தேவதையிடம் வரம் கேட்டேன் into

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் புதுக்கதை தேவதையிடம் வரம் கேட்டேன். உங்க அன்போடும் ஆதரவோடும் ஆரம்பிக்கின்றேன்.

ஒரு பாண்டஸி கதை எழுதணும்னு ஆசை. உன் கண்ணில் என் விம்பம் முடிந்த பிறகுதான் ஆரம்பிப்பேன்.

நம்ம தேவதை எப்படி இருக்கானு ஒரு குட்டி டீசரோடு பாத்துடலாம்.

download.jpg

முன்னொரு காலத்தில் காட்டுல ஒரு தேவதை எலுமிச்சை நிறத்தோடு, கூந்தல் கால் பாதத்தை விடவும் நீளமாக, பெரிய கண்களோடு, சிவந்த உதடுகளோடும், கொடி இடை கொண்டவளாகவும், கண்ணோட கருவிழி இருக்கில்ல கருவிழி அது காட்டு பச்சை நிறத்தில் இருக்குமாம். ரொம்ப அழகா இருந்தாளாம்.



மிருகங்கள், பறவைகள் அனைத்தையும் தன் வசப்படுத்தி காரியம் சாதிப்பாளாம். மரம் செடி, கொடி பூக்கள் கூட அவளுக்கு அடிபணியுமாம். அவளுடைய சிறகுகள் விரிந்தால் அப்படியே மெய்மறந்து மனிதர்கள் அவளிடம் வசப்படுவார்களாம்.



மனிதர்களோட வெற்றுக் கண்களுக்கு தெரியமாட்டாளாம். பௌர்ணமி இரவில் மட்டும் தான் தெரிவாளாம். அதுவும் குறிப்பிட்ட சில பேரோட கண்களுக்கு மட்டும். பௌர்ணமி இரவில் காட்டுக் கோவில்ல பூஜை செய்ய வருவாளாம். அப்போ ஒருத்தர் ரெண்டு பேர் பார்த்திருப்பதாக சொல்வாங்க.



"ஏன் தாத்தா பௌர்ணமி இரவுல ஸ்பெஷல் பீபள் கண்களுக்கு மட்டும் தெரியுறா"



மனிதர்களின் ஆத்மாவை எத்தனையோ வகைகளாக தரம் பிரிப்பாங்க அதுல தூய ஆத்மாவின் கண்களுக்கு மட்டும் தான் தெரிவாளாம்.



"நம்பர் ஒன் னா?"



"ஆ அப்படியும் சொல்லலாம்"



அவ எங்க இருந்து வந்தானு யாருக்கும் தெரியாது. ஆனா வரம் கொடுத்தா கண்டிப்பா நடக்குமாம். மனிதர்களை பார்த்தாவே நல்லவன் யாரு? கெட்டவன் யாருனு கண்டு பிடிப்பாளாம், நல்லவர்களுக்கு தேவதையாகவும், கெட்டவர்களுக்கு ராட்சசியாகவும் தெரிவாளாம்.



ராட்சசி என்ற உடன் கோரப்பற்களோடு, சிவப்பேறிய விழிகளும், திராட்சை நிற தேகம் என்று தப்பாக இடை போடாக கூடாது.



கெட்டவங்க வரம் கேட்டா அத அவங்களுக்கு எதிரா திருப்பி விட்டுடுவாளாம்.



"கண்களுக்கு தெரிய மாட்டேன் னு சொன்னீங்க எப்படி வரம் கொடுப்பா?" தாத்தனையே கேள்வி கேட்டு மடக்கினாள் மதியழகி.



"அமாவாசை நாள்ல எல்லார் கண்களுக்கும் தெரிவாளாம். ஆனா அது பார்க்குறவங்க பார்வையை பொறுத்து தெரிவாளாம்"



"புரியலையே!" கண்களை உருட்டி யோசிக்க



சத்தமாக சிரித்த தாத்தா மருதாச்சலம் "நம்ம மனசால சுத்தமானவங்களா இருந்தா அழகாகவும், கெட்டவங்களா இருந்தா அசிங்கமாகவும் தெரிவாளாம்"



ஆனா அவள யாராவது பாக்கணும்னு அவளே முடிவு பண்ண அவங்க கண்களுக்கு மட்டும் தெரிவாளாம்.



"ஓகே"



"அவ பேரென்ன தாத்தா" ஆர்வமாக கதை கேட்டுக் கொண்டிருந்த மதியழகி ஆறே வயதான சுட்டிப் பெண்.



"தேவி ருத்ரமாகதேவி. எப்படி இருக்கு பேரு?" தாத்தா கண்ணாடியை உயரத்திக் கேக்க



"சூப்பர்" என்று கை தட்டினாள் மதியழகி.


images (2).jpg
இன்றோ பௌர்ணமி ருத்ரமாகதேவி காட்டுக் கோவிலுக்கு வருகை தரும் நாள். பௌர்ணமி நிலவின் ஒளியில் அவளின் தேகம் தக தகவென ஜொலிக்க, கண்களின் கருவிலியிலும் அதன் ஒளி பட்டுத் தெறிக்கும். நீண்ட அவள் கூந்தலோ அவள் நடந்து வந்த பாதையின் அடையாளாச் சின்னம். கொடியிடையலாகி கொண்ட மங்கையவள் கூந்தலில் சூடியிருக்கும் மலர்களோ தேவலோகத்து மலர்கள். அவளின் கிண்கிணிச் சிரிப்பு சத்தம் கேட்டாலே காளையர்கள் காதல் வயப்படுவார்கள்.




அவளோ பல்லாயிரம் வருடங்களாக அவளின் காதலனுக்காக தவமிருக்கின்றாள். அது அவனை மீண்டும் காதல் கொள்ளவல்ல, அவனை தன் இரு கரங்களாலும் பலி தீர்த்து சாப விமோச்சனம் பெறவே!



ஆனாள் இந்த ஜென்மத்தில் அவன் யாராக பிறப்பான் என்று அவள் அறியவில்லை. தேடித் கண்டு பிடிக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கிருக்க, அதை மானிட பிறவியின் உதவியோடு தான் செய்ய வேண்டியும் இருந்தது.



அதற்க்கு தூய ஆத்மாவை தேடித் பிடிக்க வேண்டிய கட்டாயம் அவளுக்கிருக்க, அவளின் தரிசனத்துக்காக இந்த காட்டில் பௌர்ணமி இரவில் யார் வருவார்கள்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "தேவதையிடம்
வரம் கேட்டேன்"-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
பஸ்மிலா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top