தூரம் போகாதே என் மழை மேகமே!! - 22

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer



ஒரு நாள் இரண்டு நாள் என்று மறைந்து, ஒரு வாரம் முழுதுமாக கடந்தது. ராஜா காதம்பரன் மற்றும் சேகருடன் நங்கு பழகிவிட்டான். அவனை பார்த்துக் கொள்ளவென்று காலை முதல் இரவு வரை ஒரு பணி பெண் வேலைக்கு அமர்த்தியிருந்தனர். கந்தனுக்கு ஆதிரை வர சில நாட்கள் ஆகக் கூடுமென்று சேகர் phone செய்து சொல்லி வைத்திருந்தார்.
ஆனால் ஆதிரையும் அர்ஜூனும் இருக்கும் இடம் இன்னும் தெரியவில்லை. அவர்களிடமிருந்தும் எந்தத் தகவலுமில்லை. இதனால் வேதனையுற்ற காதம்பரனும், சேகரும் அவர்கள் உயிருடன் இருக்கக் கூடுமென்ற நம்பிக்கையையே இழந்துவிட்டனர்.


"இதற்கு மேலும் அர்ஜூனின் குடும்பத்தில் நாம் சொல்லாமல் இருப்பது சரியாகாது காதம். நாம் நம்ம கஜாவிற்கும், சிவசக்தி அம்மாவிற்கும் phone செய்து விசயத்தைச் சொல்ல வேண்டும்" என்று ஒரு பெருமூச்சுடன் கூறி முடித்தார்.


“முன்பு அம்முவை இழந்தனர். இன்று அர்ஜூனை. ஆதிரையைக் காக்க சென்று அர்ஜூனையும் இழந்துவிட்டோமே சேகர். எவ்வளவு அருமையான பையன் தெரியுமா? அர்ஜூன். அப்படியே ராஜேந்திர ராஜாவைப் போல எளிமையும், அன்பாகப் பேசும் அனைவரிடமும் பாசமும் கொண்டவன். அவன் இனி இல்லை என்பதை நினைக்கக் கூட முடியவில்லை. நாமே அவனை இழக்கக் காரணமாகிவிட்டோமே!” என்று குரல் கம்ம கண்களில் ஈரம் பணிக்க கூறினார் காதம்பரன்.


“ஆமா காதம். எப்படி கஜேந்திரனிடம் சொல்ல போகிறோமென்று தெரியவில்லை. அவனுக்கு ஏற்கனவே அர்ஜூன் இந்தியாவில் நீண்ட நாள் இருப்பது பிடிக்கவில்லை. ஏதோ இந்த முத்தெடுக்கும் தொழிலில் அர்ஜூன் ஆர்வமுடன் இருக்கிறான். சில லாபங்கள் ஈட்டியிருக்கிறான் என்பதை உணர்ந்த பின் அவன் தொழிலில் இனி தடையிடக் கூடாது. என்று விட்டிருந்தான். எங்கு அம்முவைப் போல இவனும் காதல் கல்யாணமென்று விட்டுச் சென்றுவிடக்கூடுமோ என்ற கவலையும் அவனுக்கு. இப்போது இதை எப்படித் தாங்க கூடுமோ!” என்று சேகரும் காதம்பரனும், மாறி மாறிக் கவலையுற்றனர்.


நினைத்தது போல கஜேந்திரன் உடைந்தே போய்விட்டான். சுமித்ரா, "என் மகனும் இனி இல்லையா. எல்லாம் நாம் உங்கள் குடும்ப வழக்கம் மாறி திருமணம் செய்துக் கொண்டதால்தான் என் இரு பிள்ளைகளையும் இழந்துவிட்டேனே!" என்று பொறுக்க முடியாமல் கதறி அழுதாள்.


“அப்படியெல்லாம் எண்ணாதே சுமித்ரா. நாம் இந்தியா சென்று தேடிப் பார்ப்போம். அர்ஜூனுக்கு எதுவும் நடந்திருக்காது" என்று இல்லாத தைரியத்தை உண்டாக்கிக் கொண்டு பேசினார்.


கஜேந்திரனுக்கும் இழப்பின் வேகம் இல்லாமல் இல்லை.' சுமித்ரா சொன்னது சரியாக இருக்கக் கூடுமோ. அப்போதே நம் அப்பா சொன்னதை கேட்டிருக்கலாமோ!’ என்று கலங்கினார். அப்போதுதான் கஜேந்திரனுக்கு அவர் அம்மா, சந்திரகுளிர் குகை பற்றி கூறியது நினைவு வந்தது. ‘இனி அம்மா சொல்வதையாவது கேட்க வேண்டும். அப்பா சொல்லை கேட்காததற்கு எனக்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது.’ என்று மனதுள் அழுதார் கஜேந்திரன்.


உடனே சிவசக்தி பாட்டிக்கு phone செய்தார் கஜேந்திரன். அதற்குள் காதம்பரனும் சேகரும் சிவசக்தியிடம் அர்ஜூன் தொலைந்ததை சொல்லிவிட்டிருந்தனர். சிவசக்தி பாட்டி கவலையாகப் பேசுவதற்கு பதிலாக " அர்ஜுனுக்கு ஒன்றுமாகாது கஜா. கவலைப்படாமல் இந்தியா கிளம்பி இந்திரபிரதேஷ்க்கு சுமித்ராவுடன் வா". என்று தெளிந்த குரலில் பேசினான். உடனே அர்ஜூனின் தாயும் தந்தையும் லண்டனிலிருந்து இந்தியாவிற்குக் கிளம்பினர்.


சேகர் மற்றும் காதம்பரனிடமும் ராஜாவுடன் கிளம்பி இந்திரபிரதேஷ் இருவரும் வருமாறு சிவசக்தி பாட்டி பணித்தார்.


இவ்வளவு நட்பில் இதுவரை சேகர் அந்தக் கிராமத்திற்கு சென்றதில்லை. இதுவே முதல் முறையாக அந்தக் கிராமம் செல்ல அனுமதி என்பதாலும், சிவசக்தி பாட்டியின் கவலையில்லாத குரலிலும், சேகர் மற்றும் காதம்பரனுக்கு குழப்பத்தைத் தந்தது. இருந்தபோதும் , தாமதிக்காமல் சிம்லா கிளம்பினர்.


சேகர், கந்தனுக்கு phone செய்து ஆதிரையைப் பற்றி நடந்த உண்மையைச் சொன்னார். அதனைக் கேட்டதும் கந்தன் நம்பமுடியாமல் கதறி அழுதான். அவனைத் தேற்றுவதற்காக அந்த ஊரின் தலைவருக்கு phone செய்து அந்த ஊரின் டாக்டர் தொலைந்ததை தெளிவாகச் சொல்லி அடுத்துச் செய்வன பற்றி எடுத்துரைத்தார். ஊர் மக்கள் அனைவரும் கந்தனுக்கு ஆருதல் சொல்வதற்காக அவன் வீட்டுக்குச் சென்று பேசிவிட்டுச் சென்றனர். கந்தன் hostal -ல் இருந்து படிப்பதற்கு சேகர் ஊர்த்தலைவரின் உதவியுடன் ஏற்பாடுகள் செய்துவிட்டு காதம்நுடன் flight ஏறினர்.


முதல் முறையாக flight -ஐ பார்த்ததும் ராஜா, “அர் ப்ளன்.. அர் ப்ளன்.. “ என்று துள்ளலுடன் சேகரின் கையினை பிடித்துக் கொண்டு அவனே நடந்து சென்றான். அவனையே கேள்வியாக பார்த்துக் கொண்டிருந்த காதம்பரன், “ ராஜாவை பாரேன். அம்மாவை காணவில்லையென்ற கவலை துளியுமில்லை. மிகவும் வினோதமாகத் தோன்றுகிறது சேகர்" என்று flight –ல் இருக்கையில் அமர்ந்த வண்ணம் சொன்னார்.


“ம்ம்… " என்று ஏதோ யோசித்தவர், பின் "காதம்.. நான் ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும்” என்றார் சேகர்.


“என்னடா மிகவும் பீடிகையாக இருக்கிறது. என்ன விசயம்" என்றார் காதம்பரன்.


“ராஜா, யாருடைய குழந்தையென்று நீ நினைப்பது தவறுடா" என்றார் சேகர்.


“என்ன சொல்ற சேகர். இவன் அர்ஜூனி குழந்தையில்லை என்று சொல்ல போகிறாயா! வாய்ப்பே இல்லை. பார் இவனை. அப்படியே அர்ஜூனை சின்ன வயதில் பார்த்தது போல இல்லை. என்ன சின்ன வயதில் அர்ஜூன் பாட்டியின் பின் சுற்றிக் கொண்டிருந்தான். இவன் அம்மாவின் பின் சுற்றிக் கொண்டிருக்கிறான்.” என்று சிரித்தார் காதம்பரன்.


அந்த சிரிப்பில் சேகர் கலந்து கொள்ளவில்லை.மாறாகத் தீவிரமாக யோசிப்பதாக சேகரின் முகம் காண்பித்தது.


சேகர் உடன் சேர்ந்து நகைக்காதபோதே காதம்பரனின் சிரிப்பு பாதியில் நின்றது. “என்னடா. ஏதோ பெரிய உண்மை பொதிந்துள்ளது போல இருக்கே! சிவசக்தியம்மா நம் வீட்டுக் குழந்தை இருக்கும் என்று சொன்ன போது , அர்ஜூனின் குழந்தையென்றே நான் எண்ணினேன். ஆனால் நீ யோசிப்பதைப் பார்த்தால் அப்படியில்லை போல இருக்கே.” என்றார்.


“ம்ம்… ஆமாம் காதம். அர்ஜூன் எந்தத் தவறும் செய்யாதவன். அதே போல். “ என்று நிறுத்தியவர், “ இப்போது இதைச் சொல்லலாமா? என்று எனக்கு தெரியவில்லைடா" என்றார் சேகர்.


“சேகர். இந்தப் பெண் ஆதிரை யார். " என்று கேள்வியை கேட்டுவிட்டு சேகர் பேசாமல் இருப்பதைப் பார்த்துவிட்டு காதம்பரனே தொடர்ந்தார். "மூன்று வருடத்திற்கு முன்பு அர்ஜூன் அவன் அக்காவுடன் சென்னை வரும் போது, அவனுக்குப் பெண்களின் சகவாசம் அதிகம் இருந்தது. தினம் ஒரு பெண் face book தோழி என்று அவனை வந்து பார்ப்பர். சிலரை அவனும் சென்று பார்ப்பதுண்டு. அம்மு வீட்டைவிட்டுச் சென்ற பின்னே அர்ஜுன் கொஞ்சம் மாறினான். நான் அர்ஜூனின் facebook தோழிகளில் ஒருத்தியாக ஆதிரை இருக்கக் கூடுமென்று எண்ணினேன். அதனால் உண்டான குழந்தை ராஜாவென்று எண்ணினேன். ஆதிரையின் மீது நீ கொண்ட நல்ல அபிப்ராயம் போய்விடக் கூடுமோ என்று வாய்விட்டு உன்னிடம் கேட்க தயக்கமாக இருந்தது. அதனோடு ஆதிரை முன்பு எப்படி இருந்தாலும் இப்போது மிகவும் நல்ல பெண்ணாக தெரிந்தது. அதனாலும் நான் அவளைப் பற்றி வேறேதும் கேட்கவில்லை. ஆனால் நீ என்னிடம் சொல்ல இதைத் தவிர வேறு ரகசியம் இருக்கும் போல இருக்கிறதே!” என்றார்.


“காதம். ஆதிரையைப் பற்றி அப்படி தவறாக எண்ணாதே! பெறாத குழந்தைக்கு கன்னியாக தாயானவள் ஆதிரை. அவள் களங்கமற்ற பால் போன்றவள். ராஜாவின் எதிர்காலத்திற்காக தன் எதிர்காலத்தை அழித்துக் கொண்ட சுயநலமற்ற பெண்.” என்றார் சேகர்.


“சேகர்...” என்று ஆச்சரியமும் ,அதிர்ச்சியும் ஒரு சேரே கத்தினான் காதம்பரன்.


“ஆமாம் காதம். ஆதிரைக்குக் கொடுத்த வாக்குறுதியாலே ராஜாவைப் பற்றிய உண்மையை நான் இதுவரை யாரிடமும் , ஏன் நம்ம கஜாவிடமும் சொல்லவில்லை.” என்றார் சேகர்.


அதுவரை புரியாமல் மாறி மாறி சேகரையும் காதம்பரனையும் பார்த்த ராஜா திடீரென்று "ஹய்யா! டாஜா பத்தி உண்ம…. டாஜா பத்தி உண்ம" என்று கத்தவும்தான் ராஜா அவர்களை கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்தனர்.


அதன்பின் பேச்சு தொடர்வது நல்லதல்ல என்பதிய உணர்ந்த சேகர். காதம்பரனின் செவியில் கிசுகிசுத்தார். காதம்பரன் அதிர்ந்தார்.


"தாத்தா.. டாஜாக்கு...” என்று அவரை இழுத்து அவன் காதுகளில் சொல்லுமாறு சைகை செய்தான் ராஜா. இதனைக் கண்டு சேகரும் காதம்ப்ரனும் காரண பார்வை பார்த்துக் கொண்டனர். சில நிமிடங்கள் அங்கு அமைதி நிலவியது. பின் , ராஜா உறங்கிவிட சேகர் மீண்டும் காதம்பரனிடம் கூறினார்.


“ஆம்… காதம்பரன். ராஜா.. ரிதிகாவின் மகன்." என்றார் சேகர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top