நீ இருக்கும் நெஞ்சம் இது …12

Pragathi Ganesh

Well-Known Member
#1
ஹாய் ராம், எப்போ மேரேஜ்? என்று கேட்ட விக்கிக்கு “நெக்ஸ்ட் மந்த்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, அங்கு வந்த நிஷா “கங்கிராஜுலேசன் ராம் “ உங்களுக்கு மேரேஜ் கேள்விப்பட்டேன், தேங்க்ஸ் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டான்.

அது என்னவோ நிஷா வேலையில் சேர்ந்த நாளிலிருந்து கிருஷ்ணாவுக்கு நிஷாவை பிடிக்கவில்லை. ஒரு “நெகட்டிவ் வைப்ரேஷன்” என்று சொல்வார்களே அதுபோல் அவள் பார்த்தாலே கிருஷ்ணாவுக்கு பிடிக்காது.

அவனுக்கு அவன்” உள்ளுணர்வு மீது அதிக நம்பிக்கை உண்டு அது என்றும் பொய்த்ததில்லை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு” முடிந்தவரை அவளிடம் பேசுவதை தவிர்த்து விடுவான். இத்தனைக்கும் நிஷா பேரழகி இருந்தாலும், ஏனோ? பிடிக்கவில்லை “துஷ்டனை கண்டால் தூர விலகு” என்பார்களே அதுபோல் இவன் விலகினாலும், அவள் விலக தயாராக இல்லை.

நாட்கள் விரைந்து செல்ல” நிச்சயதார்த்த நாள் அழகாக விடிந்தது” கிருஷ்ணாவின் மொத்த குடும்பமும் கண்மணியின் வீட்டிற்கு வந்திறங்கினார்கள். இங்கு பச்சை வண்ண பட்டுப் புடவை அழகாக தயாராகிக் கொண்டிருந்தாள் கண்மணி உதவிக் கொண்டிருந்தாள் சுபா.

கார் சத்தம் கேட்டு, ஜன்னலை எட்டிப்பார்த்த சுபா, காரிலிருந்து முதலில் இறங்கிய அகிலாண்டேஸ்வரி பாட்டியையும், அவர் கணவர் உமாபதி தாத்தாவையும், பார்த்த சுபா கண்மணி இடம் “ யாரடி இந்த நியூ என்ட்ரி” என்று கேட்டதற்கு? அவளுடன் சேர்ந்து ஜன்னலை எட்டிப்பார்த்த கண்மணி, அவருடைய தாத்தாவும், பாட்டியும் டி, பொண்ணு பார்க்க வரும் போது, அவங்களுக்கு உடம்பு சரி இல்லையாம், அதனால இப்போ வராங்க என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, கிருஷ்ணாவின் மொத்த குடும்பமும். கண்மணி பெற்றோர்களால் வரவேற்கப்பட்டு ஹாலில் அமர்த்தப்பட்டார்கள்.

அகிலம் பாட்டி, மீனாட்சியிடம் தப்பா நினைக்காத மீனாக்ஷி பொண்ணு பார்க்க வரும்போது எனக்கு கொஞ்சம் உடம்பு சுகமில்லை. அதனால என்னம்மா, இப்ப வந்துட்டீங்க இல்ல அதுவே போதும். சரி எங்க என் பேத்தி? ரூம்ல இருக்கா வாங்க அழைச்சிட்டு போறேன், என்று சொன்னதற்கு.

நீ, போய் மிச்ச வேலையை பாரு மீனாட்சி, நானே பாத்துக்கிறேன், என்று சொல்லிக்கொண்டே, கண்மணியின் ரூம் எங்கே? என்று கேட்டுக்கொண்டு கண்மணியின் ரூம் நோக்கி, மணி கண்ணு என்று குரல் கொடுத்தார்.

ஏண்டி கண்மணி? என்னடி “உன் பேர தலைகீழா கூப்பிடுறாங்க” என்னடி சொல்ற? இல்ல கண்மணி தான உன் பேரு? “ மணி கண்ணு கூப்பிடுறாங்க” அதற்கு, சுபாவை முறைத்த கண்மணி பதில் சொல்வதற்குள் அவர்களை நெருங்கி விட்டார் பாட்டி.

அவரைப் பார்த்தவுடன், எழுந்துநின்ற கண்மணி, “அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கொண்டாள்”. ராஜாத்தி நல்லா இரு, என் பேரன் கல்யாணம் பண்ணிக்கிட்டு “குழந்தை குட்டியோடு மனசு நிறைஞ்சு வாழ்க்கையில் வாழனும்” என்று ஆசீர்வதித்தார்.

சுபா பாட்டியிடம், நான் “கண்மணி பிரிண்ட் பாட்டி” என்று தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டாள். நீங்க ரெண்டு பேரும் இப்ப மாதிரி எப்பயும் ஒத்துமையா இருக்கணும், என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, கார்த்திக் “பார்சல் லோடு உள்ளே வந்தான்” பாட்டியைப் பார்த்து தயங்கி நிற்க உள்ள வாப்பா.

என்ன? என் பேரன் கிப்ட் கொடுத்து விட்டானா” அதற்கு சிரித்த கார்த்திக் கண்மணி இடம் கொடுத்துவிட்டு ஓடிவிட்டான். ஆஃ”போனாதான் இருக்கும்” எப்படி பாட்டி இவ்வளவு கரெக்டா சொல்றீங்க? என்று கேட்ட சுபாவிற்கு, இந்த காலத்து பசங்க, வேற என்ன கொடுத்திட போறீங்க.

“கல்யாணத்துக்கு பின்னாடி பேச வேண்டியதை முன்னாடியே பேச வேண்டியது “ “கல்யாணம் ஆனவுடனே பேச ஒன்னும் இல்லாம, ஒருத்தருக்கு ஒருத்தர், சண்டை போட்டுக்க வேண்டியது” இந்த போனால் “நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு,” என்று சொன்னதற்கு,.

சுபா பாட்டியிடம், அப்ப போன் பேசுறது தப்பா பாட்டி, என்று கேட்டதற்கு, “எதுவுமே அளவோடு இருக்கணும்”

வாழ்க்கைதான் நீண்டு கெடக்கு, “எது, எது எப்ப, எப்போ தெரிஞ்சுக்கணுமா அப்பதான் தெரிஞ்சுக்கணும்”. சரி போதும், போதும், இப்படியே பேசிட்டு இருந்தா “எனக்கு வயசான வயசான பீலிங் வந்துவிடும்” என்று பாட்டி சொன்னதற்கு “ஆ” வாயை பிளந்தாள் சுபா.

இங்கு ஹாலில் உட்கார்ந்து கொண்டிருந்த சந்தோஷ், கிருஷ்ணாவிடம், என்ன? சென்ட் மாப்பிள யூஸ் பண்ற? சும்மா கும்முன்னு தூக்குது. சூப்பரா, பின்ன கண்மணி சும்மா மயங்கிட வேணாம், “ஓ” இதுதான் “அழகுல மயங்குற தா” எனக்கும் அந்த “சென்ட்” தா மாப்பிள “ரெண்டு புள்ள” பெற்றதிலிருந்து எனக்கு யூத் பீலிங் கே போச்சு.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement