தூரம் போகாதே என் மழை மேகமே!! - 25

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



phone – ஐ எடுத்த சேகர், “என்ன ஆதிமா. எப்படி இருக்க. இவ்வளவு நாள் கழித்து இப்போதுதான் என் நினைவு வந்ததா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.


ஆனால் களங்கிய மனமும், உணர முடியாத பயமுமாக ஆதிரை “அங்கிள்.. “ என்று வராத குரலை கொண்டு சேகரை அழைத்தாள்.


அவளது குரலில் பயந்த சேகர், “ என்னாச்சு ஆதிரை. குரல் மெலிந்து கேட்கிறதே! அரவிந்து, ரிதிகா , குழந்தைகளலெல்லாம் சுகம்தானே! ஏதும் பிரட்சனை இல்லையே!" என்று பதட்டமுடன் கேட்டார்.


“அ.. அது.. வந்து… அங்கிள்.. அவர்கள் நலமாக இருக்க வேண்டுமென்றுதான் நினைக்கிறேன். ஆனால் லண்டன் போனவர்களிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. என்… என் அண்ணனிடம் நான் பேச வேண்டும். அவனுடைய phone not reachable -ல் இருக்கு. அண்ணி phone -ம் reach ஆகல அதுதான் கவலையா இருக்கு" என்று தனக்கு அவள் அண்ணன் எழுதிய கடிதத்தை சேகரிடம் மறைத்து பேசினாள் ஆதிரை.


“ஓ… அவர்கள் லண்டனில் இருக்கிறார்களா? எனக்கு தெரியாதே! எல்லாவற்றையும் என்னிடம் சொன்னவர்கள் இதை ஏன் மறந்தார்கள். சரி விடு . நான் கஜேந்திரனுக்கு phone செய்து ரிதிகாவை உனக்கு phone செய்ய சொல்கிறேன். கவலை படாதே மா. லண்டனில் இந்தியா number வேலை செய்யாது. தகுந்த நேரம் வரும் போது அவர்களே call செய்வார்கள்" என்றார் சேகர்.
“ம்ம்… அதில்லை அங்கிள். அவர்கள் லண்டனுக்கு பத்திரமாக சேர்ந்தார்களா என்றும் தெரியவில்லை. கொஞ்சம் சீக்கரம் call செய்ய சொல்றீங்கலா? “ என பதட்டம் குறையாமலே கேட்டாள் ஆதிரை.


“சரி மா. ஒரு நிமிஷம் line - லே இரு.. இப்போதே ரிதிகாவின் அப்பா, கஜாவிற்கு conference போட்றேன் ." என்று கஜேந்திரனுக்கு phone செய்தார் சேகர்.


Phone -ஐ எடுத்த கஜேந்திரன், அவர்கள் இந்தியா சென்றிருப்பதாகவும், ரிதிகாவின் தாத்தாவிற்கு உடல் நிலை சரியில்லையென்ம்று கொள்ளு பேத்தியை பார்க்க ஆசை படுவார் என்று அவர்கள் முன்னதாகவே இந்தியா சென்றதாகவும், தாங்களும் இன்று இரவு இந்தியாவிற்கு கிளம்ப இருப்பதாகவும் சொன்னார்.


“ஓ… சரி டா கஜா.. அப்பாவிற்கு எதுவும் ஆகாது. நான் டெல்லி airport -ல் உங்களுக்காக காத்திருக்கிறேன். கவலைபடாம வாங்க" என்று phone – ஐ வைத்தார் சேகர்.


ஆதிரை line – ல் இருந்ததால் அவளும் இதனை அறிந்துக் கொண்டாள். நடப்பவை சாதரணம் போல இருந்தாலும், இந்த கடிதம் அவள் அண்ணனின் மூலமாக கிடைத்த இந்த கடிதம் ஆதிரையை கொஞ்சம் பயமுறுத்தியது.


அதன் பின் சேகர் , அர்ஜூனிடம் ஆதிரையின் number – ஐ கொடுத்து அவளிடம் பேச வழி வகை செய்தார் . 'அரவிந்திடம் அவன் தங்கை உடனே பேச வேண்டும் எங்கிறாள். அவனை அவளுக்கு phone செய்ய சொல்' என்று அர்ஜூனிடம் பணித்தார்.


இவ்வாறாக ஆதிரையை பற்றியும், ரிதிகாவை பற்றியும் பேசிக் கொண்டிருந்த சேகர் மற்றும் காதம்பரனின் பேச்சு அவர்கள் சென்றுக் கொண்டிருந்த விமானம் டெல்லி விமான நிலையைத்தை அடைந்ததும் நிகழ் காலத்திற்கு வந்தது.




விமானத்தைவிட்டு இறங்கியதும் அவர்களுக்காக சிம்லா செல்ல கார் தயாராக இருந்தது. உணவருந்திய பிறகு அதில் ஏறி பயணத்தை தொடர்ந்த சேகரும் காதம்பரனும், ராஜா உறங்குவதற்காக காத்திருந்துவிட்டு, பேச ஆரம்பித்தனர்.


“அப்போ! நம்ம அம்மு தான் முன்னவே தீர்மானித்து ராஜாவை ஆதிரையிடம் விட்டுவிட்டு வந்திருக்கிறாள் என்கிறாயா சேகர்" என்றார் காதம்பரன்.


