறினார் என்று விசாரித்தவர் அவர்களிருவருக்கு குடிக்க எடுத்துவருமாறு பணிப்பெண்ணிடம் கூறிவிட்டு
“ரித்வி ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்துட்டு டாக்டர் என்ன சொன்னாங்க??” என்று கேட்க
“உங்க பேரப்பிள்ளை நல்லா ஹெல்தியா இருக்கானு சொன்னாங்க.. ஆனா வெயிட் பத்தாதுனு சொன்னாங்க... குழந்தையோட வளர்ச்சி நல்லா இருக்குனு சொன்னாங்க....”
“பார்த்தியா ஹேமா.. இதுக்கு தான் நல்லா சாப்பிடனும்னு சொல்லுறது... நீ தான் சரியா சாப்பிடமாட்டேன்குற... இப்போ நீ எடுத்துக்கிற ஆகாரம் தான் பிரசவ நேரத்துல எந்த சிக்கலும் வராம பாத்துக்கும்...”
“அத்தை அப்படிலாம் இல்லை... அத்தை... இவரு சும்மா சொல்றாரு... வெயிட்டெல்லாம் சரியா தான் இருக்கு... உங்க கவனிப்பு சூப்பர்னு டாக்டர் பாராட்டுனாரு.. அதை இவரு உல்டாவா சொல்லுறாரு..” என்று ஹேமா கூற ரித்வியை முறைத்தார் சுபா..
“சும்மா மாம்... நீங்க உங்க மருமகளை எப்படி தாங்குறீங்கனு தெரிஞ்சிக்கத்தான் அப்படி சொன்னேன்..”
“உன்னை... “என்று ரித்வியின் காதை சுபா திருக ஹேமாவோ தாய் மகனின் செல்ல ஊடலை பார்த்து ரசித்தபடியிருந்தாள்..
அப்போது ரிஷியும் வந்துவிட அவனிடம் சுபா “என்ன ராஜா இன்னைக்கு சீக்கிரம் வந்துட்ட??”
“இன்னை சீக்கிரம் வரச்சொல்லி உங்க மருமக ஆர்டர் போட்டிருக்கா.. லேட்டா வந்தா சும்மா விடுவாளா... அதான் சீக்கிரம் வந்திட்டேன்...”
“பாரு ரித்வி.. கல்யாணத்துக்கு முதல்ல கெஞ்சினாலும் சீக்கிரம் வர மாட்டான்.. ஆனா இப்போ பொண்டாட்டி சொன்னான்னு டாங்னு வந்து நிற்கிறான்..”
“அது அம்மா.. அது..”
“சரி போய் ப்ரெஸ் ஆகிட்டு வா ராஜா.. அம்மா டீ எடுத்து வைக்கிறேன்..” என்று சுபா கூற
“அம்மா தானு எங்க??”
“அவ அங்க சோபால அசந்து தூங்குறா... நீ போயிட்டு ப்ரெஸ் ஆகிட்டு வா..” என்று சுபா கூற தனதறைக்கு சென்றவன் ப்ரெஸ்ஸாகி உடைமாற்றி வெளியே வந்தவன் ஹாலில் சோபாவில் உறங்கிக்கொண்டிருந்த ஶ்ரீயின் அருகே அமர்ந்தவன் அவள் கன்னம் வருட கன்னம் சில்லிட்டிருக்க துணுக்குற்றவன் ஶ்ரீயை எழுப்ப அவளிடம் அசைவில்லை..
பதறியவன் அவள் கன்னம் தட்ட அப்போதும் அவளிடம் அசைவில்லை.. அவனது சத்தத்தில் அவர்களருகே வந்த சுபா
“ராஜா... என்னாச்சு.. “ என்று பதற்றத்துடன் வினவ ரிஷியோ
“அம்மா... அம்மா.. தானு கண்முழிக்கமாட்டேங்கிறாமா.... அம்மா.. பயமா இருக்குமா..” என்று கலங்கியவனை ஆறுதல் படுத்தியவர் ரித்வியிடம் காரை எடுக்குமாறு கூறியவர் ரிஷியிடம் ஶ்ரீயை காரிற்கு தூக்கிச்செல்லச் சொல்ல உடனேயே ஶ்ரீ ஆஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்பட்டாள்...
அங்கு சென்றவர்களுக்கு இன்பமான அதிர்ச்சி காத்திருந்தது... ஆனால் அடுத்த நாளே அது தலைகீழாய் மாறப்போவதை ரிஷி அறிந்திருக்க வாய்ப்பில்லை..
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top