தென்றலை சிறை பிடித்த கள்வன்... 22

#1
22... தென்றலை சிறை பிடித்த கள்வன்...

சேகரை கண்டதும் டென்ஷன் அதிகமாகி மூக்கில் இரத்தம் வடியவே மயக்கமான ரியாவைப் பார்த்து பதறிப்போனவர்கள் டாக்டரை அழைக்கவே...

வந்து உடனடியாக அவளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்

"பயப்பட ஒன்னும் இல்லை சின்ன அதிர்ச்சிதான்... டென்ஷன் ஆகாமல் பார்த்துக்கோங்க"... கூறியவர்

ரிச்சர்டை தனியே அழைத்துச் சென்றார்...

"சார் இன்னைக்கு அவங்க ஏதோ கோபப்பட்டிருக்கணும்... அல்லது அவங்களுக்கு எரிச்சல் கொடுக்க கூடிய ஏதோ ஒன்றை அவங்க பார்த்திருக்கணும்... சோ என்னன்னு பாருங்க"... அவனிடம் சொன்னவர் அழைப்பு வரவே விடைபெற்றுக்கொண்டார்...

'அப்படி என்ன டென்ஷன் அவளுக்கு?'...

யோசித்த வண்ணம் ரூம்க்கு வந்தவன்... சேகர் சென்று விட்டான்... ரியா உறக்கத்தில் இருக்க... நம்பியார் அவளருகில் அமர்ந்திருந்தார்...

அங்கே சென்றவன்.அவளின் அம்மாவைக் கேட்டான்...

"என்ன ஆச்சு?... ஏன் டென்ஷன் ஆனா?... ஏதாவது திட்டுனீங்களா?"...

"ஆமா... ஆமா... விரல் பதியறா போல அடிச்சு காயப்படுத்தினா மட்டும் தப்பு இல்லையாம்... நான் திட்டுனா மட்டும் தப்பாம்... ம்கும் நல்லாத்தான் பேசறீங்க மருமகனே"... நொடித்துக் கொண்டார் மோகனா

"ஓ... இப்போ நல்லாவே புரியுது... இந்த அடங்காப்பிடாரி வாய் பேச எப்படி யாருக்கிட்டே கத்துகிட்டான்னு"... மோகனாவிடம் கடுகடுத்தான்...

"அப்போ... அதான் தெரியுதில்லை அப்புறம் ஏன் இங்கேயே சுத்தனுமாம் விட்டுட்டு போக வேண்டியதுதானே?... இத்தனை வருஷத்துல 1 நாள் அடிச்சிருப்பேனா நான்?... இல்ல பசியில் தான் வாட விட்டிருப்பேனா?...

கூட்டிட்டு போய் ஒரு நாள் கூட முழுசா முடியலை...
அதுக்குள்ள என் பொண்ணை முகமெல்லாம் அடிச்சு காயப்படுத்திட்டு... பைக்கே ஓட்ட தெரியாத பொண்ண... பைக்கை ஓட்டச் சொல்லி வெறும் வயித்தோட அனுப்பி...

பாவம் என் பொண்ணு ஏதோ நான் பண்ணுன புண்ணியம் தான் அவளைக் காப்பாத்துச்சு"...

பேசிக்கொண்டே கண்களை கசக்கிய மோகனா ஓரக்கண்ணால் கோபத்தில் கண்கள் சிவக்கும் மருமகனைப் பார்த்தவர்...

"இதோ பாருங்க என் பொண்ணுக்கு அடிக்கற மாப்பிள்ளை எல்லாம் வேண்டாம்... நாங்க நல்ல பையனா சென்னையில் பார்த்து வச்சுட்டோம்... அருமையான பையன்... பொண்ணை பூ மாதிரி பார்த்துப்பான்... அதனால் நீங்க விலகிடுங்க"... அவனை மேலும் கடுப்பேத்தினார்

'ஓ இது அவளுக்கு தெரியுமா?"...

"எதுக்கு தெரியனுமாம்?... நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போய் மாப்பிள்ளை பையனை வர சொல்லி... சொல்லாம கொல்லாம தாலியை கட்டுடான்னு சொன்னா கட்டிட போறான்... அதுக்கப்புறம் ரியா கழுதை அவன் கூட குடும்பம் நடத்தித்தானே ஆகணும்?"...

