நீ இருக்கும் நெஞ்சம் இது …3.2

#1
கிருஷ் “என்னங்க பா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பா பிஸியா இருக்கியா” கொஞ்சம் நோட்ஸ் எடுத்து இருக்கேன் சொல்லுங்கப்பா. இல்ல, உனக்கு பொண்ணு பாத்து இருக்கோம் பேரு கண்மணி பிஎஸ்சி மேக்ஸ் b.ed முடிச்சிருக்கு ஊர் காஞ்சிபுரம். என்று சொன்னவுடனே “அவன் மனதில் ஒரு பெண்ணின் முகம் மின்னி மvறைந்தது” உடனே சுதாரித்துக் கொண்டான் .பொண்ணுக்கு அம்மா, அப்பா, ஒரு தம்பி இருக்கான் பிளஸ்டூ படிக்கிறான்.

அப்பா கவர்மெண்ட் ஸ்கூல் டீச்சர் ,அம்மா ஹவுஸ் வைஃப். இந்தாப்பா பொண்ணு போட்டோ பார்த்துட்டு, உன் விருப்பத்தை சொல்லு, என்று சொல்லிவிட்டு அவர் செல்ல.

இவன் மனம் முழுவதும் “அவன் மனதில் மின்னி மறைந்த அந்தப் பெண் முகமே வந்து வந்து போனது”. இப்ப இந்த போட்டோவை எடுத்து பார்க்கலாமா வேண்டாமா? என்று ஒரு குழப்பம் சரி எடுத்து பார்க்கலாம் பிடிக்கலன்னா ஏதாவது ஒரு காரணம் சொல்லி விடலாம்.

என்று மனதில் நினைத்துக் கொண்டே, அந்த போட்டோவை எடுத்தான். பார்த்தவுடனே அவன் மனம் முழுவதும் அப்டி ஒரு

“சந்தோஷம்”. இப்பொழுது யாராவது “அவன் முகத்தை பார்த்தாள் மயங்கி விடுவது உறுதியே”அவனுக்கு பிடித்த வேலை, பிடித்த பெண் அவன் சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

டேய் கிருஷ் இப்போ ஒரு பாட்டு பாடிய ஆகணும் அந்த போட்டோவை கையில் பிடித்துக்கொண்டு

என்ன அழகு எத்தனை அழகு

கோடி மலர் கொட்டிய அழகு

இன்று எந்தன் கை சேர்ந்ததே

சின்ன அழகு சித்திர அழகு

சிறு நெஞ்சை கொத்திய அழகு

இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

உள்ளங்கையில் எந்தன் உயிரை வைத்தாள்

ஒரே சொல்லில் மனசை தைத்தாள்

சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்

நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்

நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன்

என்று பாடியபடியே நிமிர “மொத்த குடும்பமும் நின்றுகொண்டிருந்தது” இவன் அவர்களை பார்த்து ஷாக் ஆகி விட்டான். அக்கா நீ எப்ப வந்த? மாமா, விமல் வரல? கொஞ்சம் குனிஞ்சி கீழ பாருடா. உன் கால் கிட்ட தான் இருக்கான். ஸ்ருதி குட்டி, மாமா கிட்ட வாங்க.

அதற்குள், அவன் மாமா, சந்தோஷ் பாய்ந்து வந்து கிருஷ்ணா என்று கட்டிக்கொண்டான். மாப்பிள்ளை ரொம்ப சந்தோஷமா இருக்குடா மாப்பிள, விடு மாமா நீ வேற, இனிமே “நாம கட்டி பிடிச்சா எல்லாம் அவனுக்கு பிடிக்காது”. மாமா அங்க பாருங்க “வெட்கப்படுகிறான்” சும்மா இரு வாசுகி. டேய் விமல் இப்ப என்ன? நான் கீழ போணுமா சமத்து .

டேய், உண்மைய சொல்லு,”உனக்கு , அந்த பொண்ணு முன்னாடியே தெரியுமா?என்று சொன்ன அக்காவை மெச்சுதலாக பார்த்தான். டேய் மாப்பிள்ளை உண்மையாவா டா. கிருஷ்ணா சிரித்துக்கொண்டே அவன் காஞ்சிபுரம் போனது கண்மணியை பார்த்தது என்று சுருக்கமாக சொன்னான். அடப்பாவி டேய் மாப்ள எனக்குதான், இப்படி ஒரு சான்ஸ் எல்லாம் கிடைக்கவே இல்லை. என் “அக்கா பொண்ணை கல்யாணம் பண்ணதால” என்று சொல்லிவிட்டு வாசுகி பார்த்தான்.

வாசுகி கணவனை கண்களால் பொசுக்கி கொண்டிருந்தாள். ஐயோ! “மைண்ட் வாய்ஸ் நெனச்சு சத்தமா பேசி டோமோ” அக்கா “நான் சொல்ற வரைக்கும், இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது” சொல்ல மாட்டேன்.

மாமா உங்களுக்கும் தான், நான் ஏண்டா, சொல்ல போறேன். சரி, “இந்த வாரம் பொண்ணு பார்க்க போலாமா” போலாமே. சரி, நீங்க ரெண்டு பேரும் கீழே, போங்க ஏன், நீ கனவு காணும் தனியா உட்கார்ந்து. என்று சொன்ன. மாமாவை முறைத்து பார்த்தான் .சரி சரி நாங்க ரெண்டு பேரும் கீழே போறோம். வா வசு, நம்ப போலாம். இவன் ரொம்ப பண்றான்.
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement