நீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 41

Advertisement

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
காதல்
என்ற
வார்த்தையின்
மொழி
உணர்ந்தேன்
உன்
அருகாமை
எனக்கு
ஆறுதலாயிருந்த தருணத்தில் ...

அன்று இரவு பதினொரு மணியளவில் தன்னறையில் லேப்டாப்பில் ஏதோ வேலையில் மும்முரமாய் இருந்த ரிஷியை கலைத்தது அவனது அலைபேசி.. எடுத்தவன் யாரென்று பாராமலேயே
“ஹலோ அம்லு கொஞ்சம் பிசியா இருக்கேன்மா... நீ தூங்கு... நான் மார்னிங் பேசுறேன்....” என்று கூற
“அண்ணா நான் ரித்வி...” என்றதும் தன் காதிலிருந்து மொபைலை எடுத்து பார்த்தவன் அதில் ரித்வி என்றிருக்க மீண்டும் மொபைலை காதில் வைத்தவன்
“சாரிடா... நான் ஶ்ரீ நினைச்சிட்டேன்.... சொல்லு ரித்வி என்ன விஷயம்??”
“அண்ணா உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்...”
“சொல்லு ரித்வி...”
“அண்ணா போனில் சொல்லமுடியாது...”
“சரி ரூமுக்கு வா...”
“இல்லை அண்ணா.... வீட்டுல வேணாம்... நம்ம பாம் ஹவுசுக்கு வர்றீங்களா???”
“பாம் ஹவுசுக்கா.... ம்ம்ம்ம்.... சரி எப்போ வர??”
“இப்போ அண்ணா...”
“டேய்.... இப்போ மணி 11 டா... இப்போ எதுக்கு அங்க???”
“அண்ணா ப்ளீஸ்னா... ரொம்ப முக்கியமான விஷயம்.... அதான் இந்த டைம்ல அங்க கூப்பிடுறேன்..”
“சரி... இப்போ நீ ரூம்ல தானே இருக்க????”
“இல்லனா... நான் இப்போ பாம் ஹவுஸ் போய்க்கிட்டு இருக்கேன்...நீங்களும் லேட் பண்ணாம சீக்கிரம் வந்திடுங்க... ப்ளீஸ்....”
“சரி நான் இப்போ கிளம்புறேன்....” என்றவன் அழைப்பை துண்டித்துவிட்டு லாப்டொப்பை மூடி வைத்துவிட்டு தாமதிக்காது உடைமாற்றியவன் தன் அலைபேசியையும் கார் சாவியையும் எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
இரவு நேரமென்பதால் வீதியில் வாகனம் குறைவாயிருக்க பதினைந்து நிமிடத்தில் பாம் ஹவுசை வந்தடைந்தான்.
காரை வாசலில் பார்க்செய்துவிட்டு பாம் ஹவுசின் வாசலுக்கு வந்தவன் தன் கையோடு கொண்டு வந்திருந்த கீயினால் கதவை திறக்க அந்நேரம் சரியாக அவனது தலையில் நீர்கொட்டியது...
“ஷிட்...” என்று சத்தமிட்டவன் எங்கிருந்து நீர் கொட்டியது என்று பார்க்க இருட்டில் எதுவும் தெரியவில்லை... பாக்கெட்டில் இருந்த தன் மொபைலை எடுத்தவன் அதில் டாச்லைட்டை ஆன் செய்து அதன் உதவியுடன் வாயிலை ஒட்டியபடியிருந்த சுவற்றில் இருந்த சுவிட்சை ஆன் செய்தவன் அதிர்ந்துவிட்டான்.
அவனது அதிர்ச்சிக்கான காரணம் அந்த பாம் ஹவுசின் கீழ் தளம் முழுதும் சிவப்பு மற்றும் வெள்ளை நிற பலூன்களால் முற்றுகையிடப்பட்டிருந்தது... அதுமட்டுமின்றி சுவற்றில் இதயவடிவில் சிவப்பு நிற ரோஜாப்பூவால் அலங்கரிக்கப்பட்டு அதன் நடுவில் “open it” என்ற பெரிய டாக்குடன் ஒரு பொதி மாட்டப்பட்டிருக்க அதை கையில் எடுத்தவன் அதை திறந்து பார்க்க அதில் சிவப்பு ஸ்ரைப்ஸ் போடப்பட்ட சர்ட்டும் நீல நிற டெனிமும் இருந்தது...
அதன் மேலே இன்னொரு லெட்டர் இருந்தது.. அதை கையில் எடுத்தவன் திறந்து பார்த்து படித்தான்..
அதில் “ரூம் கீ ட்ரெஸ் பாக்கில் இருக்கு..” என்றிருக்க ட்ரெஸ் பாக்கில் கையை விட்டு தேடியவனது கைகளுக்கு சாவி கையில் அகப்பட்டது.. அதை எடுத்து பார்த்தவனதுக்கு இது யாருடைய வேலை.. எதற்காக இவ்வாறு செய்கிறார்கள் என்று புரியவில்லை... ஆனால் தனக்கு வேண்டியவர்களில் யாரோ ஒருவரே இவ்வாறு செய்கின்றனர் என்று உறுதியாக நம்பினான்...
உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்தவன் தன் ஈர உடையை மாற்றிவிட்டு அந்த புது உடையை அணிந்தவன் வெளியே வந்தான்.. கையின் ஸ்லீவ்வை முட்டிவரை மடித்தவன் வெளியே வந்து வீட்டிற்கு பின்புறம் வந்தான்...
அங்கு எதுவுமில்லாமலிருக்க முதல் மாடிக்கு செல்வதற்காக அந்த மாடியின் மாடிப்படி ஸ்விச்சினை ஆன் செய்தவன் மறுபடியும் திகைத்திருந்தான்... அந்த படிகளின் இருபுறமும் ரோஜாப்பூக்களிருக்க நடுவே நடப்பதற்கான நடைபாதையிருந்தது...
அதோடு படிக்கட்டின் இருபுறமும் வண்ண வண்ண மின்விளக்குகள் ஒளிர்ந்துகொண்டிருந்தன... அந்த ரோஜாப்பூ நடை பாதை வழியே என்ன நடக்கிறதென்று புரியாமல் முதல் தளத்திற்கு வந்தவன் அந்த தளத்தின் லைட்டை ஆன் செய்ய அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது..
அந்த தளம் முழுவதும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது....
சிவப்பு வெள்ளை நிற ஹீலியம் பலூன்கள் மேலிருந்த சீலிங்கில் இருக்க அதிலிருந்து பேபி ரிப்பனின் உதவியோடு பல புகைப்படங்கள் தொங்கியபடியிருந்தது.... அந்த புகைபடங்கள் அனைத்தும் அவனதே...
அவன் பிறந்த நாளிலிருந்து அவனது வளர்ச்சிக்கட்டத்தின் அனைத்துப்புகைப்படங்களும் அதிலிருந்தது... அந்த மங்கிய ஒளி வெளிச்சத்தில் அந்த பலூன்களின் படையெடுப்பு மிக அழகாயிருந்தது...
அந்த தளத்தின் நடுவே ஒரு பெரிய மேசையிருந்தது.... அது சுற்றிலும் ரோஜா இதழ்களால் வட்டமிடப்பட்டு வண்ணவண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது... அந்த மேசையின் மீது ஒரு பரிசுப்பொதியும் ஒரு போத்தல் போன்ற அமைப்புடைய ஒரு பரிசும் இருந்தது... அதை கையில் எடுத்தவன் அதன் மேல் இருந்த டாக்கில் “Don’t open it” என்று இருக்க அதை கண்டவனுக்கு இதழோரம் புன்னகை எழுந்தது.. அப்போது எங்கிருந்தோ கிட்டார் இசை ஒலிக்க சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தியவன் அந்த இசை வந்த இடம் நோக்கி நகர்ந்தான்...
அந்த நிசப்தமான வேளையில் கிட்டார் ஒலி பெரிதாக கேட்க அது மொட்டைமாடியிலிருந்து வருகிறது என்று கண்டறிந்தவன் அங்கு செல்வதற்கான படிகட்டுக்களின் பாதைக்கான லைட்டை ஆன் செய்ய அங்கும் ரோஜா பூ நடைபாதையிருக்க அதன் வழியே நடந்து சென்றான் ரிஷி......
மொட்டைமாடியிற்கு வந்தவன் அங்கிருந்த அலங்காரத்தை கண்டு வியந்து நின்றான்....
டெரஸ் அமைந்திருந்த இடத்தின் வாயிலில் முற்றுமுழுதாக ரோஜாப்பூக்களால் உருவான இரட்டைக்கதவு கொண்ட அமைப்பு அங்கிருந்தது... ஷோ ரூமில் இருக்கும் கதவை போல் அது இருந்தது..அதற்கு முன்னே பலூன்கள் தரையிலிருக்க மற்றைய இடங்கள் மங்கலான வெளிச்சமுடைய வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த பாம் ஹவுஸ் கடற்கரையோரம் அமைந்திருந்தபடியால் நிலவொளி, குளிர்காற்று என்று அந்த சூழ்நிலை மிக ரம்மியமாய் இருந்தது....
டெரஸ் அருகே செல்லவிழைந்த ரிஷியை தடுத்தது பட்டாசு வெடிக்கும் சத்தம்... இந்த நேரத்தில் யார் பட்டாசு வெடிப்பது என்று எண்ணியபடி வானை பார்த்தவனுக்கு அடுத்த அதிர்ச்சி...
வானில் பட்டாசுக்களால் வாசகங்கள் வந்தபடியிருந்தது...
அதில் தோன்றியதாவது
“The Day to remember......Here you go... The count down starts three.. two.. one... Happy Birthday.... Hubby..”
(நினைவிற்குரிய நாளின்று.... எண்ணத்தொடங்குகின்றோம்... மூன்று... இரண்டு.... ஒன்று... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹபி...)
