தூரம் போகாதே என் மழை மேகமே - 5

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 5
main-qimg-624c51f7bbaee0b441e15b97c59d36e9-c.jpeg
ஆதிரைக்கு அரசு மருத்துவ துறையிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. அவளது பணியை சிறப்பித்து அவளுக்குப் பதவி உயர்வும், சில சலுகைகளும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனோடு இல்லாமல் வேலை இடமாற்றமும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததே ஆதிரையின் அதிர்வுக்குக் காரணம். இது குறித்து சேகர் அங்கிளுக்கு ஏற்கனவே தெரிந்திருக்குமோ! என்ற சந்தேகம் ஆதிரைக்கு இப்போது தோன்றியது. அதனால்தான் தன் மனதைத் தயார்படுத்த அவர் முயன்றிருக்கிறார் என நினைத்தாள் ஆதிரை.

அரசு சார்பாக சில மாதங்களுக்கு முன்பு நடந்த கிராமப்புற மக்களின் கருத்து கணிப்பு ஆதிரை வேலை பார்த்த, இந்த ஏலகிரி மலை கிராமத்திலும் நடந்தது. இது ஆதிரைக்கும் தெரிந்த ஒன்றுதான். அதன் அடிப்படையில் கிராம மக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகள் பொறுத்து அங்கு இருக்கும் சுகாதார மருத்துவமனைக்கு வசதிகள் செய்து தரப்படும். ஆனால் இம்முறை ஆதிரையைக் குறித்து அவ்வூர் மக்கள் கொடுத்த நல்லவிதமான கருத்து கணிப்பே ஆதிரைக்குப் பதவி உயர்வைக் கொடுத்திருக்கிறது.

ஆனால் இந்தப் பதவி உயர்வோ இல்லை சலுகையாக MS படிக்கத் தேவையான scholarship –ஒ ஆதிரைக்கு உற்சாகம் தரவில்லை. இதற்கு இடமாற்றம் ஒரு காரணம் என்றால் , தன் ராஜாவைப் பிரிந்து இருக்கும் நிலை ஏற்படுமோ என்ற மற்றொரு கவலையும் ஒரு காரணம். ‘கல்லூரிக்குச் சென்று படிப்பதென்றால் ராஜாவை எங்கேனும் விட்டுவிட்டுப் பிரிந்துதானே இருக்கும் நிலை ஏற்படும். அங்கிள் சொல்வது போல ராஜா இப்போதெல்லாம் தன்னையே தேடுபவனாகத் தெரியவில்லை என்றாலும், இந்தப் பதவி உயர்வையும் scholarship-ஐயும் யோசித்தே ஏற்றுக் கொள்ள வேண்டும். ‘ என ஐயம் திரிபர சிந்தித்து ஒரு முடிவெடுத்தாள் ஆதிரை.

‘முதலில் இடம் மாற்றம் என்றால் , எந்த இடம், அது தமக்கு கொஞ்சமேனும் சாதகமான இடமாக இருக்குமா என யோசிக்க வேண்டும். அதன் பிறகு MS படிப்பு ,முழு நேரமும் hostel-ல் தங்கிப் படிக்க கூடியதா? இல்லை வீட்டிலிருந்தும் செல்ல கூடியதாக இருக்குமா? அப்படி இருந்தால் தன் ராஜாவைப் பிரிந்து முழு நேரம் இருக்க வேண்டிய அவசியமில்லையே!! ஒரு வேளை இடமும் படிப்பும் தன் சூழ்நிலைக்கு சாதகமாக இல்லையென்றால் அரசு மருத்துவத்திலிருந்து விடுப்பு வாங்கி தன் சூழலுக்கு ஏற்றபடி தனியார் மருத்துவ மனையில் பணி தேடி வேலைப் புரிவதுதான் சரியாக இருக்கும்‘ என தன் இப்போதைய பிரட்சனைக்கு தீர்வு கண்டவளாக உற்சாகம் கொண்டாள் ஆதிரை.

ஆதிரை அரசு மருத்துவ மனைக்கு விரிவாக தன் சூழலை எடுத்துரைத்து அதற்கு தகுந்தபடியாக இடமாற்றம் அமைந்தால் வசதியாக இருக்கும் என்று மின்னஞ்சல் பதில் அனுப்பினாள்.

