நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 49

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
அடியேய்
என்னழகே
உன்னை காணவே
தினம் விழித்தேனடி
இரண்டு ஜோடிகளும் ரிஷியின் வீட்டிற்கு வர வீட்டினர் அனைவரும் வாசலில் காத்திருந்தனர்...
ரிஷி தன் மனையாளுடன் இறங்க ரித்வியும் தன் சரிபாதியுடன் காரிலிருந்து இறங்கினான்....
மணமக்களை வாசலிலேயே காத்திருக்குமாறு கூறிய சுபா ப்ரீதா மற்றும் அனுவை ஆராத்தியெடுக்கச் சொன்னார்...
ரித்வி- ஹேமா,ரிஷி- ஶ்ரீ தத்தமது துணைகளோடு இணைந்து நிற்க அனுவும் ப்ரீதாவும் ஆராத்தியெடுத்தனர்..
ஆராத்தியெடுத்ததும் உள்ளே செல்ல முயன்றவர்களை தடுத்த அனு
“என்ன மாம்ஸ் இரண்டு பேரும் உங்க மச்சினிச்சிமாரை கவனிக்காம போறீங்க???” என்று கேட்க ரிஷியோ அனுவை மேலிருந்த கீழாக பார்த்துவிட்டு
“கவனிச்சிட்டேன்மா... இப்போ உள்ளே போகலாமா???” அப்பாவிபோல் வினவ அனுவோ
“என்ன மாமா லந்தா??”
“அச்சச்சோ நான் உன்கிட்ட லந்து பண்ணுவேனா???” என்று அனுவை கலாட்டா பண்ண அவளோ
“நக்கலு... அப்படிக்கா திரும்பி எங்க அக்காவை கொஞ்சம் பாருங்க...” என்று அனு சொல்ல தன்னருகே முறைத்தபடி நின்றிருந்த ஶ்ரீயை பார்த்தவன் எதுவும் கூறாது தன் பாக்கெட்டில் இருந்த இரண்டு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து தட்டில் வைக்க அனுவோ
“ஒரு பார்வைக்கே இரண்டு ஆயிரம் ரூபா நோட்டா.... தெரிஞ்சிருந்தா இன்னும் கொஞ்சம் ஓவரேக்ட் பண்ணியிருக்கலாமே...” என்று அனு சத்தமாகவே கூற அங்கிருந்த அனைவரும் அவளது கலாட்டாவில் சிரித்து மகிழ்ந்தனர்...
அதற்குள் சுபா இரண்டு சுமங்கலி பெண்களிடம் குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்டு தயாராயிருந்த இரண்டு காமாட்சி விளக்குகளை எடுத்து வரச்சொன்னவர் அதனை ஒளிரச்செய்து மணப்பெண்கள் இருவரின் கைகளிலும் கொடுத்தவர் ஐஸ்வர்யலட்சுமியை மனதில் நினைத்துக்கொண்டு வலது காலை எடுத்து வைத்து உள்ளே வரச்சொன்னார்... அவர் சொல்படி தத்தம் துணையோடு கையில் விளக்கை ஏந்தியபடி ஶ்ரீயும் ஹேமாவும் அவர்களது மணம் கவர்ந்தவர்கள் வாசம் செய்யும் வாசஸ்தலமும் அவர்களது புகுந்தவீடுமான அந்த மாளிகையின் மருமகள்களாக வீட்டினுள் காலடி எடுத்து வைத்தனர்... இரண்டு ஜோடிகளையும் நேரே சுவாமி அறைக்கு அழைத்து சென்றவர் அவ்விரு விளக்குகளையும் சுவாமி படத்தின் முன் வைத்து இரண்டு ஜோடிகளையும் இறைவனை வேண்டிக்கொள்ளச்சொன்னார்.......
இரண்டு ஜோடிகளும் அவர் சொல்படி செய்ததும்
“ஶ்ரீ, ஹேமா சுவாமி படத்துக்கு பக்கத்தில் இருக்கிற டப்பாவில் உப்பு இருக்கு... இரண்டு பேரும் கீழே சிந்தாம அதை மூன்று தடவை அள்ளி சுவாமி படத்துக்கு முன்னுக்கு இருக்கிற தட்டில் வைங்க....” என்று சுபா கூற முதலில் ஶ்ரீ அதை செய்தவள் பின் ஹேமா தொடர்ந்தாள்...
இருவரும் செய்து முடித்ததும் சுபா
“வீட்டுல உப்பு பாத்திரம் எப்பவும் நிரம்பி இருக்கனும்னு பெரியவங்க சொல்லுவாங்க... அதே மாதிரி நீங்க இரண்டு பேரும் இந்த குடும்பத்தை நிறைவாக்க வந்த மகாலட்சுமி.. ஒரு சாப்பாட்டிற்கு உப்பு எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி தான் ஒரு சந்தோஷமான வாழ்க்கைக்கு பெண்ணோட பங்களிப்பு ரொம்ப முக்கியம்... உணவுல உப்போட அளவு சரியா இருந்தா தான் அந்த உணவு நல்லாயிருக்கும்.. அதே மாதிரி இந்த நொடியில இருந்து இந்த குடும்பத்துக்கு எல்லாமே நீங்க இரண்டு பேரும் தான். இந்த வம்சத்தை தளைக்கச்செய்து அதை பேணி காக்கவேண்டியது உங்களுடைய பொறுப்பு.... புரியிதா மருமகள்களா???” என்று சிரித்தபடி கேட்க ஶ்ரீயோ திருதிருவென முழிக்க ஹேமாவோ சுபா கூறியதை ஆமோதித்தார்...
ஶ்ரீயின் முகபாவத்தை பார்த்த சுபா அவள் கன்னத்தில் கை வைத்தபடி
“என்ன ஶ்ரீ பயந்துட்டியா?? என்னடா அத்தை திடீர்னு மாமியார் மாதிரி பேசுறாங்கனு அதிர்ச்சியாகிட்டியா??”
“அப்படி இல்லை அத்தை...”
“ஹாஹா.... இது என்னோட மாமியார் எனக்கு சொன்னதை உங்களுக்கும் சொன்னேன்...” என்றவர் இரண்டு ஜோடிகளையும் ஹாலிற்கு அழைத்து சென்றார்.. அங்கு இரண்டு பெரிய சோபாக்கள் அலங்கரிக்கப்பட்டிருக்க ஒன்றில் ரிஷியும்- ஶ்ரீயும் அமர மற்றையதில் ஹேமாவும்- ரித்வியும் அமர்ந்தனர்.. சுபா ரிஷியிடம் பால்பழம் கொடுக்க ராதா ரித்வியிற்கும் ஹேமாவிற்கும் பால்பழம் கொடுத்தார்...
இரண்டு மணமகன்களும் தாம் சாப்பிட்டுவிட்டு தம் மனைவிகளுக்கு ஊட்டிவிட சுற்றியிருந்த இளைஞர் பட்டாளமோ அவர்களை கலாட்டா செய்தது..... பால் பழம் உண்டு முடித்ததும் சுபா ஶ்ரீயையும், ஹேமாவையும் சமையலறைக்கு அழைத்து செல்ல ரித்வியும் ரிஷியும் தனித்திருக்க அவர்களை சூழ்ந்து கொண்டது இளைஞர் பட்டாளம்..
பெண்களிருவரையும் சமையலறைக்கு அழைத்து சென்ற சுபா ஶ்ரீயையும் ஹேமாவையும் கொதித்துக்கொண்டிருந்த பொங்கல் பானையில் படியிலிருந்த அரிசியை எடுத்து மூன்றுமுறை போடச்சொன்னவர் பின் அதை ரஞ்சனியையும் ராதாவையும் பார்த்துக்கொள்ளச்சொன்னவர் ஶ்ரீயையும் ஹேமாவையும் தனியறையில் ஓய்வெடுக்கச்சொன்னார்.. அவர்களுக்கு துணையாக ப்ரீதா, அனு, சஞ்சுவை அறைக்கு அனுப்பியவர் மறுபடியும் சமையலறைக்கு வந்து ராதா ரஞ்சனியுடன் பொங்கல் வைப்பதற்கான வேலையில் இறங்கினார்.. அறைக்கு வந்த ஹேமாவும் ஶ்ரீயும் அனு, ப்ரீதாவின் உதவியுடன் தம் ஆபரணங்களை தளர்த்தினர்...
சற்று நேரத்தில் சுபா அவர்களிருவரையும் காலை உணவிற்து அழைக்க இருவரும் அறையிலிருந்து வெளியேறி டைனிங் டேபிளிற்கு சென்றனர்..
அங்கு அவர்களுக்காக ரிஷியும் ரித்வியும் காத்திருக்க தத்தமது துணைகளுக்கு அருகே அமர்ந்தவர்தளுக்கு பரிமாறினர் ராதாவும் சுபாவும்...
உணவு தட்டிற்கு வந்ததும் அதை கபளீகரம் செய்ததில் மும்முரமாயிருந்த ஶ்ரீ அருகில் பாவமாய் முகத்தைபடி அவளையே பார்த்துக்கொண்டிருந்த ரிஷியை கவனிக்கத்தவறினாள்..