என்று வானில் தோன்றும் போது யாரோ தன்னை பின்னாலிருந்து அணைப்பதல உணர்ந்தவன் யாரென்று அறியமுயலுமுன்னே அவனது செவிகளில் விழுந்தது அந்த வார்த்தைகள்
“ஹாப்பி பர்த்டே அத்தான்.... லவ் யூ சோ மச்...” என்று அவன் புறமுதுகில் முகம் புதைத்தப்படி உரைத்தவளின் வார்த்தைகளில் அதிர்ந்து நின்றான் ரிஷி..
அது அவனது மனதுக்கினியவளின் வார்த்தைகள்.. அவனை தன் காந்தக்குரலால் சொந்தமாக்கியவளின் குரல்... அவனது நினைவில் என்றும் நிலைத்திருப்பவளின் குரல்...
ஆம்... ஶ்ரீதான்யாவினுடைய குரலே அது..
அதுவரை யார் எதற்காக செய்கிறார்கள் என்று யோசித்துகலைத்தவனுக்கு அப்போது தான் தன்னுடைய பிறந்தநாளுக்கா தான் இத்தனை ஏற்பாட்டையும் ஶ்ரீ செய்துள்ளாள் என்று புரிந்தது. இரண்டு மூன்று நாட்களாய் வேலை காரணமாக ரிஷி அவளுக்கு அழைக்காமலிருக்க ஶ்ரீயும் அவனுக்கு அழைக்கவில்லை... வழமையாய் அவன் அழைக்காவிடின் இவள் தவறாது அழைத்து சற்று நேரம் பேசிவிட்டே உறங்குவாள்... கடந்த மூன்று நாட்களாய் அவள் பேசவில்லை என்று அவன் கட்டிலில் விழும் கணமே உணர்ந்தான்... சரி நாமாவது அழைக்கலாம் என்று நேரத்தை பார்த்தால் அது நடுச்சாமமாய் இருக்கும்... அவளை தொந்தரவு செய்யக்கூடாது என்று எண்ணி அவனும் உறங்கிவிடுவான்... இப்படியே இந்த மூன்று நாட்களாய் அதிகப்படியான வேலைப்பளு காரணமாக அவளுடன் பேசமுடியவில்லை... அவள் அவனுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க அவனோ மூன்று நாட்களாய் அவளைப்பற்றி கவலைப்படாது அவன் வேலையில் பிசியாக இருந்ததை எண்ணியபோது அவனுக்கு ஒருவித குற்றவுணர்ச்சி ஏற்பட்டது...அது அவனது வார்த்தைகளில் வெளிப்பட்டது...
“சாரி அம்லு....”என்றதும் அவனிடமிருந்து விலகியவள் அவன் முன் வந்து
“எதுக்கு அத்தான்??”
“எல்லாத்துக்கும் தான்....”
“அத்தான் ஒரு டவுட்டு... நீங்க தாங்ஸ் சொல்லுறதுக்கு பதிலா மறந்து சாரி சொல்லிட்டீங்களா??”
“இல்ல.. அம்லு.. நிஜமா சாரி...”
“அதான் எதுக்கு??? மறுபடியும் எல்லாத்துக்கும்னு சொல்லி கன்பியூஸ் பண்ணாதீங்க...”
“உங்கூட த்ரீ டேஸ் பேசலையே அதான்...” என்று ரிஷி கூறியதும் ஶ்ரீ குலுங்கி குலுங்கி சிரிக்கத்தொடங்கிவிட்டாள்..
“ஏன் அம்லு சிரிக்கிற??”
“கோபம் தான் வரனும்... ஆனா என்னான்னு தெரியலை அத்தான் சிரிப்பு தான் வருது...”
“என்ன அம்லு.. “
“பின்ன என்ன அத்தான் சில்லி ரீசனுக்கெல்லாம் சாரி சொல்லிட்டு இருக்கீங்க... அப்படினா நானும் தான் உங்ககிட்ட சாரி கேட்கனும்... நானும் உங்ககூட பேசல தானே???”
“சரி சாரி வேணாம்... நன்றியாவது சொல்லலாமா இல்லை அதுவும் வேணாமா???”
“எதுவும் வேணாம்.. இப்போ வாங்க...” என்றபடி அவனது கைபிடித்து டெரெஸ் அருகே அழைத்து சென்றாள் ஶ்ரீ...
அவனது கையில் ஒரு சாவியை கொடுத்தவள் அந்த கதவை திறக்ககூற அவள் கூற்றுப்படி அதை திறந்தவனை நனைத்தது ரோஜாப்பூமழை.. அப்போது அவனது கை கோர்த்தபடி தானும் அதில் நனைந்தபடி அந்தநொடியை அனுபவித்தாள் ஶ்ரீ...
ரிஷியிற்கோ நடப்பவை அனைத்தும் அவனது காதல் மனதை ஆர்ப்பரிக்கச் செய்பவையாகவே இருந்தது... இதுவரை பிறந்தநாள் என்றால் கோயில், ப்ரெண்சுடன் பார்ட்டி என்றிருந்தவனுக்கு இந்த அனுபவம் புதிதாய் இருந்தது.... மனதுக்கினியவள் அருகாமை, மனோ ரம்மியமான சூழல், எதிர்பாரதா அதிர்ச்சி பரிசுகள் என்று அவனை முற்றிலும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியிருந்ததது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top