தூரம் போகாதே என் மழை மேகமே!! - 52

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer





திடுக்கிட்டு , அங்கு நின்றிருந்த அர்ஜுனை ஏறிட்டாள், “அ.. அர்ஜூன்.. இ.. இது “ என்று தன் கையில் அகப்பட்ட மஞ்சள் கயிற்றைப் பற்றிய வண்ணம் அவளையே கண்கள் இமைக்காமல் பார்த்திருந்த அர்ஜுனிடம் கேட்டுவிடத் துடித்தாள் ஆதிரை.

“பார்த்தால் தெரியவில்லை. மஞ்சள் கயிறு. “ என்றான் அசட்டையாக.

“எ.. எனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?” என்று திக்கி திணறிக் கேட்டே விட்டாள் ஆதிரை.

“ஆமாம். நமக்கு திருமணம் ஆகிவிட்டது” என்றான் எங்கோ பார்த்தபடி.

“என்ன!! “ என்று வெறித்து அர்ஜுனையே பார்த்தாள் ஆதிரை. ‘அவ்வளவுக்கு அவனை வெறுப்பதற்கான காரணத்தை சொல்லியும் இவனுக்கு என்ன திமிர் இருந்தால் எனக்கு சுய நினைவில்லாத நேரத்தில் என் கழுத்தில் மஞ்சள் கயிற்றைக் கட்டியிருப்பான்.’ என்று நினைத்தாள்

அவளது ஆச்சரியத்தையும் வெறுத்த பார்வையையும் பொருட்படுத்தாமல், தன் phant –லிருந்து phone –ஐ எடுத்து யாருக்கோ பேசுவதற்கு number தேடிக் கொண்டிருந்தான் அர்ஜூன்.

“என்ன தைரியமிருந்தால் இப்படிச் செய்திருப்பீர்கள். உங்களை நான் திருமணம் செய்துக் கொள்வதற்கில்லையென்று நா.. நான் அந்த தீவிலே சொன்னேந்தானே. எவ்வளவு திமிர் உங்களுக்கு. “ என்று ‘செய்வதையும் செய்துவிட்டு எதுவுமே நடக்காதப் போல phone -அ நோண்டிட்டு இருக்கிறான்’ என்று அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது.

“என்ன தைரியம் இருக்கணும்.? எவ்வளவு திமிர் இருக்கணும்.? உன்னைத் திருமணம் செய்து கொள்ள” என்று அவளைப் போலவே சொல்லிக் காட்டி அவனைப் பார்த்து தன் வரிசை பல் தெரிய புன்னகித்தான்.

அந்த புன்னகை எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போல ஆதிரையின் கோபத்தீயை பெருக்கியது. “எனக்கு தெரியாமல் செய்து கொண்ட இந்த திருமணத்தை நான் ஏற்கத் தயாரில்லை. அதனோடு என்னோட friend விஸ்வாவ என்னைப் பார்க்கக் கூடாது என்று விரட்ட உங்களுக்கு எந்த உரிமையுமில்லை” என்று அந்த கோபத்துடனே அவனை நோக்கிக் கத்தினாள்.

விஸ்வா என்றதும் அர்ஜுனின் முகம் மாறி ,” உன்னைத் திருமணம் செய்து கொள்ள நான் மட்டும் ஆசையில் திளைக்கவில்லை. அப்படிப்பட்ட எண்ணம் அந்த தீவில் நாம் கடைசியாகப் பேசிய பேச்சோடு முடிந்தது. என்னமோ நீ தான் உலகிலே அழகி என்ற எண்ணமா.. நான் நினைத்தால் என்னோடு வாழ இப்போதுக் கூட எத்தனையோ பெண்கள் இருக்கின்றனர். நினைவிருக்கட்டும் “ என்று கடுமையாகப் பேசியவன், சட்டெனத் திரும்பி அவளுக்கு முதுகு காட்டி நின்றபடி, “சே!... ஏற்க மாட்டாளாம்? உரிமை இல்லையாமே. உரிமை. என்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாள்” என்று அவளுக்குக் கேட்கும் படியே முணுமுணுத்தவன் தன் பின்னந்தலையை கோதிய வண்ணம் அந்த அறையின் இந்த பக்கமும் இந்த பக்கமும் பார்த்தான் அர்ஜூன.

அர்ஜூனின் இந்த வித அலட்சிய பேச்சு அவள் முதலில் இந்திரா enterprise- ல் கடலிலிருந்த காப்பாற்றிய போது பார்த்தது போல அவனை நினைவு படுத்தியது.

‘அந்த தீவில் இருக்கும் போது அவ்வளவுக்கும் தன்மையாக இருந்த அர்ஜூன் , மீண்டும் உண்மை உலகிற்கு வந்ததும் மாறிவிட்டான். இதற்கும் சேர்த்துத்தானே பயந்து அவனை விரும்பாதது போல இருந்தேன். அது உண்மையானதே. இப்படிப்பட்டவன் என்னை ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்று எண்ணிய அவள் ,கண்களில் லேசாக ஈரம் பணிவதை அவளால் தடுக்க முடியவில்லை.

“பிறகு என்னை ஏன் திருமணம் செய்தீர்கள்” என்று குரல் மெலிந்து , தலை தாழ்த்தி கேட்டாள் ஆதிரை.

ஆவேசம் இன்னும் குறையாதவனாய் நின்றிருந்தவன் , அவளது குரலில் திரும்பி, “ஆன்… போய் உன் அண்ணாவையும் அண்ணியையும் கேள். அவர்கள்தான் அந்த நொடியே உன் கழுத்தில் அதோ உன் கழுத்தில் தெரிகிறதே அந்த கயிற்றைக் கட்ட வேண்டுமென்றனர்.” என்றான் அர்ஜூன்.

“என் அண்ணாவும்.. அண்ணியுமா?” என்று ஆச்சரியமாய் கேட்டாள் ஆதிரை.


“ஆமாம். அவர்களுக்கு உன்னைப்பற்றிய தகவல் கொடுக்கக் கூடவில்லை. ஆனால் உனக்கு யாரோ உன் friend ரொம்ப முக்கியமா?” என்று காய்ந்தான் அர்ஜூன்.

அண்ணா அண்ணியென்றதும் , , “நம் பிரச்சனையை பிறகு பேசிக் கொள்ளலாம். என் அண்ணாவும் அண்ணியும் எப்படி இருக்காங்க? எனக்கு சுயநினைவற்று போனது குறைந்தது 2 மாதத்திற்கு முன்பு என்பதை sister மூலம் அறிந்தேன். அப்படியென்றால் அண்ணிக்கு இரண்டாவது முறையாகக் குழந்தை பிறந்திருக்க வேண்டுமே. பிறந்த குழந்தை எப்படி இருக்கு? என் ராஜாவும் அனாமிகாவும் எப்படி இருக்காங்க??” என்று எங்கோ பார்த்தபடி தன் மனதில் அப்போதிக்குத் தோன்றியதெல்லாம் கேட்டாள்.

அவளையே வியப்பாக பார்த்த அர்ஜூன், “ எல்லோரும் நலம். இரண்டாவது முறையாகப் பெண் குழந்தை பிறந்திருக்கிறாள். ஒரு வாரத்திற்குமுன்தான் எல்லோரும் குழந்தையுடன் இந்திரபிரதேஷ்க்கு பாட்டியைப் பார்க்கச் சென்றனர். உன் ராஜாவும் என் அஸ்மிதாவும் நலமாக இருக்கிறார்கள்” என்றுவிட்டு அவளையே ஊடுருவும் பார்வை பார்த்தான்.

அஸ்மிதா என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்த ஆதிரை, அந்த மரவீட்டினை நினைவு படுத்த முயல்கிறானோ என்ற சந்தேகம் தோன்றி மறைந்தது. பின் மனதை மாற்றி “ அவளுக்கு நான் வைத்த பெயர் அனாமிகா. அஸ்மிதா இல்லை. “ என்றாள் உணர்ச்சி துடைத்த குரலில்.

“ம்ம்.. என் அக்கா சொன்னாங்க. ஆனால் என் அக்காவிற்குப் பெண் குழந்தையென்று கேள்வியுற்றதும் நான் தேடிக் கண்டு பிடித்த பெயர் அஸ்மிதா. என் அக்காவும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. அதனால் அவள் பெயர் இனி அஸ்மிதாதான். வேண்டுமென்றால் என் அக்காவின் இரண்டாவது குழந்தைக்கு அனாமிகா என்று வைத்துக் கொள்” என்று இயல்பாக பேச முயன்றான்.

அதற்கு ஆதிரை ஏதும் பதில் சொல்லும் எண்ணமற்று , “எ.. எனக்கு கொ… கொஞ்சம் தூக்கம் போல இருக்கு” என்று சொல்லிய வண்ணம் கண்களை மூடிக்கொள்ள முயன்றாள்.

அப்போது அந்த அறைக்குள் நுழைந்த தலைமை டாக்டரும் ஆர்த்தியும் ,” கண் விழித்துவிட்டாள் போல அர்ஜூன். Congrats… இன்னும் ஐந்து நாட்களில் நீங்க உங்க மனைவியை ஊர் சுற்றக் கூட்டிக் கொண்டு போகலாம்” என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்லிக் கொண்டே அவளது bp மற்றும் இதர மருத்துவ குறிப்புகளை அந்த கட்டிலில் தொங்கவிடப்பட்ட அட்டையில் ஆராய்ந்தபடி சொன்னார்.

பின்னோடு வந்த ஆர்த்தி ஒருவித குற்ற உணர்வுடன் , கைகளைக் குவித்து ,” சார்.. மாட்டிவிட்டுவிடாதீங்க” என்று அர்ஜுனைப் பார்த்துக் கெஞ்சிக் கொண்டிருந்தாள். லேசாகக் கண்களை விரித்து மூடிய ஆதிரையின் கண்களுக்கு இது பட்டு மறைந்தது.

“sister…இப்போதே normal ward க்கு shift பண்ணிடலாம். ஒரு வாரம் கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும். பிறகு உங்க இஷ்டம் அர்ஜூன்.” என்று கண்ணடித்தார் அந்த டாக்டர்.

“ரொம்ப தாங்க்ஸ் டாக்டர்.. வீட்ல எல்லோரும் ரொம்பவும் பயந்துட்டாங்க. நான் முதலில் ஆதிரையைப் பற்றிய தகவல் தந்துவிட்டு வருகிறேன். Sister.. இந்த முறை சரியாக எனக்கு மட்டும் எந்த அறைக்கு ஆதிரையை shift பண்றீங்க என்ற தகவலை சொல்லுங்க” என்று பூடகமாகச் சொல்லிவிட்டுக் கையிலெடுத்த phone –வுடன் சென்றான் அர்ஜூன்.

ஒரு நொடி வியர்த்த போதும் சமாளித்து “சரிங்க… டாக்டர். சரிங்க சார்” என்று சொன்ன ஆர்த்தி அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சென்றுவிட்டாள்.

சொன்னபடி ஆதிரையைத் தனி அறையும் இரண்டு படுக்கையும் இருக்கக் கூடிய normal ward க்கு மாற்றினர். தனித்து ஆதிரையுடன் இருந்த போதும் அர்ஜூன் அவளிடம் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. ஆதிரையும் ஏதோ யோசனையுடனே கண்கள் மூடி தூங்குவது போல இருந்தாளே அல்லாமல் அர்ஜுனிடம் அவசியமற்று பேசுவதைத் தவிர்த்தாள்.

இரண்டு நாட்கள் இப்படியே கடக்க, அங்கு ஆதிரையைப் பார்க்க வென்று வந்து சேர்ந்தார் சிவராமன். யாரென்று புரியாமல் விழித்த ஆதிரைக்கு அர்ஜூன் அவரை , தன் பாட்டியின் சகோதரர். என்று அறிமுகம் செய்து வைத்துவிட்டு, “நான் கொஞ்சம் வேலையாக இந்திரா enterprise போகப்போகிறேன். நான் வர இரண்டு நாட்கள் ஆகும். அதுவரை இவர் உன்னுடன் இருப்பார். மூன்று நாட்களில் discharge பண்ணலாம் என்று சொல்லிட்டாங்க. அதனால நாம சிம்லா போக ஏற்பாடு செய்ய வேண்டும் “ என்று கிளம்பிவிட்டான் அர்ஜூன்.

ஆதிரை எப்போதும் எதையோ யோசனையுடனும் , வாழ்வில் ஆர்வமற்றதுப் போன்ற தோற்றத்துடனும் இருப்பதைப் பார்த்து மெதுவாகப் பேச்சுக் கொடுக்க முயன்றார் சிவராமன்.

“என்னமா.. என்னமோ போல இருக்கிறாய்” என்று குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த ஆதிரையின் தலையை லேசாக வருடினார் சிவராமன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top