நானறியேன் உன்னை P4

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
நிலா ரொம்ப அப்பாவி. ரொம்ப பாவம். வாணன் தப்பா புரிஞ்சிகிட்டான் என்றெல்லாம் சப்போர்ட் வருது. அடுத்த பிளஷ்பக் தான். சில நேரம் வாணனுக்கு சப்போர்ட் பண்ணுவீங்களோ! என்னமோ! யாருக்கு தெரியும். பார்க்கலாம்.:unsure::unsure:

பாடசாலையின் மொட்டை மாடியில் யாதவனின் தலைமையில் பதினைந்து பேர்கொண்ட கூட்டம் கூடி இருந்தது. பன்னிரண்டாவது வகுப்பில் படிக்கும் யாதவன்தான் அந்த கூட்டத்துக்கு தலைவன் என்றால் கடைசி உறுப்பினர் நிலா ஈஸ்வரன்.

பதினைந்து பேரும் தமிழ்நாட்டிலுள்ள பத்து கோடீஸ்வரர்களின் மக்கள். வகுப்பு வாரியா, வயது வித்தியாசத்தில் இருந்தனர் அனைவரும். யாதவன் என்றால் அங்கிருக்கும் அனைவரும் பிடிக்கும். அவன் சொல்லே! வேதவாக்கு.

"இந்த ஒண்ணுமில்லாத பசங்கள எதுக்கு ஸ்கொலசிப் என்கிற பெயர்ல உள்ள கொண்டு வரங்கனு தெரியல. அவனுக்கு கூட எல்லாம் நாம ஒண்ணா உக்காந்து படிக்கணுமா? போதாததுக்கு கேன்டீன்ல அவனுக்கு கூட போய் உக்காந்து வேற சாப்பிடணும். அவனுக்கு பேரன்ட்ஸ் நம்ம வீட்டுல வேலைய செய்யுற ஆயா, டைவர், தோட்டக்காரன். அவனுக்கு பசங்க நமக்கு சரிசமமாக உக்காருவதா?" யாதவ் கத்த ஆரம்பிக்க

"என்ன பண்ண சொல்லுற யாதவ்? மேனேஜ்மண்ட் எடுக்குற முடிவுல நாம தலையிட முடியாதே!" பத்தாம் வகுப்பில் படிக்கும் ஷீலா சொல்ல

"இதோ இவனோட அப்பா இந்த ஸ்கூல் டிராக்டர் தானே! இவன் போய் பேசமாட்டானா?" என்று யாதவ் நரேன் மேல பாய

"என்ன என்ன பண்ண சொல்லுற? டெக்ஸ், அது, இதுனு பேசுறாரு" என்றான் நரேன்.

நிலா இரண்டு கன்னத்திலும் கையை வைத்தவாறு யாதவையே! பாத்திருக்க, "நிலா... நாம எல்லாரும் எர்லியா இந்த ஸ்கூலை விட்டு போயிடுவோம் நீ தான் கடைசியா போகப் போறவ. அதனால நீதான் இதுல ரொம்ப இன்வோல் ஆகி எல்லாம் கத்துக்கணும்" யாதவ் கர்ஜிக்க நிலா விறைப்பாக நிமிர்ந்து அமர்ந்தாள்.

அரசாங்க வரியிலிருந்து தப்பிக்க மாத்திரமன்றி இந்த பாடசாலைக்கு நல்ல பெறுபேர்களையும் பெற்றுத் தரக்கூடிய மாணவர்கள் வேண்டும் என்பதால் ஒவ்வொரு அரசாங்க பாடசாலைக்கும் சென்று நன்றாக படிக்கும் மாணவர்களை தேடியெடுத்து அவர்களுக்கு ஒரு பரீட்ச்சை வைத்து அதன் மூலம் வருடம் பத்து மாணவர்களை தேர்வு செய்வார்கள். அப்படி தேர்வு செய்பவர்கள் வயது வித்தியாசமின்றி தேர்வு செய்யப்படுவதால் இந்த குரூப்பில் யாராவது ஒருவரின் வகுப்பில் வந்து விடுவார்கள்.

அதை பொறுத்துக்கொள்ள முடியாத யாதவ் போன்ற திமிர் பிடித்தவர்கள் அவர்களை எவ்வாறு துரத்துவது என்பதை மட்டும்தான் சிந்திக்கலாயினர். படிக்க வேண்டும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற கனவோடு வரும் ஏழை மாணவர்கள் இவர்களின் கையில் சிக்குண்டு சிலர் தற்கொலை முயற்சியும் செய்திருக்க, ஸ்கூல் மேனேஜ்மண்ட் அதை பணத்தால் மூடி மறைத்தும் இருந்தனர்.

