நீ இருக்கும் நெஞ்சம் இது …14

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
நிச்சயதார்த்தம், நல்லபடியாக முடிந்து, ஒருவழியாக கிருஷ்ணாவும், சென்னை வந்து சேர்ந்துவிட்டான். வழக்கம்போல், இரவானால், கண்மணியுடன் போனில் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டான்.

“சங்கீத ஸ்வரங்கள்: ஏழே கணக்கா:

இன்னும் இருக்கா: என்னவோ மயக்கம்:

என் வீட்டில் இரவு:அங்கே இரவா:

இல்ல பகலா: எனக்கும் மயக்கம்”


“பேசிப்பேசி தீர்ந்த பின்னும்


ஏதோ ஒன்று குறையுதே”

என்ற ரீதியில் அவர்கள் பேசி, பேசி நாட்களை நெட்டி தள்ளிக் கொண்டிருந்தார்கள் .பெரியவர்கள் ஒருபக்கம், சாமி கும்பிடுவது, குலதெய்வ வழிபாடு, என்று “பிஸியாக இருந்தார்கள்...”

சந்தோஷ் பத்திரிக்கை வைப்பது, வீட்டிற்கு தேவையான, அனைத்து காரியங்களுக்கும் அவன் தான் அலைந்து கொண்டிருந்தான். இதில் “வாசுகி கவனிக்க அவனுக்கு நேரமில்லை”...

ராம் அவன் வேலையில்பிஸியாக இருந்தான்” இப்படித்தான் ஒருநாள், ராம் அவன் கிளாசில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும்போது, வழக்கமாக அவன் பாடம் எடுக்கும்போது, அனைவரின் கவனமும் அவன் எடுக்கும் பாடத்தில் தான் இருக்கும். ஆனால், இன்று கடைசி பென்சில் அமர்ந்திருந்த “தருண் பாடத்தை கவனிக்காமல் எங்கேயோ சிந்தித்துக் கொண்டிருந்தான்”.

ராம், இரண்டு முறை கூப்பிட்டும், அவன் பதில் அளிக்கவில்லை. சற்று சத்தமாக தருண் என்று குரல் கொடுத்தான், அப்பொழுதும் “மொத்த கிளாஸ்ம் திரும்பிப் பார்த்தும்” தருண் திரும்பவில்லை. ராமிற்கு, எப்போதும், எல்லோரும் ஒன்றே, ஆனால், தருண் இடம் “ஒரு கூடுதல் ஒட்டுதல், ஒரு இனம் புரியாத பாசம்”…

ராம் தருணை நெருங்கி, அவன் தோளில் கை வைத்தான், அப்பொழுதுதான் திடுக்கிட்டு பார்த்த தருண்! சார்! என்று எழுந்தான். “கிளாஸ்” முடிஞ்ச உடனே என்ன வந்து பாரு என்று சொல்லிவிட்டு கிளாசை முடித்துக்கொண்டு சென்றுவிட்டான்.

தருண் கிளாஸ் முடிந்தவுடன், ராமை சென்று பார்த்தான். ராம் ஒரு “விசிட்டிங் கார்டு கொடுத்து, இந்த கிளாஸ் ல போய் ஜாயின் பண்ணு ஃப்ரீ தான் என்று சொல்ல”, என்ன கிளாஸ் சார்? “மெடிடேஷன் கிளாஸ்” உன்னோட பர்சனல் விஷயம் என்னன்னு நான் கேட்க மாட்டேன். நல்லா படிக்கிற பையன், நீ எவ்வளவு கஷ்டப்பட்டு இங்க செலக்ட் ஆகியிருக்க

இங்க செலக்ட் ஆகிறது, எவ்ளோ கஷ்டம்னு, நான் சொல்லி உனக்கு தெரியவேண்டியதில்லை, உனக்கே தெரியும்,

“படிப்பு என்றது ஒரு தவம் மாதிரி” இந்த வயசுல “டிஸ்டிரேக்சன்” அவரது சகஜம்தான், ஆனா, அதை தாண்டி வரணும். நீ பழையபடி, அடுத்த எக்ஸாம்ல, நல்ல மார்க் வாங்கணும். பொதுவா எல்லாருமே, பண்ற தப்பு தான், “ஒண்ணு கிடைக்கிற வரைக்கும் அதுக்காக தீவிரமா முயற்சி
பண்ணுவோம்”… “கிடைச்சுட்டா, கிடைச்ச பிறகு, அதோட வேல்யூ நமக்கு தெரியறதில்ல..”

சார் அது வந்து, எனக்கு, எதுவும் தெரிய வேண்டாம், “ஃபேமிலி ப்ராப்ளம் இருக்கலாம், இல்ல வேற, சில பிரச்சனையும் இருக்கலாம்” நீதான், அதை கடந்து வரணும், வழிகாட்ட முடியும் நீதான், நடந்துபோய் போகணும், நான் உனக்காக, நான் நடக்க முடியாது.

