தேவ மஞ்சரி - 6

Advertisement

n.palaniappan

Well-Known Member
சாரி சாரி சாரி பொங்கல்னால லேட்டா அப்டேட் பண்றேன் படிச்சி பாத்திட்டு நிறை குறைகளை சொல்லுக ப்ளீஸ்
View attachment 8169View attachment 8170

View attachment 8171View attachment 8172

View attachment 8173View attachment 8174
View attachment 8175
காட்டுக்குள் ஒரு திகில் பயணம்.

ருத்ரா விழுந்ததை கண்ட அனைவரும் அதிர்ந்து விட்டனர் உடனே மீட்புப்படையினர்க்கு தகவல் தரப்பட்டு தேடும் பனி தொடங்கியது ஆனால் ஆற்றின் வெள்ளத்தில் யாராலும் எதுவும் செய்ய இயலவில்லை.

கோபத்தின் விளிம்பில் இருந்த தேவ்ராஜ் தன் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தான், அவன் கவனம் இன்றி நடந்ததில் ஒரு பாறையில் மோதிய கால் பெருவிரலில் இருந்து கசிந்த ரத்தம் பாறையின் மீது பட்டு தெறித்தது. அவன் ரத்தம் பட்ட நொடி பாறை பிளந்து அவன் கண்ணில் பட்டது ஓலை (ஆம் அன்று விருபாக்ஷன் மறைத்த அதே ஓலை) அதை கையில் ஏந்திய உடன் இங்கே ஆலமரத்தில் பல ஆண்டுகளாக உறங்கிக்கொண்டிருந்த வேதாளம் விழித்தது.

இங்கு ஆற்றில் விழுந்த ருத்ரா வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டாள், இயற்கையிலேயே உடற்பயிற்சியும் பல தற்காப்பு பயிற்சியும் கற்றிருந்ததால் அவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தும் ருத்ரா தன் சுயநினைவை இழக்கவில்லை ஆற்றின் வெள்ளதோடு போராடினாள், தன் பலம் முழுவதும் திரட்டி ஒவொரு பிடிமானமாய் பிடித்து தப்ப முயன்றாள் ஆற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது தோற்றுக்கொண்டிருக்கையில் ஆறு அருவியாய் மாறி விழுவது தெரிந்தது இம்முறை உயரம் முண்பை விட இன்னும் பலமடங்கு அதிகம் விழுந்தால் உயிர் பிழைப்பது இயலாது என்பது ருத்ராவிற்கு தெளிவாய் புரிந்தது, இறுதி முயற்சியாய் அருவியின் குறுக்கே விழுந்து கிடந்த பெரிய மரம் ஒன்றை பற்றி முயற்சி செய்து ஏறினாள், அவளின் அதிர்ஷ்டமோ துரதிஸ்டமோ பார்ப்பதற்கு உறுதியாய் தெரிந்த மரம் உண்மையில் உளுத்து போய் இருந்தது. பாரம் தாங்காமல் மரம் மெது மெது வாய் உடைந்து விழுங்க தொடங்கியது. உயிரை கையில் பிடித்துக்கொண்டு கரையை நோக்கி ஓடினாள், கரையை நெருங்க நெருங்க ருத்ராவின் வேகம் அதிகரித்தது. பின்னே அவள் பாதம் அழுந்திய இடங்கள் எல்லாம் உடைந்து கொண்டே அல்லவா வருகின்றது. மயிரிழையில் என்பார்களே அது போல் கடைசி நொடியில் கரையில் தொங்கிக்கொண்டிருந்த கிளை விழுதை தவ்விப்பிடித்தாள். விழுதில் தொங்கியவரே அருவியில் விழுந்து நொறுங்கி மறந்த மரத்தை பார்க்கையில் இதயம் பலமாய் அடித்துக்கொண்டது.

கைகளில் ஓலையை ஏந்திய தேவ்ராஜ் அதை வெறித்தவாறே எவ்வளவு நேரம் நின்றானோ காட்டுக்குள் இருள் சூழ துவங்கியது, இருள் பரவ பரவ "வா வா என்னிடம் வா" என்ற குரல் அவன் செவிகளில் மோதியது நேரம் செல்ல செல்ல குரலின் வீரியம் அதிகரித்தது. மந்திரித்து விட்டது போல் குரல் வந்த திசை நோக்கி நடக்கலானான்.

ருத்ராவின் உயிர் போரட்டம் முடிவதற்குள் காடு இருட்ட துவங்கி இருந்தது, இருளில் காட்டில் அலைவது உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஒன்று, அதை உணர்ந்த ருத்ரா ஒரு உயரமான மரத்தில் ஏறி தன் விழிகளை சுழற்றினாள். தூரத்தில் ஒரு சிதைவடைந்த மண்டபம் கண்ணில் பட்டது. இந்த காட்டிற்குள் இப்படி ஒரு இடமா என்று வியந்தபடி அந்த மண்டபத்தை நோக்கி நடந்தாள்.

மந்திர குரலுக்கு கட்டுப்பட்டு வெகுதூரம் நடந்த தேவ்ராஜ் சென்றடைந்தது ஒரு மிகப்பெரிய ஆலமரத்தை. மரத்தையே வெறித்துக்கொண்டிருந்தவனுக்கு அம் மரத்தின் உச்சியில் தலைகீழாய் தெரிந்த வெள்ளை உருவத்தை கண்டவுடன் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது கால்கள் வேரோடி போயின. ஆம் அவன் கண்டது அதே தீய வேதாளத்தையே தன் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ள பலவீனமான பேராசை கொண்ட மனிதர்களை மேலும் மேலும் ஆசை காட்டி தனக்கு வேண்டியதை சாதித்துக்கொள்ளும் (இதில் தானும் அழிந்து போகவேண்டி வரும் என்பது பாவம் மனிதர்கள் உணர்ந்துகொள்வது இல்லை).

"பயம்கொள்ளதே, உன் ஆசைப்படி பெரும் செல்வம் தருகிறேன் உனக்கு, அள்ள அள்ள குறையாத செல்வம். இவ் உலகின் முடி சூடா மன்னனாக நீ வாழ என்னால் உனக்கு உதவ முடியும்."

தேவ்ராஜின் கண்கள் பளிச்சிட்டன.

"உண்மையாவா?"

"இது வியாபார உலகம் மானிடனே நான் அளிக்கும் செல்வத்துக்கு பதில் எனக்கு என்ன தருவாய்?" தேவராஜின் மனம் நிராசையை அப்பிக்கொண்டது

"என்கிட்டே என்ன இருக்கு, ஒண்ணுமே இல்லையே?"

"உன்னிடம் இப்போது இல்லை ஆனால் உன்னால் கொடுக்க முடியும் யோசித்து பதில் சொல்"

தேவ்ராஜிற்கு பயம் ஒருபுறம் ஆசை ஒருபுறம்

" அப்படி என்ன என்னால கொடுக்க முடியும் " நடுக்கத்துடன் வந்தது வார்த்தைகள்.

"எனக்கு வேண்டியது ஒரு ஆத்மா" இதை கேட்டதும் தேவராஜின் கை கால்கள் சில்லிட்டு போயின.

"என்ன?... என்ன?" காற்றாய் வந்தது வார்த்தைகள்.

" ஹா ஹா ஹா பயப்படாதே உன் ஆத்மாவை வாங்கி கொண்டு உன்னை எப்படி மன்னனாய் வாழவைப்பது? எனக்கு வேண்டியது ஒரு பெண்ணின் ஆத்மா, அதுவும் முன்பே இறந்து ஒரு ஓவியத்தில் அடைந்து கிடைக்கும் ஒரு ஆத்மா. என்னால் இம்மரத்தை விட்டு செல்ல இயலாது எனக்கு அந்த ஆத்மாவை பலியிட்டால் நீ வேண்டிய செல்வம் உனை சேரும். " வேதாளத்தின் வார்த்தைகள் மீண்டும் பேராசை தீயை விசிறிவிட்டது தேவராஜின் உள்ளத்தில்.

"நா யாரையும் கொள்ள போறதில்ல, எங்கயும் பொய் கொள்ளையும் அடிக்க போறது இல்ல ஏற்கனவே செத்தவ தான இதில என்ன பாவம் வந்திட போகுது " தனக்குள்ளே வாதிட்டவனாய் வேதாளத்தை நோக்கினான்.

"அது என்ன ஓவியம்? எங்க இருக்கு?, எப்படி இங்க கொண்டுவரனும்? அந்த ஓவியத்தில ஆத்மா இருக்கா இல்லையானு எப்படி தெரிஞ்சிக்கிறது?" கேள்விகளை அடுக்கினான் தேவ்ராஜ்.

"ஹா ஹா ஹா" என்று காடே அதிரும் படி சிரித்தது வேதாளம், "உன் கேள்விகளின் பதில் இந்த மோதிரம்"வேதாளம் சொன்ன நொடி தேவராஜின் கைகளில் மின்னியது ஒரு வெளிர் சிகப்பு மோதிரம்.

"இந்த மோதிரத்தின் ஒளி உனக்கு வழி அமைக்கும், எந்த இடத்தில் இதன் வெளிர் சிகப்பு அடர் சிகப்பு நிறம் கொள்கின்றதோ அங்கே உள்ளது அந்த ஆத்மா என்று அறிவாயாக"

வேதாளத்தையே பார்த்து கொண்டிருந்த தேவ்ராஜை நோக்கி இறுதியாக "உனக்கு உள்ளது ஒரு மண்டலம் மட்டுமே ஆத்மா கிடைக்காது போனால் நான் இந்த பூமி விட்டு செல்ல வேண்டும், நான் சென்றால் உன் ஆசை என்றும் ஈடேறாது, ஆகவே விரைந்து செயல்படு, நமக்கு நேரம் வெகு குறைவு. ஓலை பத்திரம்" கூறியபடியே மரத்தின் உச்சிக்கு சென்று மறந்தது.

ருத்ரா சென்று சேர்ந்த மண்டபத்தில் அவள் கண்டது சிதிலடைந்த நிலையில் ஓவியங்களையும் சிலைகளையும், ஏதோ ஒரு உந்துதலில் மேலும் அந்த மண்டபத்தை ஆராய்ந்தாள். மண்டபத்தை சுற்றிக்கொண்டிருந்த ருத்ராவின் கால்களில் ஏதோ தட்டுப்படுவது தெரிந்தது அதை ஆராயும் பொழுதில் அது ஒரு சுரங்கம் என்பது பிடிபட்டது ருத்ராவுக்கு. இயற்கையிலேயே அமைந்த தைரியம் துணை நிற்க சுரங்கத்தின் மூடியை அகற்றியவள் உள்ளே இறங்கினாள்.பாதை நீண்டு இருந்தது உள்ளே செல்ல செல்ல வியந்து போனாள் ருத்ரா சுரங்கத்தின் இருமருங்கிலும் பாதிக்கப்பட்டிருந்த சில கற்களில் இருந்து ஒளி கசிந்து கொண்டிருந்தது ( சந்திர காந்த கற்கள் இயற்கையிலேயே ஒளி உமிழும் தன்மை கொண்டவை முற் காலத்தில் சித்தர்கள் காட்டில் பயணம் செய்ய இதை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது) சுரங்கத்தின் இரு மருங்கிலும் சிறு சிறு அறைகள் போன்ற அமைப்பு இருந்தது, அதில் ஒரு ஒரு அரை மட்டும் சில பிரத்யேக குறியிடுகளுடன் அடைத்து வைக்க பட்டிருந்தது ஆர்வ மிகுதியில் அவ்வறைக்குள் எட்டி பார்த்தாள்.

