நித்தமும் தவிக்கிறேன் நீயின்றி 16

Bharathi Nandhu

Writers Team
Tamil Novel Writer
#1
நித்தமும் தவிக்கிறேன் நீயின்றி

அத்தியாயம் 16

விஷ்ணுவின் வாழ்க்கையிலும் மயூரிகாவின் வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நடந்த அனைத்து சம்பவங்கள் தெரிந்ததும், இருவரின் நிலையை நினைத்தும் வருந்தினர்..

கதிர் " மயூரிகா கிட்ட உண்மைய சொல்லுங்க..!! ", அவர்களை வற்புறுத்த,

வள்ளி , " நாங்களும் சொல்ல தான் ப்பா ட்ரை பண்றோம்.. இவ்வளவு நாள் மறைச்ச குற்றவுணர்வு மயூரிகா முகத்தை பார்க்கும்போது அதிகமாகிட்டே இருக்கு.. அதைத் தாண்டி ஹதிதிய வேணாம்னு சொல்லிடுவாளோன்னு ஒரு பயம் " தாங்கள் நினைத்ததை கூறினார்..

விஷ்ணு, " நீங்க மட்டும் இல்ல யாரும் நினைச்சாலும் ஹதிதிய மயூரிகா கிட்ட இருந்து பிரிக்க முடியாது " அவளைப்பற்றி தெரிந்து பேசினான்..

கந்தசாமி, " உனக்காகவே இரண்டாவது வாய்ப்பு கிடைச்சிருக்கு..அதை வீணடித்து உங்களோட ஒட்டு மொத்த வாழ்க்கையையும் கெடுத்துக்காத.. இது மயூரி சம்பந்தப்பட்டது மட்டும் இல்ல நாங்க எல்லாருமே அதுல இருக்கோம்.. புரிஞ்சி நடந்துக்கோ " ஆதரவாக தோள்களைப் பற்றி அறிவுரை கூற அவனின் பார்வை அருகிலிருந்த வள்ளியின் மீது வந்து நின்றது..

" நீ இந்த அளவுக்கு லவ் பண்ணி இருக்கும்பொழுது நான் எப்படி உங்கள பிரிச்சி துரோகம் பண்ண நினைப்பேன்..நான் பேசுனதுக்கு என்ன மன்னிச்சிடு பா " தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்டவரை வேண்டாம் என்று தடுத்து,

" உங்க பார்வையில நீங்க சரியா தான் யோசிச்சி இருக்கீங்க.. என்னோட சிந்தனையும் அதுதான் மயூரிகாவுக்கு என்ன விட ஒரு நல்ல வாழ்க்கை துணை கிடைக்கனும் " அவளை விட்டுக் கொடுக்கும் வகையில் பேச,

" டேய் எல்லை மீறி போய்ட்டு இருக்க டா.. இன்னொரு டைம் இந்த வார்த்தை நீ சொன்ன, நானே போய் நடந்த எல்லாத்தையும் சொல்லி விடுவேன்..எனக்கு நீங்க சேரனும் அது எப்படி இருந்தாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை " கதிர் மிரட்ட அவன்,

" நீ சொன்னதுக்கு அப்புறம் நீ சொல்றதெல்லாம் பொய்னு நான் சொல்லிடுவேன் " புன்னகையுடன் பேச சரியான நேரத்தில் வந்த மயூரி,

" என்ன டிஸ்கஷன் போயிட்டு இருக்கு.. நாலு பேரும் ஒண்ணா இருக்கீங்க..?? "

கந்தசாமி " இவங்க ரெண்டு பேருக்குமே ஒரு போட்டி..யார் சொல்வதை நீ நம்புவேன்னே..?? " என்று சமாளித்தார்..

அவன் கதிரையும் விஷ்ணுவையும் மாறி மாறி பார்க்க, " அவங்க சொல்ற விஷயத்தை பொறுத்து இருக்கு.. சரி சொல்லுங்க என்ன சொல்ல வந்தீங்க..?? " அவள் கேட்டதும் அனைவரும் திகைத்தனர்..

