தூரம் போகாதே என் மழை மேகமே - 3

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 3
69e9fb367db476a4bdee39ea645d3a6d--tamil-girls-indian-art.jpg
கந்தன் தூங்கிக் கொண்டிருக்கும் ராஜாவின் தலையை வருடிக் கொண்டு அவன் அருகில் அமர்ந்திருந்தான்.

“டே தம்பி. என்ன அச்சுடா? எதுவா இருந்தாலும் அப்பறம் பேசலாம், வா முதல்ல சாப்பிடு. அங்கிள் பசியோடு காத்திருக்காரு.” என்றாள் ஆதிரை.

“ம்ம் சரிக்கா”. என வெம்பிய குரலில் சொல்லிவிட்டு ராஜாவின் மீது ஒரு பார்வையும் , வழி மீது ஒரு பார்வையுமா நடந்தான் கந்தன். ஒன்றும் புரியாமல், ஆதிரை அவனையே நோக்கினாள். சரி சாப்பிட்ட பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து அவர்களுக்குப் பரிமாறிவிட்டு தானும் அமர்ந்தாள் ஆதிரை. கந்தன் வாயை திருந்தான் இல்லை. இருந்த போதும் கொஞ்சம் சமாதானம் அடைந்திருக்க வேண்டும். அவன் முகம் கொஞ்சம் தெளிவடைந்திருந்தது. அந்த அமைதியான சூழலை சேகரே உடைத்தார்.

“இங்க எல்லாம் set ஆகிடுச்சா மா. இந்த ஊர்காரங்க எல்லாம் நல்லா பேசுராகலா.? ராஜாக்கு எல்லாம் set ஆகிடுச்சா? கந்தனும் நல்லா வளர்ந்துட்டு இருக்கான் போல இருக்கு” எனப் புன்னகைத்தார் சேகர்.

“ம்ம் ஆமா அங்கிள் இங்க எல்லாம் set அகிடுச்சு. உங்களுக்குத் தெரியுமா? கந்தந்தான் அவனோட class –ல் first mark. Sports-லயும். என் அண்ணா இல்லாத குறைய இவன் நிவர்த்தி செய்றான்” என அருகில் இருந்த கந்தன் தலையை வருடிய வாரு சொன்னாள் ஆதிரை.

“ம்ம்..“ என்றதோடு சேகர் எதுவும் பேசவில்லை. பதிலாக சேகரின் முகம் ஏதோ தீவிரமாக யோசிப்பதாகத் தோன்றியது. சாப்பிட்டதும், கயிற்று கட்டிலை எடுத்துப் போட்டு “அங்கிள் கொஞ்ச நேரம் தூங்குக. Tired – அ இருபிங்க” என்றான் கந்தன். சேகரும் தீவிர யோசனைகளுக்கு நடுவே தூங்கவும் செய்தார். அவரைத் தொந்தரவு செய்ய ஆதிரையும் எத்தனித்தாள் இல்லை. அவ்வளவு தூரம் பயணத்திற்கு பிறகு அவருக்கு ஓய்வு அவசியம் என்று அவள் உணராமல் இல்லை. ‘இருந்த போதும் என்ன நடந்தது கந்தனும் அங்கிளும் ஏதோ புதிர் போல நடந்து கொள்கிறார்கள். கந்தனிடம் கேட்டு தெரிந்து கொள்வோம்.’ என நினைத்தாள் ஆதிரை.

சோகமே உருவாக இருந்த கந்தனிடம் பேச எத்தனித்த போது, “அம்மா…. அம்மா….” எனக் கண்களை கசக்கிக் கொண்டு ஆதிரையைத் தேடிக்கொண்டு வந்துவிட்டான் ராஜா.

“என்ன கண்ணா. பசிக்கிறதா? வாங்கச் சாப்பிடலாம்” என கூறிக் கொண்டே வந்து ராஜாவை தூக்கிக் கொண்டாள் ஆதிரை. கந்தனும் அவளுடன் வந்தான்.

