தூரம் போகாதே என் மழை மேகமே!! - 53

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
தூரம் போகாதே என் மழை மேகமே!! - 53


‘சிவராமன் தன்னை பார்த்துக் கொள்வதற்காக வந்திருக்கிறார் என்பதை அறிந்ததும், என் அண்ணாவுக்கு என்னைப் பார்த்து விட்டுப் போகக் கூட நேரமில்லையோ!. அண்ணியாவது குழந்தை பெற்ற புதிது சிம்லாவிலிருந்து இங்குக் குழந்தையுடன் வந்துவிட்டுப் போகக் கடினம். ஆனால் அண்ணா…? என்னைப் பார்த்துக் கொள்ளவென்று இந்த இரண்டு நாட்களுக்காவது வந்திருக்கலாமே! அப்படி இல்லாமல் யாரென்றே தெரியாத ஒரு வயது நிரம்பிய பெரியவர், அவரையும் நான்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுப் போல, பேசுகையில் கூட தள்ளாடிய வண்ணம் பேசுபவர், தன்னை பார்த்துக் கொள்ளவென்று வந்திருப்பது என்னை அனாதைப் போல தோன்ற வைக்கிறததே. யாருமில்லாத போதும் குழந்தையாக இருந்த என் ராஜாவுடன் தனித்து இருந்த போதும் கூட இப்படி உணரவில்லையே. புதிதாக வந்த இந்த பெரியவர் இல்லையென்றால் யாருக்கும் இடைஞ்சலாக இல்லாமல் எங்கேனும் போய் தொலைந்திருக்கலாமே. அர்ஜூன் கூடச் சொன்னானே என்னோடு வாழத் திளைக்கவில்லையென்று. அவனுக்கு தொந்தரவாக இங்கு இருப்பதற்குப் பதிலாக எங்கோ போய்விட்டால் அவனும் வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு விருப்பப்படி வாழட்டுமே’ என்று பலதும் எண்ணிய வண்ணம் படுத்திருந்த ஆதிரையின் விழியில் நீர் அரும்பி தலையணையை நனைத்ததை அவள் அறியவில்லை. அவளிடமே பார்வையை வைத்திருந்த சிவராமனுக்கு அவள் சொல்லாமலே எல்லாம் புரிந்துவிட்டது போல எண்ணி அவள் எழுந்து அமர்ந்திருக்கும் போது பேசலாமென்று காத்திருந்தது.

அதிக நேரம் அவரை காக்கவிடாமல் ஆதிரை விரைவிலே எழுந்து bath room சென்று முகத்தினை கழுவித் துடைத்துவிட்டு மீண்டும் வந்து தன் படுக்கையில் குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டு மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள்.

‘ என் அண்ணனிடம் ஒரு முறை கூட phone –ல் கண் விழித்ததிலிருந்து பேசவில்லையே!. அர்ஜூன் phone பேசிக் கொண்டிருக்கும் போது கூட ஓரிரு வார்த்தைகள் பேசிடச் சைகையில் கேட்ட போது எப்படி அவன் அலட்சியப் படுத்தினான். அவனுக்கு தன்னிடமிருந்த அன்பு துளியுமில்லாமல் எதனாலோ துடைத்தார் போலப் போய்விட்டதே! இப்படி உதாசினப்படுத்தும் இவனுடன் எப்படி இருக்கப் போகிறோம். சுயமரியாதை மிக முக்கியமே. இம்… எப்படியாவது அவனிடமிருந்து விலகி யாருக்கும் தெரியாத இடத்திற்குச் சென்றுவிட வேண்டும்’ என்று பலதும் எண்ணிய வண்ணம், மீண்டும் ஒரு தவறான முடிவைச் சரியான முடிவென்று தீர்மானித்து கொண்டிருந்தாள் ஆதிரை.

