தூரம் போகாதே என் மழை மேகமே - 6

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 6
main-qimg-624c51f7bbaee0b441e15b97c59d36e9-c.jpeg

அனைவரையும் எதிர்த்த கடல் அலைகள் ஆதிரையை நோக்கி கடலில் குதித்த அர்ஜூனை ஆதரித்து ஒரே சுழற்றில் அவனை அள்ளி ஆதிரையின் அருகில் சேர்பித்தது. அதற்குள் ஆதிரை மிகவும் ஆழமான கடல் பகுதியை அடைந்திருந்தாள். சுய நினைவற்றவளாகக் கடலை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஆதிரையிடம் அவள் மனத்திரையில் தெரிந்த, அந்தக் கடல் பெண் தன் கையிலிருந்து விளக்கை ஆதிரையிடம் கொடுத்தாள். அதனை ஆதிரை கையில் வாங்கவும், அர்ஜூன் ஆதிரையின் மெல்லிடையை வளைத்து தன் இடதுக் கைவளைக்குள் அடக்கி தன் வலக்கையால் கடற்கரையை நோக்கி நீந்தவும் சரியாக இருந்தது. கடல் அலைகள் தன் கடமை முடிந்ததாக எண்ணியதோ என்னமோ அர்ஜூனும் ஆதிரையும் கடற்கரை அடையும் வரை ஓசையற்று அடங்கியது.

கரையை அடைந்த பின்னும் அர்ஜூனின் கை வளைக்குள்ளே இருந்த ஆதிரை பாதி மங்கியிருந்த அந்த மாலை வெளிச்சத்தில் அவனை நோக்கி தன் ஆள்காட்டி விரலை உயர்த்தி , “திகேந்த்…..” என ஏதோ சொல்ல தொடங்கி அவன் மார்பிலே சாய்ந்து மயங்கினாள்.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த சேகர் அங்கிள் , “ அர்ஜூன் நல்ல வேளை நீங்க அருகிலே இருந்தீங்க. இல்லனா, இவள் என்ன காரியம் செய்ய இருந்தாள்!! அச்சோ மயங்கிவிட்டாளே. தண்ணீரை அதிகமாகக் குடித்துவிட்டாளா” எனப் பரி தவித்தார்.

ஆதிரையின் கை நாடியைப் பிடித்து பார்த்துவிட்டு “இல்ல அங்கீள். சின்ன அதிர்ச்சிதான். First aid குடுத்தா சரியாகிடும். ” என்று ஆதிரையைத் தூக்கி தன் வலபுர தோளின் மீது போட்டுக் கொண்டு இந்திரா Enterprises –ஐ நோக்கி நடக்கலானான் அர்ஜீன்.

பதற்றத்துடன் அவர்களைச் சுற்றி இருந்தவர்கள், ஆதிரையின் உயிருக்கு ஆபத்தில்லை என்றதும் ஒருவொருகொருவர் ஒவ்வொரு கதைகளாய் அவளைப் பற்றி உருவாக்கி பேசிக் கொண்டே கலைந்தனர்.

கொஞ்சம் நிம்மதியுற்றவராக சேகர் பெருமூச்சுவிட்டார். அவரைத் தேற்றும் விதமாக அவரது தோள் மீது வேறொருவர்க் கை வைத்தார். அவர் காதம்பரன். சேகரின் வருகைக்காகவே காதம்பரனும் , அர்ஜூனும் அந்தக் கடற்கரையில் காத்திருந்தனர். ஆனால் அதற்குள் இவ்வாறாகப் பல நடந்துவிட்டது.

அர்ஜூனை தொடர்ந்து காதம்பரனும், சேகரும் நடந்தனர். “இப்போதான் நிம்மதியா இருக்கு. ஏன் ஆதிரை இப்படிச் செய்தாள் என்றே தெரியவில்லை காதம். எவ்வளவு பெரிய பெரிய பிரட்சனைகளையும் சமாளித்த துணிச்சலான பெண். எப்படி இவ்வாறு செய்ய துணிந்தாள் என்றே புரியவில்லை” என்று புலம்பினார் சேகர்.

“ஓ... நீங்க சொன்ன அந்தப் பெண் இவள்தானா! அங்கிள்” என்று கேட்டான் அர்ஜூன்.

“ஆ…மாம் அர்ஜூன். இவள்தான் ஆதிரை.” என்று திக்கி கூறினார் சேகர்.

சேகர் பதட்டத்துடனே இன்னும் இருப்பது போல் உணர்ந்த காதம்பரன், “ அர்ஜூன்.. முதலில் அந்தப் பெண் கண் விழிக்கட்டும். மற்றவற்றை பிறகு பேசிக் கொள்ளலாம். நீ வேகமாகப் போ.. நாங்க பின்னோடு வருகிறோம்” என்றார்.

அதுவரை நடப்பது எதுவும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்த ராஜா அவளது ஆசை அம்மாவை யாரு தூக்கி வேகமாக செல்வதை பார்த்து, “அம்…மா… அம்…. மா…” என அழ ஆரம்பித்தான். அப்போதுதான் சேகருக்கும் தன் கையிலிருந்த ராஜாவின் நினைவே வந்தது போல.
அவன் அழ ஆரம்பித்ததும் அங்கிருந்த அனைவரது கவனமும் , ராஜாவின் மீது விழுந்தது. “சேகர்… இந்த… குழந்தை…” என ராஜாவைக் கூர்மையாக பார்த்துவிட்டு மீண்டும் , அதிர்ந்து “இவன்..” என ஏதோ சொல்ல எத்தனித்த காதம்பரன், சேகரின் கண் ஜாடையில் வாயடைத்துப் போனார்.

ராஜாவினிடம் “அம்மாக்கு தூக்கம் வந்துடுச்சு ராஜா குட்டி. உன்ன நா தூக்கி இருக்கிறது போல அம்மாவ அந்த அங்கிள் தூக்கி போராரு. இப்போது நாமும் அம்மாட்ட போயிடலாம் ராஜாகுட்டி” என்று சொல்லி ஆதிரையின் கை பையிலிருந்த பால் டப்பாவை எடுத்து ராஜாவிடம் கொடுத்தார்.

“ம்ம்.. அம்மாவ அங்கிள் தூக்கி..” எனச் சொல்லி கொண்டே பசித்திருந்ததால் மேலும் சண்டித்தனம் செய்யாமல் தந்த பாலைக் குடித்துவிட்டு ,அமைதியுற்று ராஜா, சேகர் அங்கிளின் மார்பில் லாகவமாகச் சாய்ந்து கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

“சேகர். அந்தப் பெண்ணை அர்ஜூன் பார்த்துக் கொள்வான். என்ன நடந்தது என்று தெளிவாக சொல். இந்தப் பெண்… இந்தப் பெண் யார் ? இந்தக் குழந்தையை பார்க்கும் போது எனக்குத் தோன்றுவது உண்மையா” என்று சிறிது அதிர்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கேட்டார் காதம்பரன்.

சேகர் அவரிடம் நடந்தவற்றை எடுத்துரைத்தார். காதம்பரனும் ‘சிவசக்தி அம்மா கூறியது போல அந்தப் பெண் இவளாகத்தான் இருக்க வேண்டும்’ என்று சேகரிடம் கூறினார். பின் காலம் கனியும் வரை இந்த உண்மைகளை யாரிடமும் சொல்ல கூடாதென்று இருவரும் ஒருமுகமாக முடிவெடுத்தனர்.

இவை எதையும் அறியாமல் , முன்னே வேகமாகச் சென்று கொண்டிருந்த அர்ஜூன், தன் company-ஐ அடைந்ததும், ஆதிரையை முதலுதவி அறைக்கு எடுத்துச் சென்று அங்கிருந்த bench- ல் படுக்க வைத்தான். ஆதிரைக்காகச் சூடாக எதுவும் எடுத்து வர அங்குப் பணி புரியும் கமலாவிடம் கூறிவிட்டு அவளுக்கு First Aid கொடுத்து அவளது கன்னத்தை தட்டி “ஆதிரை.. ஆதிரை..” என்று எழுப்பிக் கொண்டிருந்தான். மெதுவாக மழுங்க மழுங்க விழித்து கண்களை திறந்து பார்த்தாள். அறிமுகமற்ற ஒருவன் தனக்கு மிக அருகில் நிற்பதையும், தன் ஆடை நனைந்து கலைந்து இருப்பதையும் ஒரு சேர பார்த்துப் பயந்து சட்டென எழுந்து அவனிடமிருந்து ஒதுங்கி நின்றாள்.

“நீ.. நீங்க.. யாரு? என் ராஜா…. என் குழந்தை…! என் குழந்தை எங்க…?” என அப்போதுதான் சக்தி வந்தவளாக அந்த அறையில் தெரிந்த ஒரே வழியாகத் தெரிந்த கதவை நோக்கி எழுந்து ஓட முயன்றாள் ஆதிரை.

அவள் ஓட்டத்தைக் கண நேரத்தில், அவள் மெல்லிய இடையில் அவன் கை பற்றித் தடுத்து அவளைத் தூக்கி மீண்டும் அங்கிருந்த bench –ல் அமர வைத்தான் அர்ஜூன்.

இதனைச் சிறிதும் எதிர்பாராத ஆதிரை அவனை எதிர்க்கும் சக்தியற்றவளாக அசைவற்று அவனையே செய்வதறியாது நோக்கினாள். அவ்வளவு வேகமாக அவளை இழுத்துத் தள்ளியதில் அவன் தொட்ட இடம் எரிந்திருக்க வேண்டும் ஆனால் அவன் கை பட்ட இடமெல்லாம் அவளது குளிர்ந்திருந்த தேகத்திற்கு இதமான கதகதப்பை தருவதை ஆச்சரியத்துடன் உணர்ந்தாள்.

ஆனால் அவளது ஒதுக்கத்தையும், இயலாமையும் உணர்பவனாக அர்ஜூன் அப்போது இல்லை. அவளையே கோபத்துடன் சில வினாடிகள் வெறித்தான்.

பின் “என்ன ஒரே சத்தம். கொஞ்சம் அமைதியா இரு.! உன் ராஜா, சேகர் அங்கிளிடம் இருக்கிறான். அவங்க சிறிது நேரத்தில் இங்கு வந்துவிடுவாங்க.” என்று அவளிடம் கூறிவிட்டு, “கமலா, இந்தப் பெண்ணுக்கு வேறு ஆடைகள் ஏற்பாடு செய்துக் கொடுங்க” என்று விட்டு யாருடைய பதிலுக்கும் தாமதியாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டான்.

அவன் சென்ற பிறகும் பிரமை பிடித்தவள் போல அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்த ஆதிரை, சில வினாடிகளில் சுய நினைவு வந்தவளாக, ‘யாரிவன்.!? ஏன் தன்னிடம் இப்படி கடுமையாக நடந்து கொள்கிறான்.? எது எப்படி இருந்தாலும், ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்வதென்று கொஞ்சமும் நகரீகமற்றவன். சே…’ என மனதினுள் திட்டிக் கொண்டே, எழுந்திருக்க முயன்றாள்.

ஆனால் அவளால் எழுந்தே நிற்க முடியவில்லை. ஈரமான அவளது ஆடைகள் அப்போதுதான் அவற்றின் வேலைகளைக் காட்ட தொடங்கியதோ என்னமோ நடுங்கிக் கொண்டே மெதுவாக எழுந்தாள். அதற்குள் சேகர் அங்கு வந்துவிட, “அங்கிள்.. எங்க போனீங்க… ராஜா.. என் ராஜா.. தூங்கிட்டானா..” என சேகர் அங்கிள் மார்பில் சாய்ந்திருந்த அவனது தலையை வருடினாள் ஆதிரை. “என்னாச்சு அங்கிள். ஏன் என் ஆடையெல்லாம் ஈரமா இருக்கு... எனக்கு எதுவுமே நினைவில்லையே” எனப் பரிதவிப்புடன் நடுங்கிய குரலில் கேட்டாள்.

உடன் வந்திருந்த காதம்பரனும் , சேகரும் ஒருவொருவர் காரண பார்வை பார்த்துக் கொண்டனர். பின் “ ஒன்றுமில்லைமா. கடல் தண்ணீல கால் வழுக்கி விழுந்துட்ட. அப்பறம் மயங்கிட்ட. அப்போது அங்கிருந்த அர்ஜூன்தான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தார். நீ போ.. முதல்ல dress மாத்திட்டு வா” என்றார் சேகர்.

“ஓ… யாரந்த அர்ஜூன் அங்கிள்“ என்று , ‘அவன் தான்.. அந்தக் கடுவன் பூனை. தன்னைப் பெண்ணென்றும் பாராமல் இழுத்துத் தள்ளியவன் பெயர்தான் அர்ஜூன் போல’ என்று எண்ணினாள்.

அந்த உடல் குளிர் நடுக்கத்திலும் அவள் கேள்விகளாக கேட்டுக் கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டு காதம்பரன் முன் வந்து, “நீ போய் வா மா. நாம அப்பறம் பேசிக் கொள்ளலாம்” என்றார்.

புதிதாக ஒருவர் அங்கிருப்பதைப் பார்த்த ஆதிரை, கேள்வியாக காதம்பரனை நோக்கினாள்.

அதனை உணர்ந்த சேகர், “அவர் என் பள்ளிகால நண்பர் மா. பெயர் காதம்பரன். அவரைப் பார்க்க வந்தோம். அப்பறமா மத்ததெல்லாம் நாம பேசலாம். நீ போய் வா” என அவரும் ஆதிரையை ஊக்கினார்.

அவளும் மேலும் கேட்டு துருவாமல் , “ஓ…” என்று யோசித்துக் கொண்டே அங்கு வந்த கமலாவிடம் எங்குக் குளியலறை எங்க இருக்கு என்று கேட்டுக் கொண்டே சென்றாள்.

“சேகர் நான் சொன்னேன் இல்லையா? அந்தப் பெண்ணிற்கு என்ன நடந்ததே தெரியவில்லை. இதை அப்படியே விடுவதே மேல். அவளை எதுவும் கேட்டு துருவ வேண்டாம். ஆதிரை தானாக உணர்வதே நல்லது. நான் அர்ஜூனிடம், இன்று நடந்தது பற்றி ஆதிரையிடம் பேச வேண்டாம் என்று சொல்லி வைக்கிறேன்” என்றார் காதம்பரன்.

முதலில் காதம்பரன் ஆதிரையைப் பற்றி சொன்ன போது அவர் சொன்னதில் சேகர்க்கு நம்பிக்கையே இல்லை. ஆனால் இந்த நிகழ்வுக்குப் பின் தான் முடிவெடுத்திருப்பது கண்டிப்பாக ஆதிரையின் வாழ்க்கைக்கு ஒரு நல் வழி உண்டாகும்.

இவ்வாறாக காதம்பரனும் சேகரும் இருக்க இங்கு ஆதிரையால் என்ன யோசித்தும் என்ன நடந்தது என்று நினைவுக்குக் கொண்டுவர முடியவில்லை. அதன் பிறகு அதனைப் பற்றி மிகவும் யோசிக்காமல், அவள் அப்படியே விட்டுவிட்டாள். ஆனால் ‘அவன், அந்த அர்ஜூன் ஏன் தன்னை அவ்வளவு கோபத்துடன் பார்த்தான். இது அவனது company போலத் தெரிகிறதே! இங்குப் பணி புரியும் அந்தப் பெண் கமலாவிடம் எவ்வளவு உரிமையாக ஆணையிடுகிறான். என்னை தூக்கிக் கொண்டு இங்கே வர வேண்டுமென்று யார் அழுதார். அவன் ஆடையும் நனைந்திருந்ததே! தன்னால்தான் அவனது புது ஆடை நனைந்தது என்று தன் மீது கடுப்போ! என்ன இருந்தும், கொஞ்சம் மரியாதையாகப் பேசியிருக்கலாம் எனப் பலவாறாக அவனைப் பற்றி யோசித்துக் கொண்டே குளித்து ஆடை மாற்றிக் கொண்டு வந்தாள் ஆதிரை.

இந்திரா enterprises company 3 அடுக்குகள் கொண்ட கட்டிடம். 2 அடுக்குகள் company தேவைகளுக்காகவும். மூன்றாவது அறையில் , இரண்டு விருந்தினர் அறைகள் மற்றும் ஒரு பெரிய படுக்கை அறையும் கொண்டவிதமாக கட்டமைக்கப்பட்டிருந்து. அவற்றில் ஒன்றிலே ஆதிரையும் ராஜாவும் தங்க வைக்கப் பட்டிருந்தனர்.

அதன் பிறகு ஆதிரையை அதிகம் பேசவிடாமல், அவளுக்கென்று ஒதுக்கியிருந்த அறையில் தங்க சொல்லிவிட்டு, “நாளைத் தெளிவாக பேசிக் கொள்ளலாம் ஆதிமா. நீ எதுவும் யோசிக்காமல் நன்றாகத் தூங்கு.” என்றுவிட்டு ஆதிரையும் , காதம்பரனும் சொல்லிவிட்டுசென்றுவிட்டனர்.
சோர்ந்து போயிருந்த ஆதிரை, “சரிங்க அங்கிள்” என்று சாப்பிட்டதும் சோர்ந்து போயிருந்த ஆதிரையும் ராஜாவும் நன்கு உறங்கியும்விட்டனர்.

****
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top