தூரம் போகாதே என் மழை மேகமே!! - 68

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



“மூன்றாவது ஜன்மமா? என்ன சொல்றீங்க அர்ஜூன். ஒரே குழப்பமா இருக்கு" என்று ஆச்சரியத்தின் உச்சத்தில் உறைந்து போய் கேட்டாள் ஆதிரை.


“ஆமாம். நம் முதல் ஜன்மம் பற்றி சொல்ல வேண்டாமென்று நினைத்திருந்தேன். எப்படியோ அரைகுறையாக தெரிந்து வைத்திருக்கிறாய். முழுதும் கேள். அந்த மாலுமி உன் நண்பன் விஸ்வா உண்மையில் நல்ல நடிகன்தான். நீ சொல்வதையும் கேட்கும் போது அப்படிதான் தோன்றுகிறது. அதை நான் ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். உன்னையும் என்னையும் பிரித்தது மட்டுமல்லாமல், நம் கோவிலில் இருந்த சிவன் சிலையையும் திருடிச் சென்றுவிட்டான். நம்முடைய முழு முதல் கடவுள் பார்வதி. இருந்த போதும் அவளுடன் சிவனும் நம் கோவிலில் இருப்பார். உன் கனவில் நீ சிவனின் சிலையை பார்க்கவில்லையென்று நீ சொல்வதிலிருந்து தெரிகிறது. சிவனின் சிலை பார்வதியின் பின் இருக்கும். பார்வதி சிவனை மறைத்து இருப்பாள். அதனால் அது காணாமல் போனது எனக்கு முதலில் தெரியவில்லை.


என்னுடைய கணிப்பின்படி நம் தீவில் இருக்கும் யாரோ ஒருவர் மாலுமிக்கு உதவியிருக்க வேண்டும் என்பது எண்ணம். என் தந்தை கேட்ட அந்த அசரீரியும் உண்மையானதா என்பது சந்தேகமே. சிவனின் விளக்குதான் உன் கையில் நீ நம் தீவிலிருந்து எடுத்துச் சென்றது. நான் எண்ணை ஊற்றவென்று சொல்லப்பட்ட விளக்குதான் பார்வதியின் விளக்கு. ஆனால் அந்த விளக்குகள் எண்ணை வற்றாத விளக்குகள். நாம் என்றுமே எண்ணை ஊற்றியதில்லை. இருந்தும் சாமியாடி சொல்லப்பட்டதை பயமும் பதட்டமுடனும் இருந்த நம் ஊர் மக்கள் மறுக்கவில்லை. அதனால் நான் அந்த தீவிலே இருத்தப்பட்டேன். இந்த நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மாலுமி சிவனை அவனது கப்பலில் எடுத்து வைத்துக் கொண்டான். அவனால்தான் முதல் முறையாக சிவனும் பார்வதியும் பிரிந்தனர். “ என்றான் அர்ஜூன்.


“இந்த மாலுமிக்கு ஏன்தான் இப்படிப்பட்ட எண்ணமோ. என்னை உங்களிடமிருந்து பிரித்தது போதாதென்று சிவனையும் பார்வதியையும் பிரித்திருக்கிறான்" என்று வாய்விட்டே திட்டினாள் ஆதிரை.
அவளது வார்த்தையில் அவளை திரும்பி பார்த்த அர்ஜூன், "எனக்கும் அவனது நோக்கம் என்னவென்று தெரிந்திருக்கவில்லை. சிவன் சிலை காணாமல் போனதையும் அதே தீவில் இருந்த நான் முதலில் அறியவில்லை. ஆனால் அந்த சிலைகள் இரண்டும் மிகவும் அபூர்வமான பொருளால் உருவாக்கப்பட்டது. அந்த சிலைகள் விண்ணிலிருந்து வந்த பவித்ரமான விண்கல்லினை உருக்கி பல வித ரத்தினங்கள் உள்ளுக்குள் பதித்த வண்ணம் நம் முன்னோர்களால் உருவமைக்க பட்ட சிலைகள். அவற்றை சுற்றி வெறும் ஐந்து உலோகங்களால் ஆன பூச்சு பூசப்பட்டிருக்கும். என் குடும்பத்தில் இருப்பவர்களை தவிர வேறு யாருக்கும் அது தெரியாது. அதனால் மற்றவர்களுக்கு அவை கடவுளின் சிலை என்பதற்கு மேலாக ஈர்ப்புடையதாக இருக்காது. நீயும் தான் கனவில் கண்டிருக்கிறாயே. உனக்கே அதுபுரிந்திருக்கும்.


அந்த இரு சிலைகளோடு உனக்கு நான் கொடுத்த கழுத்தாரம் நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டு அரசரான என் வம்ச முன்னோர்களிடம் பரிசாக வழங்கப்பட்டது. அது என் வம்சத்தின் பூர்வீக சொத்தானது. நீ என்னை திருமணம் செய்துக் கொள்வதாக நிச்சயிக்கப்பட்டதால் உனக்கு அந்த நீலக்கல் பதித்த கழுத்தாரத்தை பரிசாக கொடுத்தேன். அது அந்த விண்கல்லை பிளந்தப் போது உள்ளே இருந்த ஒற்றை கல். அந்த விலை மதிப்பில்லாத கல் இந்த உலகில் எங்கும் இருக்க வாய்ப்பில்லை. அதனோடு அந்த சிலைகள் மருத்துவ குணமுடையவை. அதனால்தான் எம் தீவில் யாருக்கும் எந்தவித நோயும் உண்டானதில்லை. அந்த நீலக்கல்லும் மருத்துவ தன்மையுடையது. ஆனால் அந்த நீலக்கல் அதன் முழு பலனை அந்த சிலைகளில் ஏதேனும் ஒன்றின் அருகில் இருக்கும் போதே தர கூடியது. குறைந்தது நம் தீவின் சுற்றளவில் சிலைகள் இருந்தால்தான் அந்த நீலக்கல் பலனளிக்கும். அதனால்தான் நான் போன ஜன்மத்தில் ரேவதியிடம் அந்த நீலக்கல்லை பார்வதியின் சிலையுடன் அதை கொடுத்தேன். குறைந்தது குழந்தை பிறக்கும் வரை அதை அணிந்திருக்க சொன்னேன். “ என்று விட்டு " ஒரு நிமிடம் இரு " என்று பனியன் காய்ந்திருக்கிறதா? என்று தொட்டு பார்த்துவிட்டு இன்னும் காயததை எண்ணி , "லேசாக குளிர்கிறதென்று துணியை பார்த்தால், இன்னும் அப்படியே ஈரமாக இருக்கிறது" என்று சொல்லிய வண்ணம் மீண்டும் படுத்தான் அர்ஜூன்.


அவன் சொல்லியதை கேட்ட ஆதிரை, அவளது முந்தானையின் தலைப்பை லேசாக விரித்து அர்ஜூன் மீது போட்டுவிட்டு, “இப்போது பரவாயில்லையா" என்று மீண்டும் படுத்துக் கொண்டாள்.


சிறிது கனத்த பருத்தி சேலையென்பதால் அர்ஜூனுக்கு அந்த சேலை போர்வை இதமாக இருந்தது. “இப்போது பரவாயில்லை. உனக்கேதும் சங்கடமில்லையே" என்றான் அர்ஜூன்.


“இல்லை… தலை முகப்புதானே அது பயனற்று என் முதுகுப்பின் இருப்பதற்கு உங்கள் மேல் இருந்தால் உங்களுக்கும் பலனளிக்குமே. இந்த மண் குடிசையில் மழையில் இப்படி வெற்றுடம்புடன் இருப்பது கடினம்தானே.” என்று வருத்தப்பட்டாள்.


அவளுள் ஏதோ மாற்றம் உணர்ந்த அர்ஜூன், அவளை கண் இமைக்காமல் சில நொடி பார்த்தான். பிறகு ஆதிரையே, “என்னாயிற்று? என்னை ஏன் அப்படி பார்கீறீர்கள்" என்று தூய தமிழில் கேட்டாள்.


