நீ இருக்கும் நெஞ்சம் இது …6

#1
கிருஷ்ணா உள்ளே, போய் ஐந்து நிமிடம் ஆகியும் கண்மணி வரவில்லை. சரி நாம், வெளியே போகலாம் என்று முடிவெடுத்த நேரம் சரியாக கண்மணி பயந்துகொண்டே உள்ளே வந்தாள்.

வாங்க கண்மணி “என்ன நம்ம வீட்டுல வந்து நம்மள கூப்பிடுறாரு என்று மனதில் நினைத்துக் கொண்டாள்” என்ன நம்ம வீட்டுல வந்து நம்மள கூப்பிடுறான் பாக்குறீங்களா? வேற வழி என்று சொல்லிக்கொண்டே கண்மணியை ஊடுருவும் பார்வை பார்த்தான்.

அந்தப் பார்வையில் இன்னும் பயந்து போனாள் வெல் கண்மணி இது தானே உங்க பேரு? {கண்மணியின் மைண்ட் வாய்ஸ்} அப்படி சொல்லி தானே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூப்பிட்டாரு.

சொல்லுங்க கண்மணி என்ன படிச்சிருக்கீங்க? கண்மணி மனதினில் “இவர் என்ன நம்பல இன்டர்வியூ எடுக்கிறார்” வேற என்ன பண்ண கண்மணி.

நீங்க இப்படி பயப்படுறீங்க வேற என்ன பேச எனக்கு தெரியல, என்று கிருஷ்ணா சொல்லவும். கண்மணிக்கு தூக்கிவாரிப்போட்டது “என்ன நம்ம மனசுல நெனச்சதெல்லாம் சொல்றாரு” அதற்கு ,கிருஷ்ணா டென்ஷன் ஆகாதீங்க கண்மணி. இங்க ,உங்களுக்கு பிடிக்காமல் எதுவும் நடக்காது.

உங்களுக்கு, இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனா ஓபனா சொல்லிடுங்க என்று கிருஷ்ணா சொல்லவும் கண்மணியின் பதட்டம் குறைந்தது. இதை கணக்கில் கொண்ட “கிருஷ்ணா ஒருவேளை இந்த கல்யாணத்துல கண்மணிக்கு விருப்பம் இல்லையோ” என்று மனதில் ஏமாற்றமாய் உணர்ந்தான்.

கண்மணி என்னோட வயசு தெரியுமா? என்று சொன்னதற்கு அவள் தெரியாது என்று தலையை ஆட்டினாள். “வெல் என்னோட வயசு 31, உங்களோட வயசு 22” உங்களுக்கு இந்த ஒன்பது வயது இடைவெளி , நெருடல் இருந்தா அதை ஓபனா சொல்லிடுங்க. “கிருஷ்ணாவின் மனதில் அவ கல்யாணத்துக்கு ஓகே சொன்னா ,என்னமோ இது ஒன்னுதான் கண்டிஷன் என்ற மாதிரி நீ பாட்டுக்கு பேசுற”

முதல்ல அவள பேச விடுவோம் இதற்குள், மீனாட்சி எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார் அதை கவனித்த கிருஷ்ணா. கண்மணி இங்க பாருங்க, இது என்னோட போன் நம்பர், என்னோட அட்ரஸ், நான் படிச்ச டீடைல்ஸ் எல்லாம் இதுல இருக்கு.

உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லனா எனக்கு போன் பண்ணி சொல்லிடுங்க.இப்ப நான் என்ன சொல்லட்டும் ?ஓகேன்னு சொல்லட்டுமா? இல்ல வீட்டுக்கு போய் யோசிச்சி முடிவு எடுக்கிறோம் சொல்லட்டுமா?

கண்மணியின் மனதில் “அவள் அம்மா சொன்னது நினைவு வந்தது கண்மணி நாங்க உனக்கு கெடுதல் செய்வோமா” என்று அதுவுமில்லாமல் இவளுக்கும் ஒரு ஈர்ப்பும் ,இருந்தது .அதனால் ,தலையை ஆட்டினாள்.

கண்மணி புரியல கண்மணி ஓகேன்னு சொல்லட்டுமா? இல்ல… ஓகேன்னு சொல்லிடுங்க என்று மெல்லிய குரலில் சொன்னாள் .உங்களோட போன் நம்பர் ,என்று கிருஷ்ணா கேட்க .நான் உங்க நம்பருக்கு அப்புறமா ,மெசேஜ் செய்யறேன் என்று கண்மணி சொன்னாள்.

அவனுக்கு இப்பொழுதுதான் ஒரு சிறு நம்பிக்கை வந்தது எப்படியோ, பேசி,பேசி அவளிடம் சம்மதம் வாங்கிவிட்டான் . வெளியே வந்தவனின், முகத்தை எல்லோரும் ஆவலுடன் பார்க்க, அவன் அம்மாவிடம் சென்று சம்மதம் என்று சொன்னான்.

இப்பொழுதுதான், யசோதா விற்கு நிம்மதியாக இருந்தது. அவர் கணவரிடம் மேற்கொண்டு பேசும்படி சொன்னார். பிரபாகரன் அனைவரிடமும், எங்களுக்கு இந்த கல்யாணத்தில் பரிபூரண சம்மதம் என்று சொன்னார்.

இதைக் கேட்டவுடன் பெண் வீட்டாருக்கு, அதிலும் குறிப்பாக மீனாட்சிக்கு அவ்வளவு சந்தோஷம், உள்ளே ஓடி வந்த சுபா. கண்மணியின் கையை பிடித்து குலுக்கினாள்.

சந்தோஷம் டி ,கண்மணி. நீயே, பெரிய மனசு பண்ணி என்ன பேசினீங்க சொன்னா ஓகே. நான் ரொம்ப டீசன்ட் நீயா, சொல்ற வரைக்கும். நான கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு ,கண்மணியின் முகத்தை பார்த்தாள். அவள் யோசனையோடு ,சுபாவின் முகத்தை பார்த்தாள்.

என்னாச்சு கண்மணி , ஏன் என்னவோ போல இருக்கே? இல்ல சுபா ,நான் வேலைக்கு போறத பத்தி அவர்கிட்ட ஒண்ணுமே கேக்கல. அப்ப என்ன தாண்டி பேசினீங்க? அவர் பேசினார் நான் கேட்டேன். கிழிஞ்சுது போ, ஆனால் போன் நம்பர் எல்லாம் கொடுத்திருக்கார் சுபா. அட்ரா சக்க ,நீ என்ன சொன்ன? நான் அப்புறமா ,மெசேஜ் பண்றேன் னு சொன்னேன்.

வாவ், சூப்பர் கண்மணி தேறிட்ட போன் பண்ணி கேட்டிடுவோம். அவள் தயங்கி கொண்டே, இல்ல சுபா, நான் நைட் போன் பண்ணி அவர்கிட்ட பேசுகிறேன். அடிப்பாவி“பயந்த கண்மணி யாராவது பாத்திங்களா என்று செய்கையில் நடித்து காட்டினாள்” அதற்கு அவளை அடித்த, கண்மணி இது என்னுடைய கனவு சுபா.

இத, பத்தி முதல்ல அவர் கிட்ட பேசி தெளிவுபடுத்தனும். வெளியில் அதற்குள் ,நிச்சயம், கல்யாணம் அதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

சந்தோஷ் டேய், மாப்ள அப்படி என்ன பேசி ,அந்த பொண்ணுகிட்ட ஓகே வாங்குன. அதெல்லாம், “கம்பெனி சீக்ரெட் மாமா "வெளியே சொல்லக்கூடாது. ஏன்டா ,கால் விழுந்துட்டியா, என்று சொன்னதற்கு ,கிருஷ்ணா முறைத்த ,முறைப்பில் கப்பென்று வாயை மூடிக் கொண்டான்.

எல்லோருக்கும் காபி, டிபன் வழங்கப்பட்டது. அதற்கு, சந்தோஷ் டேய் மாப்ள, பொண்ணு வீட்ல ரொம்ப உஷார்! நீ ஓகேன்னு சொன்ன பிறகுதான், காபி, டிபன் எல்லாம் கண்ணுல காட்டுறாங்க. இங்கே”பிரபாகர் ஆவலோடு கேசரியை கையிலெடுக்க” அதற்கு யசோதா தப்பா நினைக்காதீங்க. அவருக்கு சுகர் இருக்கு, காபி மட்டும் குடுங்க என்று சொல்லிவிட்டார். வட போச்சே, என்ற கவலையில் பிரபாகர் சோகமாக முகத்தை வைத்துக்கொண்ட கொண்டார். எல்லோரும், நல்லபடியாக விடைபெற்று கிளம்பினார்கள். கிளம்பும்போது ,கிருஷ்ணா ஆவலோடு ரூமை எட்டிப்பார்த்தான்.

டேய் மாப்ள, இதெல்லாம் கொஞ்சம் ஓவர் டா, பார்த்து கொஞ்ச நேரம் தான் ஆச்சு. அதுக்குள்ள உன்னோட ஆளு, உன்ன எட்டி பாக்கணும்னு எதிர்பார்க்கிற. அந்த பொண்ணு பயந்த, பயத்துக்கு கல்யாணமாகி, உன்ன என்று பார்க்குமா தெரியல. என்று சொல்லிவிட்டு “வாசுகியை ஏக்கத்தோடு திரும்பிப் பார்த்தான்” அவள் இவனை கண்டுகொள்ளாமல், அவள் அம்மாவிடம் சலசலத்து கொண்டிருந்தாள். இரவு ,கிருஷ்ணா போனை ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

கண்மணி மெசேஜ் பண்ணுவாலா? என்று ,அங்கு "கண்மணி மெசேஜ் பண்ணுவோமா, வேண்டாமா" என்று குழப்பத்தோடு இருந்தாள்.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes