நீ இருக்கும் நெஞ்சம் இது …5

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
வாம்மா கண்மணி, “எல்லாருக்கும் நமஸ்காரம். பண்ணிக்கோ” அவர் சொன்னதை கீ கொடுத்த பொம்மை போல் அப்படியே, செய்தவள் யாரையும் நிமிர்ந்து பார்க்கவே இல்லை.

ஏண்டா மாப்ள எப்போ உன் ஆளு நிமிர்ந்து உன்ன பார்க்கிறது? எப்போ நம்ப எல்லாம் பஜ்ஜி, சொஜ்ஜி சாப்ட்டு வீட்டுக்கு போறது. இன்னைக்கு ஃபுல்லா உட்கார்ந்து இருந்தாலும், இந்த, கண்மணி பொண்ணு நிமிர்ந்து பார்க்காது போல இருக்கு.

கழுத்து வலியே வந்தாலும், நான் இப்படித்தான் இருப்பேன் சத்தியாகிரகம் பண்ணுது .சும்மா இரு மாமா நீ வேற, நானே பொண்ணுகிட்ட எப்போ தனியா பேசறது பாத்துட்டு இருக்கேன். சுத்தம் இன்னைக்கு வீட்டுக்கு போனா மாதிரி.

மாப்பிள்ளையைப் பார்த்து ஷாக்கான சுபா! இவர் அன்னைக்கு நம்ப பார்த்தவர் இல்ல ஐயோ! ஏற்கனவே இந்த கண்மணி பயந்து சாகிற. இதை, எப்படி சொல்றது சொல்லித்தான் ஆகணும் இல்லன்னா இன்னும் பயந்து குவா.

இங்கு சுபா அவள் தோல்தட்டி, ஏண்டி, கண்மணி நம்ப அன்னைக்கு, “ஐஸ்கிரீம் பார்லர் பார்த்தோமே ஒரு ப்ளூ ஷர்ட்” அவர் தாண்டி மாப்பிள்ளை, என்று சொன்னவுடனே இன்னும் பதட்டமான கண்மணி.

நான் எங்கடி பார்த்தேன் , நீதான் அன்னைக்கு பார்த்த. நீ இவ்வளவு பதட்டத்திலும், என்ன மட்டும் கோத்து விடற. சும்மா இருடி, எனக்கே பயமா இருக்கு. இப்படியே , சொல்லி நல்ல பார்த்துட்டு.

பக்கத்தில் அமர்ந்திருந்த வாசுகி, என்ன, உங்க ரெண்டு பேருக்குள்ள நீங்களே பேசுறீங்க?. அது ஒன்னும் இல்லக்கா கொஞ்சம் பயப்படுற பயப்படாதன்னு சொன்னேன்.

வாசுகி நம்பியும், நம்பாமலும் ஒரு பார்வை பார்த்தார். இதுக்கு நம்மளும் தலைய குனிந்து உட்கார்ந்துகலாம். இந்த, அக்கா இப்படி பாக்குறாங்க. சோபாவில் உட்கார்ந்து இருந்த “யசோதா தம்பி சந்தோஷுக்கு சைகை செய்தார் கிருஷ்ணாவை பார்க்க சொல்லி”. அப்பொழுதுதான், நன்றாக நிமிர்ந்து பார்த்த சந்தோஷ். டேய் மாப்பிளை, நீ இப்படி விடாம அந்த பொண்ண பார்த்தா அது, எப்போ உன்னை நிமிர்ந்து பார்க்கிறது. நம்ம எப்ப வீட்டுக்கு போறது.

ஓ! வீட்டுக்கு போக கூடாதுன்னு, ஐடியா அதானே , என்ன மாமா திடீர்னு இப்படி சொல்ற.”அது என்ன பாத்து சொல்லுடா," அப்பதான் பொண்ணு உன்னை பார்க்கும்" {{சந்தோஷின் மைண்ட் வாய்ஸ்} ஒருவேளை இப்படித்தான் பார்க்கணுமா, நம்ப எங்க முன்ன பின்ன பொண்ணு பாக்க போனோம் அவனுக்கு கஷ்டம் அவனுக்கு}.

மாமா என்று “கிருஷ்ணா கூப்பிட்டவுடன் நடப்புக்கு வந்த சந்தோஷ் “ பொண்ணு என்ன சரியா பார்க்குது. எனக்கு தெரிய வேணாம். அதெல்லாம், ஒன்னும் வேணாம். இப்ப முதல் என்ன பார். இதையே, பார்த்துக்கொண்டு இருந்த சுபா.

கண்மணி “அவரு அவங்க மாமாகிட்ட பேசுறாரு சீக்கிரம் நிமிர்ந்து பாத்துட்டு குனிஞ்சுகோ. சுபா சொல்லியதை நம்பி நிமிர்ந்த கண்மணி. அதேநேரம், ஸ்ரீராம் பார்க்க மறுபடியும் குனிந்து கொண்டாள்.

பக்கத்தில் இருந்த சந்தோஷ், இது வேலைக்காகாது என்று முடிவு விட்டான். ஸ்ரீராம் சத்தமாக நான் பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லிவிட்டான்.

சுபா கிழிஞ்சுது கண்மணி இன்னைக்கு நீ, மாட்டுன பஸ்டே பார்த்து இருக்கலாம் இல்ல. இப்ப பாரு தனியா பேச சொல்லி கூப்பிடுறாங்க. இதைக் கேட்ட கண்மணியின் அப்பா என் பொண்ணு கொஞ்சம் பயந்த சுபாவம்.

பக்கத்தில் நின்றிருந்த ,”கார்த்திக் யாரு அக்காவா அது வெளியில தான் வீட்டுக்குள்ள என்ன திட்டு திட்டுவா என்று மனதில் நினைத்துக் கொண்டான்” அதற்கு ஸ்ரீராம் 5 நிமிடம் தான் பேசிட்டு உடனே வந்து விடுகிறோம் அவர் மீனாட்சியை பார்க்க. .சங்கடத்துடன், மீனாக்ஷி தலையை ஆட்டினார்.

கார்த்தி அவருக்கு உன் ரூமை காட்டு சொன்ன நேரம் கண்மணி அவங்க அம்மாவை அழுது விடுபவள் போல் பார்த்தாள். அம்மாவிடம் நான் போகமாட்டேன் என்று அடம்பிடித்தால். “டேய் கார்த்தி நீயும் கூட வாடா. சுபா நீயும் வாடி, அதற்கு சுபா குடும்ப மொத்தமுள்ள போய் உட்கார்ந்து கொள்ளலாம்” என்று சொன்னவுடன். முறைத்த கண்மணி நானே போறேன் என்று சொன்னாள்.

மீனாட்சிக்கு இப்பொழுதுதான்,அப்பா என்று நிம்மதியாக மூச்சு விட்டார். அவருக்கு தெரியும் அவர் மகளைப் பற்றி, வேலையில் எல்லாம் கெட்டி. ஆனால், சில விஷயங்களில், முரடு பிடித்தால் அவ்வளவுதான், வழிக்குக் கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம். அவர் மனதிற்குள் சுபாவுக்கு, ஆயிரம் நன்றி சொன்னார்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
நிமிர்ந்து ராம் பையனைப் பாரு, கண்மணி
கண்மணியிடம் ராம் தனியாக என்ன பேசப் போறான்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top