வள்ளி, " என்னமா சீக்கிரமாவே கம்பெனியிலிருந்து வந்துட்ட..?? " பேச்சின் மூலம் அவளை திசை திருப்ப,

" ரொம்ப தலைவலி ஆன்டி.. அதான் மேனேஜர் கிட்ட சொல்லிட்டு வந்துட்டேன்.." கூறி விட்டு ஓய்வெடுக்க சென்றவள் நின்று,

" விஷ்ணு என்ன உங்களுக்கு முன்னாடியே தெரியுமா..?? உங்க கூட ரொம்ப நாள் பழகின மாதிரி இருக்கு.. எனக்கும் அப்போ அப்போ ஞாபகம் வருது..அதை யோசிக்கும் போது தலைவலி அதிகமா வரும்..சோ நான் அதை அப்படியே ஸ்டாப் பண்ணிடுவேன் " சொல்லிவிட்டு அவனின் பதிலை எதிர்பார்க்க,

" இல்..." சொல்லும் முன் அவளே,

" அப்படி ஏதும் இருந்தா நீங்க என்ன பார்க்கும்போது சொல்லி இருப்பீங்க.. என்கிட்ட தான் எதுவும் மறைக்க மாட்டீங்களே..!! " கேள்வியை கேட்டு பதிலும் அவளே கொடுத்தாள்..

நேராக அவளது அறைக்குச் சென்றவள், சிறிது நேரம் படுக்க, தூக்கம் வராமல் எழுந்தவள் எப்பொழுதும் போல ஜன்னலின் அருகே நின்றாள்‌.. அவளது மனதுக்குள் இருந்த நெருடல் அதிகமானது.. ஏனோ விஷ்ணுவிடம் அதிக எதிர்பார்ப்புடன் அவள் கேள்வியை கேட்க அவனோ இல்லை என்று கூற வந்ததை தெரிந்ததும் மனம் வருந்தியது.. மீண்டும் அந்த பேச்சை தொடர விடாமல் இவளே பதிலும் தந்து முற்றுப்புள்ளி வைத்தாள்..அதே நேரம் விஷ்ணுவிற்கும் அவளிடம் பொய் சொல்லியதற்காக மனம் உறுத்தியது..சில மணி நேரத்திற்கு பின்,

விஷ்ணு, " ஹதிதிய போய்ட்டு கூட்டிட்டு வாடா "

கதிர், " உன் பொண்ண கூட்டிட்டு வர நீ தான் டா போகனும் " சலித்துக் கொண்டவனை ,

" எனக்கு சரியானதும் உன்னோட ஹெல்ப் வேணாம்.. இப்ப போய் கூட்டிட்டு வாடா " என்றதும் அவனை மேலும் கீழும் பார்த்து,

" நீ என்கிட்ட உதவி கேட்கற சோ அதை கொஞ்சம் பவ்வியமாக கேளு..அப்போ தான் போவேன் " பிடிவாதமாக நிற்க,

" டேய் கதிர் நீ.."

" டேய்யா..சார்னு கூப்பிடு டா வெண்ண " அவனைத் திட்டியதும் அவனும் வேறு வழி இல்லாமல்,

" உங்களோட பொன்னான நேரத்துல இன்னிக்கு அரைமணி நேரம் மட்டும் செலவு பண்ணி ஹதிதிய கூட்டிட்டு வாங்க சார் " அவன் கெஞ்சியதும்,

" சரி சரி அழுகாத..நான் போய் கூட்டிட்டு வரேன் " நக்கலான புன்னகையுடன் அவனை கடந்தான்..

நேராக ஹதிதியின் ஸ்கூலில் முன் நின்றவன் அருகிலும் எதிரிலும் வந்த பெண்களை எல்லாம் சைட் அடித்துக் கொண்டிருந்தான்..

" அடப்பாவி..!! இதுக்காக தான் ஹதிதிய ஸ்கூலுக்கு கூட்டிட்டு வரேன்னு சொல்லிட்டு இருக்கான்னா..ப்ப்ப்பா செமயா இருக்காங்களே " ஹதிதிய தேடுவதை விட்டுவிட்டு இந்த வேலையை செய்து கொண்டிருந்தான்..

" அங்கிள்.. என்னுடைய ஹீரோ எங்க..?? " கதிர் தன்னை கவனிக்காமல் மற்றவர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பதை கண்டதும் ஹதிதி கோபமாக அவனிடம் கேட்டாள்..