“அக்கா. நா… நா.. ராஜாக்கு ஊட்டி விடட்டுமா?” எனத் தயங்கி கேட்டான் கந்தன். விசித்திரமாக கந்தனைப் பார்த்த போதும், “கண்டிப்பா டா தம்பி” என யோசனையோடே ராஜாவைக் கந்தனிடம் தந்தாள் ஆதிரை. எப்பொழுதும் தட்டில் போட்டுக் கொடுத்தாள் பொறுமையாகச் சாப்பிட ஆதிரை ராஜாவிற்குப் பழக்கி இருந்தாள். சிறிது கீழே சிந்தும் என்றாலும், பசித்து அவனே உண்ணும் பழக்கம் நல்லது, என்று கடந்த 3 மாதமாக ராஜா தானாகவே சாப்பிட ஆரம்பித்திருந்தான். முன்பெல்லாம் கந்தனும் , தானும் ஊட்டி விட்டிருந்த போதும் அந்தப் பழக்கம் இப்போது இல்லை. இவன் இப்படி ஏன் திடீரென்று கேட்கிறான் எனத் திகைத்தாள் ஆதிரை.

“ராஜா. இன்னிக்கு உனக்குக் கந்த மாமா ஊட்டி விடுவாரு” என தன் குழந்தையிடம் சொன்னாள் ஆதிரை.

“ஐய்யா மா மா , பூவா(boova) ஊட்டி. மா மா ஆ.. ஆ..” என அழகு காட்டிக் கொண்டே கந்தனுடன் சென்றான் ராஜா.

“டே தம்பி. என்னாச்சு” என உடன் சென்று கேட்டாள் ஆதிரை. “ஒன்னுமில்ல அக்கா. அங்கிள் உங்கட்ட ஏதோ பேசனும்னு சொன்னார். நா மட்டும் 10-ஆம் வகுப்பு இல்லனா நல்லாருந்திருக்கும்” எனத் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் பேசினான் கந்தன். “என்ட வேற எதும் கேட்காதீங்க அக்கா” என்று விட்டு ராஜாவிடம் பேசிக் கொண்டே சோறு ஊட்டச் சென்றுவிட்டான் கந்தன். விலகி செல்லும் கந்தனை வற்புறுத்த ஆதிரைக்கு மனம் வரவில்லை. குழப்பதீனூடே சேகர் அங்கிள் எழுந்திருச்சதும் கேட்டுக் கொள்ளலாமென்று மருத்தவமனைக்கு கிளம்பினாள் ஆதிரை.

சேகர் கண் விழிக்கவும் ஆதிரை மீண்டும் வீடு வரவும் சரியாக இருந்தது. “அங்கிள்.. இப்போ எப்டி இருக்கு. இருங்க coffee போட்டுட்டு வரேன்.” என்று ஆதிரை சென்றாள்.

“ம்ம்..” என்று சிறிது முகம் கழுவிக் கொண்டு உள்ளே வந்தார் சேகர்.

“ம்ம்… இப்போ சொல்லுங்க அங்கிள். என்னாச்சு. இவன், இந்த கந்தன் ஏன் இப்டி சோகமானான். மதியத்துக்கு இப்போ பரவல போல இருக்கான்.” என coffee – ஐ சேகர் கையில் தந்துவிட்டு, ராஜாவோடு வந்து அமர்ந்திருந்த கந்தனின் தலையைச் செல்லமாக கலைத்துவிட்டு சிரித்துக் கொண்டே சொன்னாள் ஆதிரை.

கந்தனும் சினுங்கி கொண்டே , “ போங்க கா. எப்போ பாரு என் தலை கலைப்பதே வேலை” எனத் தலையை சரி செய்தான்.
புதிதாக இருந்த சேகரை பார்த்ததும் ராஜா , முதலில் ஆதிரையின் அருகில் வந்தது , “ அம்மா.. ஊ…” என அவரை கை காட்டி சொல்லி அவளில் ஒட்டிக் கொண்டான்.

பரிவாக ராஜாவை அணைத்துக் கொண்ட ஆதிரை, “கண்ணா அது யாரு தெரில, உனக்கு கார் வாங்கி தந்த ஊர் தாத்தா” என்றாள்.

ஆதிரையையும் , சேகரையும் மாறி மாறிப் பார்த்து “ஊர் தாத்.. தா.. காரு.. காரு.. “ எனச் சொல்லி கொண்டே அவர் வாங்கித் தந்த கார் பொம்மையைத் தேடிக்கொண்டு ஓடிப் போனான் ராஜா.

அவன் பேசிய விதத்திலும் , செய்கையிலும் பூரித்துப் போன சேகர் கொள்ளென சிரித்தார்.

ராஜா அந்தப் பொம்மை வண்டியை வைத்துக் கொண்டு “டுர்… டுர்… “ என வாயிலே எஞ்சின் சத்தமிட்டுக் கொண்டு மும்முரமாக வண்டி ஓட்டிக் கொண்டு வீடேல்லாம் சுற்றினான். இது எப்போதும் நடப்பது என்பதால் கந்தனும் , ஆதிரையும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
சேகர் ராஜாவின் முகத்தோற்றம், அவனது சில அசைவுகள் எல்லாம் பார்க்க பார்க்க வேறு யாரோ நினைவு வர பூரித்துப் போனார். பின் சுய நினைவுக்கு வந்து , “ம்ம் சொல்கிறேன் ஆதி” என்று பெருமூச்சு எடுத்துப் பேச ஆரம்பித்தார் சேகர்.

“ம்ம் சொல்லுங்க அங்கிள். தம்பி அந்த ரஸ்க் எடுத்துவாடா. அங்கிள், coffee ல தொட்டு சாப்பிடுங்க. நல்லாருக்கும்” என்றாள் ஆதிரை.
ஒரு புன்னகையை பதிலாக உதிர்த்துவிட்டு “ம்ம் சரி மா.. ஒரு முக்கியமான முடிவெடுக்கனும். நான் சொல்வதை பொறுமையுடன் கேட்டுவிட்டு அதன் பிறகு யோசித்து பதில் கூற வேண்டும். சரியா?” என்றார் சேகர்.

“ம்ம்.. சரிங்க அங்கிள்.. கேட்கும் முன்னே , ஒரே பீடிகையா இருக்கே “ என புன்னகித்தாள் ஆதிரை.

“ம்ம்.. இங்க பாருமா. உனக்கு இன்னும் M.S. படிக்கணும்னு ஆசை இருக்கா?” என்றார்.

“ம்....” என சில வினாடிகள் யோசித்துவிட்டு, பின் “இப்போது இருக்கும் சூழ்நிலையில் எப்படி அங்கிள் என்னால் படிக்க முடியும். எனக்கும் யாருமில்லை. ராஜாவோ யாரிடமும் இருக்க மாட்டான். இவ்வளவேன்? இவன் கை குழந்தையாக இருக்கும் போதே உங்களிடம் விட்டுவிட்டு, வந்து MS மட்டுமாவது படித்து முடிக்க எத்தனித்தேன். அப்போது ராஜாவோ நாள் கணக்காக உறங்காமல் இருந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து நம் எல்லோரையும் கதிகலங்க வைக்கவில்லையா.? என் அரவணைப்பு இல்லாமல் இப்போதும் தூங்க மாட்டேன் எங்கிறான் அங்கிள். எனக்கு என் படிப்பை விட என் ராஜாவே முக்கியம். அவன் உடல் நிலை கருத்தில் கொண்டும்தான் படிப்பை பாதியில் விட்டேன். அதனால் இப்போதும் படிப்பது கடினமே.” என பழைய நினைவில் அதுமட்டுமா காரணம். ‘என்ன? ஏது என்று தெரியாமல் காலேஜில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் அவளைக் கேட்டு துளைத் தொடுத்தது’ அவளுக்கு மட்டும் தானே தெரியும். ‘இருக்கும் வேதனையை இன்னும் அதிகமாக்கும் விதமான கேள்விகள். சொல்வதையும் யாரும் நம்பவில்லை. தன் மீது பொறாமை கொண்டு கொடுஞ்ச் சொற்கள் பேசும் சிலர், மறக்க நினைத்தவை எல்லாம் மீண்டும் நியாபக படுத்துவோர் சிலர், பரிதாபம் என்று மேலும் கூனி குறுக வைத்துக் காயபடுத்துவோர் சிலர் என இவர்களின் மத்தியிலிருந்து விடுதலையாக எண்ணியே இந்த அங்கிளிடம் உதவிக் கேட்டது. அதன் பலனாகவே இங்கு, இந்தக் கிராமம் வர ஏற்பாடானதும். அதனோடு பணம். அதுவும் தானே மூல காரணம். அதற்கு என்ன செய்வது? அங்கிள் சொன்னாலும் நம்மால் எப்படிப் படிக்க முடியும்.’ என எண்ணமிட்டாள்.

