நீ இருக்கும் நெஞ்சம் இது …11

Advertisement

Pragathi Ganesh

Well-Known Member
யசோதா கடைவாசலில் புலம்பிக்கொண்டே நின்றுகொண்டிருந்தார். இந்தப் பையன, பெத்ததுக்கு கடை வாசல்ல நின்னு புலம்ப வெச்சுட்டான். யசோதா அருகில் வந்த பிரபாகர் உள்ளவா யசோதா. அவங்க, வருவாங்க இங்க, நீ நின்ன மட்டும் அவங்க சீக்கிரம் வந்து விடுவார்களா?...

சம்மந்தி, வீட்ல நம்ப முகத்தையே பாத்துட்டு இருக்காங்க, எனக்கு சங்கடமா இருக்கு. நீங்க ஒரு கிருஷ்ணா க்கு போன் போட கூடாதா? ஏன் உன் கிட்ட போன் இல்லையா? என்னையே கேள்வி கேளுங்க? என்று இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, சந்தோஷின் கார் கடை வாசலில் வந்து நின்றது.

யசோதா “கிருஷ்ணா சந்தோஷ்” இருவரையும் முறையோ முறை என்று முறைக்க. சந்தோஷ் ஏதாவது சொல்வதற்குள், முந்திக்கொண்ட கிருஷ்ணா. என்னமா இங்க நிக்குற? கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம… டேய், பொண்ணு உன் கூட இருக்கு, எந்த பொண்ணு மா? கண்மணி டா என்ன வெறுப்பேத்தாத பாத்துக்கோ.

இவர்கள் விளையாட்டாக பேசியதை பார்த்து பயந்த கண்மணி. யசோதாவின் அருகில் சென்று அத்தை எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னதும். யசோதா நீ பயப்படாதமா, நாங்க எப்பவுமே இப்படிதான், அதுலயும் இந்த கிருஷ்ணா இருக்கானே ஜகஜால கில்லாடி.

நானும், என் தம்பியும, இந்த குடும்பத்தில், வந்து மாட்டிக்கிட்டோம், என்று கிருஷ்ணாவை பற்றி நன்றாக சொல்லிக்கொடுத்த, யசோதா கிருஷ்ணாவை இப்ப என்ன பண்ணுவ என்பதுபோல் ஒரு பார்வை பார்த்தார். கிருஷ்ணா தலைக்குமேலஇரு கைகளையும் தூக்கி பெரிய கும்பிடு போட்டான். “தாயே சரணம்” நான் இன்னும் என்னுடைய வாழ்க்கையே ஸ்டார்ட் பண்ணல பாத்து பண்ணு மா.

இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை பார்த்த பிரபாகர், யசோதா இப்போ உனக்கு டைம் ஆகலையா? எல்லாரும் உள்ள வாங்க. யசோதா பேசியதை கேட்ட சந்தோஷ் “ஆயிரம் தான் இருந்தாலும் அக்கா அக்கா தான்” என்று சந்தோஷ மனம் குளிர்ந்தது.

பெண்கள் அனைவரும் பட்டுப்புடவை செக்சன் நோக்கி செல்ல. ஆண்கள் அனைவரும் சற்று தள்ளி நின்று கொண்டனர். பிரபாகரன், மணிகண்டனும் பேசிக்கொள்ள, கார்த்திக், விமல் ஒருபக்கம். சந்தோஷ் கையில் ஸ்ருதியுடன், கிருஷ்ணா பக்கத்தில் நின்றுகொண்டான். கிருஷ்ணா, கண்மணியை பார்த்ததுபோல் கண்மணியின் பின்னால் சற்று இடைவெளி விட்டு நின்றுகொண்டான்.

கண்மணி ஒவ்வொரு புடவையாக, தன்மேல் வைத்து கண்ணாடி வழியாக கிருஷ்ணாவை பார்க்க, கிருஷ்ணா இது வேண்டாம், அது வேண்டாம்,என்று ஒவ்வொரு புடவையாக, வேண்டாம் என்று கண் ஜாடை காட்டி கொண்டு இருந்தான். இதை பார்த்த சந்தோஷ டேய், சீக்கிரம் முடிடா, முடியல எவ்வளவு நேரம் நிக்கிறது. நீ பாட்டுக்கு, ஐஸ்க்ரீம் பார்லரில் பாடின மாதிரி இங்கேயும்

“சேலையில வீடு கட்டவா” பாட்டை ஆரம்பிக்காத

கடைசியாக நாவல் பழ நிறத்திலும், குங்கும நிறத்திலும், ஒரு புடவையை தேர்ந்தெடுத்தனர். சந்தோஷம், கிருஷ்ணாவும், பில்லிங் செக்சன் நோக்கி செல்ல, மற்ற அனைவரும் சற்று ஒதுங்கி நின்று கொண்டனர். சந்தோஷ கையிலிருந்த ஸ்ருதி, முன்வரிசையில் நின்றுகொண்டிருந்த “ஒரு பெண்ணின் தலைப் பின்னலை, பிடித்து இழுத்தது, அந்த பெண் திரும்பி சந்தோசை முறைத்தாள் . இந்த பொண்ணு எதுக்கு நம்பல முறைக்குது.

சுருதி மறுபடியும், மறுபடியும், இதே செய்ய, அப்பொழுதுதான் சந்தோஷ் பார்த்தான். ஸ்ருதி செல்லம் அப்பா பாவம்டா, என்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, அங்கே வந்த வாசுகி, இங்க என்ன நடக்குது? கிருஷ்ணா கையில் இருக்கும் ஸ்ருதியை வாங்கிகொண்டான். இதையெல்லாம் கொண்டிருந்த யசோதா அந்தப் பெண் நகர்ந்ததும், இவர்கள் பில் போட்டு முடித்தனர். சந்தோஷ், வாசுகியை பார்த்தான் அவள் இவனை முறைத்துக் கொண்டிருந்தாள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, யசோதா வாங்க டைமாச்சு கிளம்பலாம்.

கிருஷ்ணா, கண்மணிக்கு கண்களால் விடைகொடுக்க, போயிட்டு வரேன் என்று, இதைப்பார்த்த, சந்தோஷ் அடங்குடா, “கண்களாலேயே பேசிப்பாங்க, நாங்களும் பேசுவோம் இல்ல” ஏன் நீங்க அக்கா கிட்ட பேசுறது? வாசுகியை பார்த்த, சந்தோஷ் அவளிடம் நெருங்கி, ஏன், வசு நம்மல பார்த்து கண்ணால பேசிக்க சொல்றான்.

சின்ன பையன், நம்ப வாயால தான் பேசிக்குவோம், என்று “இரு பொருள் பட பேச” அவனை முறைத்த வாசுகி பக்கத்தில் தம்பி வெச்சுகிட்டு பேசுற பேச்சா இது. அதுக்கு, என்ன பண்றது, அவன் எந்நேரமும், என் கூட தான் இருக்கான். நல்ல வேலை, அவனுக்கு கல்யாணம் ஆகப்போகுது இனிமேல் அவன் கண்மணி கூட தான் இருப்பான் கண்மணி பெயரை கேட்டவுடன் வாசுகியின் முகம் சிறிது மாறியது.

அங்கே சென்னையில், “கிருஷ்ணாவின் போட்டோவை செல்லில் பார்த்துக்கொண்டிருந்த நிஷா” உனக்கு கல்யாணம், நிச்சயமாய் இருக்காமே, எத்தன நாளா நான் உனக்காக காத்திருந்தேன். என்ன ஒரு மனுஷியாக, கூட நீ பார்த்ததில்லை. உன்ன சந்தோஷமா வாழ விட்டிடுவேனா ராம். ஆள வச்சி அடிக்கிறது, ஆள தூக்குறது, இதெல்லாம், நிஷா ஸ்டைல் இல்ல, உன் சந்தோசத்தை, நிம்மதியையும், உன்கிட்ட இருந்து எடுத்துடுவேன்.

ஆவதும் பெண்ணாலே: அழிவதும் பெண்ணாலே:

“ஒரு மனிதரைக் கொள்வதும் அவர் நிம்மதியை, சந்தோஷத்தையும் கொள்வதும் இரண்டும் ஒன்றுதான்” பழி வெறியில், நிஷாஅடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்று அவள் மூளை அவசரமாக திட்டம் தீட்டியது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top