மோகனா அவனது மனநிலை பற்றி அறியாது பேசிக்கொண்டே சென்றவர் நம்பியாரின் கண்ஜாடையைக் கண்டு அமைதியானார்...

நம்பியார் ரிச்சர்டை கவனித்து விட்டு மெதுவாக பேச்சுக் கொடுத்தார்...

"நீங்க பேசுறது ஒன்னும் சரியில்லைங்க...
அவங்க ரெண்டு பேரும் விரும்புறாங்க... அப்புறம் தெரிஞ்சுகிட்டே வேற பையனை பார்த்தா எப்படி?"...

'அதான் என் பொண்ணு வேணாம்னு சொல்லிடுச்சாமே உங்க பையனை... இப்போ கேட்டாலும் அப்படித்தான் சொல்லுவா... மயிலே மயிலேன்னா இறகு போடாதுப்பா... ஈகோ பார்த்துட்டு தெரிஞ்சா சாமியார்தான் ஆகணும்... இப்போ இருக்குற பசங்க எல்லாம் பணம் சம்பாரிக்கத்தான் லாயக்கு... ம்கும்...

அவ எப்போ சரின்னு சொல்லி... எப்போ இவரு கல்யாணம் பண்ணுவாராம் கல்யாணம்?...

"சோ என்ன சொல்ல வரிங்க நீங்க?"...

அவன் அப்படி கேட்கவும் பம்மியவர்

"நான் எதுவுமே சொல்லையே... நிலவரத்தை சொன்னேன்... நீங்கதான் உஷாராக இருக்கணும்... ரியா அப்பாவை நம்பவே முடியாது இன்னைக்கு கூட கல்யாணம் பண்ணி வச்சுடுவார்"...

அவள் மேற்கொண்டு பேசும் முன்னர்... ரியா கண் விழிக்கவே நம்பியார் மோகனாவை கண் ஜாடை செய்து வெளியே அழைத்தார்...

வெளியே வந்ததும் புன்னகைத்துக் கொண்டனர்...

"ஆமா நம்ம திட்டம் சரியா போகுமா சம்பந்தி?"...

"எல்லாம் சரியாதான் போகும்... அந்த சேகர் கிட்ட இருந்து ரியா தப்பிக்கணும்னா இதை விட்டா வேற வழி இல்லை". ..

அதில் முகம் வாடியவர்... "ம்ம்ம் நீங்க சொல்றதும் சரிதான்... இப்போதைக்கு இவ விருப்பப்படி விட்டோம்னா தருதலையாதான் சுத்துவா... எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம் அவகிட்ட சிக்கணும்னு இருக்கு"...

அதில் சிரித்தவாறே அவரை வெளியே அழைத்து சென்றார் நம்பியார்...

ரியாவின் அருகில் அமர்ந்திருந்தவன் அவளையே உற்று பார்த்துக்கொண்டிருந்தான்...

ரியாவுக்கு என்று அமர்த்தப்பட்டிருந்த பணிப்பெண் அவளுக்கு தலை வாரி விட்டு படுப்பதற்கென வசதியாக உச்சியில் கொண்டையிட்டு... சிறிது முடியை சுருள் கற்றையாக தொங்க விட்டு இருந்தாள்... பார்க்க அவளுக்கு அழகாக இருந்தது...

நெற்றியில் சிறு போட்டு மேலும் அழகு சேர்க்க சாயமிடாத உதடுகள் அவனை ஈர்த்தது அவளருகில்...

அவனது பார்வையை அது செல்லும் இடங்களை உணர்ந்து கொண்டவள் அதைப் பார்க்காதது போல படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்...

பார்க்காதது போல் இருந்தாலும் அவனது கண்கள் அவளையே விடாது பார்க்க வெட்கத்தில் உடல் சிவந்து போனது...

அவளது வெட்கத்தை உணர்ந்தவனின் பார்வை மாறவே... அருகில் நெருங்கி அமர்ந்தவன்... கைகளை பற்றிக்கொண்டான்...

அதில் பதறினாள் ரியா... மருந்தின் பாதிப்பால் அரை மயக்கத்தில் இருந்தவள் அவனின் செயலால் தடுமாறினாள்...

,'என்ன பன்றிங்க நீங்க... விடுங்க என்னை யாராவது வந்துட்டா என்ன நினைப்பாங்க... பிலீஸ் விடுங்க கையை"
கெஞ்சினாள் அவனிடம்

"யாரு என்ன நினைப்பாங்கன்னு எல்லாம் கவலை இல்லை எனக்கு... நீ எனக்கு கிடைக்கணும் அதுவும் நாளைக்குள்ளே"... வெறியுடன் அவளைப் பார்த்தவாறே கூற அவளுக்கு அடிவயிற்றில் குளிர் பரவியது...

"இதோ பாருங்க உங்களுக்கு என்னவோ ஆகிடுச்சு... சோ வெளியே போய்டுங்க"...

"ஏய் நீ கிஸ் பண்ணுவே சிரிப்பே பின்னாடியே சுத்துவே அப்புறம் கழட்டி விட பார்க்குவே அப்படித்தானே டி"...

அவன் வரிசையாக அடுக்கவும் வாயை பிளந்தவாறே அவனையே பார்த்தாள் அதிர்ச்சியுடன்...

'ஆத்தி இதுலாம் நான் சொல்லிருக்க வேண்டிய டைலாக் இப்போ ட்ராக் மாறி ஓடிட்டிருக்கே கதை... என்ன நடக்குதுன்னு ஒண்ணுமே புரியலயே ஆண்டவா?'... புலம்பினாள் மனதில்...

"என்னடி பதில் சொல்லு"... உளுக்கினான் அவளை

அவன் உலுக்கியத்தில் கீழே விழுந்ததால் கை வலிக்கவே ஆஅ வென கத்தினாள்...

'ஏய் என்ன ஆச்சுடி டாக்டர் வர சொல்லவா?'... பதறினான்

"இல்லை வேண்டாம்"... அவனது கையை விளக்கி விட்டவாறே கூறினாள்...

அவனோ இதமாக அழுத்தி விட்டான் கையை... அதில் கூச்சமாக இருக்கவே சிலிர்த்தாள்...

"அச்சோ பாவா விடுங்க கூசுது"... கையை அவனிடம் இருந்து விடுத்தவாறே சிணுங்கினாள்...

சிணுங்கியவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன்...

"ஜில்லு"... காற்றுக்கே கேட்டகாத குரலில் மெதுவாக அழைத்தான்...

அவள் எந்த பதிலும் கொடுக்காது அமைதியாக இருக்கவே...

மீண்டும் முயற்சி செய்தான்

'ஜில்லு... ஏய் ஜில்லு"... அவனது குரல் அவளது மனதை தொடவே...

"ம்ம்ம் என்ன பாவா?"... அவள் பதிலில் மகிழ்ந்தவன் மேலும் அவளது ஆழ் மனதை தட்டி எழுப்ப முயற்சி செய்தான்...

"உனக்கு என்னை பிடிக்குமாடி?"...

"ம்ம்ம் ரொம்ப பிடிக்கும் பாவா... ரொம்ப அழகு பாவா நீங்க"... கூறும் போதே அவளது முகம் வெட்கத்தில் சிவந்து போனது...

அவளது வெட்கத்தில் கிறங்கியவன் மேலும் கேள்விகளை கேட்களானான்... அவளும் மனதில் உள்ள உண்மைகளை உளறினாள்... மயக்கத்தில் மனதில் உள்ளதெல்லாம் அவள் கூறவே அவனுக்கு மனம் உருகிப்போனது...

"பாவா நான் உங்ககிட்ட லவ் சொல்லிடனும்னு தான் வந்தேன்... ஆனா எனக்கு நீங்க இவ்ளோ பெரிய ஆள்ன்னு தெரியாதே பாவா?.....

எனக்கு மனசு ரொம்ப வலிச்சுது பாவா... நீங்க கஷ்டப்பட்டு நானும் பட்டு பச் போங்க பாவா...