" உன் ஹுரோவ விட ரெண்டு வயசு கம்மி மா நானு..என்ன போய் அங்கிள்னு சொல்ற " பொய்யாக முறைத்தவன்,

" என்னோட ஹீரோ என்ன மட்டும்தான் தேடுவாரு.. ஆனா நீங்க அப்படி இல்லையே " என்று ஹதிதி முகத்தை திருப்பிக் கொள்ள,

" அச்சோ இனிமேல் நானும் உன்ன மட்டும் தேடறேன்..அங்கிள் மட்டும் கூப்பிடாத மா "

" அங்கிள் அங்கிள் " பிடிவாதமாக கத்த , அவனை கடந்து சென்ற இளம்பெண் அவனைப்பார்த்து நக்கலாக சிரித்தாள்..

' ஐயோ இந்த பொண்ணால நம்ம மானம் போச்சே ' மனதினுள் புலம்பி விட்டு அவளிடம்,

" இரு இரு.. நீங்க சொல்ற பேச்ச கேட்கிறது இல்லைன்னு உங்க அம்மா கிட்ட சொல்றேன்.." பொய்யாக மிரட்ட,

" ம்கும்.. நீங்க பொய் சொன்னாலும் அதெல்லாம் ஹீரோ பாத்துப்பாரு " பெருமையாக கூறியவளை கண்டு இவனும் புன்னகைத்தான்..

" உங்க ஹீரோ உங்க கூடவே இருக்கனுமா..?? "

" ஆமா..அவர விட்டு நானும் போக மாட்டேன்..என்னையும் விட்டு போக மாட்டார் " கைகளால் அவனை பெருமையாகக் வர்ணித்து சொல்லவும் அதில் கதிரும் அந்த குழந்தையின் முகபாவனைகளை கண்டு மயங்கினான்..

இருவரும் சமாதானம் ஆகி பேசிக்கொண்டே போக,

" அப்போ நான் உங்கள எப்படி கூப்பிடறது..?? " யோசனையாக கேட்க,

" ஹேண்ட்சம்னு கூப்பிடு " என்றவனை,

" நான் ஹீரோ கிட்ட கேட்டுட்டு உங்கள கூப்பிடுறேன் "

' அம்மாவையும் பொண்ணையும் கரெக்ட் பண்ணி வச்சிட்டு நல்லவன் மாதிரியே இவங்க வேணாம்னு நடிக்கிறார் ' மனதினுள் அவனைத் திட்டிக்கொண்டே ஹதிதியிடம் பேசினான்..

" அங்கிள் அங்கிள் ஸ்டாப் பண்ணுங்க.. என்னோட மிஸ் அங்க போயிட்டு இருக்காங்க "

" இப்பதானே சொன்னேன் அப்படி கூப்பிடாதனு " பாவமாக சொல்ல,

" சரி சரி சொல்லல.. மிஸ் போறாங்க அவங்க பக்கத்துல நிறுத்துங்க "

" இப்ப மட்டும் அவங்க கிட்ட நீ பேசினா ஹோம் ஒர்க் நிறைய கொடுப்பாங்க " அவளை பயமுறுத்த,

" பாத்தீங்களா‌..!! இதுவே என்னோட ஹீரோவா இருந்தா நிறுத்தி இருப்பாரு " மீண்டும் அவன் புகழ் பாட,

" என்ன நீ ரொம்ப அசிங்க படுத்துற..இரு உங்க மிஸ் கிட்ட நிறைய போட்டுக் கொடுக்கறேன் " என்றதும் அவனுக்கு பழிப்பு காட்டினாள்..

கருமேகங்கள் போன்ற கருமை கொண்ட அடர்த்தியான கூந்தல் இடைக்கு மேல் வரை நீண்டிருக்க, அதன் நடுவே சிகப்பு நிறத்திலான ரோஜா பூவை வைத்திருந்தாள்.. அவளின் நடை அவனுக்கு மிகவும் பரிச்சயப்பட்டது போல் தோன்ற யோசனையுடன் அவளுக்கு பின் வண்டியை நிறுத்தி ஹாரன் அடிக்க அவள் திரும்பவில்லை..

ஹதிதி, " நிஹாரிகா மிஸ் " சத்தமாக கூப்பிட்டதும் அவன் மிரள, அதேநேரம் இவளின் சத்தம் கேட்டு அவளுடைய ஆசிரியரும் திரும்ப கதிரை கண்டதும் அசையாமல் நின்றாள்..

சில நொடிகளில் தன்னை மீட்டெடுத்து முன்னேறி நடந்தாள்.. கதிரும் சுயநினைவு வந்து அவளை பின் தொடர்ந்தான்..

" இப்போ எதுக்கு என் பின்னாடி வரீங்க..?? " அவனுக்கு நன்கு கேட்கும்படி கத்த,

" சாரி மிஸ்..நான் தான் உங்கள கூப்பிடச் சொன்னேன் " அவள் சொன்னதில் பயந்து வருத்தமாக கூற,

" அச்சோ சாரி டா..எனக்கு தெரியாது " ஹதிதியின் முன்னாள் , தான் கூச்சலிட்டதின் விளைவாக தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டாள்..

கதிர், " நிகா நான்.. " பேச
வந்தவனை எரிக்கும் பார்வையில் பார்த்ததும் அவன் அமைதியாகிவிட்டான்..

ஹதிதி, " அங்கிள் எங்க மிஸ்ஸ உங்களுக்கு முன்னாடியே தெரியுமா..?? " அவன் அவளின் பெயர் சொன்னதில் புரிந்து கேட்ட ஹதிதியிடம்,

" இல்லடா.. இவங்க யாருன்னு எனக்கு தெரியாது " என்றாள் சற்றும் யோசிக்காமல்..

அவள் சொல்லியதன் விளைவாக கதிரின் கண்கள் கண்ணீரால் நனைந்தது.. அதனை முழுவதுமாக வெளிப்படுத்தாமல் அவனுள் மறைக்க,

" ஹதிதி பைக்ல உட்கார்ந்து இருடா..ரெண்டு நிமிஷம் அவங்க கிட்ட பேசிட்டு வரேன் " என்று விடாப்பிடியாக அவளின் கைகளை பற்றி இழுத்துக்கொண்டு சில அடி தூரம் தள்ளி நின்றான்..

" முதல்ல என் கைய விடுங்க " ஹதிதியிடம் இருந்து நகர்ந்தும் விடாமல் கரங்களைப் பற்றியவனிடம் எரிந்து விழுக, அவளிடம் விவாதம் செய்யாமல் இறுக அணைத்துக் கொண்டான்..
அதில் அவளும் ஒருவித தவிப்போடு இருந்தாள்.. மெல்ல அவளை விடுவித்து,

" சென்னையில் இருந்து எப்போ டி நீ இங்க வந்த..?? " மூக்கோடு நுனி உரசி பேசியவனை, வேகமாக தள்ளி விட்டாள்..

" ச்சே.. என்னோட வாழ்க்கை இப்பதான் நிம்மதியா போயிட்டு இருக்கு..அதுக்குள்ள நீ வந்துட்டியா..?? " அவனை உதாசீனமாக பார்க்க,

" ஏன் டி இப்படி பேசுற..?? " என்று நெருங்க முயன்றவனை கைகளால் தடுக்க,

" உன்ன காதலிச்சனால தான்.. என்ன பெத்தவங்களை விட்டு ரெண்டு வருஷம் தனியாய் இருந்தேன்.. நீ பண்ண வரைக்கும் போதும்..
இன்னும் ஏன் என் முன்னாடி வந்து நிக்கிற..?? " அவனை இழிவுபடுத்திப் பேசியவளை கோபத்துடன் பின்னந்தலையில் பிடித்து,

" என்ன டி விட்டா ரொம்ப பேசுற..!! உன்னால தான் இப்போ நான் ஃபேமிலிய விட்டு விலகி இருக்கேன்.."

" அதுல என்னோட தப்பு எதுவும் இல்லை..என்னோட வாழ்க்கையில இப்போ நான் வேற ஒருத்தர் தான் லவ் பண்றேன்..ஒழுங்கு மரியாதையா என் மேல இருந்து கையை எடு " அடி குரலில் சீர, அவள் சொல்லியதில் அதிர்ந்தாலும் அதனை வெளிக்காட்டாமல்,

" சந்தோஷமா இரு " என்று அவளை விடுவித்து திரும்பிப் பார்க்காமல் சென்றான்..

சோர்வுடன் வந்தவனை விஷ்ணு கவனித்து அவனிடம் தனியாகப் பேச முயல,

" கதிர் என்ன ஆச்சி டா..?? " அக்கறையாக விசாரிக்க, கூடவே கந்தசாமியும் வள்ளியும் வந்தனர்..