இவாறாக ஆதிரை யோசித்து செயல் பட்டுக்கொண்டிருக்கும் போது, கந்தனோ ஆதிரை மற்றும் ராஜாவின் பிரிவை எண்ணி ஒருபுறம் கவலையுற்றிருந்தான். அவன் நிலை அறிந்து ஆதிரை அவனுக்கு ஆருதலாகப் பேசி அவனை சமாதானம் செய்வித்தாள். இது சேகர் அங்கிள் செய்திருக்கும் ஏற்பாடாகத்தான் இருக்கும் என்று கந்தன் எண்ணினான். இது குறித்து பேசுவதற்காகக் கந்தன் சேகர் அங்கிளுக்கு phone செய்து பேசினான். அவன் நினைத்ததுப் போல ஒரு பாதி சேகர் அங்கிள்தான் இந்த இடமாற்றத்திற்குக் காரணம் என்பதைக் கந்தன் அறிந்தான். அதன் பிறகு ஒருவாறாகத் தன்னை தேற்றிக் கொண்டவனாக, ஆதிரையின் எதிர்காலம் இதனால் நல்வழிபடும் என்பதை உணர்ந்து மனம் லேசானான். சேகர் அங்கிளிடம் ‘தன் பள்ளி படிப்பு முடிந்ததும் தன்னையும் ஆதிரை இருக்கும் இடமாகப் பார்த்து collage -ல் சேர்த்துவிட வேண்டும்’ என அன்பான ஆணையிட்டான் கந்தன்.

ஆதிரை மருத்துவ துறையிலிருந்து பதிலுக்காகப் பொறுத்திருக்கும் இந்தத் தருணத்தில், சேகர் ஆதிரைக்கு Phone செய்து, தான் சென்னையில் இருப்பதாகவும், ஆதிரையிடம் கொஞ்சம் நேராக பார்த்துப் பேச வேண்டும் என்றும் கூறி உடனே சென்னை வர முடியுமா என்று கேட்டார். ஆதிரையும் சேகரை கண்டு நடப்பவை பற்றி பேச வேண்டும் என்று நினைத்திருந்தாள். அதனால் அவளும் சென்னை செல்ல முடிவெடுத்து கந்தனிடம் கூறிவிட்டு உடனே கிளம்பியும் சென்றாள்.

சேகர் சொல்லியிருந்த இடம் இந்திரா Enterprises. அது திருவல்லிக்கேணியில் கடற்கரைச் சாலைக்கு அருகில் இருந்தது. சென்னை சென்ட்ரலில் இருந்து ஒரு ஆட்டோவை பிடித்துக் கொண்டு சேகர் அங்கிளை பார்க்க அங்குச் சென்றாள். சென்னைக்கு அடிக்கடி வந்தறியாததால் ஆதிரைக்கு இங்கு இருக்கும் வளர்ச்சியும் , மாசுபட்ட காற்றும் ஒருங்கே மாறுபட்ட அனுபவமாக இருந்தது. அவளுக்கு அப்படியென்றால், இரயிலில் நன்கு உறங்கியதால், புதுப் புது இடங்களைக் கண்டதும் ராஜாவுக்குக் குதுகலமும் ஆர்வமுமாக இருந்தது. ஆதிரையின் மனநிலை அறியாமல் அவளிடம் பார்ப்பவையெல்லாம் காண்பித்து ஆயிரம் கேள்விகள் கேட்டு அவளை மேலும் துளைத்தெடுத்தான். ஒருவாறு ராஜாவை அடக்கி அமைதிப்படுத்துவதற்கும் அங்கிள் சொன்ன இடம் வருவதற்கும் சரியாக இருந்தது.

ஆதிரையின் வருகைக்காகவே காத்திருந்தவர் போல அந்தக் கட்டிடத்தின் முன் வாசலுக்கு வந்து வந்து சென்று கொண்டிருந்தவர், அவளை கண்டதும் “வா மா. பயணம் எப்படி இருந்தது. ராஜா சுட்டித்தனம் ஏதும் செய்தானா? குழந்தையோடு உன்னை அலையவிட்டுட்டேனம்மா.? Sorry ஆதிமா” என வருத்தம் தெரிவிக்கும் விதமாக ஆதிரையிடம் பேசிக் கொண்டே அவளிடம் இருந்த பையை வாங்கி அங்கிருந்த ஒருவரிடம் தந்து உள்ளே வைக்கச் சொன்னார் சேகர்.