"ஒரு பாதி சரி. என்றும் சொல்லலாம் காதம். ஆனால் முழுமையும் ரிதிகா மட்டும் காரணமல்ல. ஒரு பாதி காரணம் நம்ம அர்ஜூன்" என்று தொடர்பற்று, வானுக்கும் பூமிக்கும் சேர்த்து முடிச்சு போட்டார் சேகர்.


கேள்வியாய் காதம்பரன் சேகரை நோக்க, சேகர் தொடர்ந்தார்,” அதை நான் விதி என்றுதான் சொல்ல வேண்டும். அர்ஜூனால்தான், ஆதிரையை என் மகனுக்கு திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தையும் நான் கைவிடும்படி ஆகிவிட்டது. எவ்வளவு அருமையான பெண் ஆதிரை. அர்ஜூனின் வார்த்தைகளால் உண்டான ஆதிரையின் பிடிவாதம் அவளை கன்னியாகவே தாயாக்கியது காதம். ஒரு மாதம் முழுதும் அரவிந்தும் , ரிதிகாவும் வராததால்,ராஜாவை சிவசக்தி அம்மாவின் குடும்பத்துடன் சேர்த்துவிட ஆதிரை எவ்வளவோ முயன்றாள். ஆனால் அர்ஜூனின் சுடு சொற்களை தாங்க முடியாமல், ‘ என் ராஜாவின் பிறப்பை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை அங்கிள். அவனை என் மகனாக வளர்ப்பேன். இனி இவன் தொடர்பாக யாரும் என்னிடம் பேச கூடாது. என் அண்ணியே சொன்னால் ஒழிய நான் என் ராஜாவை யாரிடமும் நான் தர மாட்டேன். இது என் மேல் சத்தியம்' என்று பிடிவாதமாக என்னிடமும் உறுதி வாங்கிக் கொண்டாள். “ என்று தழுதழுத்த குரலில் கூறினார்.


"ஆனால் ஆதிரை இப்போது உயிருடன் இருப்பதும் தெரியவில்லை. அர்ஜுன் உயிருடன் இருப்பதும் தெரியவில்லை. எனக்கு எல்லாம் குழப்பமாக இருந்தது. ஆதிரைக்கு கொடுத்த வாக்கிற்காக நானும் ராஜா குட்டியை என்னால் இனி வருத்த முடியாது. ஆதிரையுடன் இருந்தால், ராஜா செல்வ வளத்தால் வேண்டுமென்றால் குறைந்து இருக்கலாம், குணத்தால் அவன் குபேரனை போல வளமுடையவனாக வளர கூடும். இப்போது அவளும் இல்லை என்றால் ராஜாவின் நிலை" என்று ஒரு கண நேர அமைதிக்கு பின், "அதனால்தான் நான் எல்லா உண்மையும் இப்போது உன்னிடம் சொன்னேன். ஆனால் இது நாள் வரை ஆதிரை அர்ஜூன் அவளிடம் என்ன பேசினான் என்று சொல்லவே இல்லை. அவள் களங்கி வருந்துவதை பார்த்துக் கொண்டு என்னாலும் தாங்க முடியாமல் அதனை பற்றி பேசுவதையும் விட்டுவிட்டேன். கஜாவின் தந்தை இறந்த பிறகு ,அவளை வருத்திய காரண்த்தாலே, நானும் அர்ஜூனிடமும், மற்றவர்களிடமும் பேசுவதை ஒரு மாதத்திற்கும் மேலாக தவிர்த்தேன். பின்னரே, கஜேந்திரன் மூலமாக ரிதிகாவின் விமான விபத்து பற்றி நான் அறிய நேர்ந்தது. அரவிந்த் மற்று ரிதிகா இருவரும் விமான தகவல் தொழில் நுட்ப கோலாரினால் கடலில் விபத்துககுள்ளானது அறிய நேர்ந்தது.. அதிர்ஷ்டவசமாக அஸ்மிதா மற்றும் சிலர் மட்டும் உயிர் பிழைக்க செய்ததும் தெரியவந்தது. ஆதிரையின் அண்ணன் அரவிந்து இறந்ததை கூட ஆதிரையிடம் சொல்ல முடியாமல் நான் சில நேரங்களில் தவித்திருக்கிறேன். ஆதிரைக்கு இப்போதும் , அரவிந்தும் ரிதிகாவும் அவர்களது குழந்தையும் நலமுடன் லண்டனில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறாள். அந்த நிம்மதியை என்னால் குழைக்க முடியவில்லை காதம்." என்று நடந்து முடிந்ததை எண்ணி சில வினாடிகள் தன்னிலை மறந்து கண்ணீர் மல்க சொல்லிக் கொண்டிருந்தார் சேகர்.


சேகருக்கு ஆருதலாக காதம்பரனும், அவர் தோள்பட்டை மீது கை வைத்து "புரிகிறது சேகர். அப்போது அர்ஜூன் இப்போது போல பக்கவமுடன் பேசுபவனாக இருக்கவில்லை. எனக்கும் நினைவிருக்கிறது சரி விடு. எல்லாம் சரியாகிவிடும். “


“ம்ம்.. “ என்றதற்கு பின் சேகர் வேறெதுவும் பேசவில்லை.
***************
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top