இரவின் பிடியில் காட்டின் நடுவில் தேவ்ராஜ் முதலில் செய்வதறியாது திகைத்தான், ஆனால் பேராசை உந்தி தள்ள மோதிரத்தின் ஒளி பாய்ந்த வழி நடந்தான், மோதிரத்தின் ஒளியில் ஆந்தைகளும் வௌவால்களும் அங்கும் இங்கும் பறந்தன தூரத்தில் யானை ஒன்று பிளிறும் ஓசை கேட்டது, ஓநாய்கள் ஓலமிட்டன, பயத்தில் வியர்த்து வழிந்தது தேவராஜிற்கு. திடும் என எதிரில் வந்த ஒற்றை யானையை கண்டு வெட வெடது போனான் தேவ்ராஜ் (யானைகள் கூட்டமாக வந்தால் ஆபத்து குறைவே இதுபோல் ஒற்றையானைகள் ஆபத்தானவை கண்ணில் காண்பவை யாவையும் துவம்சம் செய்யும் வெறி கொண்டவை) வெறி கொண்டு தன் துதிக்கையை தூக்கிக்கொண்டு வந்த யானையை கண்டு தன் முகத்தை இரு கையால் மூடிக்கொண்டான் தேவ்ராஜ். வெறிகொண்டு வந்த யானை மோதிரத்தை கண்டு பயந்து தன் வாலை சுருட்டியபடி ஓடியது. யானையின் சத்தம் குறையவும் தன் கைகளை விலக்கி பார்த்த தேவ்ராஜ் கண்டது தலை தெறிக்க ஓடும் யானையையே. தன் மோதிரத்தின் சக்தியை உணர்ந்தவன் தானே காட்டின் ராஜாவை போல் உணர்ந்தான் முன்பே இருந்த பேராசையோடு அகம்பாவவும் சேர்ந்துகொண்டது.

ருத்ரா கண்ட அறையில் அழகிய பேழை ஒன்று இருந்தது. பெரும் முயற்சி செய்து கதவை திறந்தவள் பேராவலுடன் பேழையை நெருங்கினாள். எவ்வளவு முயற்சித்தும் பேழையை திறக்க முடியவில்லை சுரங்கத்தின் வெப்பமும் ருத்ராவின் விடா முயற்சியும் அவளுக்கு வியர்வையை பெறுக செய்தது அதை துடைக்கும் எண்ணம் எதுவும் இன்றி பேழையை திறப்பதில் மும்முரமாய் இருந்தாள். அவளின் வியர்வை பேழையை நனைக்க நனைக்க பேழை மெது மெதுவாய் திறந்தது. பேழை திறந்தவுடன் அந்த அறைமுழுதும் மூலிகையின் சுகந்தம் நிறைந்தது அதில் இருந்த ஒரு மஞ்சள் நிற துணி மூட்டையை கைகளில் ஏந்தி பிரித்துப்பார்த்தாள் ஒரு அழகிய பெண்ணின் ஓவியம் மிகவும் அழகாய் வரையப்பட்டு இருந்தது அழகிய நதியின் ஓரத்தில் ஒய்யாரமாய் வீற்றிருந்தாள் காரிகை ஒருத்தி.

மோதிரத்தின் ஒளியை பின்பற்றி மண்டபத்தின் முகப்பிற்கு வந்திருந்தான் தேவ்ராஜ், மோதிரம் தன் வெளிர் சிக்பில் இருந்து அடர் சிகப்பிற்கு மாறியிருந்தது வேக வேகமாக மண்டபம் முழுதும் அலசினான் அவன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மோதிரத்தின் ஒளி மங்க தொடங்கியது, ஆம் ருத்ரா அந்த ஓவியத்துடன் சுரங்கத்தின் மறு புறம் வெளியேறி காட்டின் மறுபக்கம் சென்றிருந்தாள். ஏமாற்றத்தை தங்க முடியாது அப்படியே மடிந்து அமர்ந்தான் தேவராஜ். வெறும் கையுடன் வேதாளத்தை காண அஞ்சி மாற்று வழி வழியே காட்டை விட்டு வெளியேறினான்.


Nice aNd trick epi
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top