ரித்வியோ ஹேமாவினை பார்த்தபடி ஒருவாய் கையில் எடுத்தவன் அதை ஹேமாவிற்கு ஊட்டிவிட அவளும் சிறு வெட்கத்துடன் அதை வாங்கிக்கொள்ள அவளும் அவனுக்கு ஒருவாய் ஊட்டிவிட்டாள்... பின் இருவரும் தத்தமது துணையை ஓரக்கண்ணால் ரசித்தபடி அந்த பொங்கலை சுவைத்தனர்....
ஆனால் ஶ்ரீயோ காலையில் இருந்து எதுவும் சாப்பிடாததால் பசி காதினை அடைக்க ரிஷியை மறந்தவள் தன் வயிற்றை நிரப்புவதில் மும்முரமாய் இருந்தாள்... ரிஷியோ அவள் காதருகே குனிந்து
“அம்லு...” என்று அழைக்க அவளோ சாப்பிடும் வேகத்தில் தடை வந்துவிடக்கூடாது என்று எண்ணி
“அத்தான்... சாப்பிடும் போது டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. கொலை பசியில இருக்கேன்...”என்றுவிட்டு தன் தட்டிலிருந்தவை காலியானதும் தலை நிமிர்த்தி ரிஷியை பார்த்தவள்
“என்ன அத்தான்... பசிக்கலையா??” என்று கேட்க அவளை முறைத்தவன் தன் தட்டிலிருந்து ஒரு பிடி பொங்கலை எடுத்து ஊட்டிவிட்டவன் அதுவும் கூறாது தட்டிலிருந்ததை உண்ணத்தொடங்கினான்... அப்போது தான் ஶ்ரீயிற்கு ரிஷியின் எண்ணம் புரிய அப்போது அருகிலிருந்த ஹேமாவையும் ரித்வியையும் பார்க்க அவர்கள் கண்களாலே கதைபேசியபடி பொங்கலை சுவைத்துக்கொண்டிருந்தனர்...
மெதுவாக தலையை நிமிர்த்து நேரே பார்க்க அங்கே ராதா ஶ்ரீயை முறைத்துக்கொண்டிருந்தார்..
ஶ்ரீயோ மனதுள் “ஐயோ என் தாய்குலம் இப்படி பார்வையாலேயே நம்மை சுட்டெரிக்குதே... இப்போ சாப்பிட்டு எழும்பியதும் பத்து பக்கத்துக்கு லெக்சர் அடிக்குமே என்ன பண்ணுறது...” என்று யோசித்தவள் தன் தட்டினை தள்ளி வைத்தவள் ரிஷியின் தட்டை தன்புறம் இழுத்து அதிலிருந்து ஒரு வாய் எடுத்து ரிஷியிற்கு ஊட்ட அவனும் சிரித்துக்கொண்டே வாங்கி கொண்டு அவளிற்கு இன்னொரு வாய் ஊட்டினான்... இவ்வாறு இரு ஜோடிகளும் ஒருவாறு உண்டு முடித்ததும் இளைஞர் பட்டாளத்துடன் ஹாலில் அமர்ந்து கொட்டமடிக்கத்தொடங்கினர்...
பெரியவர்கள் மற்றைய வேலைகளை கவனிக்க பெண்கள் சமையலறையை ஆக்கிரமித்துக்கொண்டனர்...
ஶ்ரீ, ரிஷி,ஹேமா,ரித்வியின் சில நண்பர்கள் வரவும் அவர்களை வரவேற்று தங்கள் கூட்டத்தில் இணைத்துக்கொண்டனர் ...
ஹாலில் கம்பளம் விரித்த அனு பெண்கள் ஆண்கள் என்று இருபுறமாக அமரச்சொன்னாள்..
“ ஹாய்ஹாய்... வணக்கம்... நான் அனு... முதல்ல என்னோட இரண்டு அக்காக்களுக்கும் மாம்ஸ்சிற்கும் என்னோட வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்... இப்போ எதுக்கு இப்படி இரண்டு டீமா இருக்கோம்னா இப்போ இரண்டு மாப்பிள்ளையும் பொண்ணும் கேம் விளையாடப்போறாங்க... இது வழமை போல மோதிரத்தை பானைக்குள்ள போட்டு ரொமேன்ஸ் பண்ணி சிங்கிள் பசங்க வயிற்றெரிச்சலை கொட்டிக்கிற கேம் இல்லை கொஞ்சம் டிபரெண்டா நடத்தலாம்னு யோசிச்சேன்.. இப்போ பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் டாஸ்க் கொடுப்போம்.. அதை நீங்க இரண்டு பேரும் சேர்ந்தோ தனியாகவோ செய்யனும்.... ஓகேவா??” என்று கேட்க அனைவரும் கைதட்டி ஆர்பரித்தனர்
“ஓகே பஸ்ட் டாஸ்க் ரிஷி மாமா இப்படி கொஞ்சம் வாங்க...” என்றதும் தான் இருந்த இடத்திலிருந்து எழுந்து அனு நின்றிருந்த இடத்திற்கு வந்தவனிடம்
“மாமா உங்களுக்கான பஸ்ட் டாஸ்க் என்னான்னா நீங்க கண்ணை மூடுங்க” என்று கூறியவள் அவள் கண்ணை தன் கையில் இருந்த துணியால் கட்டியவள்
“உங்களுக்கான டாஸ்க் என்னான்னா இன்னைக்கு மேரேஜிக்கு அக்கா உடுத்தியிருந்த சாரி கலர் என்னென்ன ஜூவல்ஸ் போட்டிருந்தானு எல்லாத்தையும் கரெக்டா சொல்லனும்... ஒன்னு தப்பா சொன்னாலும்... நீங்க அவுட் சரியா??” என்று கூறிவிட்டு அவனது பதிலுக்காய் காத்திருந்தனர்..
