தேவதையிடம் வரம் கேட்டேன் P11

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
இன்னும் கம்ப்ளீட் பண்ணல அநேகமா காலைல UD போடலாம்.:giggle::giggle:


download (26).jpg

மதி நிர்மலோடு சென்ற பிறகு சோபாவில் தொப்பென்று அமர்ந்த அக்ஷய் "மன்னிச்சிக்க மதி எந்த நேரத்திலும் உன்ன விடக் கூடாதென்று தான் உன்ன கண்ட பொழுதே என் பக்கத்துல வச்சுக்கணும், உனக்கு எந்த ஆபத்தும் வர விடக் கூடாதென்று ஏதேதோ திட்டம் போட்டு உன்ன என் பக்கத்துலயே வச்சிக் கொண்டேன். ஆனா ருத்ரமகாதேவியை இப்போது என்னால சந்திக்க முடியாது. உன்ன தனியா விடவும் முடியாம, உன் கூட போகவும் முடியாம நான் படும் பாடு எனக்கு மட்டும் தான் தெரியும்" கைகளால் முகத்தை மூடியவாறே அமர்ந்திருந்தவன் தனக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

**************************************************************************************

தனது வீட்டின் முன் வண்டியை நிறுத்திய ப்ரீத்தி உள்ளே செல்ல அக்ஷையின் வண்டி வருவதைக் கண்டு அவனை நிறுத்தி இறங்குமாறு மதி சொல்ல



"எதுக்கு இங்க நிறுத்தணும்? அங்கேயே இடம் இருக்கே! என்று ப்ரீத்தியின் வீட்டு முற்றத்தைக் காட்ட



பல்கலைக் கடித்த மதி "ஆமா நாம விருந்துக்கு வந்திருக்கோம். அவ வீட்டு முன் போய் வண்டிய நிறுத்த" அக்ஷையை முறைத்தவாறே சொல்ல கண்சிமிட்டி சிரித்தான் அவன்.

images (20).jpg

"என்ன டென்ஷன் பண்ணவே ஏதாவது சொல்லுக்கிட்டு இருப்பான். லூசு" முணுமுணுத்தவள் என்ன செய்ய போகிறோம் என்பதை விவரிக்கலானாள். அனைவரும் கவனமாக கேட்டுக் கொண்டு தலையை ஆட்ட அக்ஷய் மட்டும் யோசனையில் விழுந்தான்.



"என்ன நான் சொன்னது புரிஞ்சுதா? இல்லையா?" மதி அக்ஷையை உலுக்க, புரிஞ்சது எனும் விதமாக தலையசைத்தான்.



நிர்மலை ஸ்வீட்டியிடம் விட்டு விட்டி அக்ஷய், மதி ராஜவேலு மூவரும் உள்ளே நுழைய ப்ரீத்தி அமர்ந்து பூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தாள்

*******************************************************************

"என்ன மதி யோசிக்கிற? அவ அந்த புள்ள உடம்ப விட்டு வருவான்னு தோணல"



"அந்த கண்ணாடியை உடைக்கணும். பாம்பும் சாகனும் கட்டையும் உடையக் கூடாது" சுருக்கமாக சொல்ல



கண்ணாடி உடையனும், மாட்டிக்கவும் கூடாது என்று மதி சொன்னதை சரியாக புரிந்துக் கொண்ட ராஜவேலு அங்கே சுத்திக்கு கொண்டிருக்கும் பூனையை தேட அது சமத்தாக தூங்கிக் கொண்டிருந்தது.



தூங்கும் பூனையை எழுப்பி அதை சீண்ட அதுவும் ராஜவேலுவை துரத்த கண்ணாடியின் பின் பக்கமாக வந்த நின்ற ராஜவேலு பூனை தாவி வரும் பொழுது மாயமாக மறைய கண்ணாடியில் மோதி பூனை கண்ணாடியோடு விழ கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து தெறித்தது.



கண்ணாடி உடையவும் கோபத்தில் கனன்ற ப்ரீத்தி தான் வளர்க்கும் செல்லப் பூனை என்பதால் அதை அங்கே இருந்து அகற்ற ஏதோ மந்திரம் சொல்லி மாயமாக மறைய வைத்தாள்.



"பாரு...டா... செல்ல பூனை மேல வச்சிருக்கும் பாசம் கூடப் பொறந்த தங்கச்சி மேல இல்ல" மதி கிண்டலாக மொழிய



அவள் அருகில் வந்த அக்ஷையோ "மதி நேரமாகிக் கிட்டு இருக்கு அந்த ஆத்மா வெளில வரும் வழி தெரியல அத வெளில எடுக்க, நம்ம காப்பு உதவுமா?" கையை தூக்கிக் காட்ட



"மெதுவா பேசுங்க அவ காதுல விழுந்துடப் போகுது" மதி கிசுகிசுக்க



மேலும் அவளை நெருங்கி நின்றவன் "இப்படி நெருங்கி நின்று பேசினால் ஏதேதோ தோணுது டி.." சொல்லியவாறே அவளை முத்தமிடப் போவது போல் பாசங்கனு செய்ய எங்கே இருக்கின்றோம் என்று மறந்து அவனை தள்ளி விட்டாள் மதி.


images (16).jpg




சமநிலை தவறியவன் தேசிக்காய் வட்டத்துக்குள் இருக்கும் மண்ணாலான பொம்மை மீது விழ பொம்மை துகள் துகளாக உடைய ஸ்வீட்டியின் ஆத்மா மாயமாக மறைந்தது.


"ஐயோ.... ஐயோ... அந்த பொண்ணு மறையுது ராஜவேலு கத்த மதியும் ஸ்வீட்டியின் புறம் திரும்பினாள் சுவீடியோ காற்றில் கரைந்துக் கொண்டிருந்தாள்.

:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top