இது யாதவ் ஆரம்பித்து வைத்ததல்ல. இந்த வரிக்காக என்று இந்த நீதியை பாடசாலை மேனேஜ்மண்ட் எடுத்ததோ அன்றிலிருந்து உருவானதுதான். நிலாவிடம் முற்றுப்பெற போவதுமில்லை. நிலா முதலாமாண்டு சேர்ந்த பொழுதே! அவளை தூக்கிக்கொண்டு வந்த யாதவ் குரூப் அவளுக்கு நடப்பவைகளை சொல்லி இருக்க, ஸ்கூல் அரசியல் புரியாவிடினும். வீட்டு வேலையாளோடு தான் என்றும் ஒன்றாக அமர்ந்து உணவுண்ண போவதில்லை. அப்படி நடக்கக் கூடாது. அது தவறு என்று யாதவ் சொல்ல நிலாவுக்கு அந்த உதாரணம் நன்றாகவே! புரிந்தது.

காரணம் நிலாவின் தந்தை ஈஸ்வரன் ஸ்டேட்டஸ் பார்ப்பவர். வேலையாட்கள் நிலாவை கொஞ்சுவது கூட அனுமதிக்காதவர். ஜாதி, மதம் என்று பெரிதாக பார்க்காவிட்டாலும், பணம்தான் அவரின் அளவுகோல். பணமிருப்பவரிடம் ஒருமுகம். இல்லாதவரிடம் ஒருமுகம் காட்டுபவர். தன் மகளுக்கு சோறூட்டினாரோ இல்லையோ! இந்த ஏற்றத்தாழ்வின் வித்தியாசத்தையும். யாரோடு பழக வேண்டும், யாரை ஒதுக்க வேண்டும் என்பதை சரியாக சொல்லி கொடுத்திருந்தார்.

அந்த காலத்தில் ஐந்து வயதிலையே! ஆண் குழந்தைகளுக்கு போர் பயிற்சி வழங்கப்பட்டதாம். ஆன்மீக நூல்களை கற்றுவிக்க ஆரம்பித்தார்களாம். ஏனினில் அந்த வயதில் கற்பதுதான் மனதில் பதியும் என்று நம்பினார்கள். அதை விஞ்ஞானமும் இன்று உறுதிப்படுத்துகிறது. நல்ல பழக வழக்கங்களும் அவ்வாறே! சிறு வயதில் கற்றுக்கொடுப்பதுதான் காலத்தும் கடைபிடிப்பார்கள். அதனால்தான் என்னமோ! ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? என்று கேட்டு விட்ட சென்றாரோ! திருவள்ளுவர்.

நிலாவுக்கு ஈஸ்வர் கற்றுக்கொடுத்தது போக யாதவ் குரூப் கற்றுக்கொடுத்தது அந்த எட்டு வயதிலும் திமிரும், ஆணவமும் ஒன்று சேர்ந்த சிறுமியாகத்தான் திகழ்ந்தாள்.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member

:D :p :D
Superb Precap,
பஸ்மிலா டியர்

நிலா பாவம் அப்பாவி, நல்லவள்ன்னு நான் சொல்லவேயில்லையே, மிலா டியர்
அவளோட அப்பன் ஈஸ்வரன் பொண்ணுக்கு சோறு கொடுக்கிறானோ இல்லையோ கொலஸ்ட்ரால் ஊட்டித்தான் வளர்த்திருப்பான்னுதான் நல்லாத் தெரியுதே
இவள் வீட்டில் வேலை செய்த சுசீலாவை ஏதோ துன்புறுத்தி அதனால சுசீலா இப்படி ஆகிட்டாங்க
ஆனால் பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு சுசீலாவுக்கு எட்டு வயசு சின்னப் பெண் என்ன துன்பம் கொடுத்தாள்ன்னுதான் தெரியலைப்பா
 
Last edited:

Gomathianand

Well-Known Member
நிலா அறிந்தோ அறியாமலோ புரிந்தோ புரியாமலோ செய்த தவறுகளுக்குத் தண்டனை அனுபவிக்கப் போறா.....
 
Saroja

Well-Known Member
சின்ன வயசில் புரியாம
ஏதோ செஞ்சுட்டா போல
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top