இவ்வாறு பலதும் யோசித்துக் கொண்டிருந்த ஆதிரைக்குத் தன்னையே சிவராமன் பார்த்திருப்பது தெரிந்திருக்கவில்லை. அவள் குழப்பத்தில் தவறான எந்த முடிவையும் எடுத்து செயல்படுத்தும் முன் அவளிடம் தான் இங்கு வந்த காரணத்தையும் அவளது பிறவிப் பயனையும் உணர்த்திவிட வேண்டும் என்று அவளிடம் பேச ஆரம்பித்தார் சிவராமன். “என்னமா.. என்னமோ போல இருக்கிறாய்” என்று குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ஆதிரையின் அருகில் வசதியாக ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அதில் அமர்ந்து கொண்டு அவளது தலையை லேசாக வருடினார்.

அவள் அருகில் வருவதைக் கூட உணராத நிலையில் சிந்தனையிலிருந்த ஆதிரையின் நினைவலைகள் அவரின் ஆருதலான தலை வருடலில் சுயநினைவுக்கு வந்தது. பின் “ஒன்றுமில்லை தாத்தா.. நா… நான் நன்றாகத்தானே இருக்கிறேன்” என்று மனக்கலக்கத்தை மறைத்திட முயன்றாள் ஆதிரை.

“ம்ம்.. அப்பாடியமா.. சரி.. எனக்கு என்ன வயது இருக்குமென்று நினைக்கிறாய்” என்று சம்பந்தமில்லாத கேள்வியாக கேட்டார் சிவராமன்.

அவரது இந்த கேள்வியில் அதிசயம் போல அவளைப் பார்த்த ஆதிரை, ‘தான் இவரை மிகவும் வயதானவர் என்று எண்ணியதை கண்டுபிடித்திருப்பாரோ’ என்று நினைத்த ஆதிரை அவருக்குப் பதிலளித்தாள். “ஒரு 70 வயது இருக்குமா தாத்தா” என்றாள்.

“ம்ம் அவ்வளவு இளமையாகவா தெரிகிறேன்” என்று சிரித்தவர். “நான் 90 வயது கிழவன்மா” என்றார்.

“என்ன… 90 ஆ!!” என்று ஆச்சரியமுற்றாள் ஆதிரை.

“ம்ம்.. ஆமாம். தள்ளாடும் வயதில் இந்த கிழவன் உன்னை எப்படிப் பார்த்துக் கொள்வேன் என்றுதானே யோசித்து கொண்டிருந்தாய்” என்று கண்கள் கூர்மையாகக் கேட்டார் சிவராமன்.

தான் நினைத்ததை எப்படி இவர் சரியாகச் சொல்கிறார், “அ… அது… வந்து… இ.. இல்..” என்று திணறிய வண்ணம் உண்மையை மறைத்திடப் பேசினாள் ஆதிரை.

அவளது திணறலில் இன்னும் பலமாகச் சிரித்தவர், மெதுவாக எழுந்து சென்று பார்வையாளருக்கென்று போடப்பட்டிருந்த இரும்பு படுக்கையின் அடியில் தன் வலது கையினை விட்டு ஒற்றைக் கையால் தூக்கி ஆதிரைக்கு வியப்பூட்டினார்.

“தாத்தா… என்ன செய்றீங்க.. அப்பப்பா.. அதை என்னால் நகர்த்தக் கூட முடியாது.. எப்படி அதனை ஒற்றைக் கையால் தூக்கினீங்க” என்று ஆச்சரியமுடன் எழுந்து நின்று கேட்டாள் ஆதிரை.

“எல்லாம். சித்தமும் , வர்மமும் சேர்ந்து கற்றதின் பலனம்மா” என்று சொல்லிய வண்ணம் அவள் அருகில் வந்தார் சிவராமன்.

“உங்களைப் பார்த்தால் நீங்க இவ்வளவு வலிமை முடைவர் என்று சொன்னால் யாரும் சொல்லமாட்டார்கள்” என்று சொல்லிய வண்ணம் அவள் படுக்கையில் அமர்ந்தாள் ஆதிரை.

“ம்ம்… அவசியமும் இல்லாமல் இதனை பயன்படுத்துவதற்கில்லையம்மா. அதனோடு தற்காப்புக்காக மட்டுமே இவற்றைப் பயன்படுத்துவது . இப்போது இப்படிச் செய்ததற்கும் கூட காரணம் உண்டு ஆதிரை. “ என்று பூடகமாகப் பேசிய வண்ணம் ஜன்னல் வழியே வெளியில் ஒரு நொடி பார்த்து மீண்டும் ஆதிரையைப் பார்த்து புன்னகித்த வண்ணம் அந்த நாற்காலியில் அமர்ந்தார்.

“அட போங்க தாத்தா.. உங்களுக்கு ஏதேனும் இடுப்பு இது பிடித்துக் கொள்ளப் போகிறது என்று நினைத்துப் பயந்தே போய்விட்டேன்.” என்று அவருடன் இனைந்து நகைத்தாள் ஆதிரை.

அதற்கு அவுட்டு சிரிப்பு சிரித்த சிவராமன், “ தங்கமே! இப்படி கவலை மறந்து புன்னகித்தால் எவ்வளவு அழகாய் இருக்கிறாய். அதை விடுத்து கண்ணை எட்டாத புன்னகையை இந்த கிழவனிடமும் செய்கிறாயே. என்னை பார்த்த நொடியில் என் மீது ஏதேனும் வெறுப்பு உண்டாகிவிட்டதோ” என்று அவளே உண்மையைச் சொல்ல ஊக்கினார்.

அவர் ஆசையாக குழந்தை போலத் தங்கமே என்றதும் தன் ராஜாவை சில சமயங்களில் அவள் அப்படி ஆசையாக அழைப்பது நினைவுக்கு வந்தது அதே நினைவில், “அச்சச்சோ.. அப்படியெல்லாம் இல்லை தாத்தா.. என் குட்டி ராஜாவின் நினைவு வந்துவிட்டது. அதனோடு அதனோடு என் அண்ணா அண்ணியின் நினைவும் வந்துவிட்டது.” என்று லேசாகக் கண்ணீர் கண்ணில் தேங்கச் சொன்னாள் ஆதிரை.

“ம்ம்… ஒன்றும் கவலைப் படாதே அம்மா.. நீதான் நாளை அங்கே போகப் போகிறாயே. எல்லோரும் உனக்காகக் காத்திருக்கிறார்கள் அங்கு. அதனால் கண்டதையும் எண்ணி மனதில் குழம்பிக் கொள்ளாதே தாயி..” என்றார் சிவராமன்.

அவரது இதமான குரல் ஆதிரையைப் பொய் சொல்லவிடாமல் உண்மையை உலறிடச் செய்தது. “அங்கேயே காத்திருந்து என்ன பயன் தாத்தா.. நீங்களே சொல்லுங்க. அர்ஜூன் வெளி வேலையாகச் செல்லும் இந்த இரண்டு தினங்களில் என் கூட இருக்கவேனும் என் அண்ணா வந்திருக்கலாமே தாத்தா.. அப்படி இல்லாமல் என்னை உங்களுக்கு யாரென்றே தெரியாது. உங்களுக்கும் எனக்கும் எந்த உறவுமில்லை. ஆனால் உங்களை கஷ்ட படுத்தி இங்கு hospital-ல் எனக்காகக் கஷ்ட பட வைத்துவிட்டு. அங்கே எனக்காகக் காத்திருந்து யாருக்கு என்ன பயன். நான் கண் விழித்து மூன்று நாட்கள் ஆகிறது. அப்படி இருக்கக் குறைந்தபட்சம் என்னிடம் phone –ல் ஒரு வார்த்தை பேச வேண்டுமென்ற எண்ணம் கூட இல்லையே அவர்களுக்கு. இங்கு நான் என்ன அனாதையா தாத்தா.. நீங்களே சொல்லுங்க.. நானும் சின்ன பொண்ணுதானே. எனக்கு ஆசை பாசம் ஏக்கம் எல்லாம் இருக்கும் தானே. ஏன் அவர்களுக்கு புரியவில்லை தாத்தா. இவர் .. இந்த அர்ஜூனும் கூட நான் அண்ணா அண்ணியிடம் பேச வேண்டும் என்று கேட்டதற்கு அவரிடம்தான் பேசுகிறேன் என்று லட்சியமே செய்யாமல் எப்போதும் வெளியில் சென்றுவிடுகிறார். அப்பறம் நான் யாருக்காக இங்க இருக்க வேண்டும் தாத்தா. நீங்களே சொல்லுங்க . எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுங்களா” என்று மனதிலிருந்த ஆற்றாமையையெல்லாம் கொட்டி தீர்த்துவிட்டுச் சிறு குழந்தை போலத் தேம்பித் தேம்பி அழுக ஆரம்பித்தாள்.