" நிஹாரிகா கிடைச்சிட்டா " தாழ்வான குரலில் கூறியதும்,

" எப்போ டா பார்த்த..!!எங்க..?? டேய் ஒரு நிமிஷம் என்ன பெயர் சொன்ன..?? " யோசனையாக அவன் முகம் மாற,

" ஹதிதியோட கிளாஸ் மிஸ் " என்றான் சோர்வாக..

" அவங்க கிட்ட பேசுனீயா..!! ரொம்ப சாஃப்ட் நேச்சர் டா " என்றதும் கடுப்பாகி,

" போடா எம் " என்று திட்டினான்..

" எம் னா..?? " புரியாமல் முழிக்க,

" ஹேர்ர்டா "

" அதுக்கு ஹெச் தானே வரும் "

" டேய் தமிழ் வெர்சன் டா " எரிச்சலாக கூறியதும் அவனுக்குப் புரிந்தது..

" நீ இவ்வளவு கோபப்படுவத பார்த்தா அங்க நல்லது நடந்த மாதிரி தெரியலையே..?? " என்று இன்னும் அவனை ஏற்றி விட,

" ஆமா டா..இப்ப யாரையோ லவ் பண்றலாம்.. அவளுக்காக நாய் மாதிரி ரெண்டு வருஷம் சென்னையில தேடிட்டு அவளுக்காக காத்துட்டு இருக்கேன்.." பொரிந்து தள்ளியவனை அமைதிப் படுத்தும் விதமாக,

" எப்போ டா கடைசியா பார்த்தீங்க..!!உங்களுக்குள்ள என்ன பிரச்சனை..?? "

" என் கூட ஒருத்தன் பொறந்தானே அவனால தான் என் வாழ்க்கை முழுக்க பிரச்சினை.."

இம்முறை வள்ளி, " ஏன் பா..?? "

" நான்தான் சொன்னேனே.. நான் லவ் பண்ற பொண்ணை கடத்தி வச்சிட்டு என்ன ஃபாரின் போகச் சொல்லி கட்டாயப் படுத்தினான்.. நான் போகலைன்னா அவள உயிரோட எரிச்சிடுவேன்னு சொல்லி மிரட்டினான்.." மீண்டும் தன் வாழ்வில் நடந்ததை கூற, இப்பொழுது அவனது மூளையில் சிறு பொறி தட்டியதும்,

கதிர்" மயூரிகாவை எங்க வச்சி கடத்துனீங்க..?? " ஆர்வமாக கேட்டவனிடம்,

" கஃபே காபி ஷாப் " கடத்திய இடத்தை சொல்லியதும்,

கதிர் " உங்களை யாரு கடத்த சொன்னாங்க..?? "

" எனக்கு க்ளியரா தெரியல டா..பட் கடத்த சொன்னது பிஸ்னஸ்மேன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியும்.."

" டேய் நல்லா யோசிச்சு பாருடா..!! அவங்க ஏதாவது குழு கொடுத்து இருப்பாங்க..ஐ மீன் அவங்க பேசும் போது எதார்த்தமா ஏதாவது ஒரு வார்த்தை வந்து இருக்கும் " என்றதும் விஷ்ணு கண்களை மூடி அந்நாளை நினைவு கொண்டு வர முயற்சி சரியாக,

" ஏன்னா அவரு சொல்ற பொண்ண கடத்தின அப்பறம் அந்த ஊர்லயே நல்ல இடமாக வாங்கி போடுங்க‌.. வெயில் காலத்துக்கு கொடைக்கானல் சூப்பரா இருக்கும் " நாராயணனிடம் ரமேஷ் அறிவுறுத்தியதை நினைவு கூர்ந்தான்..

அதை கதிரிடம் சொல்ல இம்முறை விஷ்ணுவும் தடுமாற்றம் அடைந்தான்..

கதிர், " அப்போ நீ கடத்த நினைச்சது நிஹாரிகா..பட் தப்பா மயூரிய கடத்தி இருக்கீங்க..!! " என்று நடந்ததை விளக்கினான்..

விஷ்ணு, " ஆமா டா..நீ சொல்றது சரிதான்..நாங்க மாத்தி கடத்தி இருக்கோம்னு இரண்டு நாள் முன்னாடி தான் தெரிந்தது " அவனும் நிகழ்ந்ததை கூறினான்..

நிஹாரிகா எப்படி தப்பித்தாள் என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்..
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement