தூரம் போகாதே என் மழை மேகமே!! - 72

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
வேட்க்கை கொண்ட ஆணின் மனம் அந்த நேரத்தில் பெண்ணின் உதாசினத்தை ஒரு போதும் ஏற்பதில்லை. அதனாலே ஆதிரையின் செயலால் ஏற்கனவே கோபமுற்ற அர்ஜூனின் மனம் அவள் சொன்னதின் உள் அர்த்தம் புரியாமல் அவளிடம் முரட்டுதனமாக நடந்துக் கொண்டது. கோமாவிலிருந்து மீண்ட ஆதிரைக்கு குறைந்தது ஒரு மாதத்திற்காவது தாம்பத்தியம் கூடாது என்று சென்னையில் இருக்கும் போது டாக்டர் வலியுறுத்தி சொன்னதன் விளைவே அர்ஜூனின் முந்தைய விலகலுக்கான காரணமாகி போனது. அதனாலே அவனையும் அறியாமல் ஆதிரையை நெருங்கிய பின்பும் நினைவு வந்தவனாக அவளை உடனே விலகி தவித்துக் கொண்டிருந்தான் அர்ஜூன்.


இதை எதையும் அறிந்திராமல் ஆதிரையும் அவளுடைய மனனிலைக்கு ஏற்ப அர்ஜூனின் விலகலுக்கு அவளுள் ஒரு கற்பனையை உருவாக்கி அர்ஜூன் தன்னை பலிவாங்கவென்றே இப்படி தவிக்க செய்கிறான் என்று பெரிய அறிவாளியாக யூகித்து வத்திருந்தாள். இப்படியாக இருவர் மனனிலையும் இருக்க, டாக்டர் சொன்ன நாள் இடைவேளி நேற்றோடு முடிந்தது. இவ்வளவு தவித்ததற்கும் தவிக்க விட்டதற்கும் சேர்த்து இன்று ஆசையுடன் ஆதிரையை நெருங்கி அவளை மகிழ்ச்சியில் திளைக்க எண்ணியே அர்ஜுன் அவளை இன்று அனுகினான். ஆனால் அவளுடைய இந்த ஒதுக்குவது போன்றானசெயல் அடியோடு அவனுள் வேறு எண்ணம் தோன்ற செய்துவிட்டது.


ஆதிரைக்கு ஒரு நூலிலையில் விஸ்வாவின் மீது விருப்பமிருக்க கூடுமோ. அன்று முன் ஜன்ம கதைகளை பேசியதில் தன்னை மறந்து அவனை அணைத்துக் கொண்டு பின் விடிந்ததும் நிலை உணர்ந்து தவிக்கிறாளோ என்று சந்தேகம் அவனுக்கு உண்டானது. அன்றிலிருந்துதானே ஆதிரையின் இந்த ஒதுக்கமென்று எண்ணினான். கணவனென்று தன்னையும் ஏற்க முடியாமல் விஸ்வாவையும் மறக்க முடியாமல் தவிக்கிறாளோ என்று அச்சம் வந்து அதுவே கோபமாக மாறி அவளை வலிக்க செய்ய வேண்டுமென்றே அவ்வாறு அவன் நடந்துக் கொண்டான். ஆனால் ஆதிரை மயங்கியதும் அவனால் தாங்க முடியாமல் , அவள் மனமும் உடலும் தேற இன்னும் சில நாட்கள் காத்திருந்திருக்க வேண்டுமோ என்று தோன்ற செய்துவிட்டது.


மயங்கிய நிலையிலிருந்த ஆதிரையை பார்த்து பரிதவித்து "ஆதிரை.. ஆதிரை.. " என்றவன் தேவையில்லாமல் கோப பட்டுவிட்டோமோ? என்று காலம் கடந்து கலங்கி நின்றான். அவசரமாக அறையிலிருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்தான். கடினப்பட்டு இமை பிரித்த ஆதிரை, அர்ஜூனை அருகில் கண்டதும் மேலும் பயந்து உடல் நடுங்கினாள். அவள் நிலைக்கண்டு சட்டென விலகி, “ சாரி ஆதிரை.. ஏதோ கோபத்தில்..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனை விட்டு எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் நகர்ந்து அந்த பெரிய கட்டிலின் மூலையில் குத்துக்காலிட்டு அமர்ந்தாள் . அவன் முகத்தை பார்க்க தோன்றாமல் கண்களை இறுக்க மூடிக் கொண்டு தன் காலின் மீது முகம் பதித்துக் கொண்டு, என்ன தடுத்தும் அடங்காத கண்ணீரினை துடைக்கும் எண்ணமற்று விசுமினாள்.


