தூரம் போகாதே என் மழை மேகமே!! - 8

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 8

d036211a1a818c63f4b43de8491e64c8a786dea8.jpeg



அர்ஜூனின் இந்த அலட்சிய வார்த்தைகளில், அவனையே வெறித்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள் ஆதிரை.


முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல ‘இது என்ன? இவன் என்னைப் பற்றி என்ன நினைத்தான். எடுத்த எடுப்பிலே நீ வா போ என்று அழைத்தது மட்டுமல்லாமல் , திமிரான பேச்சு வேறு. சேகர் அங்கிளுக்காக பார்க்கிறேன். இல்லையென்றால் என்னிடம் இவன் நல்ல பதில் பேச்சு வாங்க வேண்டியிருந்திருக்கும். நேற்றும் அவ்வாறாகவே நடந்து கொண்டான்’ என மனதுள் பொருமினாள் ஆதிரை.

அவளது உள்ள பொறுமலை உணராதவன் போல “உன் பெயரென்ன? என்ன படித்திருக்கிறாய். எவ்வளவு நாளாக டாக்டராக பணிபுரிந்திருக்கிறாய்?” என்றான்.

சேகர் அங்கிள் சொன்னது நினைவிலிருந்ததால் ஆதிரை அவனது இந்தச் செயலை பெரிது படுத்தாமல் அவன் கேட்ட கேள்விக்கு பதில் கூறினாள். “என் பெயர் ஆதிரை. MBBS படித்துவிட்டு MS ஒரு வருடம் படித்துக் கொண்டே home surgen அனுபவமும் இருக்கிறது. அதன் பின் சில தனிப்பட்ட காரணங்களால் என் படிப்பை தொடர முடியவில்லை. கடந்த ஒன்றரை வருடம் ஒரு கிராமத்தில் ஆரம்ப சுகாதர நிலையில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.” என்று அவன் கேட்ட கேள்விகளுக்கு மட்டுமாக பதில் கூறினாள் ஆதிரை.

அப்போது காதம்பரன், “ அர்ஜூன். அந்தப் பெண் அவள் பணி புரியும் கிராமத்தில் பல பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கிறாள். அதனோடு வயிற்றில் தலை கீழாகத் திரும்பி இருந்த குழந்தை மற்றும் தாயை Operaiton இல்லாமல் உயிர்ச் சேதமில்லாமல் பிரசவம் பார்த்திருக்கிறாள்” என்று ஆதிரைக்குச் சலுகையாக சேகர் அவரிடம் கூறியதை எடுத்துச் சொன்னார்.

“ம்ம்…” என்றதோடு வேறேதும் சொல்லாமல் சில வினாடிகள், எங்கோ பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தான். பின் ஆதிரையை நோக்கி, “ஆதிரை. காதம் அங்கிளும் சேகர் அங்கிளும் சொல்வதால் உன்னைப் பற்றி இவ்வளவு சொல்வதால் எனக்கு வேறெதுவும் கேட்க தோன்றவில்லை. அவர்களின் வார்த்தைகளால் உன்னை நம்புகிறேன்” என்றான் அர்ஜூன்.

அர்ஜூனுக்கு பதிலாகத் தலையை ஆட்டியவள் . ‘அவர்களின் வார்த்தையால் மட்டுமாக என்னை நம்புகிறானாம் , அப்பா என்ன ஒரு திமிர். அங்கிள் இவன் இருக்கும் கிராமத்திற்கா நான் வேலைக்குப் போக வேண்டும்’ என்று ஒருபுறம் அவனது திமிர் பேச்சையும் , சேகர் அங்கிளின் எண்ணத்தையும் நினைத்து அவளையே நொந்துக் கொண்டாள்.

“அதனால் எங்கள் கிராமம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது. எங்க கிராமம் இமாசல பிரதேஷில் உள்ள சிம்லாவில் உள்ளது. சிம்லாவிலிருக்கும் கிராமங்களில் எங்கள் கிராமம் மட்டுமே தமிழ் பேசக் கூடியது. அதனாலே தமிழ் பேசக் கூடிய ஒரு மருத்துவரைத் தேடுகிறோம்.” என்றான் அர்ஜூன்.

ஹிமாச்சல பிரதேசம் என்றதும் , ஆதிரைக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. இது தன்னை முழுதுமாக தமிழகத்திலிருந்து பிரிக்க கூடியவிதம். அந்த கிராமம் விட்டு வெளியில் வந்தால் எல்லாம் ஹிந்தியாக இருக்கும். ஒருவேளை வளியில் எங்கேனும் போக வேண்டுமென்றாலும் யாருடைய உதவியும் இல்லாமல் செல்வது கொஞ்சம் கடினம். இவ்வாறாக யோசித்தவள், அதே பதட்டத்துடன், “சரிங்க சார். நான் கிராமம் என்றால் தமிழ் நாட்டிலே ஒரு இடமாக இருக்குமென்று எண்ணினேன். ஆனால் நான் இவ்வளவு தூரமிருக்குமென்று நான் எண்ணவில்லை. நான் இந்தியா map –ல் கூட அந்த இடத்தை பார்த்தது இல்லை” என்றாள் ஆதிரை.

ஏதோ சொல்ல வந்த அர்ஜூனை முந்திக் கொண்டு காதம்பரனும் , “ ஆமாம் ஆதிமா, இங்கிருந்து கிட்டதட்ட 1000 மைலுக்கும் அப்பால் நீ வர வேண்டி இருக்கும். இருந்த போதும் டெல்லியிலிருக்கும் உன்னோட சேகர் அங்கிளை பார்க்கனும்னா, நீ மாதம் ஒருமுறை எங்க கிராமத்திலிருந்து சிலர் போவாங்க அவர்களோட நீ போயிட்டு வரலாம். ஏன்னா, டெல்லி நம் கிராமத்திலிருந்து கொஞ்சம் அருகில்தான்” என்றார்.

“ஓ.. அப்படியா அங்கிள். இருந்தபோதும் உங்க கிராமத்தைத் தவிர வெளியில் சென்றால் தமிழ் இருக்காதே English என்றாலும் பரவாயில்லை. எனக்கு இந்தியெல்லாம் தெரியாது அங்கிள்.” என்று தெளிந்தவளாக பேசினாள் ஆதிரை.

“அதற்கும் கவலையில்லையம்மா. நீ தேவையில்லாமல் வெளியில் வர வேண்டி இருக்காது. உனக்கு தனிப்பட்ட முறையில் எதுவும் வேண்டுமென்றால் என்னிடம் கேள். உனக்கு மருத்துவ வகையில் எதுவும் வேண்டுமென்றால், ஒரு பெண் தாதியரும் பணிக்கு இருப்பால் அவளிடமும் நீ கேட்கலாம். சரியா?” என்று புன்னகித்தார் காதம்பரன்.

“ஓ சரிங்க அங்கிள். ஒரு வேளை நான் வெளியில் செல்வதென்றால் என்னுடன் வர யாரவது ஏற்பாடு செய்துதர முடியுமா அங்கிள்” என்றாள் ஆதிரை.

“ம்.. சரிமா. “ என்ற காதம்பரனை தொடர்ந்து, “ஆனால் இதுதான் வாய்ப்பென்று ஊர் சுற்ற சென்றுவிடக்கூடாது” என்றான் கடுகடுப்புடன் அர்ஜூன்.

அவனையே சில வினாடிகள் வெறித்த ஆதிரை. பின் “ நானும் மருத்துவம் பார்க்கத்தான் உங்க கிராமத்திற்கு வருகிறேன். ஊர் சுற்ற அல்ல. சில பெண்கள் தேவையான பொருட்கள் வாங்க வேண்டி இருக்கும். அத்தகையவற்றை , நானேதான் வாங்கியாக வேண்டும் அதனாலே கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டேன் அங்கிள்” என்று அர்ஜூனை விடுத்து காதம்பரனிடம் பதில் கூறினாள் ஆதிரை.
இதனைக் கவனித்த காதம்பரன், “ம்ம் புரியுதுமா. என்ன அர்ஜூன் அவள் சொல்வதும் சரிதானே பா” என்றார்.


ஆதிரை அர்ஜூனை வெற்றி பார்வை பார்த்தாள். இதனைச் சட்டை செய்பவனாகவே அர்ஜூன் தெரியவில்லை. ஆதிரைக்குத்தான் ஏமாற்றமாகிப் போனது.

தொடர்ந்து ஆதிரையை நோக்கி அர்ஜூன் பேச ஆரம்பித்தான், “நீ நினைப்பது போல் எங்கள் கிராமம் மக்களுக்கு நீ இப்போது செய்து கொண்டிருக்கும்படி மருத்துவம் போல செய்ய வேண்டி இருக்காது. எங்கள் ஊரில் அல்லோபதி மருத்துவம் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர நாங்கள் பயன்படுத்துவதில்லை. எங்களது ஊரில் பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த வைத்திகார பாட்டி 2 மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டார். அவருடை கை பக்குவம் இப்போது அங்கு யாருக்குமில்லை. இதனால் கடந்த மாதம் ஒரு கர்பிணி பெண்ணிற்கு மிகவும் கஷ்டமாக போய்விட்டது.” என வருந்தும் தொனியில் கூறினான் அர்ஜூன்.

“புரிகிறது. அதனால் ஒரு பெண் மருத்துவரை தேடுறீங்க” என்றாள் ஆதிரை.

“ஆம். உனக்கு வேறேதும் கேள்வி இருக்கிறதா?” அவ்வளவுதான் நாங்கள் சொல்வதற்கு என்பதுபோல் கேட்டான் அர்ஜூன்.

“ம்ம்… இருக்கிறது. என் படிப்பு .. எனக்கு government scholarship இருக்கிறது. என்னுடைய MS படிப்பை முடிப்பதற்கு. அந்த கிராமத்தினருகில் ஏதேனும் மருத்துவக் கல்லூரி இருக்கிறதா என்று கேட்டாள் ஆதிரை.

“ஒ.. உன் படிப்பா? சேகர் அங்கிள் ஏற்கனவே சொன்னார். உனக்கு ஏற்கனவே மருத்துவ அனுபவம் இருப்பதால் , நீ MS படிக்க வேண்டிய அவசியமில்லை. இருந்தும் உனக்குப் படிக்க வேண்டுமென்றால் , மாதம் ஒரு முறை செல்ல கூடிய வகையில் ஏற்பாடு செய்து தரப்படும். ஆனால் exams க்கு மட்டும் கட்டாயம் நீ நேரில் செல்ல வேண்டும். மற்றபடி அனைத்து நாட்கள் பாடங்களும், video வாக உன் வீட்டிற்கு வரும். உனக்கான சந்தேகங்களும் சேகரிக்கப் பட்டு விளக்கங்கள் பதிவு செய்யப்பட்டு தரப்படும்.” என்றான் அர்ஜூன்.

‘இது என்ன புது வித படிப்பாக இருக்கும் போல இருக்கிறது. எப்படி சந்தேகங்களை நேரில் போகாமல் புரிய வைக்க முடியும். ஆனால் இவ்விதம் இருப்பதால் என் படிப்பை முடித்தது போலவும் இருக்கும் என் ராஜாவை விட்டுப் பிரிய வேண்டிய நிலையும் இருக்காது. என மன கணக்கு போட ஆரம்பித்தாள் ஆதிரை.

“எனக்குப் புரிகிறது. ஏன் நீ யோசிக்கிறாயென்று. ஏன் இவ்விதமான கட்டுப்பாடு என்று நீ எங்க கிராமம் வந்த பிறகு புரிஞ்சிக்குவ” என்றான் அர்ஜூன்.

வேறெதுவோ யோசித்துக் கொண்டிருந்த ஆதிரை “ஏன்.?.” என்றாள் புரியாமல்.

அப்போது காதம்பரனுக்கு பல முறை வந்த phone , இனி அணைக்க முடியாத நிலையில் அர்ஜுனிடம், “ ஆதிரை ok தானே.?” என்று அவன் காதருகில் கேட்டு தெரிந்து கொண்டு பின் , “அர்ஜுன் இதோ ஒரு நிமிடம் வந்து விடுகிறேன். ஆதிரை, நீங்க பேசிட்டிருங்க நான் வந்திடுறன்” என்று வெளியில் எழுந்து சென்றார்.

“சரிங்க அங்கிள்” என இருவரும் ஒருங்கே சொல்லிவிட்டு ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின் சில வினாடிகள் அமைதியாகினர்.
பின் அர்ஜூன் ஆதிரையின் முந்தைய கேள்விக்கு பதில் கூறினான். “ஏன்னென்றால் இது வரை வெளியாட்களை உள்ளே அனுமதிக்காத எங்கள் கிராமத்திற்கு முதல் முறையாக உன்னை, ஒரு பெண் மருத்துவரை அழைத்துச் செல்ல போகிறோமென்றால் அவசியமில்லாமல் உன்னை வெளியில் அனுப்பக் கூடிய சூழலும் உண்டாகாது “ என்றான் அர்ஜூன்.


“ஓ..” என்றவள் , ‘அப்படியென்ன பெரிய மதில் சுவரால் மூடப்பட்ட கிராமம்மா. உள்ளே வெளியாட்களை அனுமதிக்க மாட்டார்களாம். வியப்பாக இருக்கிறது. சங்க கால அரச கோட்டை மதில் சுவரை அழிக்க முடியாமல் வெள்ளை கொடிக்காட்டிய அரசர்கள் போல, இவர்களின் கிராம கோட்டை சுவரை இவன் அறியாமல் யாராலும் கடக்க முடியாது போல’ என தன்னுள் எண்ணி அவளையும் அறியாமல் கழுகென்று சிறு புன்னகையை சிந்தினாள் ஆதிரை.

அவளையே நோக்கிக் கொண்டிருந்த அர்ஜூனுக்கு பசியென்று இருக்கும் குதிரைக்கு கொள்ளு போட்டது போல அவளது சிரிப்பு இருக்க , “என்ன சிரிப்பு. இங்கே என்ன நான் ஜோக்கா சொல்லிக் கொண்டிருக்கிறேன். “ என அவள் முன் இருந்த table – ஐ அதிரும்படி தட்டினான்.
அவனது இந்தச் செயலால் அதிர்ந்த ஆதிரை அவனையே விதிர்விதிர்த்து நோக்கினாள்.
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் அர்ஜுன்
நீ ரொம்ப பண்ணுறேடா
ஆதிரையிடம் நீ கெஞ்சும் காலமும் வரத்தான் போகுது

ஹா ஹா ஹா
"எரிகிற கொள்ளியில எண்ணெய் ஊற்றியது போல"க்கு பதிலா
"பசியென்று இருக்கும் குதிரைக்கு
கொள்ளு போட்டதை போல"
புதுவிதமான நல்ல உவமை, Yogi டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top