ரிஷியோ அவள் அணிந்திருந்த சேலையின் வகையிலிருந்து அவள் காலிலும் காதிலும் அணிந்திருந்த அனைத்து ஆபரணங்களின் வகைகளையும் நிறத்தோடு வரிசைப்படுத்த அனைவரும் அவனை வாய்திறந்தபடி பார்த்திருக்க ஶ்ரீயோ அவன் எந்தவித தடுமாற்றமும் இன்றி ஒருவித ரசனையோடு அவளது ஆடை ஆபரணத்தை பட்டியலிட்டவனை ரசித்துக்கொண்டிருந்தாள்... அப்போது ஶ்ரீயிற்கு அன்றொரு நாள் அவர்களிருவரும் இவ்வாறு விளையாடியபோது அன்றும் இவ்வாறு தன் ஆடை ஆபரணத்தை அத்தனை அழகாய் எடுத்துரைத்தது அவள் நினைவில் வந்து அவளுக்கு ஒருவித மயக்கத்தை தந்தது..
ரிஷி சொல்லி முடித்தும் அனைவரும் கைதட்டி ரிஷியின் கண்கட்டினை அவிழ்த்துவிட்ட அனு
“வாவ் மாமா.. சான்சே இல்லை... எதையும் விடாம கரெக்டா சொல்லிட்டீங்க.... இப்போ புரியிது... கோவில்ல எங்க அக்காவை சைட் அடிக்கிற வேலையை சூப்பரா செய்திருக்கீங்கனு... ஓகே... இந்த டாஸ்க்குல மாமா வின் பண்ணதால இப்போ எங்க அக்கா ஶ்ரீ மாமா கூட டான்ஸ் ஆடப்போறாங்க. . ஸ்டார்ட் த மியூசிக்...” என்றதும் பாடல் ஒலிக்கத்தொடங்கியது... ஶ்ரீயினருகே சென்றவன் அவள் கைபிடித்து எழும்ப தன் கரம் நீட்டியவன் அவள் தன் கரத்தை வைத்ததும் அவளை எழுப்பியவன் அவளுடன் இணைந்து ஆடத்தொடங்கினான்..
முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக... நெஞ்சமும் புண்ணானதே...
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்...
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா
ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
இப்போதே என்னோடு வந்தால் என்ன...
ஊர்ப்பார்க்க ஒன்றாக சென்றால் என்ன...
துலாத் தட்டில் உன்னை வைத்து
நிகர் செய்ய பொன்னை வைத்தால்
துலாபாரம் தோற்க்காதோ... பேரழகே..
முகம் பார்த்து பேசும் உன்னை
முதல் காதல் சிந்தும் கண்ணை
அணைக்காமல் போவேனோ ஆருயிரே
ஓ நிழல் போல விடாமல் உன்னை தொடர்வேனடி
புகைப்போல படாமல் பட்டு நகர்வேனடி
வினா நூறு கனாவும் நூறு விடை சொல்லடி...
முன்தினம் பார்த்தேனே...
பார்த்ததும் தோற்றேனே...
சல்லடைக் கண்ணாக உள்ளமும் புண்ணானதே..
இத்தனை நாளாக... உன்னை நான் பாராமல்..
எங்குதான் போனேனோ...
நாட்களும் வீணானதே...
கடல் நீரும் பொங்கும் நேரம்
அலைவந்து தீண்டும் தூரம்
மனம் சென்று பார்க்காதோ ஈரத்திலே
தலை சாய்க்க தோளும் தந்தாய்
விரல் கோர்த்துப் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன்... தூரத்திலே...
பகல் நேரம் கனாக்கள் கண்டேன்... உறங்காமலே...
உயிர் இரண்டும் உராயக்கண்டேன்... நெருங்காமலே...
உனையன்றி எனக்கு ஏது... எதிர்காலமே...
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனு சந்திரன் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top