தேவ மஞ்சரி - 5

#1
நன்றி நட்புக்களே, இதோ அடுத்த அத்யாயம்

sooting spot.PNG

சூட்டிங் ஸ்பாட்
அது ஒரு அழகான மலைக்காடு பச்சை போர்த்திய மலை, இயற்கை அன்னையின் தாய் பாலாய் பொங்கிவழியும் நீர்வீழ்ச்சி என்று சொர்கத்தின் மறு பிரதியாய் இருந்தது. காட்டுக்குள் கேரவணனை எடுத்து செல்ல இயலாத காரணத்தால் வெளீயே சமவெளியில் வண்டிகளை நிறுத்திவிட்டு உணவுக்கு பிறகு தேவையான பொருட்களை மட்டும் எடுத்து கொண்டு காட்டிற்குள் செல்வது என்று முடிவானது.


இயற்கையை ரசித்தவாறு வேதாந்த் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்திருந்தான், காட்டிற்குள் காட்டிலாகா துறையின் அனுமதி இல்லாமல் யாரும் வருவது இயலாது ஆகையால் ஆட்டோகிராப், போட்டோக்ராப். என்று தொல்லை செய்யும் எவரும் அங்கு இல்லை அந்த ஏகாந்தத்தை மிகவும் அனுபவித்து அமர்ந்திருந்தான். எப்போதும் வேதாந்த்துடன் ஒட்டிக்கொண்டு அலையும் தாரா கூட தன் மேனியை பாதுகாக்க கேரவனில் புகுந்து கொண்டாள். தாராவின் இந்த தனிமையை தன் உள்ளத்து காதலை வெளிப்படுத்திவிட பயன்படுத்த எண்ணினான் தேவ்ராஜ் எனவே தரவின் உணவு தட்டை நிரப்பிக்கொண்டு கேரவனை நோக்கி நடந்தான், கையும் காலும் நடுங்க தன் இதயமே வெளியில் வந்து விழுந்துவிடுமோ எனும் அளவு படபடப்பு எனவே தட்டை இறுக்கப் பிடித்தவண்ணம் எதையும் யோசிக்காமல் கேரவனில் நுழைந்தான்.

உணவுடன் உள்ளே சென்றவன் கண்டது பாதி உடை அணிந்து கொண்டிருந்த தாராவைதான், அவளை அப்படி ஒரு கோலத்தில் கண்டவுடன் திக்ப்ரமை பிடித்தது போல் நின்றுவிட்டான். உடை மாற்றி திரும்பிய தாரா தன்னை வெறித்து பார்த்தபடி நிற்கும் தேவராஜை கண்டவுடன் கடும் கோபத்தில் கத்த துவங்கினாள்.

"யூ யூ இடியட், உள்ள வரும்போது கதவ தட்டிட்டு வரணும்ன்ற மேனஸ் கூட தெரியாது, உன்ன சொல்லி குத்தம் இல்ல மேன், நாய குளிப்பாட்டி நடுவீட்ல வச்ச மாதிரி தராதரம் தெரியாத உன்னையெல்லாம் கூட வச்சிருக்கான் பார் வேதாந்த் அவனை சொல்லணும், கெட் அவுட் ஒப் மை சயிட் யு பாஸ்*** .

முகம் கன்ற வெளியேரினான் தேவ்ராஜ். உடலும் மனமும் கூசி குறுகி போனது "நாம் அவளை தேவதையாய் மனதில் நினைத்திருக்க அவள் என்னை நாயாய் நினைக்கிறாளே நம்மிடமும் பணம் இருந்தால் இப்படி கூறுவாளா இளித்துக்கொண்டு நம் பின்னால் நாய்க்குட்டியை போல் அவள் அல்லவா வருவாள்" உள்ளுக்குள் மருகினான், நீறு பூத்த நெருப்பாய் உள்ளம் கனன்று கொண்டே இருந்தது.

உணவு முடிந்ததும் அனைவரும் மலை ஏற சென்றனர், உயரிய மரங்களும், புதர்களும், சிறிதும் பெரிதுமாய் நீர்வீழ்சிகளும் கண்களை கவர்ந்தன. ருத்ராவும் அழகை ரசித்தாள் தான் ஆனால் அவள் ரசிக்கும் அழகு எதுவென்று நமக்குத்தான் தெரியுமே.