பாவா லவ் யூ பாவா... நீங்க இப்போ எல்லாம் என்னை கிஸ் பண்றதே இல்லை தெரியுமா... ரொம்ப எதிர் பார்ப்பேன் ஏமாத்திடுவீங்க... அன்னைக்கு ஸ்பெசலா
ஒரு ஸ்வீட் வாங்கினேன்... அதை உங்களுக்கு தரணும் கிஸ் பண்ணனும்னு வந்தேன் திட்டி. அனுப்பிட்டிங்க நீங்க"... உதட்டை பித்துக்கியவள்

"ஆனா டார்லிங் கிட்டே லேசா சொன்னேன் அவரு புரிஞ்சுருப்பார் கண்டிப்பா"...

இவ்ளோ நேரம் நல்லபடியாக பேசிக்கொண்டு போனவள் நம்பியாரை கோர்த்து விட்டாள் அவனிடம்...

அயர்ந்து போனவள் அப்படியே உறங்கி விட... சிறிது நேரம் அவள் கூறிய விஷயத்தில் மனமும் உடலும் பாரம் அகன்று நிம்மதியாக அமர்ந்து கொண்டிருந்தவன்... மோகனாவும் நம்பியாரும் வரவே... அவளை விட்டு விட்டு நம்பியாரிடம் காய்ந்தான்

"யோவ் ஒல்ட்மேன் உங்களுக்கு இருக்குது இரு வச்சுக்கிறேன் உங்க ரெண்டு பேரையும் அப்புறமா"... கூறியவன் வெளியே செல்ல...

மறுநாள் அவளை வீட்டுக்கு அழைத்து செல்லும் நாள்... அனைவரும் கூடி விட்டார்கள் அங்கே... ரிச்சர்ட் வீட்டினரும்... ரியாவின் வீட்டினரும் இருந்தார்கள்...

நாம எல்லோரும் கோவிலுக்கு போய்ட்டு அப்புறமா வீட்டுக்கு போகலாம்
வனிதா அவர்களிடம் கூறினார்

( சாரி பிரண்ட்ஸ்... கொஞ்சம் பிஸி... சோ 3 ud சின்னதா போயிடுச்சு... திங்கள்ல இருந்து பெரியதா வந்திடும்... அப்புறம் கதைல லாஜிக் இல்லைனாலோ... புரியலைனாலோ நீங்க அங்கே போஸ்ட் க்கு கீழேயே தாராளமா சொல்லலாம்... நான் ரொம்பவே ஸ்ட்ராங்... உங்கள் விமர்சனம் வெளிப்படையா இருக்கலாம்ங்கறது என்னோட அபிப்ராயம்...) 
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரஜனி டியர்

டார்லிங்கும் மோகனாவும் ரிச்சியைக் கிளப்பி விட்டுட்டாங்க
ரிச்சர்ட் என்ன பண்ணப் போறான்?
ரியாவைக் கல்யாணம் பண்ணுவானா?
இல்லை சேகருக்கு தாரை வார்ப்பானா?
 
Last edited:
#5
23... தென்றலை சிறை பிடித்த கள்வன்

ரியாவையும் ராஜாவையும் மருத்துவமனையில் விட்டு விட்டு டேனியலும் ஜானும் நீக் கூட அங்கேயே பாதுகாப்புக்காக இருக்க வைத்தவன்...
வீட்டுக்கு வந்து விட்டான் தனது திட்டத்தை செயல் படுத்த...

ஏனோ அவனுக்கு ரியாவின் பாதுகாப்பை குறித்த பயம் மனதில் உறுத்திக்கொண்டேதான் இருந்தது... அவளை தன்னருகிலேயே வைத்துப் பார்த்துக்க கொள்ள வேண்டும் என்ற பிடிவாதம் மனதில் எழுந்தது...

அவளது மனதை நன்கு புரிந்து கொண்டவன் அவளாக ஈகோவை விட்டு தன்னிடம் வரமாட்டாள் என்பதையும் புரிந்து கொண்டான்... அதற்கு மதிப்பளித்தவன் அவளது விருப்பம் கேட்கவில்லை...

