நீயே பதில்....

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
#1
கண்ணிமைக்கும் நேரத்தில்
தோன்றி மறைந்தவளே!!!
மறைந்த உன்னை
ஒரு சேர தேடியன
என் கண்களும் இதயமும்...
ஒரு நொடியே
என் விழித்திரையில் விழுந்த
உன் விம்பம்...
என் இதயத்தில்
பதிக்கப்பட்டது ஏன்??
என் கனவுகளில்
உனது மைவிழிகள்
கள்ளச்சிரிப்பு சிரிப்பது ஏன்??
நனவில் உன் அதரங்கள்
என் பெயரை
உச்சரிப்பது போன்று
பிரம்மை தோன்றுவது ஏன்??
மறுமுறை உன்னை
கண்டபோது மனம்
என் வசம் இழந்து தத்தளித்தது ஏனோ??
இக்கேள்விகளுக்கான
விடை தான் என்னவோ???
வினாவாகிய நீயே
பதிலாவாயா??
 
Advertisement

Sponsored