“ம்ம்… அழுகாத தங்கமே… எல்லாரும் உனக்காக அங்கு…” என்று ஏதோ சொல்ல வந்தவர் பாதியில் நிறுத்தி, “ நீ அங்குப் போனதும் உனக்கு இப்படித் தோன்றாது செல்லமே… கண்ணீர் வடிக்காதே… நான் யாரோ என்று ஏன் எண்ணுகிறாய். நான் உன் சொந்த தாத்தா தெரியுமா. ? அதனோடு உன் அண்ணன் வருவதாகத்தான் ஏற்பாடு. நான் அதைக் கெடுத்துவிட்டேன் போல இப்போது தோன்றுகிறது. என்னை மன்னித்துவிடம்மா. உன் அண்ணனை நீ பார்ப்பதை மூன்று நாட்கள் தள்ளிப் போட்டுவிட்டேன்” என்று நடந்ததைச் சொல்லி அவளது தேற்றிவிடச் செய்தார்.

அவரது தலை வருடலிலே பாதி சரியாகி இருந்த ஆதிரை. அவரது வார்த்தைகளில் சிறிது நேரத்தில் சமாதானம் அடைந்தாள். பின் “ நிஜமாகவா தாத்தா.. என் அண்ணா என்னைப் பார்க்க வரேன் என்று சொன்னாரா.” என்றாள்.

“ஆமாம் தங்கமே. நான்தான் உன்னிடம் கொஞ்சம் தனித்துப் பேச வேண்டுமென்று இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அதனால் அவனை நான் வர வேண்டாம். நான் உன்னைப் பார்த்துக் கொள்கிறேன். என்று சொல்லிவிட்டு வந்தேன். ஆனால் இப்போது அரவிந்தையே வரச் சொல்லி இருக்கலாமோ என்று தோன்றுகிறது. மன்னித்துவிடம்மா” என்று மீண்டும் ஒரு விளக்கம் தந்து வருந்தினார் சிவராமன்.

அதிலே மனம் தெளிந்தவளாக, “அச்சோ தாத்தா… பரவாயில்லை. மன்னிப்பெல்லாம் கேட்காதீங்க. தனித்திருக்கும் மனம் கண்டதையும் கற்பனை செய்து கவலை கொள்கிறது. நான் என்ன செய்ய. ஆனால் எனக்கு உங்களிடம் பேசிய பின் மனதுக்கு இதமாக இருக்கிறது. அதனால் பரவாயில்லை தாத்தா.. நீங்க வருத்தப்படாதீங்க. “ என்றாள் ஆதிரை. சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது. சிவராமன் எதையோ யோசிப்பது ஆதிரைக்கும் தெரிந்தது. அவர் மிகவும் வருந்துகிறாரோ சந்தேகம் தோன்ற அவளே மீண்டும் பேச்சுக் கொடுத்தாள்

பின் “ஆனால் தாத்தா… நீங்க என்னிடம் தனித்துப் பேச என்ன இருக்கிறது. விஸ்வாவும் இப்படிதான் தனித்து பேச வேண்டுமென்றான். எல்லோரும் என்னிடம் தனித்துப் பேச என்ன இருக்கிறது.” என்று புன்னகித்த வண்ணம் சொன்னாள் ஆதிரை.

“என்ன விஸ்வாவா.. அவன் யார். அவன் உன்னிடம் தனியாக என்ன பேசினான்” என்று ஒரு நொடி கண்ணில் மின்னல் வெட்ட பேசினார் சிவராமன்.

அதுவரை குரல் நடுக்கம் கலந்து பேசிக் கொண்டிருந்த சிவராமனின் குரல் விஸ்வா என்றதும் சரியானது போல அவளிடம் கேள்வி கேட்டதாக ஆதிரை உணர்ந்தாள். அதனோடு சுருங்கிய தாத்தாவின் நெற்றியில் fan ஓடிய போதும் முத்தாக வியர்த்தது.

அவரை அவள் பார்த்தது ஒரு நொடிதான் என்ற போது சொல்லத் தொடங்கினாள் ,”விஸ்வா என் college friend தாத்தா… அவன் ஏதும் தனித்துப் பேசவில்லை. பேச வேண்டும் என்று சொன்னான். அதற்குள் அர்ஜூன் வந்துவிட்டதால் அவன் ஏதும் பேசாமல் சென்றுவிட்டான். ஏன் கேட்கிறீர்கள். அவனை உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா?” என்றாள் அவர் மீது யோசனையான பார்வையுடன்.

“ம்ம். நல்ல வேளை.. அவன் உன்னிடம் எதுவும் பேசாமல் அர்ஜூன் இருந்தான். எனக்கு அவன் யாரென்று தெரியாதுமா. ஆனால் அவன் உனக்கு நல்லதல்ல என்று மட்டும் தெரியும். அவனிடம் தள்ளியே இரு. அதிகம் பேசிக் கொள்ளாதே. தனித்து இருக்கும் சூழலைத் தவிர்த்துவிடு. வேறெதுவும் இப்போது என்னைக் கேட்காதே. என்னிடம் பதிலில்லை. ஆனால் நீயே தெரிந்து கொள்வாய்” என்று புன்னகித்து ஆதிரைக்கு ஒரு குழப்பத்தை தந்தார் சிவராமன்.

“ஓ…” என்ற ஆதிரை ‘என்ன இது அர்ஜூனும் விஸ்வா என்றதும் சீறுகிறான். இந்த தாத்தாவும் ஏதோ புதிர் போடுகிறார். ‘ என்று நினைவில் ஆழ்ந்தாள்.

பின் அவளது சிந்தனையைக் கலைக்கும் விதமாக சிவராமன் பேசினார். “தங்கமே அதிகம் யோசிக்காதேமா. எல்லாம் அடுத்த தை பூசத்துக்குள் ஒரு முடிவுக்கு வந்துவிடும். அதனைப் பார்த்துவிட்டுப் போகத்தான் நான் இன்னமும் இவ்வுலகில் இருக்கிறேன். அதனால் நடக்கும் வழியில் நடக்கட்டும் எல்லாம் அந்த சக்தியம்மா பார்த்துக் கொள்வாள். கவலைப்படாதே” என்று கடவுளைக் கொண்டு தீர்த்தார்.

“ம்ம் சரி தாத்தா. என்னை மீறி ஏதோ நடந்து கொண்டிருப்பது மட்டும் புரிகிறது. ஆனால் குழப்பம் மட்டும் மீளவில்லை “ என்றாள் ஆதிரை.

“ம்ம். எல்லாம் விரைவில் சரியாகிவிடும் தங்கமே. அதனோடு இன்னொருமுறை உன்னை அனாதை என்று சொல்லாதே. நான் உண்மையிலே உன் சொந்த தாத்தா. நீ என் பேத்தியம்மா. நீ பிறந்ததிலிருந்து பார்க்க முடியாமல் இப்போதுதான் பார்க்கக் கிடைக்கப் பெற்றேன்.” என்றார் சிவராமன்.

“உண்மையா தாத்தா… நான் என்னைத் தேற்றுவதற்காக சொன்னதாகத்தானே நினைத்தேன். நீங்க என் அம்மா வழி தாத்தாவா அப்பா வழி தாத்தாவா” என்று கேட்டாள் வியப்பு குறையாமலே.

அதற்கு புன்னகித்த சிவராமன், “ நீ என் மகன் வழி பேத்தி. அர்ஜூன் என் மகள் வழி பேரன்” என்றார்.

“என்ன!!” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் ஆதிரை
.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top