“அட அங்கிள் sorry எல்லாம் ஏன் கேக்கிறீங்க. ராஜா நல்லா தூங்கிட்டான். அதனால் எந்த பிரட்சனையும் இல்ல. Railway station க்கு பக்கத்திலே இந்த இடம் இருந்த்தால எனக்குச் சாதகமாக போய்விட்டது. நீங்கக் கவலை படாதீங்க” எனப் புன்னகைத்தாள் ஆதிரை.

“ம்ம்… இந்த உன் புன்னகையிலே எந்த மனக்கவலை இருந்தாலும் எல்லாம் மறந்திடும் போ. சரி கொஞ்சம் refresh ஆகிவிட்டு வா. அப்படியே நடந்து போகும் தூரம்தான் கடற்கர இருக்கு. கொஞ்ச நேரம் கடலை பாத்துட்டு வரலாம்” என உடன் சேர்ந்து புன்னகித்தார்.

“ஓ அப்படியா அங்கிள். சரிங்க அங்கிள் போகலாம். நா ready ஆகிட்டு வரேன். நான் கடல நேர்ல பார்த்தது இல்ல. பத்து நிமிஷம் அங்கிள்” என்று மிக விரைவிலே ஆதிரை கிளம்பி வந்தாள்.

அதுவரை அமைதியாக இருந்தா , “அம்மா.. மா…” என ஆதிரையின் முகத்தைத் தடவினான் ராஜா.

“என்னடா கண்ணா.. வீடு போர வர அம்மாட்ட எதுவும் கேட்க கூடாதுன்னு சொன்னேன்ல” என்றாள் ஆதிரை.

இதை கவனித்த சேகர், “ஏனம்மா. என்னாச்சு. ஏன் ராஜாவை பேச வேண்டாம் எங்கிறாய்” என்றார்.

“இல்ல அங்கிள். புது இடத்த பார்த்ததும் எத்தனைக் கேள்வி கேக்கிறான் அங்கிள். பதில் சொல்ல முடியல. கந்தனையும் உடன் அழைத்து வந்திருந்தால் இவனுக்குச் சரியாக இருந்திருக்கும். அவன் school leave போடனும்தான் விட்டுட்டு வந்துட்டேன். ராஜாவைச் சமாளிக்க நீ பேசாமல் வந்தாள் நான் உனக்குப் பெரிய காரு வாங்கி தருவதாக சொன்னேன். அதனோடு வாய் மேல விரல் வச்சி அமைதியா இருக்கான். இப்போ என்ன வேணும்னு தெரில.” என்றாள் ஆதிரை.

“அது சரி. அதுதான் சங்கதியா? நான் ராஜாவை பார்த்துக்கிறேன். இங்க அவனைக் கொடு.” என அவனைக் கையில் வாங்கிக் கொண்டார் சேகர். பின் “ராஜாகுட்டி அம்மாட்ட என்னவெல்லாம் கேட்ட, தாத்தாட்டயும் கேளடா. நான் பதில் சொல்றேன். தாத்தா உங்களுக்கு என்ன வாங்கி வந்திருக்கிறேன் பாரு “ என தன் பையிலிருந்து ஒரு பெரிய பொம்மை காரை எடுத்துக் கொடுத்தார் சேகர்.

அது வரை தன் தாயின் அதட்டலில் கோபமாக இருந்த ராஜா, காரை பார்த்ததும் “ஊர் தாத்தா.. உம்மய்யா ராஜாக்கு காரு காரு. பெய்ய காரு.. ஊர் தாத்தா தந்தா…” என அந்தப் பெரிய பொம்மையைக் கையில் மாற்றி மாற்றிப் பற்றினான் ராஜா. பின் தன் பிரியத்திற்குரிய ஊர் தாத்தாவிடம் மாற்றி மாற்றி கேள்விகளாக கேட்டுக் கொண்டு வந்தான். அவனுக்கு ஆசையாகப் பதில் கூறிக் கொண்டே நடந்து வந்தார் சேகர். ராஜாவின் துள்ளலையும் சுட்டியான கேள்விகளையும் பார்த்து ஆதிரை பெருமையாக ரசித்துக் கொண்டே அவர்கள் பின்னால் வந்தாள்.

அதற்குள் மணலில் நடக்க ஆரம்பித்திருந்த சேகர் மெதுவாக ராஜாவையும் மணலில் இறக்கி அவனது கைகளை பிடித்துக் கொண்டு தாத்தாவும் பேரனுமாக மணலில் ஆசையாக நடந்தனர்.

