நான் இனி நீ எபிலாக் _ by Esther Joseph

Advertisement

டேய் அண்ணா சீக்கிரம் எழுந்துருடா..உன்ன இப்படி என்னால பார்க்க முடியல.. என்னால தான் நீ இப்படி ஆகிட்டியோங்கற நினைப்பு என்ன கொல்லுதுடா... எனக்கு நீ முக்கியம்டா..தினப்படி வழக்கம்போல் அன்றும் தீபன் மிதுன் கைபிடித்து பேசி கொண்டிருந்தான்.. மிதுன் விழியிலிருந்து ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது... இதை பார்த்த தீபன் டேய் அண்ணா அண்ணா என்று கத்த சத்தம் கேட்டு அனைவரும் வர முதலில் சுதாரித்த சக்கரவர்த்தி மிதுனை மருத்துவமனை அழைதது சென்றார்.. மருத்துவமனையில் அனைவரும் காத்திருக்க அவர்கள் எதிர்பார்த்தபடி தான் நடந்தது.. ஆம் மிதுன் சக்கரவர்த்தி கோமாவில் இருந்து மீண்டுவிட்டான்... எல்லாருக்குமே மகிழ்ச்சி... ஆனால் மகிழ வேண்டியவனோ தன்னை தானே வெறுத்தபடி அமர்ந்திருந்தான்.. சில நாட்களாகவே அவன் உடன்பிறப்பும் தாயும் தந்தையும் தன்னிடம் பேசுவதை கேட்டவன் உள்ளுக்குள் மரித்துபோனான்...

அமைதியை கைவிட்டு சக்கரவர்த்தி பேச்சை தொடங்கினார்.. மிதுன் உன் விருப்பப்படி எனக்கு பின் அரசியல் வாரிசு நீ தான்.. இதுவரை எனக்காக உழைத்தவன் இனி உனக்காக செய்வான்.. இது இப்போது இல்லை.. முன்னவே முடிவு பண்ணதுதான்.. அதுனால தான் மேடையில் கூட உன்னை என்கூடவே நிறுத்தி வைத்திருந்தேன்... என்னவோ போனது போகட்டும்.. இனி எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும் என்று முடிக்க.. எனக்கு எதுவும் வேணாம் பா... அதுவும் அரசியல் சுத்தமா வேண்டாம்பா என்று சொல்ல அனைவருமே அதிர்ந்தனர்...

சொந்த அம்மா அப்பா தம்பினு கூட பார்க்காமல் அதுவும் தம்பியை கொல்லக்கூட தைரியம் கொடுத்த இந்த அரசியல் போதை எனக்கு வேணாம் பா... அன்னைக்கு என்ன காப்பாற்றியது தீபன்பா.. ஆனா அவன் நிலைமையில் நா இருந்திருந்தா நிச்சயம் காப்பாற்றி இருக்க மாட்டேன்...இப்படி என்ன மிருகமா மாற்றிய இந்த அரசியல் எனக்கு வேணாம்பா..விவரம் தெரிந்த வயசுல இருந்தே நா முழுநேர அரசியல்வாதியாதான் இருந்துருக்கேன்.. இனியாவது நா நானா இருக்கேன்... என்றவன் தீபனை நோக்கி கை எடுத்து கும்பிட்டு மன்னிச்சிடுடா என்று சொல்ல தீபன் ஓடிவந்து அண்ணனை அணைத்து கொண்டவன் கண்களில் கூட கண்ணீர்...

சக்கரவர்த்தி அதிர்ந்து டேய் என்னங்கடா ரெண்டுபேரும் இப்படி சொன்னா எப்படிடா... அப்புறம் எனக்கப்புறம் யாரடா வாரிசாக்குவேன் என்க அதற்கு உஷா அட விடுங்க இவனுங்க இல்லாட்டி நம்ம பேரபசங்கள அரசியல்வாதி ஆக்கிடலாம் என்றவர் தீபனை நோக்கி டேய் இனி மிதுனுக்கு பெண்தேடி கல்யாணம் பண்ணி பேரன் பார்க்க நாள் ஆகும் நீயாவது எங்கள சீக்கிரம் தாத்தா பாட்டி ஆக்கிடுடா என்க அவன் ராகாவை பார்க்க ராகாவின் நினைவோ திருமண நாள் நோக்கி நகர்ந்தது.. ராகா நாம இன்னும் நல்லா புரிந்து லைஃப் என்ஜாய் பண்ணிட்டு அப்புறமா பேபி பத்தி யோசிக்கலாம் என்க ராகாவோ அவனை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு சரி என்பதுபோல் தலை ஆட்டினால்... ஆனா அவளுக்கா தெரியாது தன் அண்ணன் நிலைமை யோசித்து இப்படி சொல்கிறான் என்று... கதவு திறக்கும் சத்தத்தில் நிகழ்காலத்திற்கு வந்தவள் தீபனை தேட அவன் பின்னாடி இருந்தவன் ரகசிய குரலில் பேபி பெத்துக்கலாமா பேபி என்க நிறைவாய் புன்னகைத்தாள்.. இருவரும் இணைந்து ராகதீபம் ஏற்றுவார்கள் என்ற நம்பிக்கைரோடு நாம் விடைபெறுவோம்
 
banumathi jayaraman

Well-Known Member
சூப்பர்
சிம்பிளா ரொம்ப நல்லாயிருக்கு,
எஸ்தர் ஜோசப் டியர்
 
Last edited:

Sarayu

Super Moderator
Tamil Novel Writer

hi esther..

simple and neat narration..

aagamotham rendu pasangalum arasiyal venaam solliyaachu...

Good try..

My wishes:love::love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top