அவள் எண்ணம் படிப்பவராக சேகர், “நான் உன் படிப்பிற்காக scholarship வாங்கி தரேன் மா. ராஜா முன் போல உன்னை எப்போதும் தேடுபவனாக தெரியவில்லை. இருந்த போதும் நீ உன் படிப்பை விட்டு வந்த போது எவ்வளவு வேதனைக் கொண்டாய். அதனாலே சொன்னேன்.” என அவளை ஊக்கினாள்.

தன்னைக் கண்டு கொண்டாரே என எண்ணிய போதும், ‘அங்கிளுக்கு தெரியாதது என்னிடம் என்ன இருக்கிறது ஒன்ரறை ஆண்டுக்கு முன் எல்லாவற்றையும் கொட்டி தீர்க்க ஆதரவளித்த ஒரே ஜீவன் இவரல்லாவா!’ என நினைத்தாள். பின் “அங்கிள் இருந்த போதும் என்னால் திரும்ப collage -லாம் போய் படிக்க முடியாது. அதனோடு என் ராஜா! என் ராஜாவை விட்டு என்னால் பிரிந்திருக்க இனி முடியவே முடியாது. அது எப்பேர்ப்பட்ட லட்சியமாக இருந்தாலும். இந்தப் பேச்சை இதற்கு மேல் தொடர வேண்டாம் அங்கிள்” எனத் தீரமாக சொன்னாள்.
தன் பேச்சு இப்படி தோல்வியில் முடிந்ததை எண்ணி வேதனைக் கொண்டார். சேகர். ‘தாய்மை பெண்ணின் எண்ணங்களையும் லட்சியங்களையும் தான் எப்படியெல்லாம் குழப்பி விடுகிறது. ராஜாவின் மீது இவ்வளவு அன்பு இவள் வைக்கக் காரணமும் இருக்கத் தானே செய்கிறது.

அதன் பிறகு அவரும் வேறு எதுவும் பேசாமல், வெளியில் கொஞ்சம் காலார நடந்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு சேகர் எழுந்து சென்றார். பின் சேகர் அடுத்த நாளே கிளம்பியும் சென்றுவிட்டார். அங்கிள் ஏன் திடீரென்று தன்னிடம் படிக்கும்படி கேட்கிறார். என நினைத்த போதும் ஆதிரை அவரிடம் இது தொடர்பாக மேலும் பேச விரும்பவில்லை. இப்போதுதான் இந்தக் கிராமத்தில் எல்லாம் சகஜமாக இருக்க ஆரம்பித்திருக்கிறாள் , திரும்ப புது இடத்துக்குப் போய் எல்லாம் அமைய எவ்வளவு நாள் ஆகும் . ஒருவேளை அமையவே அமையாதோ!’ என்று எண்ணி அந்த சூழ்நிலைக்கு தாமே ஏன் செல்ல வேண்டும் எனத் தவிர்த்தாள்.