தனது நண்பர்களில் நிக்கை மட்டும் கழட்டி விட்டான்... அவளுடன் கோர்த்து விட்டு விட்டான் அவனுடைய நன்பர்களில் அவன்தான் சண்டையில் சிறப்பு பயிற்சி பெற்றவன்... சிறந்த பாதுகாவலன் கூட

அதனால் நிக் இப்போ ரியாவின் பக்கம் சாய்ந்து விட்டான்...

இன்னும் ரிச்சர்டிடம் பேசுவதில்லை அவன்... கோபம் அவனுக்கு தனது தோழியை ரிச்சர்ட் அடித்ததற்கு...

அங்கே மருத்துவமனையில் ஜானும் டேனியலும் ரியாவின் அறைக்கு முன்பே பெட் ஒன்றை போட்டு படுத்துக்கொண்டனர்... சும்மா போனை நோண்டிக்கொண்டிருந்தவர்கள் யாரோ வருவது போல் தோன்றவே எழுந்து பார்க்க அங்கே சேகர் நின்றிருந்தான்... அவனை வழிமறித்தவர்கள்

"சார் இந்த நேரம் உங்களுக்கு என்ன வேலை?... வெளியே போங்க"... அவனை போக சொல்லி கொண்டே ரிச்சர்டை அழைக்க போனை எடுக்க... அதைத் தடுத்தவன்

"நான் ரியாவைப் பார்க்கணும் இப்பவே"... சேகர் போகாமல் அங்கேயே நின்றான்

ஏற்கனவே அவன் மேல் கடுப்பில் இருந்த டேனியல்...

"இதோ பாருங்க சார் நாங்க அண்ணிக்கு பாதுகாப்பு கொடுக்க இங்கே இருக்கோம்... சோ அவங்களை நீங்க பார்க்க எங்களால் அனுமதிக்க முடியாது போங்க வெளியே"... வாசலை நோக்கி கை காட்டினான்
.
"ஏய் நான் இந்த விட்டு மாப்பிள்ளை என்கிட்டயவே எதிர்க்கரியா?"...

"சாரி சார் எங்களுக்கு கொடுத்த வேலையை நாங்க பார்க்கிறோம்... நீங்க இப்போ வெளியே போங்க"...

"போக முடியாதுடா என்ன பண்ணுவே?"...

"நீங்க பார்த்தே ஆகணும்னு சொன்னிங்கன்னா எங்களுக்கு வேற வழி இல்லை... சோ சத்தமே இல்லாமே மேட்டர் முடிச்சுட்டு போய்ட்டே இருப்போம்... நாங்க பாடிகார்டு மட்டும் இல்லை... நாங்க!"... ஜான் உலர போகவே... டேனியல் அவனை தடுத்தான்

"ஜான் போதும் நிறுத்து வெளியே சொல்லக்கூடாது அதை"...
கன்னை எடுத்தவன் குறிபார்க்கவே...

"இதோ பாருங்க இதுக்காக நீங்க அனுபவிப்பீங்க?"... கூறியவன் வெளியே சென்று விடவே... இருவரும் சிரித்தவாறே பார்த்துக்கொண்டார்கள்...

"இப்போ சந்தோஷமா மச்சீ உனக்கு?"... ஜான் கேட்க

"ஹாஹாஹா... மிக்க மகிழ்ச்சி மொக்கை வாங்கிட்டு போய்ட்டான்டா குமாரு"...

"எனக்கு என்னவோ உன்னோட கதைக்கு அண்ணிதான் எண்டுகார்டு போடுவாங்கன்னு தோணுது... அவங்ககிட்ட பேசு இதை பத்தி"...

அப்போது அங்கே நிக் வரவே

"வந்துட்டான்டா ஜால்ரா இவனுக்கு இதே பொழப்பா போச்சுடா... ஒரு நாளைக்கு ரெண்டு பேரும் சேர்ந்து அடி பின்னுவாங்க பாரு"...

"அடேய் இப்பவே அண்ணிகிட்ட வாங்கிட்டுதாண்டா இருக்கான்... ஹாஹாஹா பக்கி பக்கி"... வாய் விட்டு சிரித்தார்கள்...

இருவரும் தன்னை பார்த்து சிரிப்பதைக் கண்ட நிக்

"போங்கடா எடுபட்ட நாய்ங்களா என்கூட பேசாதிங்க"... முறுக்கிக் கொண்டவன் விலகி போக பார்க்க

"நோ டா செல்லம் நீ எங்க போறே?... எங்களை விட்டுட்டு வாடா ராசா"... அணைத்துக் கொண்டார்கள் அவனை...

அவனிடம் இருந்து விலகிய நிக் அறைக்குள் சென்று ராஜாவின் அருகில் படுத்துக் கொண்டான்...

அவன் வந்த சத்தத்தில் முழித்துக்கொண்ட ரியா

"நிக் அங்கே என்ன சத்தம்?"...

"ஒன்னும் இல்லை அண்ணி ஜானும் டேனியலும் என்னை களாய்ச்சாங்க"...

"ஓஹோ"...

"அண்ணி நான் ஒன்னு கேட்கட்டுமா உங்களை?... கோபப்படுவிங்களா?"... நிக் பயந்து கொண்டே கேட்க...

"இல்லடா பக்கி... சொல்லு என்ன விஷயம்?"...

"அது வந்து அண்ணி உங்களுக்கு அண்ணாவை பிடிக்குமா?"...

"இது என்ன கேள்வி?... ரொம்ப பிடிக்கும்"...

"அப்புறம் ஏன் அண்ணி லவ் சொல்ல மாட்டேங்குறிங்க?... அவரை கல்யாணம் பண்ணிக்கலாம்ல?"......

"அது கிடக்கட்டும் நான் ஒன்னு கேட்க்கறேன் நீ சொல்லு?... என் கூட பிறந்தவனே எனக்கு எட்டப்பனா இருக்குறான் நாயி... ராஜாவை எட்டி உதைத்தவள்... நீ உன்னோட தலை கூடவே சுத்திட்டு இப்போ என்கூட சேர்ந்துகிட்டியே ஏன்?"...

"உண்மையின் பக்கம் இந்த நிக் இருப்பான் அண்ணி"... நிக் அவளை உருக வைத்தான்...

"நீ ரொம்ப நல்லவண்டா நிக்"... கண்ணீர் விட்டாள் ரியா

தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்த ராஜா

"மண்ணாங்கட்டி தலைதான் இவனை இந்த லூசு கூட கோர்த்து விட்டுருக்கு... அது தெரியாம லூசு அவனை நல்லவன்னு சொல்லிட்டு திரியுது... எப்பதான் நல்ல புத்தி வருமோ இவளுக்கு ஆண்டவா?"...

அதற்குள் வெளியே போன சேகர் ரவுடிகளை அழைத்து வரவே சலசலப்பு கேட்டு எட்டி பார்த்தனர்...

அவர்கள் வாக்குவாதம் செய்வதை கண்ட நிக் வெளியே போக முயற்சி செய்ய

நிக்கின் மண்டையில் நங்கென கொட்டிய
ரியா

"டேய் நீ எங்கடா போறே?... அவனுங்களை பாரு ஒவ்வொருத்தனும் பார்க்க பல்க்கா இருக்கானுங்க... ஒரு அடியில செத்துருவ நீ மூடிட்டு வேடிக்கை மட்டும் பாரு"... திட்டினாள் அவனை...

"இல்லை அண்ணி நான் போய் அவங்களை காப்பாத்தனும்"...

"அடேய்... அடேய்... போதும்டா நிறுத்து இவரு பெரிய ப்ரூஸ்லி... போய் காப்பாத்திட்டு வருவாரு"...

வெளியே சண்டை பெரிதாகவே

மீண்டும் வெளியே போக முயற்சி செய்தான் நிக்

"சொல்றேன் இல்லை போகாதேடா"... அவனது சட்டையை பிடித்து இழுக்கவே கையோடு வந்தது அது

வெற்று மார்போடு வெளியே வந்தவன் தனது உடலை முறுக்கினான் அது பல படிக்கட்டுக்களை காட்ட...

அவர்களை நோக்கி பாய்ந்தவன் அடித்து நொறுக்கினான் கண்மண் தெரியாமல்...

அவர்களின் சண்டையை ஜன்னல் வழியாக பார்த்தவள் தனது கையை திறந்து பார்த்தாள்...

இந்த கையால் எத்தனை தடவை கொட்டியிருப்போம்... அப்போ ஒரு அடி திருப்பி அடிச்சிருந்தாலும் இன்னைக்கு என் சமாதிக்கு பால் ஊத்தியிருப்பாங்களே அவ்வ்...

"டேய் நிக்கு அவ்ளோ பெரிய ஆளாடா நீ?"... அவள் படுத்திய பாடு கண்முன்னால் படமாக ஓடியது...

சண்டை எல்லாம் முடிந்து ஒரு வழியாக அசெம்பில் ஆனார்கள் நண்பர்கள்...

சத்தம் இல்லாமல் நிக்கின் அருகில் போனவள்

"நிக்கு சண்டைலாம் போடுவியாடா நீ?... பார்த்தா டம்மி பீசு மாதிரியே இருக்கடா... ஆனால் உனக்குள் புருஷ்லி இருக்கான்னு சொல்லவே இல்லை நீ?"...

அவனது கைகளை தொட்டு பார்த்தவள் அதிசயித்தாள்... அப்போ அங்கு வந்த ரிச்சர்ட் அவளை தன்னோடு அறைக்குள் அழைத்து சென்றவன் ராஜாவை பார்த்து முறைக்க ஓடியே விட்டான் வெளியே

"ஆத்தி இந்த குரங்கு புள்ளை கூட பிறந்த பாவத்துக்கு சாகனும் போலயே"... புலம்பித் தள்ளினான்...

அறைக் கதவை சாத்தியவன் தனது சர்ட்டை கழட்டவே பயந்து போனவள்

"பாவா எ... எ... ன்ன?"... வாயை திறந்தவளுக்கு காத்துதான் வந்தது

முழுவதுமாக கழட்டி முடிக்கவே அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் தவித்தவள் வேறு புறம் திரும்பிக் கொண்டாள்...

"ஏய் இங்கே திரும்பி பாருடி என்னை"... அவளது முகம் பற்றி தன் புறம் திருப்பினான்

"எனக்கும் கட்ஸ் இருக்குது என்னையும் சொல்லு டி அழகுன்னு ம்ம்ம்"... உறுமினான்

"பாவா சொன்னா கேளுங்க அவன் எனக்கு அண்ணா மாதிரிதான்"...

"பச் அது தெரியும்டி உனக்கு அவன்அண்ணான்னு"...

"இப்போ என்னை பத்தி பேசுறேன் என்னையும் சொல்லு டி அழகுன்னு... நிஜமாவே பொறாமையா இருக்குதுடி நீ யாரையாவது அழகுன்னு சொன்னாலோ பேசினாலோ... ஏய் ஜில்லு ம்ம் சொல்லுடி கேட்கறேன்ல"... கட்டாயப்படுத்தினான் அவளை

"அய்யோ பாவா என்ன சொல்லணும் நான்?"... அவனது கைப்பிடியில் தவித்துப் போனவள் மூச்சு வாங்க கேட்டாள்

"என்னை பார்த்து சொல்லு நான் எப்படி இருக்கேன்னு"... அவளை உளுக்கினான்

"பாவா சொன்னா கேளுங்க... எனக்கு உங்களை பார்க்க வெட்கமா இருக்குது பாவா"...

அவனை ஏறிட்டு பார்க்க கூசியவள் முகத்தை மறைத்துக்கொண்டு பின்னே நகர இருவரும் பெட்டில் விழுந்தார்கள்...

அவள் மேல் அவன் சாய மூச்சு தினறியவள் அவனைத் தள்ளி விட்டாள்

"ஆ பாவா மூச்சு வாங்க முடியலை தள்ளுங்க ம்ஹும்"...

"மெதுவாதான் விழுந்தேன் அதுக்கேவா?"... கூறியபடியே சிரித்தவன் கதவைத் தட்டும் ஓசை கேட்கவே விலகினான்
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement