நான் இனி நீ எபிலாக்_பிரேமிகா

#1
"என்னடா கண்டுப்பிடிச்சிட்டிங்களா?" என்று கேட்டுக்கொண்டே தோட்டத்திற்கு வந்தான் தீபன் சக்கரவர்த்தி. தர்மாவும் நாகாவும் ஒவ்வொரு இடமாய் தேடிக்கொண்டு இருந்தவர்கள் தீபனின் கேள்வியில் முழித்து பின் ஒன்றாக இல்லை என தலையாட்டினர்.கேலிப் பார்வையுடன் அவர்களை கடந்தவன் "குட்டிம்மா" என்றான் மகிழ்ச்சியான ஆர்ப்பரிக்கும் குரலில்.

அந்த ஒற்றை விளிப்பில் "அப்பா " என ஆர்ப்பாட்டத்துடன் தீபனின் கரங்களில் ஸ்மூத்தாக லேண்ட் ஆகியிருந்தது அந்த சின்ன சிட்டு.இது தினப்படி நடக்கும் வாடிக்கை தான். இரட்டையர்களை சுத்தலில் விட்டு டிமிக்கி கொடுக்கும் ஒரு ஜீவன் உண்டென்றால் அது ஆழினி.

ஆழினி தீபன் சக்ரவர்த்தி தீபன் ராகாவின் நான்கு வயது அதிரடி வாண்டு. நீர் சார்ந்த இடத்தின் மேல் தீரா காதல் கொண்ட தம்பதியர் தங்கள் மகளுக்கு கடலின் அரசி ஆழினி என பெயரிட்டனர்.

இந்த ஐந்து ஆண்டுகளில் மிதுன் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லையெனினும் பின்னடைவு ஏற்படாதது குடும்பத்தினருக்கு சற்றே ஆறுதல். காலம் அனைத்தையும் கடந்து வர கற்றுத்தந்திருந்தது. தீபனின் D வில்லேஜ்களும் அதன் பிரத்யேக கட்டமைப்பும் மக்களிடையே வெகு பிரசித்தம். எப்போதும் போல் தன் தந்தையின் பின்னிருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் தீபன் அதே நிமிர்வுடன்.

ஆழியுடன் விளையாடிக் கொண்டே திரும்பியவனின் பார்வை பால்கனியில் பதிந்தது. அங்கே கண்களில் காதலுடன் ராகா. ரசனையாக கண்ணடித்தவனின் தோற்றமோ அவளை வசீகரிப்பதாய். காற்றில் முத்தத்தைத் தூதுவிட்டவனை பார்த்தவளின் இதழ்கள் தானாய் "ராஸ்கல் "என்றது ஓசையில்லாமல் . இதனை பார்த்தவன் உல்லாசமாக "வரேன்டி டைட்டன்" என தன் அறை நோக்கி சென்றான்.

அவன்-வரேன்டி டைட்டன்
அவள் - அம் வெயிட்டிங்
காதல்- இன்னுமா முடியல ஆள விடுங்கடா யப்பா டேய்
 
Sarayu

Super Moderator
Tamil Novel Writer
#8

wooww short and sweet lovely epilogue..

my wishes...:love::love:
 
Advertisement

New Episodes