‘இவன் என்னதான் நினைத்துக் கொண்டு இருக்கிறான். குளிர்ந்த நீராக மனதுக்கு இதம் பரப்பவும் செய்கிறான். நெருப்பாய் என்னை எரிக்கவும் செய்கிறான். கணவன் என்று நெருங்கி இருக்க சொல்கிறானா? விரும்பாத மனைவியென்று விலகி இருக்க சொல்கிறானா. பெண்ணின் மனம் தவிப்பது புரியவில்லையா இவனுக்கு. இல்லை போன இரு ஜன்மங்களாக அவனை பாதியில் தவிக்க விட்டதற்காக கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஜன்மத்தில் இப்படி என்னை வதைக்கிறானா? கடவுளே இதிலிருந்து மீள வழியே இல்லையா?’ என்று எண்ணிய அவளது பலமிழந்த மனதின் செயலாக கண்ணை விட்டு நீர் திரை ஏற்பட்டு ஆதிரையை உணர்ச்சி வசபட செய்தது.


அவள் வேதனையுறுவதை தாங்க முடியாமல், “ஆதிரை… sorry.. என்னையும் அறியாமல் அப்படி நடந்துக் கொண்டேன்" என்று தன் தவறுக்கு வருந்தி சொன்னான். அவள் முகம் பார்த்து பேசும் சக்தியற்று தலை தாழ்த்தினான்.


அவனது குரலில் நிமிர்ந்த ஆதிரை இதே போல்தானே அந்த தீவில் ஆற்றங்கரையிலும் நடந்தது என்று எண்ணுகையிலே ஆதிரைக்கு ‘இவனுக்கு இது ஒரு பொசுது போக்கு போல ' என்று ஆத்திரமுற்று பார்வையாலே அவனை எரித்துவிடுபவள் போல பார்த்தாள். எதுவும் பேசவில்லையென்றாலும் அந்த பார்வை அவனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி ஆயிரம் கேள்வி கனைகள் செலுத்தி துளைப்பதாக இருந்தது.


அவளை சமாதனம் படுத்தும் எண்ணத்தில், “ஆ.. ஆதிரை.. நான் சொல்வதை ஒரு நிமிடம்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதிரையின் வலது கை உயர்ந்து அவன் முன் போதும் என்பதுப் போல நின்றது. அவளது விழி நீர் கன்னத்தை கடந்து வழிந்தது.


“அர்ஜூன்… எனக்கு எதுவும் கேட்க வேண்டாம். என்னால் இனி உங்களோடு தனியே இந்த அறையில் இருக்க முடியாது. நான் இங்கிருக்கும் வரை ஏதாவது காரணம் சொல்லி என்னை அண்ணியுடனோ அல்லது வேறு தனி அறையிலோ தங்க ஏற்பாடு செய்யுங்கள். “ என்று எங்கோ பார்த்தப்படி சொன்னாள் ஆதிரை.


அவளது கேள்வியில் திகைத்த அர்ஜூன், உடனே சமாளித்து ,” ஏனோ… என்னை அவ்வளவு வெறுத்துவிட்டதா?” என்று ஏளனம் குரலில் படர கேட்டான்.


அவனது குரலில் அவனை பார்த்த ஆதிரை , “ இது என் விருப்பு வெறுப்பு பற்றிய பேச்சல்ல. எனக்கு உங்களோடு தனியே இருக்க பயமா இருக்கு. அதனோடு , அதனோடு நீங்களும் என்னை அருகில் வைத்துக் கொண்டு நெருங்குவதா விலகுவதா என்று தவிக்க வேண்டி இருக்காது. என்… என் கடமை முடிந்ததும்,உங்க ஊர் மக்களுக்கு ஒரு நல்லது நடந்ததும், நான் உங்களை இப்படி உன் கண் முன் வந்து கொடுமை செய்யாமல் , எங்கேனும் போய்விடுகிறேன். உங்களுக்கு பிடித்த யாரையேனும் ..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதிரையின் குரல் உடைந்து அழுதது.


அவளை விசித்திரமாக பார்த்த அர்ஜூன், “ஓ… அப்போது என்னை கொடுமை படுத்துவதை ஒத்துக் கொள்கிறாய். அப்படிதானே" என்றான்.


அதற்கு எங்கோ பார்த்தபடி ஆமாம் என்று தலையை ஆட்டினாள் ஆதிரை.


அதற்கு இலகு வாக தன் pant pocket-ல் கையினை விட்ட வண்ணம், "சரி.. அந்தளவு ஞானம் உணர்ந்திருக்கிறாய்." என்றான் அர்ஜூன்.


அதற்கும் ஆமாம் என்பதுப் போல தலையசைத்தாள்.


இதற்கு மேல் இவளிடம் எதையும் பேசி பயனில்லை. வேறுவழியில்தான் இவளை சமாளிக்க வேண்டுமென்பதை உணர்ந்த அர்ஜூன், “ அப்படி என்னை கொடுமை படுத்தும் உனக்கு நான் ஏன் வேறு அறை ஏற்பாடு செய்து தரவேண்டும்" என்று அவளை திகைப்புற செய்தான். நிமிர்ந்து அவனை பார்த்த ஆதிரையால் அவன் முகத்தில் எதுவும் உணரும் நிலையில்லை.


அவள் பதில் சொல்லாமலே இருக்க அர்ஜூன் தொடர்ந்தான், “அதனோடு உன் கடமையை நீ செய்ய நான் ஏன் உதவவேண்டும். என் ஊர் மக்களை பற்றி நீ ஒன்றும் கவலை பட வேண்டிய அவசியமில்லை. அதே சமயம் இதை தெரிந்துக் கொள். உண்மையில் நீ நினைப்பதுப் போல் எனக்கு உன்னால் எந்த கொடுமையும் நிகழ்ந்துவிடவில்லை. உனக்குதான் கொடுமையாக இருக்கும் போல தோன்றுகிறது. அதை மாற்றி என் மீது பழி போடுகிறாய். அதனால் நீ எந்த தியாகமும் செய்துக் கொண்டு இங்கு இருக்க வேண்டியமும் அவசியமில்லை. உனக்கு விருப்பமில்லையென்றால் நீ எப்போது வேண்டுமென்றாலும் என்னை விட்டு போகலாம். ஆனால் இங்கே இருப்பதாக முடிவெடுத்தால் நீ என்னுடன்தான் இதே அறையில்தான் தங்கியாக வேண்டும். உனக்காக தனி அறை வேண்டுமென்று நான் யாரிடமும் எதையும் கேட்க போவதாக இல்லை " என்று இரக்கமற்று சொன்னான்.


அவனை நிமிர்ந்து பார்த்த ஆதிரை, ‘அவ்வளவு வெறுப்பா. இப்போதே போ. என்கிறானா? என் மீது இவனுக்கு முதல் ஜன்மத்தில் இருந்த அன்பு இப்போது சிறு துளிக் கூடவா இல்லை? அப்படி என்னதான் இரண்டாவது ஜன்மத்தில் நிகழ்ந்தது. இப்படி வெறுக்கிறான். சூடும் ,குளிரும் உடனுக்குடன் உணர்ந்தால் கல்லும் உடைந்து போகுமே. இவனுக்கு ஏன் என் மனம் உடைவது புரியவில்லை. ‘ என்று எண்ணியவள் அவனது இறுகிய முகத்தை வெறித்து நோக்கினாள்.


அவள் அவனை முறைப்பதையும் சட்டை செய்யாமல் காரியத்திலே கண்ணாய், “ உனக்கு ஒரு 10 நிமிடம் தருகிறேன். அதற்குள் உன் முடிவை சொல். அதற்கேற்ப , உன்னை சிம்லா வரை விட்டுவரவோ, அல்லது இன்றிரவு திருமண சடங்குகள் பற்றி பேசவோ செய்வேன்" என்றவன் அதற்கு மேல் அவளை நின்று பார்த்துக் கொண்டிராமல், ஒரு டவலுடன் குளியலறைக்கு சென்று முகம் கழுவிக் கொண்டு வந்தான்.


அவனது இந்த திடீரென்ற வெட்டி தறிதார் போன்ற பேச்சால் ஆதிரை விக்கித்து அமர்ந்தாள். அப்படி அயர்ந்து பார்த்தது ஒரு நொடிதான். மனது மேலும் கனத்துவிட்டது போன்ற உணர்வு ஆதிரைக்கு. சென்னையில் இருக்கும் வரை முட்டைகளை அடைக்காக்கும் பறவையை போல தன்னை அடைக்காத்த அர்ஜூன் , இன்று இப்படி பேச கூடுமென்று ஆதிரை எண்ணவில்லை போலும். குறைந்தபட்சம் அவனது ஊர் மக்களின் கஷ்டம் தீரும் மட்டுமாவது நான் அவனுடன் இருக்க சொல்ல கூடுமென்றெ எண்ணினாள். அதனாலே அதுவரை அவனுக்கு இம்மசையாக இருக்காமல் தனி அறை வேண்டுமென்று சொன்னதும். ஆனால் அர்ஜூனின் இந்த பேச்சு ஆதிரையை மனதில் மட்டுமல்லாமல் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் உடலளவிலும் சோர்வடைய செய்தது.


‘ஒருவேளை போவதென்று முடிவாகிவிட்டாள் எங்கு போவது வீரமாக கிளம்பிகிறேன் என்று சொன்னேனே.? உடலும் இன்னும் பலம் பெறாததுப் போல இந்த மயக்கம் வேறு வந்து வைத்திருக்கிறாதே! எங்கேனும் பாதுகாப்பற்ற இடத்தில் இப்படி மயங்கி விழுந்தால் என்ன ஆவது? என் அண்ணா அண்ணியிடம் என்னவென்று சொல்லிவிட்டு கிளம்புவது. புதிதாக கிடைத்திருக்கும் என் அத்தை.? இன்னமும் அவர்களிடம் மனம் விட்டும் பேசவில்லையே. என் தாத்தா ,இத்தனை வருடங்கள் கழித்து கிடைத்த அவரையும் என்னிடம் தங்கமே தங்கமே என்று கொஞ்சும் அவரது அற்புதமான அன்பையும் பாசத்தையும் உடனே விட்டுவிட்டு போ எங்கிறானா? எல்லாவற்றிற்கும் மேலாக என் குட்டி ராஜா. அவனையும் விட்டு போக சொல்வானோ? ‘ என்று தன் தலையை சிலுப்பிய ஆதிரை. ‘நான் ஏன் போக வேண்டும். இவனை விலகி இருக்கலாம் அது சரி. ஆனால் நான் ஏன் இப்போதுதான் கிடைத்திருக்கும் என் மற்ற சொந்தங்களை விட்டு இப்போதே விலகி போக வேண்டும். என்ன தினக்கமிருந்தால் அர்ஜூன் என்னை இப்போதே வெளியே போ என்று சொல்லாமல் சொல்வான். கொஞ்ச நாட்கள் அவர்களுடன் இருக்கவும் சேர்த்துதானே ஆதிரை தனி அறை யோசனை சொன்னது. இவனுக்கு எதுவும் புரியவில்லையா இல்லை புரியாததுப் போல் நடிக்கிறான். என்ன திமிர் ‘ என்று தான்தான் விலகி போவதாக கேட்டேன் என்பதே மறந்து அதற்கும் அர்ஜுனை திட்டி தீர்த்தாள் ஆதிரை.


குளியல் அறையிலிருந்து எப்போதோ வெளியில் வந்துவிட்ட அர்ஜூன் ,அவள் அமர்ந்திருப்பதையும் அவள் விழியில் ஓடி ஆடிக் கொண்டிருந்த கண் மணிகளையும் பார்த்த வண்ணம் புன்னகித்துக் கொண்டு குளியல் அறை கதவின் மீதே சாய்ந்த வண்ணம் ரசித்துக் கொண்டிருந்தான்.


சத்தம் ஏதுமின்றி இருக்க நிமிர்ந்து குளியல் அறையை நோக்கி பார்த்த ஆதிரைக்கு அவனது புன்னகை கொதிக்கும் எண்ணையில் அப்பளத்திய போட்டதுப் போல மொடமொடவென்றாகியது. அதே மனனிலையில் ஏற்கனவே அவளுள் பேசிக் கொண்ட எண்ணத்திலும், “ நான் ஏன் போக வேண்டும். எதற்காக உடனே கிளம்ப வேண்டும். உங்களது போலவே எனக்கும் இவர்கள் அனைவரும் சொந்தங்கள். உங்களை பிரிந்து விலகலாம். என் சொந்தங்களுடன் நான் இருக்கவிடாமல் போ என்றால் என்ன அர்த்தம். கொஞ்சம் நாட்களாவது. குறைந்தது சந்திரகுளிர் பிரட்சனை சரியாகும் வரையாவது நான் இவர்களுடந்தான் இருப்பேன். என்னை போ என்று நீங்க சொல்ல முடியாது.” என்று அவளை மறந்து கோபமுடன் சண்டை கோழியாக மாறினாள் ஆதிரை.


இதையே எதிர்பார்த்தானோ என்னமோ அவனால் அதற்கு மேல் சிரிப்பை அடக்கமுடியாமல் அவள் பேசியப் போது குழந்தை போல அவளது முக அசைவாலும் ,சத்தமிட்டு சிரித்தான்.


அவனது சிரிப்பின் காராணம் புரியாமல் மலுங்க மலுங்க நில நிமிடம் விழித்தாள் ஆதிரை. சிரிப்பூனூடே அவளை பார்க்க பரிதாபமாக தோன்றியதோ என்னமோ, சட்டென அமைதியுற்று, “ சரி போக வேண்டாம். அப்போது என்னுடன் என் அறையில் இருக்க சம்மதம்தானே? பிரட்சனை முடிந்ததானே. அப்போது நான் வெளியில் போகிறேன்" என்றான் அர்ஜூன் இலகுவாக.


அவனது சாமர்த்தியத்தை எண்ணி ஆதிரை வியந்து போனாள். "என்ன பிரட்சனை முடிந்ததா? உங்களோடு நான் இந்த அறையில் இருப்பதற்கில்லை. நானே அண்ணியிடம்..” என்று ஆதிரை சொல்லிக் கொண்டிருக்கும் போதே .. “அண்ணியிடம்? என்ன சொல்ல போகிறாய். என் கணவன் எனக்கு முத்தமிட்டுவிட்டான். அவனிடமிருந்து எனக்கு பாதுகாப்பு வேண்டும். அதனால் உங்கள் அறையில் தங்கிக் கொள்கிறேன் என்று கேட்க போகிறாயா?” என்று அவளை போலவே பேசி நக்கலிட்டான்.


அவனை வெறித்த ஆதிரை, ‘அப்படியும் கூடதான் சொல்லமுடியுமா? அண்ணி சிரிக்க மாட்டார்கள்’ உடனே சோர்ந்து தலை தாழ்த்தினாள் ஆதிரை.


அவளது மனனிலை அறிந்ததாலோ என்னமோ, மனம் இளகி , “இங்க பாரு ஆதிரை. இனி நான் உன் அனுமதியில்லாமல் உன்னை தொடுவதற்கில்லை. இந்த கட்டிலும் இருவரும் நாம் அணைத்துக் கொண்டால்தான் உறங்க முடியுமென்ற வகையில் சிறிய கட்டிலுமில்லை. சொல்ல போனால் பெரியவர்களே நால்வர் என்றாலும் தாராளமாக படுத்துக் கொள்ளலாம்.


நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லியிருக்கிறேன். இந்த பிறவியில் எந்த தவறு நேர்ந்தாலும் , இதன் பாதிப்பு மிகவும் அதிகம். முன் ஜன்மங்களில் நம் இருவர் மட்டுமே பாதிக்க பட்டோம். ஆனால் இப்பிறவியில் என் ஊர் மக்கள் மட்டுமல்லாமல் என் கணிப்பின் படி பிரளயமே வரவும் வாய்ப்பு இருக்கிறது. நம் சொந்தங்களும் அழியலாம். நம் இருவரிடையேயான பிரட்சனையில் மற்றவர்களை தண்டிப்பது சரியா? அதனோடு நம் பிரட்சனைகளை வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னால் என்ன எண்ணக் கூடும். அவர்களுக்காக தியாகம் போல நாம் சேர்ந்திருப்பதை அவர்கள் ஏற்கக் கூடுமா? நீ சின்ன பிள்ளையில்லை புரிந்துக் கொள்வாய் என்று நம்புகிறேன்.” தீர்க்கமாக குழந்தைக்கு சொல்வது போல சொன்னான்.


அவன் சொல்ல சொல்ல பொறுமையாக அனுபிசுங்காமல் கேட்ட ஆதிரை, அவன் சொல்வதும் சரிதானோ. என்று தோன்றிவிட, “சரி… நீங்கள் சொல்வது எனக்கு புரிகிறது. மற்றப்படி உங்கள் சொல் செயலாகுமென்று நம்புகிறேன்" என்று அவ்வளவுதான் எனபதுப் போல் லேசாக சாய்ந்து கட்டிலிலே சில நிமிடம் படுத்திருந்தால் பரவாயில்லையென்று கால் குறுக்கு அப்படியே படுத்துக் கொண்டாள்.


அவளுக்கு பதில் சொல்லும் விதமாக "நிச்சயமாக..” என்றவன் அவள் படுத்திருந்த விதத்தை பார்த்து சிறிது தாமதித்து, “ஆனால் உன்னிடம் ஒரு நிபந்தனை .” என்றான் அர்ஜூன்.


இன்னுமென்ன என்பது போல அவனை திரும்பி பார்த்தாள். “என்னுடன் இருக்கும் வரை நீ சேலை அணிய கூடாது. சுடிதாரோ அல்லது வேறு உடைகளோதான் அணியவேண்டும்.” என்றான் அர்ஜூன்.


‘இது என்ன கொடுமை. சேலைதானே அவளுக்கு பிடித்த உடை. இந்த இந்திரபிரதேஷில் அவசியமில்லாமல் சேலை அணிய போவதில்லை. ஏதோ திருமண சடங்குகள் எங்கிறார்களே. அதற்கு சேலை அணியதானே வேண்டும். சரி அணியவில்லை என்று முடிவெடுத்ததாகவே இருக்கட்டும். என்றபோதும் இது என்ன கிடுக்குபிடியான கட்டளை. அதே நினைவில், “ஏனோ. என் விருப்பம் போல் ஆடை அணிவதில் உங்களுக்கு என்ன கஷ்டம்" என்றாள் ஆதிரை.


"சொல்கிறேன். நீ சேலையணிந்தால் நான் கட்டிய மஞ்சள் கயிறு என் கண்ணில் பட்டு என் மனைவியென்று எல்லை மீற தோன்றுகிறது. அதனால் இதுப் போன்ற காலர் வைத்த சுடிதாரோ அல்லது ஜீன்ஸ் சட்டையோ போட்டுக் கொள். உடை விசயத்தில் உன்னை என் மனைவியென்று எனக்கு தோன்றும்படி நடந்துக் கொள்ளாதே அதன்பிறகு இங்கே தொட்டேன் அங்கே தொட்டேன் என்று என்னிடம் சண்டைக்கு வராதே" என்றான் விட்டேற்றியாக.


அவனது வார்த்தைகளில் "ஆ.." என்று வாயை பிளந்தாள் ஆதிரை. இந்த நிபந்தனை அவளுக்கு சிறிதும் பிடித்தமில்லை. ‘இது என்ன லாஜிக் . மஞ்சள் கயிற்றை பார்த்தால் எல்லை மீறுவேன் என்று சொல்லாமல் சொல்கிறானா? நல்ல வேளையாக எடுத்து வந்த நாலு சுடிதாரும் காலர் வைத்ததே. இருந்தபோதும் நான்கு சுடிதாரை எத்தனை நாள் திரும்ப திரும்ப அணிய முடியும்’ என்று வியந்த போதும்., அவன் ‘என்ன பதில் சொல்வது என்று பேந்த பேந்த விழித்தாள்.


"என்ன பதிலே இல்லை. நீ மட்டும் தொடக்கூடாது என்று சொல்லலாம். ஒரே அறையில் அப்படி இருப்பது எவ்வளவு கஷ்டமென்று தெரியுமா?” மன்மதனாக புன்னகித்தான் அர்ஜூன்.


கூட சிரிக்கவா என்பது போன்றான அவள் கணவனின் சிரிப்பு ஆதிரையை மயக்கியதோ என்னமோ, சில நொடி பிரமித்து விழித்தாள் . பின் சமாளித்து " சரி.. குறைந்தபட்சம் உங்களுடன் இருக்கும் போது ஆடை விசயத்தில் கவனமாக இருக்கிறேன்" என்றாள் ஆதிரை.


“நல்லது. அதனோடு நம் இருவருக்கிடையேயான இந்த ஒப்பந்தம் , நம் சொந்தங்களுக்கு தெரியக் கூடாது. அதனால் வெளியில் அதற்கேற்ப நடந்துக் கொள்வாய் என்று நம்புகிறேன்" என்று சொல்லிவிட்டு வெளியில் செல்ல எத்தனித்தான்.


சொல்வதை மறுக்காமல், “சரி.” என்று ஒற்றை சொல்லோடு முடித்துவிட்டு கண்களை இறுக்க மூடிக் கொண்டாள் ஆதிரை. அவளை சில நொடி பார்த்திருந்தவன் எதுவும் பேசாமல் அறையைவிட்டு வெளியில் சென்றுவிட்டான் அர்ஜூன்.


அப்படியே இருந்தவள், அவளையும் அறியாமல் உறங்கியும் போனாள். அவளுக்கென்று உடையெடுத்து வந்த ரிதிகாவும் அவள் உறங்குவதை பார்த்துவிட்டு உடையை அறையில் வைத்துவிட்டு சென்றுவிட்டாள். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின் கண்விழித்த ஆதிரை முழுதும் இருட்டிவிட்டதை உணர்ந்தாள். அந்த அறையில் இரவு மின்விளக்கு இல்லை போலும் , இருந்தும் தணல்கூண்டு குளிர் மட்டும் போக்கவில்லை. காரிருளையும் போக்கியிருந்தது. அவசரமாக எழுந்து முகம் கழுவிக் கொண்டு வந்தவள் அங்கு அவளுக்காகவே காத்திருப்பவன் போல இருந்த அர்ஜூனை கண்டாள்.


“அதிக நேரம் உறங்கிவிட்டேனா?” என்று கேட்டப் படி தன் தலையினை சரி செய்துக் கொண்டு வெளியில் செல்ல நினைத்தாள்.


“பரவாயில்லை. வா எல்லோரும் உனக்காக காத்திருக்கிறார்கள். இரவு உணவின் பின் நாளை எப்படி கிளம்ப வேண்டும். என்ன என்ன செய்ய வேண்டுமென்று பாட்டி சொல்ல வேண்டும் என்றார்கள். போகலாம்" என்றான் அர்ஜூன்.


“சரி...” என்று அவன் முன்னே போக பின்னோடு சென்றாள் ஆதிரை. என்ன தோன்றியதோ, ஒரு அடி பின்னே வந்து அவளது காதருகில், "மற்றவர்கள் முன்னிலையில் நாம் இருவரும் கணவன் மனைவி. குறைந்தபட்சம் சந்திரகுளிர் சரியாகும்வரை. நமக்குள் இருக்கும் சங்கடங்கள் அவர்களை பாதிக்காத வண்ணம் இயல்பாக இருப்பாய் என்று நம்புகிறேன்" என்று குரல் மெலிந்து சொல்லிவிட்டு , கம்பீரமாக நடந்து முன்னே சென்றான் அர்ஜூன். அவன் சொல்வதை கேட்டப்போதும் அவளால் பதிலேதும் சொல்ல முடியாமல் மனதுள் ஏதோ செய்தது.


இரவு உணவிற்காக போன ஆதிரைக்கு இப்படி குடும்பமாக அமர்ந்து அனைவரும் ஒன்றாக சாப்பிடுவது மனதுக்கு இதமாக இருந்தது. ஒரு பெரிய வட்டமாக தரையில் சமணம் போட்டு அமர்ந்துக் கொண்டு பேசிய வண்ணம் சாப்பிடுவது இதுவே முதல் முறையாக ஆதிரைக்கு மனம் நெகிழ்வுற்றது. அவ்வப்போது சுமித்ரையின் மீதும் சிவராமன் மீதும் ஆதிரைக்கு விழி விழுந்து மீண்டது. இளகுவாக பேசியப் போதும் சிவராமன் தாத்தாவின் ஏக்கம் விவரம் அறிந்த ஆதிரையின் கருத்தில் படாமல் இல்லை. அனைவரும் சாப்பிட்டு முடித்தப்பின் சிவசக்தியும் சிவராமனும் ஆதிரையையும் அர்ஜூனையும் அழைத்தனர். உடன் அழைக்காமலே ரிதிகாவும் அரவிந்தும் சென்று அவர்களுடன் நின்றனர்.


"நாளை காலை 4 மணிக்கு இங்கிருந்து கிளம்ப வேண்டும். ஊர் மக்களும் நம்மோடு கோவிலுக்கு வர இருப்பதால் அவர்கள் இரவெல்லாம் தூங்காமல் இருக்க பாட்டும் நடனமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விருப்பமிருந்தால் நீங்களும் போய் பாருங்கள். அம்மு ஆதிரையை 4 மணிக்கு முன்பாகவே தயார் செய்துவிடு. பிரம்ம முகூர்த்தம் ஆரம்பிக்கும் போது நாம் குகையில் இருக்க வேண்டும். அந்த ஒன்றரை மணி நேரத்திற்குள் விடியுமுன்னே வீடு திரும்பியும் இருக்க வேண்டும். புரிகிறதா?” என்று பொதுவாக சொன்னார் சிவசக்தி.


“சரிங்க பாட்டி. நாங்க தயாராக இருக்கிறோம்.” என்றாள் ரிதிகா.
தொடர்ந்து "கண்ணா.. நாம் இங்கிருந்து கிளம்பும் போது இந்த திருமண சடங்குகள் முடியும் வரை , ஆதிரையின் கழுத்திலிருக்கும் இந்த மஞ்சள் கயிற்றை கழற்றி பூஜை அறையிலிருக்கும் பால் சொம்பில் போடவேண்டும். அதிலிருக்கும் மஞ்சள் கிழங்கை மட்டும் எடுத்து புது மஞ்சள் கயிற்றி கட்ட வேண்டும். " என்று அர்ஜுனிடம் சொன்னார் சிவசக்தி. அதனை கேட்டதும் ஆதிரையின் முகம் வெளிரி போயிற்று .’ தாலியை கழற்றுவதா?’ என்று எல்லா தமிழ் பெண்களுக்கும் இருக்கும் பயமே ஆதிரையினுள்ளும் உண்டானது. அவளையும் அறியாமல் அருகில் நின்றிருந்த அர்ஜூனின் தோள்பட்டைக்கும் கீழான கைகளை இறுக்க பற்றினாள். அப்படி பற்றிய அவளது கைகளையே அர்ஜூனும் பார்த்தான்.


அவளையே பார்த்திருந்த சிவராமன், “தங்கமே. பயமொன்றுமில்லை. அந்த புது மஞ்சள் கயிற்றை அர்ஜீன் உன் கழுத்தில் திரும்ப நாளை கட்டிவிடுவான். அதனால் பயப்பட ஒன்றுமில்லை.” என்று பரிவாக அவள் தலை வருடினார்.


கவலை இன்னும் அகலாதவலாக "அ.. அவர் என்னுடனே இருப்பார் இல்லையா தாத்தா" என்றாள். அருகிலே அர்ஜூன் இருந்த போதும் யாரிடமோ கேட்பதுப் போல ஆதிரை கேட்டதை பார்த்து எல்லோருக்குமே பரிதாபம் ஏற்பட்டது.


அர்ஜூனுக்கு மட்டும் ஆயிரம் கேள்விகள் மனதுள் ஏற்பட்டது. இருந்தும் "ஆதிமா.. நான் உன்னோடனே இருப்பேன். அதனால் நீ கவலை படவேண்டாம். சரியா" என்றான் அர்ஜூன். ரிதிகாவும் அரவிந்தும் காரண பார்வை பரிமாறிக் கொண்டனர். அவனை விழி நிமிர்த்தி பார்த்த ஆதிரை "நிச்சயமா?" என்றாள்.


"கண்டிப்பாக" என்றான் அர்ஜூன். சில நொடி பேசாமல் இருந்து நிலை உணர்ந்து அவனிலிருந்து தன் கையை எடுத்துக் கொண்டாள் ஆதிரை.


அவளையே பார்த்திருந்த சிவசக்தி புன்னகை மாறாமலே, ஆதிரையை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டார். “எதற்கும் கவலை கொள்ளக் கூடாது. நீ தனியாக இல்லை. இந்த ஊரே உன்னோடு இருக்கிறது. எந்த தவறும் யாருக்கும் நிகழாது. சரியா ஆதிரை..” என்று கூறி அவள் தலை உச்சியில் முத்தமிட்டாள். தாயின் பாசத்தை அனுபவத்திராது ஆதிரைக்கு அந்த ஆருதலான அரவணைப்பு மிகவும் இதமளித்தது. அதிலே, “சரிங்க பாட்டி.” என்று முகம் தெளிந்தாள். பின் இன்ன பிற சடங்கு முறைகளையும் விவரித்த சிவசக்தி , தான் ஓய்வெடுக்க போவதாக சொல்லிவிட்டு உறங்க சென்றுவிட்டார்.


அறைக்கு சென்ற ஆதிரையின் பின்னோடு வந்த ரிதிகா , அவளது திருமணத்திற்கென்று ரிதிகாவே design செய்த ஆடையை அவளுக்கு காட்டினாள். "காலையிலிருந்து அதனை முழுதும் தைய்த்து முடிக்கவே நேரம் சரியாக இருந்தது. நன்றாக இருக்கிறதா ஆதிமா" என்று ஆதிரை முன்பு உறங்கும் போது வைத்துவிட்டு போன ஆடையை காட்டினாள் ரிதிகா. உடன் வந்த அர்ஜூன் எதிலும் சுவாரசியம் இல்லாமல் கட்டிலில் சாய்ந்துக் கொண்டு அமர்ந்தான்.


கோழிகொண்டை பூவும் , காட்டு மல்லிகைபூவுமாக வெள்ளையும் சிகப்புமாக அந்த பாவடையில் சேர்த்து தைய்த்திருந்தனர். பூவினாலே ஆபரணங்கள் செய்திருந்தனர். அதனை பார்க்கும் போது ரிதிகாவின் கைவண்ணம் நன்றாகவே தெரிந்தது. “அண்ணி மெய்யாகவே அருமையாக இருக்கிறது அண்ணி. எனக்காகவா?” என்று கேட்ட வண்ணம் ஆடையை தூக்கி தன் மீது வைத்து பார்த்தாள். ஆதிரை.


“ உனக்குதான். நீதானே கல்யாணப்பெண். பிடித்திருக்கிறதுதானே. ஹப்பா.. என்ன பூவெல்லாம் இருப்பதால் பிடிக்காதோ என்று தோன்றிவிட்டது. சிறிது கனமாக இருக்கவும் உனக்குதான் கனமான் ஆடையென்றாலே பிடிக்காதே? அதுதான் யோசனையாக இருந்தேன்" என்று கவலையகன்றவளாக சொன்னாள் ரிதிகா.


“என்றாவது ஒரு நாள் இப்படி அணிவதில் என்ன இருக்கிறது அண்ணி. அதனோடு இந்த குளிருக்கு இதுபோல அணிந்தால் நன்றாக இதமாக இருக்கும்" என்று கற்பனை செய்த வண்ணம் சொன்னாள் ஆதிரை. மேல் சட்டையும் பாவடையுமாக இருந்த அந்த ஆடையை பார்த்து ஆதிரைக்கு மகிழ்ச்சிதான். ‘சேலை கட்ட வேண்டிய அவசியமில்லையே . ‘ என்று அர்ஜூனை திரும்பி பார்த்தாள். அர்ஜூனும் அதை கண்டுவிட்டானோ அவனது பார்வையிலே அது தெரிந்து போயிற்று. இருந்தும் இருவரும் எதுவும் பேசவில்லை.

“சரி ஆதி .. நடனம் பார்க்க வருகிறாயா? சிறிது நேரம் பார்த்துவிட்டு , ஒரு மணிப் போல கிளம்ப தயாரானால் சரியாகஇருக்கும்.” என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள் ரிதிகா.


தயக்கம் ஏதுமின்றி, “ சரிங்க அண்ணி..” என்று எழுந்துவிட்டாள் ஆதிரை. "என்ன தம்பி உனக்கு வேறு தனியே சொல்ல வேண்டுமா? வா போகலாம்" என்றாள் ரிதிகா.


"வரமாட்டேன் என்றால் விடவா போகிறாய். வா போகலாம் அக்கா" என்று எழுந்தான். எழுந்தவன் ஆதிரையையும் அவள் ஆடையையும் ஏற இறங்க பார்த்தான். அதன் அர்த்தம் புரியாமல் உடன் சேர்ந்து நடந்தாள் ஆதிரை.
 

periyauma

Well-Known Member
How parvathi idol stoled by viswa and lamp that adhirai had when she left that island felt into the hands of thingandira sithar need to be known . what was in the manuscripts given by sivaram thaata to adhira which she hasn't read yet . how they are going to unite both idols . were all these were still a mystery . very interesting story lovely narration . mystical yet enjoyable thirrler author yogiwave. Kudos . awaiting for next one
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top