நான் எனது மனது 34

Advertisement

mallika

Administrator
முதல்ல ஒரு பெரிய பெரிய நன்றி என்னோடு துணை நின்ற அத்தனை பேருக்கும் கதை பட்டறை கனவு தொழிற்சாலைக்காக. அதன் 2020 தின் பயணம் இனிதே முடிவடைந்தது. இன்னும் சான்றிதழ் மட்டும் காசோலை அனுப்பும் பணிகள் இருக்கின்றன. அதுவும் இன்னும் ஒரு வாரம் அல்லது பத்து நாட்களில் ஆரம்பித்து விடும். கால தாமதத்திற்கான காரணம் இன்னும் சிலர் அவர்களின் விவரங்களை அனுப்பவில்லை. அதுவே காரணம். விரைவில் எல்லாம் முடிந்துவிடும் என்று நம்புகின்றோம்.

இப்போது இரண்டு மிகப்பெரிய சாரி... ஒன்று இவ்வளவு தாமதமாய் இறுதி எபி கொடுப்பதற்கு. எவ்வளவு நல்ல கதை என்றாலும் இப்படி தாமதமான எபிக்கள் அதன் தாக்கத்தை கெடுத்து தொய்வை கொடுக்கும் என்பது ஒரு எழுத்தாளராய் என்னால் உணர முடியும், அதையும் விட ஒரு வாசகராய் என்ன இப்படி எதுக்கு இவ்வளவு லேட் இதுக்கு இவங்க முடிச்சிட்டு போடலாமே இப்படியும் தோன்றும்...

என்ன என்னால் அப்படி எப்பொழுதும் எழுத முடியாது.. அது என்னுடைய பெரிய பலவீனம். சோ என்னை பொருதருள்வீராக...

மற்றொரு சாரி நான் எடுக்கப் போகும் கட்டாய விடுப்பிற்காக, அதாகப் பட்டது குறைந்த பட்சம் நான்கு மாத கட்டாய விடுப்பில் செல்கிறேன். சைட்டில் இருப்பேன் ஆனால் என்னுடைய கதைகள் கிடையாது, வேறொன்றுமில்லை என்னுடைய முனைவர் பட்டத்திற்கான பணிகள் இன்னும் நான்கு மாதத்திற்குள் நான் முடித்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்குள் இருப்பதால் இப்படி..

நான் இல்லையென்றாலும் நம் எழுத்தாள தோழமைகள் எல்லோரும் இங்கே இருப்பார்கள் வாசகர்களை தங்கள் எழுத்துக்களில் நிச்சயம் கட்டி வைத்திருப்பார்கள்.

நானும் முடிந்த வரை விரைவில் வருகிறேன். நடுவில் படிப்பு போர் அடித்தால் ஒரு எபியும் தருகிறேன். ஆனால் எதுவும் நிச்சயமல்ல...

எப்பொழுதும் போல உங்களின் துணையோடு இந்த விடுப்பையும் விடுப்பின் பொருளையும் நல்லவிதமாய் முடிக்க வேண்டி ...


To,
The Reader friends,


As I am suffering from my PhD works , I humbly request you to Grant me leave for minimum 4 months... Thanking you


இந்த விடுமுறை கதை எழுதுவதற்கு மட்டுமே , தளத்திற்கு அல்ல, எனது PhD மற்றும் வேலை நேரம் போக இங்கேயும் இருப்பேன்... எழுதறதுக்கு லீவ் விட்டாலும் படிக்கறதுக்கு நாம எப்போவுமே லீவ் எடுக்க மாட்டோம் தானுங்களே..


இதோ ரவியும் ஷர்மியும் உங்களுக்காக




நான் எனது மனது 34 1



நான் எனது மனது 34 2



நான் எனது மனது 34 3



:love::love::love::love::love:











 

Joher

Well-Known Member
:love::love::love:

Best wishes மல்லி.......
முடிச்சுட்டு டாக்டர் மல்லிகாவா வாங்க.......
ரீடரா கஷ்டமான விஷயம்....... இருந்தாலும் வெயிட் பண்ணுறோம்.......

As I am suffering from fever :LOL::LOL::LOL: பாவம் இங்கிலிஷ் டீச்சர்ஸ் யாராச்சும் இங்கே இருந்தால் ரொம்ப feel பண்ணுவாங்க...... ஏன்னா அவ்ளோ அடி வாங்கிடுச்சு 'As I am suffering from fever'
********************

நான் எனது மனது எல்லாமே மொத்தமா ஷர்மி ஆக்கிரமிச்சுட்டா :love::love::love:
மஞ்சப்பை ரவியும் insolent ஷர்மியும் made a perfect match......... நிஜமாவே made for each other தான்......
அவனை கொஞ்சமும் கன்சிடர் பண்ணலைன்னு ரவியும் அப்பாவோட பிஸினெஸ்ஸே தன்னால் அழிச்சுடும் னு ஷர்மியும் சேரும்போதே எப்படி இவங்க ரெண்டு சேரப்போறாங்களோ மல்லி கையில் னு எதிர்பார்த்ததைவிட அழகா குடுத்துட்டீங்க மல்லி......
'Behind every successful man, there stands a woman'
ரவியின் இந்த உயரத்துக்கு பின்னால் ஷர்மி மட்டும் தான்......
அவள் அப்படியே இருந்திருந்தால் ரவி வாழ்க்கை எங்கேயோ போயிருக்கும்.......
கல்யாணம் வரை எப்படியோ...... அதற்க்கு பின் அவளுக்கான இடத்தை கொடுத்து அவளே அவளை மாற்றிக்கொண்டதில் ரவிக்கு தான் எல்லாமே......
இந்த ஒன்றே எல்லாத்தையும் செய்யவைக்கும்.......

