தூரம் போகாதே என் மழை மேகமே!! - 7

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 7

d036211a1a818c63f4b43de8491e64c8a786dea8.jpeg


காலையில் விழித்ததும் , தானும் , ராஜாவும் தயாராகிவிட்டு சேகர் அங்கிளுக்கு phone செய்தாள் ஆதிரை. அவளது அழைப்புக்காகவே காத்திருந்த சேகரும் , காதம்பரனும் அவளது அறைக்கு வந்தனர்.

“என்ன ஆதிமா? நல்லா தூங்கினாயா?. நான் தான் நேத்து பயண களைப்பில் இருபாயென்றும் உணராமல் உன்னைக் கடற்கரை கடல் என்று இழுத்துக் கொண்டு போய் மயக்கம் போட வச்சுட்டேன்” என்றார் சேகர்.

சேகரிடம் , “இல்லை அங்கிள் அப்படியெல்லாம் இல்லை. நன்றாக தூங்கிவிட்டேன் ராஜாவும்தான். ஆனால் காலையில் எழுந்ததும் கந்தன் மாமா எங்கன்னு கேட்டு தொலைத்துதெடுத்துக் கொண்டிருக்கிறான் ராஜா.” என்று கூறினாள் ஆதிரை.

தனக்குப் பெரிய கார் கொடுத்த ஊர் தாத்தாவை பார்த்ததும் ராஜா ஆதிரையின் மடியிலிருந்து இறங்கி , “ஊ… தாத்தா.. “ என தூக்குமாறு கைகளை நீட்டிக் கொண்டு அவரிடம் ஓடினான்.

“வா… வா.. ராஜாகுட்டி …கந்த மாமாவ தேடினாயா? “ என ஆசையாக தூக்கிக் கொண்டார் சேகர்.

“ஆங்… தாத்தா.” என அவன் அம்மாவிற்கு நாக்கைச் சுழற்றி அழகு காட்டினான் ராஜா.

இதனைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே “வேடிக்கையை பாருங்க அங்கிள் ராஜாக்கு.” என்றாள் ஆதிரை.

“ம்ம்… அது சரி.. நான் ராஜாவ பாத்துக்க்கிறேன்“ என்றுவிட்டு, “ என்னுடன் வா மா. உன் வேலை மாற்றல் பற்றி ஏற்கனவே காதம்பரனிடமும் , அஜூனிடமும் பேசிவிட்டேன். அவர்கள் சில கட்டுப்பாடுகள் சொல்லியிருக்கிறார்கள். அவை உனக்குச் சம்மதம் என்றால் அவர்களே அரசு மருத்துவ சங்கத்திடம் பேசி உன்னை அவர்களது கிராமத்திற்கு ஏற்பாடு செய்ய அங்கீகாரம் வாங்கிவிடுவார்கள். எனக்கும் அவர்களது கிராமமே உனக்குத் தகுந்ததாக இருக்குமென்று தோன்றுகிறது. என் நண்பன் காதம்பரனும் அந்தக் கிராமத்தை சேர்ந்தவர்தான். அதனால் எனக்கும் கந்தன் வரும் வரை உன் பாதுகாப்பு பற்றி கவலையும் இல்லாமல் இருக்கும். அதனோடு அர்ஜூனின் குடும்பமும் நல்ல செல்வாக்கான குடும்பம். அவர்களால் அரசுக்கும் தொழில் முறையில் நல்ல வருமானம். அதனால் அவர்களது இந்தக் கோரிக்கையை அரசே பரிந்துரை செய்து உறுதிபடுத்திவிடும்.

“ஓ… சரிங்க அங்கிள். ஆனால் இவ்வளவு பலம் உள்ளவர்கள். நான்தான் அவர்கள் கிராமத்திற்கு வர வேண்டுமென்று இருகாதில்லையா? அதுதான் எனக்கும் ஒன்றும் புரியவில்லை.” என்று விளங்கா பார்வையால் கேட்டால் ஆதிரை.

இதனைக் கேட்ட காதம்பரன் முன் வந்து , “எங்கள் கிராமத்திற்கு மருத்துவம் செய்ய வர சில கட்டுப்பாடுகள் இருக்குமா. அதனால் அனைவரும் கொஞ்சம் தயங்குகின்றனர் ஆதிரை. எங்கள் கிராமத்தில் அடிப்படை வசதிகளைத் தவிர, phone –ஒ இல்லை internet –ஒ பயன்படுத்த முடியாது. ஏதாவது அவசரம் என்றால் மட்டும் சிவசக்தியம்மா வீட்டில் இருக்கும் தொலைப்பேசியை பயன் படுத்தலாம். அதனோடு சில பல எங்கள் கிராமத்திற்கென இருக்கும் பழக்க வழக்கங்களை அவ்வூருக்கு வருபவர் யாராக இருந்தாலும் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கு நம்பிக்கையானவர்களாக தேடிக் கொண்டிருந்தோம். அப்போதுதான் , எனக்கும் கஜேந்திரனுக்கும் நண்பரான உங்கள் அங்கிள் சேகர் உன்னைப் பற்றிய இந்த நிலையைச் சொன்னார். எங்கள் ஊர் மக்களுக்கும் தேவை , உங்களுக்கும் இரு தேவை, அதனோடு நீங்களும் அவ்வளவாக internet பயன்படுத்துபவராகவும் , அதிக நண்பர் வட்டம் இருப்பவராகவும் தெரியவில்லை. அதனால் ஒரு நேர்காணலுக்குப் பின் , உனக்கும் சம்மதமென்றால் அடுத்த நடவடிக்கை எடுக்கலாமென்று நானும் அர்ஜூனும் கிளம்பி வந்தோம்.” என்றார்.

“அப்படிங்களா அங்கிள். ஆனால் இந்த அர்ஜூன் யார். கஜேந்திரன் என்று சொன்னீர்களே! அவர் யார். சிவசக்தியம்மா யார்? என்னதான்
செல்வாக்கு அது இது என்றாலும் அர்ஜூன் எங்கிறவரிடம் நான் ஏன் நேர்காணலுக்குச் செல்ல வேண்டும். அவர் என்ன doctor- அ?” என்று அந்த அர்ஜூனின் நேற்றைய நடவடிக்கையால் கனன்ற தன் கோபத்தையும் ஒருவாறாக வெளிப்படுத்தினாள் ஆதிரை.

அவளுக்கு ஒரு புன்னகையை பதிலாக உதிர்த்தார் காதம்பரன். காதம்பரன் எதுவும் சொல்வதற்கு முன் , சேகர், “ அதனை நான் தெளிவாக பிறகு சொல்கிறேன் ஆதிமா. இப்போது நேரமாகிறது. அர்ஜூன் சீக்கிரமாக எங்கோ வெளியே செல்ல வேண்டும் என்றான். அதனால் இந்த நேர்காணல் முடிந்த பிறகு பேசிக்கொள்ளலாம். சரியா?” எனச் சிறுபிள்ளைக்கு சொல்வது போல கூறினார்.

“அதில்லை அங்கள்…அந்த..” என ஏதோ சொல்ல வந்தவளை “உன் அங்கிள் உனக்குக் கெட்டதையா சொல்வேன் ஆதிமா. ஏன் இவ்வளவு பிடிவாதமாக கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறாய்” எனச் சிறிது கடுமையான குரலில் சேகர் கேட்கவும் ஆதிரை அதன் பின் சேகர் அங்கிளை கேள்விகள் கேட்டு வேதனைக் கொள்ள செய்ய விரும்பாமல், “sorry அங்கிள். ஏதோ ஒரு ஆர்வ மிகுதியில் கேட்டேன்.” என்றாள் ஆதிரை.

அவள் சோர்வதை கண்ட காதம்பரன், “ விடு சேகர் , சின்னப் பெண்தானே. அதனோடு குழந்தையோடு வேறு ஒரு புது இடத்திற்குப் போக வேண்டும் . எங்க ஊர் மக்களைப் பற்றியும் , அர்ஜூனை பற்றியும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருக்க தானே செய்யும். நீ வா மா நாம் போகலாம். “ என்று சேகரை அமைதிப்படுத்தி முன்நோக்கி நடந்தார்.

உடன் சேர்ந்து நடந்த சேகர் “ம்ம்.. புரிகிறது காதம். எனக்கும் ஆதிரையை அதட்டும் எண்ணமில்லை, அவள் சூழ்நிலை புரியாமல் பல கேள்விகளைக் கேட்டதும், கொஞ்சம் பொறுமை இழந்துவிட்டேன். “ என்றார். ஆதிரை மேலே எதுவும் கேட்காமல் , அமைதியாக அவர்களோடு நடந்தாள்.

அந்த மாடியின் கீழ் தளத்திற்கு அவர்கள் வந்ததும் காதம்பரன் “கொஞ்சம் காத்திருங்கள். இதோ வந்துடரன்” என்றுவிட்டு அர்ஜுனிருக்கும் அறை நோக்கிச் சென்றார்.”

அப்போது சேகர் ஆதிரையிடம் பேசினார். ”கொஞ்சம் கடுமையாக பேசிவிட்டேனா ஆதிமா… அர்ஜூன் கொஞ்சம் கோபக்காரன். அவன் அக்கா அம்மு அவனை விட்டுப் போன பிறகு எந்தச் சின்ன விசயத்திலும் கண அக்கறை. சின்ன தவறு நேர்ந்தாலும் , பொறுக்காமல் உடனே யாராக இருந்தாலும் மிகவும் கோபம் கொள்வான். 10 மணிக்குள் நேர்காணலுக்கு ஏற்பாடு செய்ய சொல்லியிருந்ததாக காதம் கூறினான். அறையிலே பேசிக் கொண்டே இருந்தால் நேரமாகிறதே என்றுதான் கொஞ்சம் கடுமையாகப் பேசிவிட்டேன். Sorry மா” என்றார் சேகர்.

“அட அங்கிள்.. எனக்கு உங்களைத் தெரியாதா? அக்கறையாக என் பாதுகாப்புக்காக இவ்வளவு யோசித்திருக்கீறிங்க. நா சும்மா தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்டேன். உங்கள கஷட படுத்திட்டேனோனு தான் கஷ்டமா இருந்துச்சு” என தன் உண்மை மன நிலையைச் சொன்னாள் ஆதிரை.

அவளை நோக்கி புன்னகித்த சேகர் ஆதிரையின் முந்தய கேள்விக்குப் பதில் கூறினார், “ கஜேந்திரனும் காதம்பரனை போல என்னுடை பள்ளிகால நண்பன். கஜேந்திரனின் மகன் தான் அர்ஜூன். கஜேந்திரனின் குடும்பம் ஒரு ராஜா பரம்பரை ஆதிமா. கஜேந்திரனின் அம்மாதான் சிவசக்தி அம்மா. அவர்களது கிராமத்திற்கே அர்ஜூனின் குடும்பமே அடைக்கலம் போல மா. முதல் முறையாக மருத்துவ வெளியிலிருந்து சுகாதார நிலை அந்தக் கிராமத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால்தான் மருத்துவர் தேர்வில் எந்த தவறும் ஏற்பட்டுவிடக் கூடாதென்று , சல்லடையாக தேடுகிறார்கள். அதனோடு அவர்களது தேவை நன்கு தமிழ் பேசத் தெரிந்த பெண் டாக்டர் வேண்டுமென்பதே!. அறுவை சிகிச்சையின்றி எளிய முறையில் பெண்களுக்கு பிரசவம் பார்க்க கூடிய கை தேர்ந்தவர்களாக தேடிக் கொண்டிருந்தார்கள். உன்னுடை வேலை மாற்றம் குறித்து நீயும் என்னிடம் பேசியிருந்தாய். கந்தனும் கொஞ்சம் கவலை கொண்டது போலத் தெரிந்தது. அதனால்தான் உனக்காக இவர்களிடம் பேசி வைத்திருந்தேன். எங்கே நாம் தாமதமாக போய் அர்ஜூனுக்கு உன் மீது கெட்ட அபிப்ராயம் வந்துவிடுமோ என்று அஞ்சியே அவ்வாறு பேசிவிட்டேனம்மா” என்று தன் செயலுக்குக் காரணம் தெரிவித்தார் சேகர்.

“அட அங்கிள்… பரவாயில்லை. என்னால உணர முடியுது.. நீங்க feel பண்ணாதீங்க” என்று சேகரிடம் கூறினாள் ஆதிரை. பின், ‘அப்போ சேகர் அங்கிளின் tension க்கு காரணமும் அந்தக் கடுவன் பூனைதான் போல.’ மீண்டும் அர்ஜூனை மனதுள் கறுவினால் ஆதிரை.

காதம்பரன் வெளியில் வந்து , “ஆதிரை நாம் போகலாமா?! சேகர் நீ ராஜாவுடன் இரு… நாங்க பேசிவிட்டு வந்துவிடுகிறோம்.” என்றார்.

“சரி.. காதம்.. bold-அ பேசிட்டு வா ஆதிமா.. ஒரு வேளை உனக்கு அவர்களின் நிபந்தனையோ ,இல்லை அந்தக் கிராமமோ பிடிக்கவில்லையென்றாலும் , சொல்லிவிடு.. எனக்காக யோசிக்காதே. நாம் வேறெதுவும் ஏற்பாடு செய்ய முடியுமா என்று பாக்கலாம். ஆனால் காதம் கூட இருக்கிற போல இருந்தா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்” என்றுவிட்டு காதம்பரனையும் ஆதிரையையும் ஒருங்கே பார்த்துச் சிரித்தார் சேகர்.

“ம்ம்… சரிங்க அங்கிள்” என்றாள் ஆதிரை.

“நானும் ராஜாவும் , நிஜ காரு பாக்க போரோம்.. என்ன ராஜா போகலாமா?” என்று வாசல் நோக்கி சென்றார் சேகர்.

காரு என்றதும் ராஜாவும் ,” அம்மா.. காரு…ல…. ராஜா.. பாக்க போர…. டாட்டா..” என கைகள் அசைத்துவிட்டு சேகரின் கழுத்தில் தன் சின்னச்சிறு கைகளை போட்டுக் கொண்டு கண்களில் ஆர்வமாகச் சென்றான்.

ஆதிரையும் காதம்பரனும் , அர்ஜூனின் office அறைக்குச் சென்றனர்.

“ஊட்காருங்க அங்கிள்.” என்றுவிட்டு , ஆதிரையைக் கால் முதல் தலைவரை பார்த்துவிட்டு, “நீயும்தான் உனக்குத் தனியாக சொல்ல வேண்டுமா” என்றான் அர்ஜூன்.

அர்ஜூனின் இந்த அலட்சிய வார்த்தைகளில் , அவனையே வெறித்துக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தாள் ஆதிரை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top