நான் இனி நீ எபிலாக் - Caro Mary

Advertisement

Chandhini

Well-Known Member
சில வருடங்களுக்கு பிறகு...

"மிது" என்ற குரலுக்கு பாய்ந்து வந்து கதவை திறந்தான் மிதுன் சக்கரவர்த்தி.

அங்கே ஐந்து வயது சிட்டு ஒன்றை தன் இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு
அவனை முறைத்தவாறு நின்றாள்.

அவள் தான் அந்த வீட்டின் இளவரசி
தீபன் - அனுராகாவின் செல்ல மகள் தீபினி.

அவள் பிறந்தவுடன் தான் அந்த வீட்டில்
உயிர்ப்பு வந்தது என்றே சொல்லலாம்.

முதல் மகன் கோமாவில் இருந்ததால் கலங்கி போய் இருந்த உஷாவை தன் முத்துப்பல் சிரிப்பால் கவர்ந்தவள்.

அதிலும் சக்கரவர்த்தி எங்கு சென்றாலும்
அவரின் கரம் பிடித்துக்கொண்டு வலம் வருவாள்.

உருவத்தில் அனுராகா போலவும், குணத்தில் தீபனை கொண்டும் இருந்தாள்.

சரியாக தீபினி முதல் பிறந்த நாளன்று மிதுனுக்கு நினைவு வந்தது.

எல்லோரும் கண்கள் கலங்க அவனை பார்த்தவாறு நிற்க,தீபினி எதுவும் புரியாமல் அனைவரையும் ஒரு நிமிடம் பார்த்தவள்.

தந்தையின் கையில் இருந்தவாறு மிதுனை நோக்கி இரண்டு கரங்களை விரித்து "மி மி"என்று அழைக்க

யார் முகத்தையும் பார்க்க முடியாமல் தலை குனிந்து இருந்தவன்.

தீபினியின் குரலை கேட்டு அதிர்ச்சியோடு நிமிர்ந்து பார்க்க அப்போதும் அவள் கைகளை விரித்தவாறு இருந்தாள்.

எல்லோரிடமும் ஒரு வியப்பு இருந்தது ஒரு முறை கூட மிதுனை அவள் பார்த்து இல்லை ஆனால் எப்படி இது?? என்ற யோசித்தனர்.

அடுத்து நொடி தீபன் தன் மகளை மிதுன் அருகே அழைத்து செல்ல

தீபினி அவன் கழுத்தை கட்டிகொண்டு முத்தமழை பொழிந்தாள்.

மிதுன் கண்களில் கண்ணீர் பெருகி இத்தனை நாள் அவன் செய்த பாவங்களையும் சேர்த்தே கழுவியது.

அன்றுமுதல் தீபினி அவனுக்கு மறுவாழ்வு அளித்த தேவதை.

மிதுனால் சட்டென்று சகஜமாக எல்லோரிடமும் பேச முடியவில்லை.
சிறு விலகல் ஒன்று அவனிடம் இருந்தது.

யாராலும் ஒரு எல்லைக்கு மேல் அவனிடம் நெருங்க இயலவில்லை
ஆனால் அந்த எல்லையை மீறி ஒருத்தி நுழைந்தால் என்றால் அது தீபினி மட்டும் தான்.

மிதுனை அவன் எல்லையில் இருந்து தன் குறும்பால் வெளிவர செய்தாள்.

என்றுமே அவளின் "மிது"என்ற அழைப்பில் அவன் உருகி தான் போவான்.

தன் போக்கில் யோசித்து கொண்டு இருந்தவனை மீண்டும் "மிது"என்று அழைக்க

"என்ன பேபி" என்று கேட்க

"மிது நீ அடிக்கடி எங்கேயோ போயிடற"
என்று சொல்லி முறைக்க

"அச்சோ சாரி பேபி.சரி கீழே போகலாம்"
என்று கேட்டு அவளை தூக்கி கொண்டான்.

"பாட்டி ஏதோ சொன்னாங்க மிது" என்று கன்னத்தில் கை வைத்து யோசிக்க
அதன் அழகில் மனதை தொலைத்தவன்.

அவள் நெற்றியில் முட்டியவாறு "உன்னுடைய அப்பா,அம்மாவையும் வர சொல்லி இருப்பாங்க பேபி"

"ஆமாம் ஆமாம் மிது.நான் சொல்லவே இல்லை"என்று அவன் பிடியில் இருந்து இறங்க பார்க்க

"நான் சொல்லிட்டேன் பேபி நீ வா"என்று அழைத்து சென்றான்.

அங்கே அறையில் அனுராகா தீபனிடம் புலம்பி கொண்டு இருந்தாள்.

"போதும் தீப்ஸ்" என்று அவள் சிணுங்க

"நோ ராகா. இதை மட்டும் குடி ப்ளீஸ்" என்று கெஞ்ச

முகத்தை தூக்கி வைத்து கொண்டு அந்த டம்ளர் பாலை பருகினாள்.

அனுராகா ஐந்து மாதம் கர்ப்பமாக இருக்கிறாள்.அவளின் அருகே இருந்து பார்த்து கொள்வது தான் இப்போது தீபனின் ஒரே வேலை.

கஷ்டப்பட்டு குடித்து விட்டு அவனை பார்த்து"இப்போ போகலாமா" என்று கேட்க

"ராகா" என்ற அவனின் அழைப்பில்

அவனை பார்த்தவளை தன் அருகே இழுத்து அவனுடைய வெம்பயர் முத்தம் ஒன்றை பதித்து விட்டு நிமிர்ந்தான்.

அடுத்து அவன் ஏதாவது செய்யும் முன்
அவனின் அலைபேசி தொல்லை பேசியாக ஒலிக்க அதில் அவனின் தந்தை அழைப்பதை உணர்ந்தவன்.

"வா ராகா போகலாம்" என்று கைப்பற்றி நல்ல பிள்ளையாக அழைத்து சென்றான்.

எல்லோரும் காரில் ஏறி சென்றனர்.

மிதுன் தன் தவறை உணர்ந்து இனி அரசியல் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தவன்.

திருநங்கைகளை ஆதரிக்க என்று ஒரு இல்லத்தை உருவாக்கினான்.அந்த இல்லத்தின் பெயர் "சுடரொளி"

அதில் அவர்களுக்கு தங்கும் இடம்,சுயதொழில் கற்ற தர மற்றும் அவர்களை பயிற்றுவிக்க ஆசிரியர்கள் என்று சகல வசதிகளும் செய்து இருந்தான்.

அதன் திறப்பு விழா தான் இன்று நடைபெறுகிறது அதில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

விழாவில் லோகேஸ்வரன்,தாரா
புனித்,தேவ்,நீரஜா என்று அனைவரும் குடும்பமாக வந்தனர்.

இதில் நாகா மற்றும் தர்மாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவர்கள் இப்போது மிதுனுடன் துணைக்கு இருக்கிறார்கள்.

இரட்டையர்களுக்கு திருமணம் ஆகிவிட்டால் தங்களை தொந்தரவு செய்யாமல் இருப்பார்கள் என்று அனுராகா நினைக்க அவர்களோ நாங்கள் என்றுமே தீபனின் நிழல்கள் என்று உணர்த்தினர்.

பிரஷாந்த் தனக்கு என்று ஒரு வேளையும், துணையும் தேடி கொண்டு வாழ துவங்கி விட்டான்.

இப்போது அந்த இல்லத்தை தனது பேத்தியுடன் திறந்து வைத்தார் சக்கரவர்த்தி.

அனைவரின் மனமும் நிறைந்தது.

"ரொம்ப பெருமையாக இருக்கு மிதுன்" என்று மகனின் தோள் தட்டி பாராட்டினார்.

தீபனும் "வாழ்த்துக்கள் டா அண்ணா"
என்று அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்ற மிதுனின் மனமோ இத்தனை நாள் இல்லாத அளவு நிறைந்து இருந்தது.

பாதை தவறி சென்ற தனக்கு கடவுள் ஒரு வழி அளித்து இருக்கிறார் என்று எண்ணி தன் பணியை சிறப்பாக செய்ய துவங்கினான்.

தீபன் இப்போதும் தன் தந்தைக்கு உதவியாக இருந்தான்.

சில மாதங்களில் மிதுனுக்கு ஒரு வரம் அமைந்தது.

மிதுன் சக்கரவர்த்தி மற்றும் நித்திலா திருமணம் விமரிசையாக நடந்தது.

சொந்தங்கள் சூழ தன் வாழ்க்கை துணையின் கரம் பிடித்தவன் .

தன் தம்பியை திரும்பி பார்க்க அவன் புன்னகையுடன் நிற்க,அவன் கைகளில் இருக்கும் தீபினி அவனுக்கு பறக்கும் முத்தம் ஒன்றை அனுப்பி வைத்தாள்.

கடைசியாக குடும்பமாக அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டனர்.



நான் : என்றும் தொடர்வாயா??

நீ : இறுதிவரை வருவேன் காதலுடன்..

காதல் : நான் எதுக்கு?? நீங்க இரண்டு பேர் மட்டும் போங்க...என்னை விடுங்க பா

முற்றும்..

என் முதல் எபிலாக் படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..

இப்படிக்கு

கரோ மேரி...
nice.. another view
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top