அவள் கேள்வியில் ஒன்றும் அறியமுடியாமல் விழி மாற்றி பேசலானான் அர்ஜூன். "ஒ.. ஒன்றுமில்லை. பிறகு என்ன ஆயிற்று என்று சொல்கிறேன் கேள்" என்றான் அர்ஜூன்.


“ம்ம் சொல்லுங்கள். பிறகு?” என்றாள் ஆதிரை.


பின் விட்டதிலிருந்து தொடர்ந்தான் அர்ஜூன், "எனக்கென்னவோஅந்த சிலைகளை பற்றியும் உன்னிடமிருந்த நீலக்கல் பதித்த கழுத்தாரம் பற்றியும் அந்த மாலுமிக்கு எப்படியோ ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டுமென்பது என் யூகம். ஆருடம் போல சூறாவளி வந்தது என்னமோ உண்மைதான். ஆனால் நம் தீவுக்கு மட்டும் எதுவும் ஆகவில்லை. அந்த பார்வதியால் நம் தீவு காக்க பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். காற்றுகுமிழ் போல் நம் தீவு அப்போதும் அந்த புயலிலிருந்து பாதுகாக்க ஏதோ ஒன்று விசித்திரமாக உண்டானது. தீவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. புயலும் கடந்துவிட்ட நிலையில்தான் உங்களை மீண்டும் தீவுக்கு அழைத்து வரலாமென்று அந்த மாலுமி கொடுத்த படகை பார்த்தேன். அந்த படகு ஓட்டையாகி இருந்தது. அப்போதே ஏதோ உறுத்தியது. இருந்தும் மனம் தளராமல் நானே படகினை வடிவமைத்து நீங்க சென்ற திக்கை நோக்கி ஓட்டி வரலாமென்றும் ஊர் மக்களை மீண்டும் அழைத்து வரலாமென்று படகினை தயார் செய்ய முயன்றேன்.


படகினை முழுதும் வடிவமைத்துவிட்டு இரவு உறங்கிவிட்டு காலை கிளம்பலாமென்று நினைத்து உறங்கி எழுந்து பார்த்தால், நாம் இப்போது இருந்ததுப் போல் அந்த தீவு கடலின் அடியில் மூழ்கி போயிருந்தது." என்று நிறுத்தினான் அர்ஜுன்.


“ஓ… அதனால்தான் நீங்க திரும்ப வரவில்லையா? நான் உங்களையே எதிர்பார்த்து க் கடற்கரையிலே இருந்தேன். தெரியுமா?! என்ன மாயமென்று தெரியவில்லை. எனக்கு யாருமே உதவி செய்யவில்லை. ஏன் நம் சொந்தங்கள் கூட உதவவில்லை தெரியுமா? உங்களை பிரிந்து எனக்கு மூச்சு விடவும் முடியமால் தவித்தேன். உணவும் இறங்கவில்லை. கடற்கரையில் உங்களுக்கு காத்திருந்த நிலையில் மயக்கம் வந்து அந்த கடலிலே விழுந்துவிட்டேன். அவ்வளவுதான் எனக்கு தெரிந்து நடந்தது" என்று இன்னும் கண்ணில் வலி தெரிய சொன்னாள் ஆதிரை.


"ஆதிரை மிகவும் உணர்ச்சிவச படவேண்டாமென்று முன்பே சொன்னேனில்ல. ஏன் கலங்கிற சொல்" என்று அவன்புரம் திரும்பி படுத்திருந்த ஆதிரையின் முகத்தில் கிடந்த முடியினை ஒதுக்கி சொன்னான் அர்ஜூன்.


“ம்ம்" என்று சொல்லியவள் அவனது கையை அப்படியே பற்றி அவளது கன்னத்தில் இதமாக வைத்துக் கொண்டு ,” அதன் பிறகு என்ன ஆச்சு திகு " என்றாள் ஆதிரை.


அவளது திகு என்ற அழைப்பில் விழி நிமிர்த்தி பார்த்த அர்ஜூன் அவளுள் நிச்சயம் ஏதோ மாற்றம் என்று உணர்ந்தவாறு அவளது செயலில் புன்னகித்தான் அர்ஜூன். பின் கையை இலகுவாக அவள் கன்னத்தில் வைப்பதற்காக வசதியாக அவள்புரம் திரும்பி படுத்துக் கொண்டான். இருவரின் முகமும் ஒருவர் முன் மற்றொன்றாக இருந்தது. பின் சொல்ல ஆரம்பித்தான். "அந்த தீவு கடலில் அன்று மூழ்கியதற்கு காரணமுண்டு நான் படகு செய்த நாள் அம்மாவாசை. அடுத்த நாள்தான் நான் கிளம்பலாமென்று நினைத்த நாள் அம்மாவாசை தினம் அன்று பார்வதி அம்மனின் சக்தி உட்சம் பெரும் நாள். என்பதை அனுபவத்தில் உணர்ந்தேன் . நம் தீவில் அப்போது இருந்தது பார்வதி அம்மன்தான். அதேப் போல் பௌர்ணமி சிவனின் சக்தி உட்சம் பெரும் நாள். இப்போது நம் தீவில் இருப்பது சிவன். “ என்றான்.


அவன் சொல்லில் விழி கூர்மைக் கொண்ட ஆதிரை, “ ஆக சிவன் மட்டும் நம் தீவில் இருந்தால் பௌர்ணமி அன்று மட்டும் தீவு பூமிக்குள் வரும். அதே போல் பார்வதி மட்டும் நம் தீவில் இருக்கும் போது அம்மாவாசை அன்று மட்டும் தீவு பூமிக்கு மேல் வரும். சரிதானே" என்றாள்.


“சரியாக சொன்னாய் ஆதிரை. சமத்துதான் நீ!!" என்று அவளது மூக்கை பிடித்து ஆட்டினான் அர்ஜூன்.


அதற்கு இயல்பாக புன்னகித்த ஆதிரை, “அதன்பிறகு..” என்று கேட்டஆள்.


“சொல்கிறேன். நம் தீவைப்பற்றிய புதிரான உண்மை ஒன்று இருக்கிறது பார்வதியும் சிவனும் ஒன்றாக இருந்தால் மட்டுமே எப்போதும் அந்த தீவு கடலுக்கு மேல் இருக்கும். இல்லையென்றால் தீவு நடுனிலையை இழந்து எப்போதும் பூமிக்குள் இருக்கும். அதற்காகவும்தான் நாம் அந்த இரு சிலைகளையும் இந்த ஜன்மத்தில் ஒன்றாக சேர்க்க வேண்டும். இந்த தை மாதத்திற்குள் அவற்றை சேர்க்கவில்லையென்றால் அந்த தீவோடு அந்த சிலைகளும் அழிந்திடும். அவை இருக்கும் சுற்று வட்டத்தையும் அழித்திடும்" என்றான் அர்ஜூன்.


“அம்மம்மா.. இது என்ன கொடுமை..” என்று கண்கள் விரித்து கேட்டாள்.


"ஆமாம். அதுவரி எப்போது எந்த கடவுள் உட்சம் பெருகிறார்களோ அதை பொறுத்து அம்மாவசையிலோ அல்லது பௌர்ணமியிலோ அந்த சிலைகள் வெளியில் வந்து மீண்டும் உள்ளே சென்றுவிடும். பார்வதியின் சிலை சந்திரகுளிர் குகையிலும் , சிவன் அந்த தீவிலும் பூமிக்கு மேலே வருவார்கள். அப்படி மேலே வரும் போதும் , ஏற்கனவே வந்தவர்களால் மட்டுமே அந்த தீவையும் குகையையும் கண்டுக் கொள்ள முடியும். நம் இருவரால் எப்போதுமே போக முடியும். " என்று அந்த தீவின் ரகசியங்களையும் சந்திரகுளிரின் ரகசியங்களையும் ஒரு சேர எல்லாவற்றையும் அவளிடம் சொன்னான் அர்ஜூன்.


“புரிகிறது திகு. இவையெல்லாம் கேட்கும் போது புல்லரிக்கிறது . இவை இருக்கட்டும். நம் முதல் ஜன்மத்தில் தீவு நீரினுள் மூழ்கியதும் நீங்க என்ன செய்தீர்கள். “ என்று கேட்டாள் ஆதிரை.


"முதலில் பயந்தேன். உன்னை பிரிந்து என்னாலும் சும்மா இருக்க முடியவில்லை ஆதிரை. அதனால் எப்படியாவது கடல் மேல் வந்து நீந்தியேனும் உன்னை அடை துடித்தேன். அந்த தீவிலிருந்து கடலில் கலக்குமடியாக ஒரு ஆறு இருக்கிறதே அதன் வழியே கடலில் கலந்தேன். ஆனால் என்னால் மீள முடியவில்லை. கடல் நீரில் தத்தளித்தேன். அந்த மனித உடலை விட்டு என் உயிரும் பிரிந்தது. அவ்வளவுதான் நடந்தது. நம் முதல் ஜன்மத்தில். “ என்று பெருமூச்சுவிட்டான் அர்ஜூன்.


அவனையே விழிவிரித்து பார்த்திருந்த ஆதிரையின் கண்ணில் ஈரமிருந்தது. "திகு. உண்மையிலே இவையெல்லாம் நடந்ததா? நாம் இப்போது உயிருடன் இருப்பதும் நிஜமா? இல்லை இவையும் கனவாகி போகுமா? நமக்கு உண்மையிலே திருமணம் நடந்துவிட்டதா? உண்மையிலே நாம் அந்த தீவுக்கு போனோமா? அங்கிருந்து தப்பினோமா? என் அண்ணாவும் அண்ணியையும் நான் பார்த்தேனே. மர்மமான இந்த கதைகளை கேட்கும் போது, எனக்குள் புல்லரிக்கிறது. கூடவே பயமாக இருக்கிறதே. நம்முடைய கதையில் இவ்வளவு முடிச்சுகள் இருக்குமென்று நினைக்கவில்லை. ஒவ்வொரு விஷயத்துக்கும் காரணம் இருக்குமென்று நினைக்கவில்லை. இயல்பாய் வந்து போகும் அம்மாவசை பௌர்ணமி நாட்களில் இவ்வளவு விஷயங்களா.? "என்று பிதற்றுகிறோம் என்றெ தெரியாமல் கேள்வி மேல் கேள்விக் கேட்டுக் கொண்டே போனாள் ஆதிரை.


ஆதிரை திடீரென்று மூச்சுக்கூட விடாமல் இத்தனை கேள்விகள் கேட்பதை பார்த்துவிட்டு, “ஈஸி ஈஸி ஆதிரை.. எதற்கு இவ்வளவு கேள்விகள். எதற்கு இவ்வளவு உணர்ச்சிகள். இப்படியெல்லாம் நடந்துக் கொள்வாய் என்று தெரிந்ததால்தான் என்னமோ அந்த கடவுள் இந்த முதல் ஜன்ம நினைவுகளை உனக்கு நம் இரண்டாவது ஜன்மத்தில் உணர்த்தவில்லை. என்று தோன்றுகிறது. ஹப்பப்பா.. நீ கேட்ட கேள்விகளில் எனக்குமே களைப்பாகிவிட்டது போ" அவளைப் போல சொல்லி மூச்சுவிட்டான் அர்ஜூன்.


“திகு.. எ.. எனக்கு பயமாக இருக்கிறது. இரண்டு ஜன்மங்களில் தொரத்தி நம்மை பிரித்த விஸ்வா இந்த ஜன்மத்திலும் ஏதேனும் தந்திரம் செய்து உங்களிடமிருந்து என்னை பிரித்துவிடுவானா? என்னை போகவிடமாட்டிங்கள? எ… எனக்கு பயமா இருக்கு திகு. எ.. என் கூடவே இருப்பீங்கல்ல.. நான் என்ன சொன்னாலும் செய்தாலும் என்னோடவே இருப்பீங்கல்ல . என்னை விட்டு போக மாட்டிங்கள திகேந்திரரே" என்று சொல்லி அர்ஜூனின் மார்பில் வந்து சாய்ந்துக் கொண்டாள் ஆதிரை. அர்ஜூனை யாரோ அவளிடமிருந்து பிரிப்பதுப் போல அவர்களிடமிருந்து அர்ஜூனை மீட்டெடுப்பதுப் போல எண்ணம் கொண்டு அர்ஜூனின் மார்பில் தன் முகம் புதையும் அளவிற்கு அவனை இறுக்க அணைத்துக் கொண்டாள்.


அவளது திகேந்திரர் என்ற அழைப்பிலும், என்றுமே அவனை அவ்வாறு அணைத்திடாத ஆதிரையின் செயலிலும் அர்ஜூன் சில நொடி குழம்பியும் நிலைக் குலைந்துப் போனான். ஆனால் மார்பில் ஆதிரையின் கண்ணீர் பட்டு ஈரமானதும் பதற்றத்துடன் "ஏய்.. ஆதிரை.. இங்கு பார். இங்கு பார்" என்று அவன் விழிகளை பார்க்குமாறு அவள் முகத்தை உயர்த்தி அவளது மேவாயை பிடித்து, “ உன்னை இனி யாரேனும் என்னிடமிருந்து பிரிக்க முடியுமா சொல். உன்னை யாரும் திருடிச் செல்ல விட்டுவிடுவேனா? என் கண்மணி நீ எங்கு போனாலும் உன்னை தேடி வந்து தூக்கி வந்துவிடுவேன் சரியா?” என்றான்.


“உண்மையாகவா?” என்று தன் முகத்தை அவன் முகத்தை நோக்கி பார்த்த வண்ணம் குழந்தைப் போல கேட்டாள்.


"சத்தியமா என் கண்மணி" என்று சொல்லி அவளுக்கு போட்டியாக அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டான். அவளது முதுகினை வருடிக் கொடுத்தான். ஆயிரம் சிந்தனை முடிச்சுகள் அவனுள். அவன் எண்ணங்கள் ஆதிரையை எண்ணி கவலைக் கொண்டது. அவளை மகிழ்வுடன் வாழ் நாளெல்லாம் இருக்க செய்ய வேண்டுமென்று தோன்றியது. அந்த விஸ்வாவால் ஆதிரை இவ்வளவுக்கு குலம்பி தவிப்பது அவன் மீது கோபத்தை ஏற்படுத்தியது. இவ்வாறாக அர்ஜூனின் மனனிலை இருக்க. ஆதிரையோ, என்னுடையன் என்னுடன் இருக்கிறான் அது போதும் என்பதுப் போல கவலை மறந்து அர்ஜூனின் மார்பிலே குழந்தைப் போல் உறங்கிப் போனாள்.


அவன் எண்ணத்தை மாற்றி குழந்தையாக அவன் மார்பில் இருந்த ஆதிரையை பார்த்தான் அர்ஜூன். அவளையே பார்த்திருந்த அர்ஜூனுக்கு காரணம் என்னவென்றே தெரியாத புன்னகை அரும்பியது. அப்படியே அவளது உச்சந்தலையில் முத்தமிட்டான். அவளை அணைத்திருந்த வண்ணமே சேகருக்கு phone செய்து, ‘ ஆதிரை இந்த குடிலிலே தூங்கிவிட்டதாகவும். இங்கு நாங்க பாதுகாப்பாக இருபதாலும் , மழை நின்ற பாடில்லை என்பதாலும், நாளை காலை 6 மணிப்போல் வர இந்த தோப்பு குடிக்கு கந்தனை அனுப்பி வைக்க சொல்லிவிட்டு அவனும் ஆதிரை அணைத்திருந்த இதத்தில் அப்படியே உறங்கி போனான்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top