நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்...

Advertisement

Eswari kasi

Well-Known Member
முக்கிய பதிவு.... கொள்ளை போகும் நிலத்தடிநீர்... நிலத்தடி நீருக்கும் இனி கட்டணம்... இதன்மூலம் அரசு சொல்லவருவது என்ன?

மனிதனின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாத மூன்று விஷயங்கள் உணவு, உடை, இருப்பிடம். ஒரு மனிதனுக்கு இவை அனைத்தையும் ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் முக்கியமான கடமை. இவ்வளவு நாள் தொழிற்சாலை தவிர்த்து மக்கள் பயன்படுத்தும் அவசிய தேவைக்காக நிலத்தடி நீர் இலவசமாகத்தான் இருந்தது. ஆனால் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் மக்கள் உபயோகிக்கும் நிலத்தடி நீருக்கும் கட்டணம் செலுத்தவேண்டும் என அறிவித்திருக்கிறது அரசு. இப்பட்டியலில் இப்போதைக்கு விவசாயம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் விவசாயிகளும் தாங்கள் உபயோகிக்கும் நிலத்தடி நீருக்கான கட்டணத்தை செலுத்த வேண்டிவரும். பொதுமக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான குடிநீரை, இலவசமாகக் கொடுப்பதுதான் ஆளும் அரசின் பணி. அதையே அரசால் இன்னும் முழுமையாக வழங்கமுடியவில்லை. அதற்கு மாற்றாக மக்கள் பயன்படுத்துவதுதான் நிலத்தடி நீர். தற்போது அதற்கும் கட்டணம் விதித்திருகிறது அரசு. இதற்கான அறிவிப்பை மத்திய அரசின் நிலத்தடி நீர் ஆணையம் கடந்த வாரம் அறிவித்திருக்கிறது. நிச்சயம் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது மக்களிடம் அதிகப்படியான எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும். நிலத்தடி நீர் கட்டணம், ஓர் அங்குலம் விட்டம் கொண்ட குழாயில் தினமும் 20 கன மீட்டர் வரை நிலத்தடி நீரை எடுப்பவர்களுக்கு, ஒரு கன மீட்டருக்கு 2 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக மத்திய அரசிடம் மறுப்பின்மை சான்றிதழ் பெற வேண்டும். மத்திய நிலத்தடி நீர் ஆணையம் விதித்துள்ள இந்தக் கட்டணம் திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல. 1987-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 2012-ம் ஆண்டில் திருத்தப்பட்ட தேசிய தண்ணீர்க் கொள்கையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இதற்காக 2012-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தேசிய தண்ணீர்க் கொள்கையில், 'தண்ணீரை வழங்குவதில் இருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும். தண்ணீர் விநியோக உரிமையை தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும். தொழிற்சாலை உற்பத்திக்குப் போக மீதமிருக்கும் நிலத்தடி நீருக்கு (விவசாயம் உட்பட) கட்டணம் வசூலிக்க வேண்டும்.' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. 2012-ம் ஆண்டு தேசிய தண்ணீர் வார விழாவில் பேசிய அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், ‘‘நிலத்தடி நீர் இலவசமாகக் கிடைப்பதால்தான், அதன் மதிப்பு யாருக்கும் தெரியவில்லை. நீர் இலவசப் பொருளல்ல. அது ஒரு வணிகப் பொருள். உரிய விலை கொடுத்துத்தான் நிலத்தடி நீரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை நாட்டுடைமையாக்கி, அதைத் தனியார்வசமோ அல்லது தனியாரோடு கூட்டுச் சேர்ந்தோ நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நிலத்தடி நீர் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்பட, தேசிய நீர் கொள்கை-2012 வடிவமைக்கப்படுகிறது’’ என்றார். இன்று அதுதான் செயல் வடிவம் பெற்றிருக்கிறது. நிலத்தடி நீரில் 10 சதவிகிதம் தொழிற்சாலை உபயோகம் போக மீத 90 சதவிகிதம் தண்ணீர், மக்களால் அன்றாடத் தேவைகளுக்கும், விவசாயத் தேவைக்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. திருத்தப்பட்ட தேசிய கொள்கையின்படி 90 சதவிகிதம் மக்கள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்குக் கட்டணம் வசூலிக்கப்படும். இக்கொள்கையில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். 'நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில் இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அது நிலத்தடி நீருக்கான விலை அல்ல. நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கான செலவு' என சொல்லப்பட்டுள்ளதுதான். நிலத்தடி நீரைப் பாதுகாக்க அதை உபயோகிக்கும் மக்களிடம் பணம் வாங்குவது முறையாகாது. நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் வழிகள் ஆயிரம் இருக்கின்றன. இருந்த நிலத்தடி நீர்வளத்தைத் தொழிற்சாலைகளுக்கு வழங்கிவிட்டு மக்களிடம் கட்டணம் வசூலிப்பது, எந்த வகையிலும் நியாயமில்லை. இது மக்களின் மீது சுமத்தப்படும் பொருளாதாரத் தாக்குதலே ஆகும். இதுதவிர, இப்போது விவசாயத் தேவைகளுக்காக எடுக்கப்படும் நிலத்தடி நீருக்குக் கட்டணம் இல்லை என்பதும் தற்காலிகமே தவிர, நிரந்தரமில்லை. இன்னும் சில ஆண்டுகளில் அதற்கும் கட்டணம் வசூலிக்கப்படும். ";நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்தவும் அதனைப் பாதுகாக்கவும்தான் இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இதனால் உண்மையிலேயே நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுமா என்றால் நிச்சயமாக இல்லை. இதைவிட மோசமான நிலைதான் ஏற்படும். இதுவரையில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் பெரிய பெரிய நிறுவனங்கள் நிலத்தடிநீரை எடுத்துக்கொண்டிருந்தன. ஆனால் அவர்களுக்குள் இருக்கும் சிறிய குற்ற உணர்வையும் இந்த கட்டண முடிவு தகர்த்துவிடும். அவர்களுக்குக் கட்டணம் ஒரு பெரிய தடை இல்லை. கட்டணம் செலுத்திய உற்சாகத்தில் இன்னும் அதிகளவில் நிலத்தடி நீரைச் சுரண்டுவார்கள். சரி நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கு என்னென்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன எனப் பார்த்தால் அதுவும் ஒன்றுமில்லை. குளங்கள், ஆறுகள், ஏரிகள் போன்ற நீர்நிலைகள் தூர்வாரப்படாமல் இருக்கின்றன. பெய்கின்ற மழைநீரும் அவற்றில் சேராமல் வெளியேறிவிடுகின்றன. இப்படி இருக்கும்போது நிலத்தடி நீர் எப்படி அதிகரிக்கும்? எந்த நோக்கத்திற்காக இந்த முறை பின்பற்றப்படும் என சொல்லப்படுகிறதோ அந்த நோக்கத்திற்கு முற்றிலும் எதிரான நிலையைத்தான் இது உருவாக்கும். மேலும் தனியார் நிறுவனங்களும் இதில் நுழையும்போது நிலைமை இன்னும் மோசமாகலாம்"; என்கிறார், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர், ஜனகராஜன். பொலிவியா நாட்டின் நான்காவது பெரிய நகரமான கொச்சபம்பா (Cochabamba). தண்ணீருக்கான மிகப்பெரிய போர் நடத்தி வெற்றிகண்ட முதல் நகரம். இலவசமாக பெற்றுக் கொண்டிருந்த தண்ணீரை, தனியாருக்குத் தாரை வார்த்து காசு கொடுத்து வாங்க வைத்தது அரசாங்கம். இதுதவிர, ஆற்று நீர், மழை நீரைச் சேமித்து பயன்படுத்தக் கூடாது எனத் தனியார் நிறுவனம் தடை விதித்தது. இதனால் கொதிப்படைந்த மக்கள் தண்ணீருக்கு எதிரான முதல் போரைத் துவங்கினர். ஆறு ஆண்டுகள் நடந்த போராட்டத்தின் காரணமாக அந்தத் தனியார் நிறுவனம் பின்வாங்கியது. அந்த நிறுவனம் வேறு ஏதுமல்ல. கடந்த ஆண்டு திருப்பூருக்கு வந்த பெக்டல் நிறுவனம்தான். இதுபோலவே கோவைக்கு வந்திருக்கும் சூயஸ் நிறுவனமும், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னர்ஸ்பர்க் நகரில் இரண்டு ஆண்டுகளில் ஒரு கோடி குடிநீர் இணைப்புகளை துண்டித்தது. மேலை நாடுகளே தண்ணீருக்கு மக்களிடம் பணம் வசூலிக்கும் முறையைத் தவிர்த்து வருகிறது. இந்நிலையில் மக்களிடம் பணம் வசூலிக்கும் திட்டத்தை கைவிட்டு, நிலத்தடி நீர்வளத்தை அதிகரிக்க மாற்று வழியினை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். நிலத்தடி நீர் தனியாருக்கானது அல்ல என்பதை இந்திய அரசு உணரப்போவது எப்போது? கார்ப்பரேட் நிறுவனத்துக்கு உரிமம் கொடுத்து மக்களிடம் பணம் வசூலிக்கும் மத்திய அரசு, பொலிவியாவின் கட்டணக் கொள்ளைக்கு நடந்த தண்ணீர் போரை நினைவில் கொள்ள வேண்டும்....
அதிகம் பகிருங்கள்...நண்பர்களே...
 

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர், ஈஸ்வரி டியர்
இப்படியே போனா நாடு
வெளங்கிரும் போங்க

தலையாட்டி பொம்மையான
மன்மோகன் சிங்குக்கு எதுக்கு
இந்த வேண்டாத வேலை?

ஒண்ணு மட்டும் நிச்சயமாகத்
தெரியுது
நம்ம நாட்டு அரசியல்வாதிகள்
கார்ப்பொரேட் நிறுவனத்துக்கு
காவடித் தூக்கி, இந்தியாவை
உலக வரைபடத்திலிருந்தே
தூக்கிடப் போறாங்க-ன்னு
நல்லாத் தெரிஞ்சு போச்சு,
ஈஸ்வரி டியர்
 
Last edited:

Eswari kasi

Well-Known Member
சூப்பர், ஈஸ்வரி டியர்
இப்படியே போனா நாடு
வெளங்கிரும் போங்க

தலையாட்டி பொம்மையான
மன்மோகன் சிங்குக்கு எதுக்கு
இந்த வேண்டாத வேலை?

ஒண்ணு மட்டும் நிச்சயமாகத்
தெரியுது
நம்ம நாட்டு அரசியல்வாதிகள்
கார்ப்பொரேட் நிறுவனத்துக்கு
காவடித் தூக்கி, இந்தியாவை
உலக வரைபடத்திலிருந்தே
தூக்கிடப் போறாங்க-ன்னு
நல்லாத் தெரிஞ்சு போச்சு
Epadiyellam chattam kondu vantha thavichavaikku thani yaravathu kodupangala,
Yerkanave bottle la thanni vithu yarum yarukkum thanni kodukkamatunga,
Air dhan vithu panam panunanga aduthu thani matum dhane balance athukkum appu vachutanga.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top