நாளை என்றும் நம் கையில் இல்லை!!!

Advertisement

Anuya

Member




நாளை என்றும் நம்கையில்
இல்லை!!!

தனது இடது கையில் டீ கிளாஸுடனும், வலது கையில் இருக்கும் மொபைலில் இருந்து அலுவலகம் வர தாமதம் ஆகும் என தனது டீம் லீடருக்கு மெசேஜ் செய்துகொண்டிருந்த நிரஞ்சனின் விழிகள் நொடிக்கொரு தரம் தனக்கு முன்னால் இருக்கும் கட்டிடத்தின் வயிலையே பார்த்துக்கொண்டிருந்தது எப்பொழுதடா அவள் வெளியில் வருவாள் என்று.


அவன் எதிர்பார்ப்பை பொய் ஆக்காமல் அவளும் வந்தாள். அவள் மதியுகா நிரஞ்சனின் பாப்பு அவனுடைய ஆருயிர் தோழி. வீடியோ ஜாக்கி (VJ) ஆக வேண்டும் என்பது தான் அவளது கனவு அதற்கான ஆடிஷனிற்கு தான் இன்று வந்து இருக்கிறாள் அவளுடைய நிரு கூட.


தன் எதிரே அமர்ந்திருந்த அவளுடைய சோர்ந்த களையிலந்த முகத்தை கண்டதுமே நிருவிற்கு தெரிந்துவிட்டது இந்த ஆடிஷனிலும் அவள் வழக்கம் போல் தேர்வாகவில்லை என்று .

"ஏய், பாப்பு விடுடா... இது இல்லையினா என்ன வேற சேனல்.சேனலுக்கா இங்க பஞ்சம் நீ இப்படி முகத்தை வைக்காதே.. பார்க்க சகிக்கல" என்று தன் பாப்புவை சகஜமாக்கும் பொருட்டு வம்பிழுத்தான்.

"போடா குரங்கு ... எத்தனை ஆடிஷன் போனாலும் இப்படி தான் நடக்கும். ஏனா... அவங்க யாருமே என்னோட திறமைய பார்க்குறது இல்லை. நா.... நான் பார்க்க எப்படி இருக்கேன் அத தான் அவங்க ப்ரஸ்ட் பார்குறாங்க. நான் எப்படி பேசுறேன் மத்ததெல்லாம் அப்பறம் தான்" என கலங்கிய குரலில் கூறியவள் மீண்டும்

" நான் இப்படி குள்ளமா, குண்டா , இந்த கண்ணு இப்படி , பல்லு இப்படி இருக்குறதுக்கு நான் காரமில்லை நிரு.... இதை எதையுமே நான் மாத்த முடியாது. எ... என்ன கடவுள் இப்படி படைச்சத்திற்கு நான் என்ன பண்ண முடியும் சொல்லு " என தேம்பியவளை என்ன சொல்லி சமன் படுத்துவது என்றே நிருவிற்கு புரியவில்லை.

"டேய் பாப்பு... முயற்சி செய் பலனை எதி்பாராதே கேள்வி பட்டது இல்லையா நீ... உனக்கு என்று இருப்பதை யாராலும் மாற்ற முடியாது சரியா, எதற்கும் பீல் பண்ணாமல் வீட்ட போ... அம்மா அப்பா முன்னாடி அழுகாதே அவங்களும் வறுத்த படுவாங்க... வா வந்து வண்டில ஏறு வீட்ல விடுறேன்" என்று கூறி தனது பைக் கிளப்பினான்.

பைக் வீட்டின் முன் நின்றதும் இறங்கியவள் அவனிடம் திரும்பி " ஆனா ஒன்னு நிரு... உண்மையான திறமை மறுக்கபடும் போது மரண வேதனையா இருக்கு டா" என்றவள் தனது கலங்கிய விழிகளை அவனிடம் காட்டாமல் வீட்டை நோக்கி சென்றாள். அவள் இவ்வளவு வருந்தியும் ஏதும் செய்யாமல் இருந்தால் தான் என்ன உயிர் நண்பன் என்று எண்ணியவன் சில பல போன் கால் செய்துவிட்டு பாப்புவின் வீட்டிற்கு சென்றான்.

**************

தனக்கு எதிரே அமர்ந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவன் மீது தலையணையை விசி விட்டு " என்ன டா நிரு லூசு... இப்படி பார்த்துகிட்டே இருந்தா என்ன அர்த்தம். எதுவோ சொல்ல தானே வந்து இருக்க அதை சொல்லு முதல்ல" என்றவளை பார்த்து சிரித்துகொண்டே

"பாப்பு .... நான் ஒன்னு கேட்பேன் உனக்கு என்ன தோணுதோ அதை சொல்லுடா" என்றான்.

