நான் இனி நீ - லாவா

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நான் இனி நீ எபிலாக்

அந்த ரிசார்ட்டில் நீல நிற விளக்கொளியில் கரு நிற நீச்சல் உடை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் அன்று போல் இன்றும் மிதந்த படி இருந்தாள் அனுராகா.

அவளை பார்த்த தீபன் சக்ரவர்த்திக்கோ முதல் முறை அவளை இந்த நீச்சல் குளத்தில் நீந்திய படி இருக்கையில் தான் பார்த்தது எல்லாம் நியாபகம் வந்தது.

அப்போது ஒரு மெல்லிய கரம் "டாட் " என்று அவன் காலை கட்டி தன் பிஞ்சு கரங்களுக்குள் அடக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான்.

அது வேறு யாரும் இல்லை தீபன் சக்ரவர்த்தி அனுராகாவின் ஐந்து வயது தவபுதல்வன் தீரன்.

"ஹே தீரா " என்று அவனை கைகளில் ஏந்தி கொண்டு அந்த நீச்சல் குளத்தை நோக்கி நடந்தான் தீபன் சக்ரவர்த்தி.

"தீப்ஸ் கம்மான் " என்று அனுராகா அழைக்க " ராகா கம் வி வில் கோ " என்றான்.

"நோ தீப்ஸ் இன்னும் கொஞ்ச நேரம் கம்மான் தீரா " என்று மகனை அழைக்க அவனும் தந்தையின் கையில் இருந்து தாயுடன் தாவினான்.

"மாம் ஹோ ஹுரே.." என்று மழலை மொழியில் தன் சந்தோஷத்தை கூச்சலிட "ராகா தீரா கெட் அப் நைட் டைம் உடம்புக்கு ஒத்துக்காது கம் " என்று இருவரையும் எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தான்.

இருவரும் ஒரே போல் " நோ " என்று சொல்ல தீபன் அவர்களை முறைக்க இருவரும் சிறிது பிடிவாதம் பிடித்து அவர்கள் விளையாடிய பின்னே அவனுடன் எழுந்து வந்தார்கள் முகத்தை உரென்று வைத்து கொண்டு அதை பார்த்து தீபன்க்கு சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டு வெளியில் கண்டிப்பது போல் பாவனை செய்தான்.

அப்போது தீபன்க்கு அழைப்பு வந்தது அதை எடுத்து " சொல்லு மிதுன் " என்றான். "எங்க டா இருக்க அப்பா உன்கிட்ட பேசனும்னு சொல்றாரு " என்றான்.

"நாளைக்கு மார்னிங் அங்க இருப்பேன் மிதுன் , நா அப்பா கிட்ட பேசிக்கிறேன் " என்றான்.

அவர்களுக்கு ஒதுக்கிய அறைக்கு செல்ல தீரன் அலைச்சலில் உறங்கி விட அனுராகா பால்கனியில் இருக்க அவளை பின்னிருந்து அணைத்தவன் " ராகா " என்று அழைக்க " தீப்ஸ் உன்னால எப்படி எல்லாத்தையும் மறக்க முடிஞ்சது " என்று கேக்க அவள் எதை கேக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது.

"மிதுன் கோமாலே இருந்துருந்தா என்னால் நிச்சயம் இவ்வளவு ஹப்பிய இருக்க முடியாது ஏதோ ஒரு இடத்துல மனசுல உறுத்தல் இருந்துகிட்டே இருக்கும் , அதே போல் தான் அப்பா அம்மாக்கும் மிதுன் பத்தி கவலையிலே இருந்துருப்பாங்க ஆன இப்போ அவனுக்கு மெமோரி லாஸ் ஆனதை நெனச்சு ஒரு சைட் கஷ்டமா இருந்தாலும் இப்படி இருக்கது பெட்டர்னு பீல் இருக்கு " என்றான்.

ஆம் மிதுன் கோமாவில் இருந்து எழுந்த போது அவனுக்கு பழைய விஷயங்கள் எல்லாம் மறந்து இருந்தது. அவனுக்கு பலசை யாரும் நியாபக படுத்த முயற்சி செய்யவில்லை. சக்ரவர்த்தி முதலமைச்சர் ஆகிவிட இப்போது மிதுன் தான் அவனின் ஆசைபோல் சக்ரவர்த்திக்கு அடுத்து அரசியல் வாரிசாக இருந்தான். முதலில் அவன் மனதில் உருவான எண்ணம் இம்முறை வராமல் சக்ரவர்த்தி, தீபன் இருவருமே பார்த்து கொண்டனர்.

"ம்ம் நீ ஹப்பிய இருந்தா ஓகே " என்றவள் திரும்பி நின்று அவன் தோள் சாய அவனோ அவளது கழுத்தில் எப்போதும் இடும் வேம்பெயர் முத்தம் கொடுத்தான். அதில் அவள் உடல் சிலிர்த்தது.

"தீப்ஸ் " என்று அனுராகா அழைக்க "ம்ம்ம் " என்றான்.

"தீப்ஸ் " என்று மீண்டும் அனு அழைக்க

"சொல்லு ராகா " என்றான் தீபன் சக்ரவர்த்தி.

அவள் அவன் கையை எடுத்து அவள் வயிற்றில் வைக்க அவன் அவள் முகம் பார்த்தான் அவனுக்கு புரிந்தது இருந்தாலும் மனதினுள் சிறு பயம்,

அவன் " ராகா... " என்று இழுக்க ,

"எஸ் தீப்ஸ் " என்றாள் அனுராகா,

"நோ ராகா தீரன் பிறக்கும் போது நீ ரொம்ப கஷ்டப்பட்ட அதையே என்னால் இன்னும் மறக்க முடியலை " என்றவன் குரல் கமரியதோ ,

"தீப்ஸ் இட்ஸ் நார்மல் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட் " என்று சொல்ல

"நோ ராகா " என்றான் மறுப்பாக ,

"நோ தீப்ஸ் ஐ நீட் " என்று அனுராகா சொல்லிவிட அவள் பிடிவாதம் பார்த்து இவன் தான் இறங்கி வரவேண்டியதாக போனது.

தீபன் சக்ரவர்த்தி அனுராகவை முதல் முறை கவனிப்பதை விட இன்னும் கண்ணும் கருத்துமாய் கவனித்து கொண்டான்.

அவளின் கால் தரையில் படாமல் பார்த்து கொண்டான்.

அனுராகா மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது , அந்த பெண் குழந்தைக்கு தீகா என்று பெயர் வைத்தனர்.

தீபன் சக்ரவர்த்தி அவனின் வாழ்க்கை ராகா , தீரன்,தீகா இவர்களை சுற்றியே இருந்தது.

அவன் - நான் தான் நீ

அவள் - நீ தான் நான்

காதல் - நானும் அங்க தாண்டா இருக்கேன்..

hi lava...

simple and neat narration... lovely epilogue..

my wishes...:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top