கடற்கரை மணலில் கால் பதித்த போது ஆதிரையின் உடல் முழுதும் ஒரு சிலிர்ப்பு உண்டானது. இனம் புரியாத உணர்வினை உணர்ந்தாள். கட்டுண்ட பதுமை போல கடலை வெறித்தாள்.

உலகம் மறந்து தாத்தாவும் பேரனுமாக பேசிக் கொண்டு நடந்து சென்றதில் , பின் வரும் ஆதிரையின் நிலையை சேகர் உணரவில்லை. பின்னோடு வருமாறு சைகை செய்துவிட்டு மெதுவாக நடந்தார் சேகர்.

ஆதிரையோ கடல் நோக்கிச் செல்ல செல்லத் தன்னிலை இழந்தவளாக தோன்றினாள். அவள் கண்கள் அவள் வசமின்றி கடலையே வெறித்தது. மனத்திரையில் விளக்கேந்திய அவளைப் போன்ற உருவமொன்று கடலிலிருந்து அவளை நோக்கி வருவது போல அவள் உணர்ந்தாள். அந்தப் பெண்ணின் ஆடைகளும் நேர் கொண்ட பார்வையும் சரித்திர கதியகளில் வரும் இளவரசியை போலத் தோன்றியது. அவள் ஏந்தி இருந்த விளக்கை தன் கையில் கொடுப்பதற்காகவே அவளை நோக்கி அவளைப் போன்றே இருந்த அந்த உருவம் நடந்து வந்ததாக உணர்ந்தாள் ஆதிரை. அவளையும் அறியாமல் அந்த விளக்கை வாங்கிவிட வேண்டுமென்று துடிதுடித்த கைகளும் கால்களும் அவளை, அந்தக் கடல் நீரில் முதல் முறையாகக் கால் பதிக்க வைத்தது. கடலில் கால் வைத்த போது ஏற்பட்ட மின்சாரம் தாக்கிய உணர்வால் ஆதிரை ஒருகணம் நின்றாள். இவை எதையும் அறியாமல் பின்னோடு பொறுமையாகக் கதை பேசிக்கொண்டு வந்தார் சேகர்.

ஆனால், ஆதிரையின் பௌர்ணமி போல களங்கமும், குறையும் இல்லாத அழகும், அவளது நேர் கொண்ட நடையையும் , சுற்றி இருப்பவை எதையும் கவனிக்காமல் கடல் நீரிலே இமைக்க மறந்த அவளது பார்வையையும் ஒரு ஜோடி கண்கள் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தது. ஆதிரை கால்களை நனைத்துக் கொண்டு வந்துவிடுவாள் என்று எதிர் பார்த்த அந்த ஒரு ஜோடி கண்கள் திடுக்குற்றது. ஆதிரை அவள் வசமிழந்து அவள் மனத்திரையில் தெரிந்த அந்தப் பெண்ணிடம் விளக்கினை வாங்கிக் கொள்பவள் போல யாருமற்ற அந்தக் கடல் நீரில் மேலும் மேலும் கடல் நோக்கி ஆழம் பாராமல் நடக்கலானாள்.

பெண் ஒருத்தி , யாரும் செல்ல இயலா ஆழம் செல்வதை அப்போதுதான் பார்த்த , மற்றவர்கள் அவளைக் காக்க எண்ணி அவளை நெருங்க முயன்றனர். ஆனால் கடல் அலைகள் அவளைக் காக்க எண்ணியவர்களைத் தூக்கி எரிந்தது மற்றும் ஆதிரை முன்னேறிச் செல்ல வசதியாக அவளை முன்நோக்கி விட்டது. அப்போதுதான் கடலினை நெருங்கி இருந்த சேகர், அவளைக் கண்டு கலங்கி , “ஆதிமா, ஆதிமா! என்ன காரியம் செய்கிறாய்!” என ராஜாவை தூக்கிக் கொண்டு அருகில் சென்று கதறினார்.

இவை அனைத்தையும் கண்டு கொண்டிருந்த அந்த ஜோடி கண்களுக்கு சொந்தமானவன், ஆதிரை மீண்டு வருபவளாகத் தெரியாததால் அவளை நோக்கி கடலில் குதித்தான்.!! அர்ஜூன்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top