"ம்...என்ன இப்படி எல்லாம் பில்டப் பண்ணுற சரியில்லையே.."

"பாப்பு உனக்கு VJ தான் ‌ஆகனுமா... ஏன் நீ RJ ஆக முயற்சிக்க கூடாது" என்றவனை நோக்கி

" நிரு... செம ஐடியா டா. எனக்கு இது தோணவே இல்லை பார்த்தியா. வொய் நாட் RJ ட்ரை பண்ணக்கூடாது... பண்ணலாமே" என்று துள்ளியவளை கண்டு சிரித்தவாறே

"ஓகே டா... அப்போ நீ நாளைக்கு மார்னிங் 10'o clock ரெடி ஆகி இரு ஆடிஷன் இருக்கு பாப்பு நான் கிளம்புறேன் டா. ஆல் தி பெஸ்ட் " என்று கிலம்பியவனை அனுப்பிவிட்டு வந்தவளுக்கு அவ்வளவு ஆனந்தம்.
தனக்கு என்ன வேண்டும் என்பதை எப்பொழுதுமே சரியாக தேர்ந்தெடுக்கும் நண்பனை எண்ணி பெருமிதம் கொண்டவள் நாளைக்கி தேவையானவற்றை எடுத்து வைக்க ஆயுத்தமானாள்.

*****************

ஆடிஷன் நடந்துகொண்டிருக்கும் அந்த ஸ்டுடியோவிற்கு வெளியில் உள்ள வெயிட்டிங் ஹாலில் அமர்ந்திருந்த நிரஞ்சனின் எண்ணம் முழுதும் அவனது பாப்புவை பற்றியது தான். இதோ உள்ளே ஆடிஷன் நடந்துகொண்டிருக்கிறது அதில் அவள் தேர்வு செய்யப்படுவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது தான். ஆனால் ஒருவேளை தேர்வாகாவிட்டால் அவளது வேதனையை இனியும் தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று எண்ணிக் கொண்டிருகையிலையே கதவை திறந்துகொண்டு வந்தவளை பார்த்து

"என்னடா இது இப்பவும் முகம் சரியில்லையே ... ஒருவேளை இதுவும் உத்திக்கிச்சா" என்று எண்ணியவன்
"விடுடா இது இல்லைனா இன்னும் ஒன்னு" என்று வழக்கம் போல சமாதானம் முயற்சியில் இறங்க‌

"ஏய்... நிரு குட்டி செலக்ட் ஆகிட்டேன் டா... கொஞ்சம் நாள் ஒரு ஷோவில் வேற ஒரு RJ கூட‌ சேர்ந்து ஷோ பண்ணனும் அது டிரெய்னிங் பீரியட். அதுக்கு அப்பறம் எனக்கே எனக்கு ஒரு ஷோ செமையா இருக்கும்ல" என்று கண்களில் கனவு மின்ன கூறியவளை கண்டு தானும் மகிழ்ந்து

"ரொம்ப ரொம்ப ரொம்ம்ம்ம்ப... சந்தோசம் டா பாப்பு அப்பா அம்மாவுக்கு உடனே சொல்லுறேன் என்று தனது செல்போனை எடுத்தவனை நோக்கி

"அப்படியே எப்எம் கேட்க சொல்லு நண்பா... அவங்க பொண்ணு இப்போ பேச போறா" என்றவளை புரியாமல் பார்த்தவாறே

" என்ன சொல்ற அடுத்த வாரம் தானே ஷோ " என்றான்.
"ஹாஹா ... ஆமாம் டா.. பட் இங்க 'ஹலோ நண்பா' ஷோவில் வாரம் ஒரு ஆடியன்ஸ பேச வைபாங்கலாம். இன்னைக்கு என்னையே பேச சொல்லி இருக்காங்க... அதுவும் லைவ் ஷோ... எனக்கு எக்ஸைட் ஆகவும் அதே சமயம் டென்ஷன் ஆகவும் இருக்கு" என்றாள்.

"ஏய்.. இது டபுள் டமாகா ஹேப்பி நியூஸ் டா பேபி... ஆல் த பெஸ்ட் பேபி நல்லா பண்ணு" என்று அணைத்து வாழ்த்தி அனுப்பினான்.

ஹாய் கைஸ் ... எப்பவும் போல தான் நம்ம ஷோவில் ஆடியன்ஸ்ல ஒருவருக்கு நம்ம ஷோவில் பேச ஒரு வாய்ப்பு தருவோம் இல்லையா ... அந்த வகையில் இந்த வாரம் நம்முடன் இணைந்திருக்கிறார் நம்ம சேனலிற்கு புதிதாக அறிமுகமாக இருக்கும் RJ மதியுகா... இனி 'மார்னிங் கலாட்டா' ஷோவில் RJ அருனுடன் இணைந்து ஷோ பண்ணபோறாங்க ...