சேகர், ஆதிரையின் அண்ணன் மனைவி ரிதிகாவின் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர். அவளது அண்ணன் அரவிந்த், ரிதிகாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ரிதிகாவின் குடும்பத்தில் எல்லோருக்கும் இத்திருமணத்தில் எதிர்ப்பு. ரிதிகாவின் தம்பி கோபத்தின் உக்கிரத்திலே இருந்தான் என்று சேகர் அங்கிள் சொல்லி ஆதிரையும் கேட்டிருக்கிறாள். திருமணத்தின் போது ரிதிகாவிற்கு ஆதரவாக வந்தவர் சேகர் மட்டுமே. அப்போது சுட்டித்தனமாகவும் , எல்லோரையும் கேலி செய்து சிரிக்க வைத்தும் சுற்றிக் கொண்டிருந்த ஆதிரையைப் பார்க்கும் போதே, அவளை லண்டனில் இருக்கும் தன் இரண்டாவது மகனுக்கு மணமுடிக்க எண்ணம் கொண்டிருந்தார். பெரியவர்களிடம் மதிப்பும், குழந்தைகளிடம் குழந்தையாகவும், இளையவர்களிடம் கலகலப்பும் என வயதிற்கு ஏற்ப பழகும் விதத்தில் அவருக்கு ஆதிரையை பற்றி நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருந்தது. ஆனால் அவர் எண்ணம் வெளியிடும் முன் என்ன என்னமோ நடந்தேறிவிட்டது. அவருடைய எண்ணத்தை ஆதிரையிடம் வெளியிடாமலே இருந்து விட்டார். இருந்த போதும் ஆதிரையின் மீது அவருக்கு இருந்த அன்பு குறையாமல் அவளுக்கு ஆதரவாக இருந்து வந்தார். அவளது அண்ணன் போன பிறகும் கையில் கைக் குழந்தையுடன் நின்ற திக்கற்ற பெண்ணுக்கு வழியாக சில அறிவுரைகள் கூறி நல்வழிப் படுத்தினார்.

என்னதான் ஆதரவாக சேகர் அங்கிள் இருந்த போதும் ஆதிரை இப்போதெல்லாம் முடிவுகளை நன்கு யோசித்து எடுக்க ஆரம்பித்திருந்தாள். அவர் சொல்வதனால் ராஜாவை விட்டுவிட்டு லட்சியம் அது இது என்று எங்கேனும் சென்றால் ,இவன் நினைவாகவே இருக்குமே. அதுவும் மீண்டும் அந்த சிதம்பரம் காலேஜில் படிப்பது என்றால் அவளுக்கு நெருப்பின் நடுவில் இருப்பது போல் உடலெல்லாம் எரிந்த்து. அதனாலே சேகர் படிக்க சொல்லும் போது அவள் யோசித்து முடிவெடுத்துக் கூறினாள்.

படிக்க வேண்டும் ஆசை ஒருபுறம் இருந்த போதும், கிணறு வெட்டப் பூதம் கிளம்பும் கதையாக என்ன என்ன பிரட்சனை எழக் கூடுமோ என அதனை மறுத்தாள். இப்போது இருக்கும் சாதகமான அமைதியான சூழலைவிட்டு போகவும் மனம் வர வில்லை. இவ்வூர் மக்கள் இப்போது தன்னை ஏற்றுக் கொண்டவிதத்தில் ஆதிரையும் கொஞ்சம் நிம்மதியுற்றிருந்தாள். இதை இப்போதுக்கு கெடுத்துக் கொள்ள அவளுக்கு மனம் இருக்கவில்லை. இனி அவள் வாழ்விலும் ராஜா மட்டுமே. அவனைப் பெரிய படிப்பு படிக்கவைத்து பெரிய ஆளாக வளர்ப்பதே இப்போதை அவளது குறிக்கோள்.

இவ்வாறாக ஆதிரையின் நிலை இருக்க , ஆதிரை அக்கா படிக்க மறுத்தது நினைத்து தன்னை விட்டு ஆதிரை போக மாட்டாள் என்று ஒருபுறம் மகிழ்ச்சியும், ஆதிரையின் எதிர்காலம் பற்றி ஒருபுறம் கவலையும் ஒருசேரக் கொண்டான் கந்தன். இருந்த போதும் இந்த முடிவுகளில் தலையிடவும் அவன் எண்ணவில்லை. சேகர் அங்கிள் சென்ற பிறகு 2 வாரம் அமைதியாக வழக்கம் போல சென்றது. அதன் பிறகு அரசு மருத்துவ துறையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. இதனைத் துளியும் எதிர் பார்த்திராத ஆதிரை திடுக்குற்றாள்.
 

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
அண்ணியின் தம்பிக்கு ஆதிரை
வாழ்க்கையில் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா
குழந்தை அண்ணன் குழந்தையா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top