அது கதாநாயகி மலையில் இருந்து விழுந்து உயிர் விடும் காட்சி, அதற்கு டூப் போடுவதற்காக ருத்ரா தயாராய் நின்றாள், அனால் அவள் உள்ளமோ உலைக்களமாய் கொதித்து கொண்டு இருந்தது காரணம் புதிதாய் வந்த கதாநாயகி தாரா. வந்தது முதலே வேதாந்த்தை விதவிதமாய் கவர முயன்று கொண்டிருக்கிறாள், ஒரு நேரம் தான் பாதி உண்ட சாக்கோலேட்டை ஊட்டி விட முயன்றாள், காதல் காட்சிகளில் வேண்டுமென்றே ரீடேக் வாங்கி வேதாந்த்தை கட்டிக்கொண்டு நின்றாள், அவள் அரைகுறை ஆடையின் அபாயகரமான வளைவுகளை வேண்டும் என்றே வேதாந்த்தின் முன் வெளிச்சமிட்டு காட்டினாள், இப்போது இறுதியில் வேதாந்த்துக்கு முத்தமிட்டு ஓடிவந்து மலைமேல் இருந்து விழுந்து உயிர் விடும் காட்சி. இயக்குனர் என்னவோ அழுந்த நெற்றியில் முத்தமிட்டு ஓடிவரத்தான் கூறினார் அனால் சந்தர்ப்பத்தை பயன்படுத்திய தாரா வேதாந்த்துக்கு உதட்டில் முத்தம் வைத்தாள். என்னதான் கதாநாயகனாக இருந்தாலும் வேதாந்த் எப்பொழுதும் ஒரு கட்டுப்பாடோடு நடிப்பவன், கதாநாயகிகளிடம் அதிகம் இழையவோ குழையவோ விரும்பாதவன் இன்றுவரை இதழ் முத்த காட்சிகளில் அவன் ஒத்துக்கொண்டது கிடையாது. இவாறான குணங்களே ருத்ராவை வேதாந்த்தின் பால் அதிகம் ஈர்த்தது எனலாம். அதுவும் அன்றைய தினத்திற்கு பிறகு வேதாந்த் ருத்ராவின் ஒவொரு அணுவிலும் நிறைந்து விட்டான். இப்படி இருக்க எதிர்பாராத முத்த காட்சியால் நிலைகுலைந்து போனாள் ருத்ரா.

ருத்ராவின் நிலை இப்படி இருக்க அங்கு தேவராஜோ கோபத்தின் உச்சியில் நின்றான் அம் முத்த காட்சியால் " என்ன விட அந்த வேதாந்த்த உனக்கு ஏன் பிடிக்குது, நல்ல ட்ரெஸ்ஸும் மேக்கப்பும் போட்டா அவனைவிட நா அழகா இருப்பேனே அவன்கிட்ட இருக்கிறது என்கிட்ட இல்லாதது பணமும் புகழும், டேய் வேதாந்த் உன்னோட சம்பாத்தியல ஒரு பெர்சன்ட் குடுத்து இருந்தா கூட நா இன்னும் நல்லா இருந்திருப்பேனே, கடைசிவரைக்கும் என்ன உன் கால் செருபா இருக்க வைக்கதான பிளான் பண்ற, அழிகிறண்டா உன்ன" மனதுக்குள் குமைந்தான். தாராவின் மீது இருந்த வெறுப்பு, கோவம் தன் சுய பச்சாதாபம் எல்லாம் வேதாந்த்தின் மீது வெறுப்பை வளர்த்தது பழி பழி என்று மனம் குமுறியது. அவனுக்கு யார் சொல்வது இதில் வேதாந்த்தின் பங்கு ஒரு சதவிகிதம் கூட இல்லை என்று பழி ஒரு புறமும் பாவம் ஒருபுறமும் சேர்ந்தது.

தன் பழியை தீர்க்க இது சமயம் அல்ல இப்படியே இங்கேயே இருந்தால் எங்கே தன்னையும் மீறி ஏதாவது செய்து மாட்டிகொள்வோமோ என்று அஞ்சி காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தான்.

தன் மண போராட்டத்தில் உழன்று கொண்டிருந்த ருத்ரா தன்னோடு பிணைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு கயறு பாதி அவிழ்ந்து இருந்ததை கவனிக்க வில்லை, ருத்ரா இருக்கும் காட்சிகளில் அவளே எல்லாம் கவனித்துக்கொள்வாள் என்பதால் மற்றவர்களும் சற்று அசட்டையாகவே இருந்துவிட்டனர்.

முத்தமிட்டு தாரா ஓடிவரவும், உரிய பாதுகாப்பு இன்றி ருத்ரா அருவியின் உச்சியில் இருந்து குதிகவும், கயறு அவிழ்ந்து விழவும் எல்லாம் சில நிமிட நேரத்தில் முடிந்து விட்டது. யாரும் எதுவும் செய்ய இயலாத நிலை. ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றின் சுழியோடு அடித்து செல்லப்பட்டாள் ருத்ரா.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement