நான் இனி நீ (எபிலாக்) - Riyaraj

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
நான் இனி நீ....

"தீப்ஸ் எழுந்திரு... இப்ப மட்டும் நீ எழுந்திருக்கல..." என்ற ராகாவின் அதட்டலில் மெல்ல விழி திறந்த தீபன், தூக்க கலக்கம் இன்னும் மிச்சமிருக்கும் நிலையிலேயே,

"ஹேய்.. டைட்டன் .. உனக்கு வாட்ச்சோட நேம் வச்சதுக்காக, இப்படியாடீ ஓயாம அலாரம் அடிப்ப.. மனுஷன் ஓஞ்சு போய் இப்ப தானடீ படுத்தேன்.. உடனே படுத்த வந்துட்டியா....?!" என்றபடி மீண்டும் திரும்பி படுக்க,

"ஆமா அப்படியே சார், நைட் புல்லா பொண்டாட்டிய கொஞ்சி, ஓஞ்சு போயிட்டாரு...." என மெல்ல முனுமுனுத்தவளின் வார்த்தை செவியில் விழுந்த நொடி, அதிரடியாய் அவளை வளைத்து தன்னோடு படுக்கையில் கிடத்தியவன்,

"இப்ப என்ன, உன்னை கொஞ்சாம விட்டது தான் பிரச்சனையா...? சரி விடு இப்ப கொஞ்சிடலாம்...." என்று அவளின் இதழ் நோக்கி குனிய,

அவனின் வாயில் கை வைத்து தடுத்தவள், "அச்சோ விடு தீப்ஸ்... உன்னை எழுப்ப வந்தா, நீ என்னையும் சேர்த்து படுத்திட்டு இருக்க... கிளம்பு முதல்ல.. ஊருக்கு போகணும்..." என்று அவனை கட்டாயபடுத்தி தன்னிடமிருந்து விலகி எழ, அவள் சொன்ன செய்தியில் தூக்கத்தை துறந்தவன்,

"ஏது இப்பவா... என்ன திடீர்ன்னு.. நம்ம நாளைக்கி நைட் ப்ளைட்ல கிளம்பறதா தானே இருந்துச்சு..." என்றிட,

"ஆமாம் தீப்ஸ்.. ஆனா அதை இன்னைக்கி மார்னிங், டென் ஓ கிளாக் மாத்தியாச்சு..." என்ற படியே அவனுக்கு வேண்டிய உடையை விடுத்து மற்றவற்றை பேக் செய்து கொண்டிருந்தவளின் செய்கையில் அதிர்ந்து,

"வாட்.... மாத்தியாச்சா..?! யார் மாத்தினது.. எங்கிட்ட சொல்லாம என்னோட ப்ரோகிராமை...?" என்று எரிச்சலோடு கேட்க,

"நான் தான்.. ஏன், அத செய்ய கூட உன்கிட்ட பர்மிஷன் கேட்கணுமா என்ன?" என்று அவனை காட்டிலும் அதிகமான அழுத்தத்தோடு கேட்டவளின் பாவனையிலேயே, இது எப்படி முடியும் என்பது இத்தனை வருட குடும்ப வாழ்க்கை கற்று தந்த பாடத்தால், சட்டென தளைந்து போன குரலில்,

"நான் அப்படி சொல்லல ராகா... பட், ஏன்னு சொல்லியிருந்தா நானே மாத்தியிருப்பேனேன்னு தான்..... " என்றதும்...

"எல்லாம் சொல்றேன் தீப்ஸ்.. முதல்ல போய் சீக்கிரமா குளிங்க.. நம்ம இடத்தில இருந்து ஏர்போர்ட் போறதுக்கே, கிட்டதட்ட ஒன் அன்ட் ஆஃப் ஹவர்ஸ் ஆகும்... ப்ளீஸ்.. போற வழியில பேசிக்கலாம்.." என்றவளின் வார்த்தைக்கு மறு வார்த்தை பேசாது, குளியலறைக்குள் சென்றவன் அடுத்த சில நிமிடத்தில் தயாராகிவிட்டான், D வில்லேஜ்யிலிருந்து வெளியேற....

தர்மா ஏற்கனவே, அங்கு வாகனத்தோடு தயாராகி இருக்க, தங்களின் பொருட்களை வாகனத்தில், வைத்து விட்டு, D வில்லேஜ், உதய்பூர் கிளையின் மேலாளரிடம், சில பல கட்டளையோடு விடை பெற்றனர் தீபன் ராகா..

தீபனின் ஆசை படி, அவனின் D வில்லேஜ் திட்டம், சில மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பாக நடக்கத்துவங்கியிருந்தது இந்த இடைப்பட்ட வருடங்களில்..

உதய்பூர் அருகே இருக்கும், ஒரு சிறு கிராமத்தை அப்படியே, இங்கிருக்கும், D வில்லேஜ் போன்று, இயற்கை சூழ் குடில்கள் கொண்டதாக மாற்றி, அங்கு வாழும் மக்களின் தேவைகளோடு, உதய்பூர் சுற்றுலாவாசிகளின், சகல தேவைகளையும் நிறைவேற்றி தரும் விதமாய் அமைக்கப்பட்டு, நேற்றோடு ஒரு வருட நிறைவை தொட்டிருந்தது.

அது தொடர்பான விழாவிற்காக வந்திருந்த இருவரையும், இப்படி அதிரடியாக கிளம்ப செய்திருந்தனர் அவர்களின் வாரிசுகள்..

வாகனம் சீரான பாதையில் பயணத்தை தொடர்ந்ததும், "டைட்டன், இப்ப சொல்லு என்னாச்சு, நீ இவ்வளவு அவசரப்படறதுக்கு..." என்றிட.

அவனை முறைத்தபடியே, "எல்லாம் நம்ம பெத்து வச்ச, ரெண்டு வானறங்கலால...." என்று சொல்லிட,

"ராகா குழந்தைங்கள, எதுக்கு இப்படி சொல்ற, இதோட பலதடவை, நான் சொல்லிட்டேன், இப்படி சொல்லாதன்னு" என கண்டிப்போடு சொன்னவனிடம்,

"ப்ச்.. தீப்ஸ், நீயும் புரியாம பேசாதடா. சத்தியமா அவனுங்களால முடியல... தினம் தினம் ஒரு பஞ்சாயத்து..." என்று சலிப்போடு சொன்னவளின், தோளில் கரத்தை போட்டு தன்னோடு சேர்த்தவன்,

"இப்ப என்ன செஞ்சிட்டாங்கன்னு குதிக்கற... ராகா" என்று கேட்க,

"என்ன செஞ்சாங்களா... பெரியவன யாரோ ஒரு பையன் அடிக்க வந்தான்னு, சிறுசு இடையில புகுந்து, அவன் மண்டைய ஒடச்சிருக்கு...

அதுக்கு, அவன அடிக்க வந்த இன்னொருத்தன, பெருசு அடுச்சு கன்னமெல்லாம் வீங்கி போயிருக்கு... காலைல போன் பண்ணப்ப தான் விசயம் தெரிஞ்சது.

இதுல இப்படி அடிச்சா, உங்க கைக்கு வலிக்கும், மாத்தி இப்படி அடிங்கன்னு இந்த நாகா வேற, கூட இருந்து சொல்லியிருக்கான்...

லூசா அவன்... உங்க கூட சுத்தி தான் கெட்டு போனானுங்கன்னு, ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சா.. அவன் வெய்பை பார்க்காம, நம்ம பசங்களுக்கு பாடிகாடா சுத்தறதோட, இப்படி அதுங்கள உங்கள மாதிரி அடாவடியா, ரவுடியா மாத்திட்டு இருக்கானுங்க... இடியட்ஸ்...." என ஆரம்பித்தவளின் அடுத்த அடுத்த திட்டு மழையில் ,தீபனின் இதழ்கள், புன்னகையில் விரிய,

"தீப்ஸ், நான் திட்டிட்டு வர்றேன், நீ என்னமோ இப்படி சிரிக்கற.." என்று கடுப்பாக கேட்க,

இன்னமும் மலர்ந்த புன்னகையோடு, "மை டியர் டைட்டன், நீ திட்டறது அவங்களுக்கு புரியனுமே.. அதான் அவன் அதை கண்டுக்கறதில்ல.." என்றதும்,

அவர்களுக்கு பரிந்து பேசியதற்காக தீபனை முறைத்த படி விலகி அமர்ந்தவள், ஊர் திரும்பும் வரையிலும் தீபனை கண்டு கொள்ளவே இல்லை.

தீபனுக்கும் ஓய்வு தேவைபட, பயணமும் அமைதியாக முடிந்தது. அன்று விடுமுறை தினமாய் இருந்ததால், சிறுவர்கள் இருவரும் வீட்டில் இருக்க, தீபன் கார் வீட்டில் நுழைந்ததும், தாவி வந்த இருவரையும் இரு கைகளில் அள்ளி எடுத்த தீபனை அணைத்த இருவரும் ஆளுக்கொரு கன்னத்தில் முத்தமிட,
பார்த்திருந்த ராகாவிற்கு தான் பொறாமையில் மனம் கொதித்தது.


தீபன் எப்போது வந்தாலும் அவனின் வாரிசுகள் இப்போது போல தான் அவனிடம் அதிக பாசமாகவும் உரிமையோடும் விளையாடுவார்கள். ராகாவிடம் எப்போதும் ஒரு வித தயக்கமும் பயமும் இருவருக்கும் உண்டு.

சக்கரவர்த்தி, உஷா மட்டுமல்ல லோகேஷ்வரன், தாரா என அனைவருமே இருவரையும் செல்லம் கொஞ்சும் போது, யாராவது ஒருவராவது கண்டிப்போடு இருக்க வேண்டுமே என்ற நிலையில் இப்போது அனுராகா...

தீபனுக்கு, பின் நின்ற ராகாவின் தோற்றத்திலேயே, அவளின் கோபம் புரிய, "அப்பா, அண்ணா எதுவுமே செய்யல. அவன அடிக்க வந்தா பார்த்திட்டு, இருக்க முடியுமா சொல்லுங்க?!" , "சின்ன பையன்னு பார்க்காம தம்பிய அடிக்க கை ஓங்கலாமா, அப்பா?!" எனவும், இருவரும் நியாயம் கேட்க,

ராகாவின், முன் தலையை இல்லையென ஆட்ட முடியாது, தவிப்போடு நின்றவன், "அது அப்படி இல்லடா. அவன அடுச்சது தப்பில்ல. பட், நீங்க அடிக்காம, அவன அடிவாங்க வச்சிருக்கனும்" என, அவனின் அழகான தந்திரகுணத்தை, மகன்களுக்கு தெளிவாக்கி கொண்டிருந்தவனை, கண்டு முறைக்க மட்டுமே முடிந்தது ராகாவால்...

அப்போது அங்கு வந்த உஷா, ராகாவின் நிலையை உணர்ந்து, அவளிடம் பேசி பேரன்களுக்காக சமாதான கொடியை பறக்கவிட, எப்போதும் போல ராகா தான் இறங்கி போக வேண்டியதாயிற்று.

அதே கோபத்தோடு மாடிக்கு சென்றவளை பின்தொடர்ந்த குழந்தைகள், அவளை கொஞ்சி சில நிமிடத்தில் அவளை சரி செய்து முடித்து விளையாட சென்ற பின், அப்போது தான் அறைக்குள் வந்த தீபன்,

"என்ன மேடம், இப்ப ஓகே ஆகிட்டீங்களா?!" என்றதும், அங்கிருந்த தலையனையை தூக்கி அவன் மீது வீசியவள்,

"ராஸ்கல்.. ஏன்டா பசங்கள கண்டிக்க சொன்னா, சிக்காம எப்படி தப்பு செய்யறதுன்னு கத்து கொடுக்கற நீ" என்று கோபத்தில் கத்த,

"டைட்டன், அவங்களுக்கு என்ன வயசு, ஜஸ்ட் 8, 6. தான் . இப்பவே ரூல்ஸ் அது இதுன்னு போட்டு அடைக்கனுமா..

முதல்ல அவங்க அடிக்க காரணம் என்னன்னு தெரியுமா? அந்த அடி வாங்கின பையனோட வீட்டுல, நம்ம பழைய விசயத்தை பத்தி எதோ தப்பா பேசியிருப்பாங்க போலடா..

அதுல அவங்க சொன்ன வார்த்தையை, அந்த பையன் நம்ம சந்தோஷ்கிட்ட சொல்லியிருக்கான். அதுல கோபம் வந்து அடிதடி ஆக போய், நம்ம ஆகாஷ் அடிச்சிட்டான்.

இப்ப சொல்லு இதுல முதல் தப்பு யார் மேல.. பெத்தவங்க வீட்டுல குழந்தைங்க முன்னாடி எதை பேசனுமுன்னு யோசிச்சு பேசனும்.. இல்லாட்டி விளைவு எப்படி வேணுமின்னாலும் வரும்" என்று சொல்லி முடித்து ராகாவின் முகம் பார்க்க,

அவளின் முகத்தில் தெரிந்த வருத்ததில், "ராகா, நான் அப்ப உன்னை இதுல இன்வால்வ் ஆக வேணாமின்னு சொன்னது இதுக்கு தான். வருஷம் கடந்தாலும், சில விசயங்களை கஷ்டத்தோட தான் கடக்க வேண்டி வரும்.

நா ஏன் அவங்க கிட்ட அப்படி பேசினேன் தெரியுமா, தப்பு அவங்க மேல இல்லாத போதும், இப்ப அவங்களும் இதுல மாட்டியிருக்காங்க. நம்ம வீட்டை பொறுத்த வரையிலும் சரி, உங்க வீட்டிலையும் சரி, அடுத்த வாரிசு இவங்க தான். எப்படியும் அவங்க சில தில்லாலங்கடி வேலைய கத்துக்கிட்டு தான் ஆகனும். இல்லாட்டி இவங்களால சார்வைவ் பண்ண முடியாது.. சோ, லீவ் இட்.. பேபி..." என்றவாறு அவளை அணைக்க, அவனின் அணைப்பில் அடங்கியவளின் மனம் இன்னும் பாரமாய்.....

தீபனின் தொலைபேசி அழைப்பில் அவளை விட்டு விலகியவன், அழைப்பு மிதுனிடமிருந்து என்றதும், "ஹாய் டா, சொல்லு, என்ன இப்ப கூப்பிட்டு இருக்க?!" என்றிட,

"தீபா, நீ உதய்பூர்ல இருந்து இங்க வந்துட்டு போறையா? இல்லையான்னு? அப்பா கேட்க சொன்னாங்க. நீ, வர்றதா இருந்தா, கொஞ்சம் அப்பாயின்மெண்ட்ஸ் மாத்தணும் அதான்.." என்றதும்,

"இல்ல மிதுன், நாங்க இப்ப வீட்டுக்கு வந்தாச்சு. அடுத்த வாரம், டெல்லி வர்றோமின்னு அப்பாகிட்ட சொல்லிடு" என்றவன், அவர்களின் சில வழக்கமான பேச்சுவார்த்தைக்கு பின், அழைப்பை அணைக்க, தீபனின் நினைவுகளோ சில வருடத்திற்கு முன் சென்று நின்றது.

கிட்டதட்ட நான்கு வருடம் கடந்த நிலையில், கோமாவிலிருந்து மீண்டான் மிதுன். அவனை பரிசோதித்த மருத்துவர், அவனுக்கு அளிக்கப்பட்ட மருந்தின் வீரியம், மற்றும் அவன் விழுந்ததில் தலையில் பட்ட அடி, இவற்றின் விளைவால் அவனின் நினைவாற்றலில் சில வருடங்கள் அவனிடமிருந்து நிரந்தரமாக அழிந்துவிட்டாதாக சொல்ல... கேட்டிருந்த அனைவருக்கும் இதற்கு எப்படி ரியாக்ட் செய்வது என்பதே சில நிமிடம் வரை புரியவில்லை.

அரசியலில் எதை அடைய மிதுன் நினைத்தானோ, அதை விரும்பியே தீபன் விட்டு கொடுக்க, திருமண வாழ்வில் நாட்டமில்லாது பொது வாழ்க்கைக்காகவே தன்னை முழுமையாக ஈடுபடுத்தி, சக்கரவர்த்திக்கு அடுத்த வாரிசாக, இன்று தந்தையோடு முக்கிய மந்திரியாய் பாராளுமன்றத்தில் மிதுன் சக்கரவர்த்தி.. வெற்றி கொடி நாட்ட, குடும்பம் என்ற அழகிய கூட்டுக்குள் தீபன் சக்கரவர்த்தி...

மாலை வேளை கடந்தும், ராகா தெளிவில்லாது இருக்க, தீபன், "ராகா ஒரு ட்ரைவ் போலமா..." என்றிட, தன்னவனின் நோக்கம் புரிந்து, சரியென கிளம்பியவளை, நேராக அழைத்து சென்றான் அவர்களின் அழகிய உள்ளூர் ஹனிமூன் ஸ்பாட்டிற்கு...

ஒரு காலத்தில் ரெய்டுக்காக கட்டப்பட்ட பதுங்கு வீடு, இப்போது இவர்களின், தனிப்பட்ட சுக துக்கத்திற்கான அழகிய கூடாகி போனது. எந்த மாதிரியான மனநிலையிலும், இருவரும் இங்கு வந்து விட்டால், அன்றைய தினத்திற்கே சென்றுவிடுவர் சில நிமிடங்களில்...

உள்ளே வந்ததும், அன்று போல இன்றும் வெயினோடு, அவளிடம் வந்தவன், "ஷேல் வீ டேன்ஸ்..." என்றிட, சிறு புன்னகையோடு, அவனிடம் கரத்தை தந்தவளின், கழுத்து மச்சத்தில் வழக்கம் போல, தனது வெம்பயர் முத்தத்தை பரிசளித்தான்.. ராகாவின் தீபன்....

என்றும் இன்று போல மகிழ்வோடு தொடரட்டும் இவர்களின் பயணம்...

அவன் - எப்படியோ அடக்கிட்டேன்...
அவள் - அப்படியே அடங்கிட்டாலும்...
காதல் - இதுங்க திருந்தாததுங்க....
riya super dear. asathal thaan. ellaarum romanticaa podareenga. sarayu appadi ccharacter vekka maattaangale?:love::love::giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top