"வெல்கம் மதி... ஷேர் யுவர் தாட்ஸ் டு அவர் ஆடியன்ஸ்" என்று உற்சாக குரலில் கூறிய தொகுப்பாளினியின் உற்சாகத்தை தானும் பெற்றவளாக

"ஹலோ பிரெண்ட்ஸ், நான் மதியுகா இனி உங்கள் காலை பொழுதுகளில் உங்களுடன் இணைந்து பயணிக்க போகிறேன். அதற்கு முன்னமே உங்களை மீட் பண்ண எனக்கு வாய்ப்பு தந்த ஹலோ நண்பா ஷோவிற்கும் நிஷாவிற்கும் எனது நன்றிகள்" என்று அருகில் அமர்ந்திருக்கும் நிஷாவை பார்த்து புன்னகைத்தவள்

" நம்ம எல்லாருக்குமே ஏதோ ஒரு கனவு நாம் சிறுவர்களாக இருந்தபோது நிச்சயமாக இருந்திருக்கும். அது ஒரு கிரிக்கெட் பிளேயர் ஆகனும், பெரிய சினிமா ஸ்டார் ஆகனும், ரைடர் ஆகனும், டீச்சர் ஆகனும் , ஸ்போர்ட்ஸ் மென் ஆகனும் இன்னும் நிறைய... இப்படி பட்ட நம்ம ஆசைகளை காலப்போக்கில் நம்ம மறந்திடுறோம்... எத்தனை பேர் நம்மளோட பாஷனை(passion) நோக்கி குறைந்தபட்சம் ஒரு அடியாவது எடுத்து வைத்திருப்போம் என்று கொஞ்சம் யோசிச்சு பாருங்கள்... நம்மில் நிறைய பேரோட பதில் இல்லை என்பது தான். நமக்கு வேண்டியது எதுவும் நம்மை தேடி வராது நாம் தான் அதை தேடி போகனும். இருப்பது இந்த ஒரு லைப் மட்டும் தான். அடுத்த பிறவினு ஒன்னு இருக்கானு நமக்கு தெரியாது... அப்படியே இருந்தாலும் அதை புதிதாக வழுவோமே... இந்த வாழ்க்கையை அதில் வழவேண்டாம்.
அதனால நமக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று ஆசை படுறோமோ அதை முயற்சி செய்து பார்ப்போமே.... அந்த முயற்சி வெற்றி பெற்றாலும் பெறவில்லை என்றாலும் நான் முயறிச்சி செய்தேன் என்ற திருப்தியாவது நமக்கு இருக்கும்....
சோ கைஸ்... லிவ் யுவர் லைப் சோ லைவ்லி அண்ட் ஹப்பிலி ஓகே யா..... எதர்காகவும் நம்ம லைப்ல ஒரு இடத்திலையே தேங்கி நிக்காதிங்க ... எது நடந்தாலும் கககபோ னு சொல்லி போய்ட்டே இருக்குங்க .... லைப் ஹாப்பியா இருக்கும் ....
நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது ஹலோ நண்பா நான் உங்கள் RJ மதியுகா... பை பை கைஸ் " என்று விடைபெற்றவள் நிஷாவிடம் ஒரு பாடலை கூறி அதை போடுமாறு கேட்டுக்கொண்டு வெளியில் வந்தவளை ஓடி வந்து அணைத்துக்கொண்டு

" கலக்கிட்ட டா பாப்பு... நீ இப்படியெல்லாம் பேசுவனு எனக்கு இப்போ தான் தெரியுது... உன் வாய்ஸ் அவ்வளவு ஃப்ரெஷ் & எனர்ஜிடிக்கா இருந்தது டா... உனக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கு டா" என்று அவள் உச்சியில் முத்தமிட்டு அணைத்துக்கொன்டவனை தானும் அணைத்தவளின் மனதில் விவரிக்க முடியாத ஒரு மகிழ்ச்சியான உணர்வு....

அவள் பேசியதை கேட்டு கொண்டிருந்த அவளது பெற்றோருக்கும் இனி தங்களது மகள் அவள் பாதையில் ஒளிர்வாள் என்ற நம்பிக்கையுடன் நிம்மதியாக புன்னகையித்தனர். அவர்களின் வீட்டில்ல் உள்ள ரேடியோவில் இருந்து பாடல் ஒளித்துக்கொண்டிருந்தது.

உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்...
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்...
ஓஓஓ!
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்...
ஓஓஓ!
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்...
ஓஓஓ!
கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்...
ஓஓஓ!
மறு பிறவி வேண்டுமா???.....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top