பாக்ஸர் ரவி வந்தாச்சு :p:p:p ஷர்மி கிழவியா அழகியானு செக் பண்ணி அழகினு கண்டுபிடிச்சுட்டாங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
வரவர ஹாண்ட்ஸம் ஆகிட்டு வரானா :LOL::LOL::LOL:
நல்லது தானே......

சந்தோஷ் கௌசி இன்னொரு பக்கம்.......
கேசவன் விசாலிக்கு இதை விட என்ன வேணும்......
பெரிய குடும்பனாலும் எல்லோரும் மனசை அள்ளிட்டாங்க....... எல்லோரும் அமைதியா இருக்கிற இடத்தில சீதா மாதிரி சலசலப்புக்கு ஒரு ஆள் இல்லைனாலும் நல்லா இருக்காது......
கண்ணே பட்டுடும்......

கதை ரொம்ப நல்ல இருந்துச்சு மல்லி :love::love::love:
பிட் பிட்டா படிக்கிறப்போ சுவராஸ்யம் போகும்னாலும் அதை விடாமல் பிடிச்சி வைக்குறீங்க நீங்க.....
காத்திருப்போம் மல்லி....... முடியுறப்போ வாங்க.......

 
Last edited:

ThangaMalar

Well-Known Member
வாழ்த்துக்கள் மல்லி..
All the best for your PhD.. (y):D
வெற்றிகரமா ஜெயிச்சிட்டு வாங்க..
நாங்க காத்திருப்போம்.. :love:
 

Manimegalai

Well-Known Member
:love::love:
வாழ்த்துகள் மல்லி
உங்க PhD படிப்பு முடிச்சிட்டு வாங்க.
லீவு லெட்டர் பார்த்து மூளை All the best சொல்லுது
மனசு தான் 4 மாசமாமாமா என்று feel ஆகுது.
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு மல்லி:love::love::love:.ஷர்மிய புருசனும்,புள்ளையும் தாங்கறதுல சீதாக்கு என்ன கஷ்டம்:sneaky::sneaky:.இதுக்கு இருக்கற வாய்க்கு புருசன் தாங்க மாட்டார்,புள்ள பேசறதே பெரிய விஷயம்:sneaky::sneaky:.ஷர்மி கூட்டுகுடும்பத்தில் இதை போல பேச்சு சகஜம் என கடந்து போக பழகிட்டா:giggle::giggle:.ஆனா,சீதா இத்தனை வருசம் ஆனாலூம் மாறவே இல்லை:mad::mad:.

எத்தனை பேபி வந்தாலும் ஷர்மி தான் முதல் பேபியா:D:D.எத்தனை வருடங்கள் ஆனாலும் மாறாதது சந்தோஷ்,ஷர்மி மேல் கொண்ட பாசமும்,கௌசியின் அண்ணியிடம் கொண்ட அன்பும்:love::love:.மகளின் வாழ்க்கை எப்படி ஆகுமோ என நினைத்த கேசவனுக்கு:oops::oops:, கூட்டுகுடும்பத்தில் பொறுப்பாக நடந்து கொள்வதை கண்ட மகிழ்ச்சியுடன் கேசவன்:giggle::giggle::giggle:.

நாலு பேருக்கும் நல்ல வாழ்க்கை அமைத்து தர வேண்டும் என்ற எண்ணமே தன் முன்னேற்றத்திற்கு காரணம் என கூறும் ரவி,மஞ்சள் பையுடன் வந்தவன் இன்று பிஸினஸ் உலகில் தனி இடம் பெற இவர்களும் ஒரு காரணம் என கூறுவது அருமை(y)(y).'நீ ரொம்ப ஹாட்டா இருக்கே':p:p.ரவி குட்டி ஷார்ட்ஸ் போடறதும்,ஷர்மி போட வேணாம்னு சொல்றதும் இந்த பிரச்சனை முடியாது;);).

ரவி,ஷர்மியை திட்டம் போட்டு திருமணம் செய்வதும்,திருமணம் முடிந்ததுமே சீதாவின் பேச்சால் அவளை விட்டுச் செல்வது, திருமணத்துக்கு பிறகும் இவர்களின் சண்டைகள்,ஷர்மி,கேசவனிடம் தனக்கென வீடு கேட்பது என இவர்கள் வாழ்க்கை எப்படி இருக்குமோ என எல்லோரும் நினைத்து இருக்க:unsure::unsure:,இன்று இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு,இணை பிரியாமல் குழந்தைகள்
கூட்டுக்குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கின்றனர்:love::love::love:.

அருமையான குடும்பகதை.எளிமையான நடை.இனிமையான,நிறைவான முடிவு.வாழ்த்துக்கள்:love::love:முனைவர் பட்டம் பெற்று வெற்றியுடன் வர வாழ்த்துக்கள் மல்லிகா மணிவண்ணன்(y)(y)(y).
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

வெரி ரொமாண்டிக் எபிசோட்...
ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டு, அவங்க இயல்பு மாறாம ஆனா அதே நேரம் அடுத்தவங்களுக்கு விட்டு கொடுத்தும் இருக்காங்க....


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top