நானறியேன் உன்னை intro & teaser

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் friends புதுக்கத்தையோட introவோட வந்துட்டேன்.

இது நம்ம க்ரிஷ்ணாவோட கதையல்ல. இது வேற. அப்போ கிருஷ்ணா வர மாட்டானான்னு கேட்ட? இந்த கதையை முதல்ல எழுதலாம் அப்பொறம் க்ரிஷ்ணாவை சந்திக்கலாம்னு நினைக்கிறன்.

ஓகே. ஹீரோ ஹீரோயின் பேரெல்லாம் கதைல பார்க்கலாம். கதையோட ஹீரோ நம்ம உன் கண்ணில் என் விம்பம் ரிஷி மாதிரி வில்லன் ப்ளஸ் ஹீரோவாகத்தானிருக்க போறாரு.

வில்லன் ப்ளஸ் ஹீரோ எழுதுறது கொஞ்சம் டேஞ்சர்தான் கட்ட கம்பெல்லாம் பார்சல்ல வந்துடும். அனுப்பறுத்தும் அனுப்புறீங்க gift ஏதாவது அனுப்புங்கப்பா...


download.jpg


"கெட்டிமேளம் கெட்டிமேளம்" டேப் ரெக்காடரில் குரல் ஒலிக்க அதை தொடர்ந்து கெட்டிமேளத்தோடு நாதஸ்வர ஓசை இசைக்க, புரோகிதர் திருமண மந்திரங்களை ஓதியபடி தாலியை எடுத்து நீட்ட கல்யாண மாப்பிள்ளையாக அமர்ந்திருந்தவனோ!



"தாலி பெண்களுக்கு வேலினு சொல்வாங்க, ஆனா உனக்கு மட்டும் அது முள்வேலி" என்று மனதுக்குள் கேலியாக எண்ணியவாறே தன் அருகில் அமர்ந்திருந்தவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்து விட்டு மூன்று முடிச்சையும் நிதானமாக கட்டி முடித்தான். கட்டும் பொழுதும் அவன் மனதில் ஓடியவைகள் அனைத்தும் அவன் மட்டுமே! அறிவான்.



மனதில் நினைப்பவைகளை கண்டு கொள்ளும் சக்தி மட்டும் கடவுள் மனிதருக்கு கொடுத்திருந்தால் அவன் அருகில் அமர்ந்திருப்பவளோ! ஏன் அவன் அருகில் அமர்ந்திருக்கப் போகிறாள்? அவன் சட்டையை பிடித்து "ஏன் இப்படி செய்கின்றாய்" என்று கேள்வி கேட்டிருப்பாள். அல்லது அவ்விடத்தை விட்டு எழுந்து அவன் கண்கண்களுக்குள் சிக்காமல், கண்காணாத தூரத்துக்கு மாயமாய் மறைந்து சென்றே விட்டிருப்பாளே!



அவன் அருகில் இருந்தவளுக்கு தான் செய்வது சரியா தவறா? பணத்துக்காக இந்த திடீர் திருமணம் அதுவும் யாரென்றே அறியாத இவனை கல்யாணம் செய்வது சரியா? அவன் தன்னை எதற்கு திருமணம் செய்கிறான் என்று இன்னும் தெரியாது. ஆனால் அவளுக்கு பணம் தேவை. பணத்துக்காக இவனை கல்யாணம் செய்வதா? யார் இவன்? என்ற கேள்வியெல்லாம் மனதுக்குள் முட்டி மோதிக்கொண்டிருந்தாலும், அவள் சூழ்நிலை கைதியானதால, அங்கே! அமைதியாக அமர்ந்து அவன் கட்டிய தாலியை வெறித்திக்கொண்டிருந்தாள்.

download (2).jpg

"யாரு போன்ல? ஏதாவது பிரச்சினையா?"



அவளுடைய அந்த ஓட்ட செல்போனில் அவள் பேசியது, மறுமுனையில் பேசியது என்று எல்லாம் கேட்ட பின்தான் இந்தக் கெவியையே! கேட்டிருந்தான்.



இன்டவியூக்கு வந்தவளிடம் நாலு கேள்வியை கேட்டு "யு ஆர் செலெக்டெட். இந்தா அப்பொன்ட்மென்ட் ஆர்டர். என்று கையில் கொடுக்காமல் இது என்ன கேள்வி" எனும் விதமாக அவனை பார்த்து முழித்தாள் நிலா.



"என்ன செல் வச்சிருக்க நீ. நீ பேசுறது அங்க வர கேக்குது" என்றவன் அவளருகில் வந்து நின்று கை நீட்டி அவள் செல்போனை கேட்க, உரிமையான அவன் பேச்சும் செய்கையும் அவளை திணறச்ச செய்ய அனிச்சையாக அவள் கை கைப்பையை துழாவி அலைபேசியை எடுத்து அவனிடம் நீட்டி இருந்தது.



"ரொம்ப பழைய மாடல் ஆச்சே" என்று அதை திருப்பி திருப்பி பார்த்தவன், அக்கு வேர் ஆணி வேராக உள்ளே நொண்டி பார்த்து விட்டு, அதை அவளிடம் திருப்பி கொடுக்க, பத்திரமாக தனது கைப்பையில் வைத்துக்கொண்டாள்.



அவள் அதை வைத்த விதம் எளிமையை தாண்டி, அவள் வறுமை அவன் கண்களில் பளிச்சென்று பட எள்ளல் புன்னகை உதட்டில் மலர, உடனே மறைத்துக் கொண்டவன்



"ரொம்ப பணக் கஷ்டத்துல இருக்க போல" கண்களை அவன் கூர்மையாக்கி நிலாவின் கண்களை நேர்பார்வை பார்த்து கேட்க, அவள் கண்களின் ஓரம் சிறு கண்ணீர் துளி இப்போ விழாவா என எட்டிப் பார்த்தது.



"இந்த வேல எனக்கு கிடைக்குமா?" அவன் கேட்டக் கேள்விக்கு பதில் சொல்லாது அவனையே! திருப்பிக் கேட்டாள் நிலா.



"மாசம் முப்பதாயிரம் சம்பளம் வரும். புதுசா வேற வேலைக்கு சேருற, ஐயாயிரம் கம்பனில பிடிச்சிக்குவாங்க" அதுக்கு சில காரணங்களை சொன்னவன். எங்கே தங்கி இருக்க, என்று கேட்டு "மாசம் பஸ்சசுக்கு இவ்வளவு போகும். சாப்பாட்டு செலவு இவ்வளவு. வீட்டு செலவு...." பேசியவாறே தன் இருக்கையில் வந்தமர்ந்தவன் அவளையும் அமரும் படி கூற



"அது ஒன்னும் பிரச்சினை இல்ல. சாப்பாடு கூட ஒரு நேரம் சாப்பிட்டுக்கொள்வேன். வீட்டு செலவுனு ஒன்னும் இல்ல" உடனே பதில் வந்தது அவளிடமிருந்து என்னவோ வேலையை கொடுத்து முதல் மாத சம்பளத்தையும் அவளிடம் கொடுத்து விட்டதாகவே பேசினாள் நிலா.



"நான் வேலை கொடுத்தால் முதல் மாசம் சம்பளம் வர ஒரு மாசம் ஆகும் அதுவரைக்கும் என்ன பண்ணுவ?" அவன் கேள்வியில் பாவமாக அவனை பார்த்து முழித்தாள் ஆனால் அந்த கல்நெஞ்சக்காரனின் மனம் இழக்கத்தான் இல்லை.



இவளுக்கு இவன் இவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டிய தேவை ஏன் வந்தது என்று நிலா கொஞ்சம் யோசித்திருந்தால், இதெல்லாம் இவன் வேலையில்லையே! என்று கூட புரிந்திருப்பாள். வேலை கிடைத்தால் போதும் என்ற மனநிலையில் இருந்தவளுக்கு அதெல்லாம் யோசிக்காத தோன்றவில்லை.



"நான் ஒரு ஆபர் தரவா? கல்யாண ஆபர்" என்றவன் சில நிமிடங்கள் மெளனமாக அவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கண்களை அகற்றது அவள் முகபாவனையை படிக்கலானான்.

:love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "நானறியேன்
உன்னை"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Intro and Teaser,
பஸ்மிலா டியர்

பணமில்லைன்னு வில்லன் ப்ளஸ் ஹீரோவை கல்யாணம் செய்யும் நிலா நிச்சயமாக பணக்கார வீட்டுப் பெண்ணாகத்தான் இருப்பாள்
முதல் லவ்லி அப்டேட்டுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன், மிலா டியர்
 
Last edited:

Gomathianand

Well-Known Member
வாழ்த்துக்கள் மிலா டியர்(y)
வில்லத்தனமான ஹீரோ அப்ப உருட்டுக்கட்டை ஆர்டர் பண்ண வேண்டியது தான்....:p
ஹீரோ திமிர் பிடிச்சவனா இருப்பான் போலவே:cautious:
இப்படி கல்யாணச் சிக்கலில் மாட்டிக்கிட்டயேமா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top