இன்று நடந்ததை, வேதனையுடன், கண்மணி இடம் பகிர்ந்து கொண்டிருந்தான் கிருஷ்ணா. கண்மணி அதற்கு சரியாயிடும் கவலைப்படாதீங்க.

அங்கு நீங்கதான்” மெடிடேஷன் சொல்லித் தர்றீங்க” அப்படி என்ற விஷயத்தை அவன் கிட்ட சொல்லி இருக்கலாம்ல..

நான் மட்டும் சொல்லி தரல, கண்மணி “என் கூட சேர்ந்து, என்னோட பிரண்ட்ஸ் கொஞ்சம், “வாலின் டியர்ஸ்” கொஞ்சப்பேர் சொல்லி தராங்க”…

இடம் நமது தான், அனைத்தையும், அமைதியாக, கேட்டுக்கொண்டிருந்த கண்மணி. நம்மளும் பிரயோஜனமா, ஏதாவது பண்ணனும், என்று அந்த ரீதியில் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

அவளிடமிருந்து, பதில் வராததால், என்னாச்சு கண்மணி? பதிலே காணோம். ஆமா, என்னமோ கல்யாணம் ஆனவுடனே, வேலைக்கு போகணும், டீச்சர் ஆகணும், அதுதான் என்னோட கனவு, அப்படி, இப்படின்னு சொன்ன. எந்த அளவுக்கு போயிட்டு இருக்கு, அதுக்கு முன்னாடி” டெமோ கொடுக்கணும்” தெரியுமில்ல…

தெரியும் என்று கொஞ்சம் முறைப்புடன் சொன்னாள், சரி, சரி பார்த்துக்கோ, அப்புறம், என்ன எதுவும் “பிளேம் பண்ண கூடாது”..

“ஓ” அதுக்குத்தான், உஷாரா முன்னாடியே, கேட்கிறீர்களா, என்று இருவரும் மாறி, மாறி பேசிக்கொண்டிருக்க .”உஷாரான கிருஷ்ணா” என்ன கல்யாணத்துக்கு முன்னாடியே “பர்ஃபெக்ட் பொண்டாட்டிய” ஆகாரத்துக்கு எல்லா தகுதியும் கண்மணிக்கு வந்துடுச்சு.

நாமலும் “பர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்” ஆகறதுக்கு, ட்ரெயினிங் எடுத்துக்கலாம், என்று முடிவு செய்த கிருஷ்ணா. கண்மணி அன்னைக்கு, நீ பாடுநீயே, எவ்வளவு சூப்பரா, இருந்தது தெரியுமா, என்று பேச்சை மாற்றி விட்டான்.

அவன் உள்மனது, ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு, சமாளிக்கிறது இவ்ளோ கஷ்டமா? அவனவன் “எப்படி இரண்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜாலியா இருக்காங்களோ”

மறுநாள் இதையெல்லாம், தன் மாமன் சந்தோஷம் இடம், கிருஷ்ணா சொல்லிக்கொண்டிருக்க, மாப்பிள உனக்கு “ஒரு சக்ஸஸ்புள் மேரேஜ், லைஃப் க்கு”. உனக்கு ஒரு சீக்ரெட் சொல்லித்தரேன், என்ன குருவே, அதற்கு சந்தோஷ் “சிஷ்யா” வேறு ஒன்றும் இல்லை, பொண்டாட்டி எது சொன்னாலும் “சரிம்மா, சாரிமா” என்று சொல்லிவிடு, “வெரி சிம்பிள்” என்று சொல்லிவிட்டு, எப்எப்படி என்று கெத்தாக ஒரு பார்வை பார்த்தான்.
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் சந்தோஷுஷுஉஉஉஉ
மச்சினன் கல்யாண வேலையிலே உன் பொஞ்சாதியை நீ சரியாய் கவனிக்கலை
அக்கா பொண்ணு வாசுகி உன்னை அக்கக்கா பிய்க்க போறாள் பாரு
தருண் பையனுக்கு என்ன பிரச்சனை?
ஒருவேளை நிஷா ஏதாவது செய்தாளோ?
 

Pragathi Ganesh

Well-Known Member
அடேய் சந்தோஷுஷுஉஉஉஉ
மச்சினன் கல்யாண வேலையிலே உன் பொஞ்சாதியை நீ சரியாய் கவனிக்கலை
அக்கா பொண்ணு வாசுகி உன்னை அக்கக்கா பிய்க்க போறாள் பாரு
தருண் பையனுக்கு என்ன பிரச்சனை?
ஒருவேளை நிஷா ஏதாவது செய்தாளோ?
What a rhyming !super Banu ma..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top