தூரம் போகாதே என் மழை மேகமே!! - 19

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
main-qimg-624c51f7bbaee0b441e15b97c59d36e9-c.jpeg
சில நிமிடங்கள் கடற்கரையில் இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு ஓசையுடன் கூடிய கடலின் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தனர். மீட்பவர்கள் எந்த நேரமும் வரக் கூடும் என்பதால் இருவரும் அவர்களின் வருகையை எதிர் பார்த்துக் கொண்டு காத்திருந்தனர். இருவரின் எதிர் பார்ப்பும் ஒன்றாக இருந்த போதும் இருவரின் மனதிலும் ஆயிரம் கேள்விகள்.


அந்த அமைதியான சூழலை ஆதிரையின் குரல் கலைத்தது. “என்ன நடந்தது சார்..” என்று மெதுவாகக் கேட்டாள்.


அவள் குரலை கேட்டதும் அவள்புரம் திரும்பிய அர்ஜூன், “ம்ம்...” என்று அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான்.’ அவள் நடிப்போ இல்லை பாசாங்கோ செய்யவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்று அவளுக்குத் துளியும் நினைவில்லை. சென்னை சென்றதும் நல்ல மருத்துவ மனைக்கு அவளை அழைத்துச் செல்ல வேண்டும். ‘ என்று எண்ணினான். பின் அவள் தன் பதிலுக்காகக் காத்திருக்கிறாள் என்று உணர்ந்ததும் , அர்ஜூன் பேசலானான். “ சரியாகத் தெரியவில்லை. உனக்கு இந்தக் கடலை பார்த்தால் ஏதேனும் தோன்றுகிறதா!?” என்று கடலை நோக்கி கை காண்பித்துக் கேட்டான் அர்ஜூன்.


கடலைப் பார்த்த ஆதிரையின் உதடுகள் புன்னகித்தது. கண்கள் அகன்றது. "கடல் என் அன்னை. அவள் மடியிலே நான் பிறந்தேன்." என்று அவள் உதடுகள் முணுமுணுத்தது. அவளையே கவனித்துக் கொண்டிருந்த அர்ஜூனால் ஆதிரையின் அவளின் இந்த மாற்றத்தை உணர முடிந்தது. இப்போது இந்தக் கேள்வி கேட்டிருக்கக் கூடாது என்பதை அர்ஜூன் உணர்ந்தான். மேலும் ஆதிரை தன்னிலை மறக்குமுன், “ம்ம். அது சரி… விட்டால் பத்து மாதம் சுமந்து பெற்றவள் என்பாய் என்று நினைக்கிறேன்" என்று பேச்சை மாற்றும் விதமாக சிரித்துக் கொண்டே கேட்டான் அர்ஜூன். தொடர்ந்து “இன்று நிலவு மிகவும் அழகாக இருக்கிறது இல்லை. மாலையிலே நிலவு உதித்துவிட்டது போல இருக்கு.” என்றான் .


அவன் முயற்சி பழிப்பது போல, “ஆமாம் சார். மிகவும் அழகாக இருக்கிறது. “ என்றாள்.


அதுவரை படகினை கவனிக்காமல் இருந்த அர்ஜூன், அப்போதுதான் அவன் வந்த படகை கவனித்தான், அது மெதுவாக நகர்ந்து அவர்கள் இருந்த தீவிலிருந்து விலகி சிறிது தூரம் சென்றது போல இருந்தது. 'ஒருவேளை யாரும் இவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிய முடியவில்லையென்றால் , இரவு அதில்தான் தங்க நேரிடும் , அதனோடு நாளைக் காலை வரை என் கைகளுக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் , நானே படகை சென்னை வரை செலுத்த முடியுமே. படகினை தொலைத்துவிட போகிறேன். இது என்னடா சோதனையென்று' , வேகமாக எழுந்தான் அர்ஜூன்.


திடீரென்று அர்ஜூன் எழுந்ததும், ஆதிரையும் எழுந்து ,” என்னாயிற்று சார். அவர்கள் வந்துவிட்டார்காளா!?” என்று வினாவினாள்.


“இல்லை. என் படகு. நான் வந்த படகினை நான் நங்கு இழுத்துப்பிடித்து கட்டவில்லையென்று நினைக்கிறேன். கொஞ்சம் தீவிலிருந்து விலகியது போல் இருக்கிறது. உன்னை இங்கே விட்டுச் செல்ல எனக்கு விருப்பமில்லை. அதனால் என்னுடன் வா. நாம் இருவரும் சேர்ந்து அந்தப் படகினை இழுத்து கரைக்கு மேல் கொண்டு வந்துவிடலாம். . இந்தப் படகின் அடியில் வண்டிகளில் இருப்பது போல சக்கரங்கள் மடக்கப் பட்ட நிலையில் இருக்கும் , அதனை open செய்தால் , அதனைக் கரைக்கு மேல் தள்ள முடியும், ஒருவேளை என் கப்பல் கேப்டன் வருவதற்குத் தாமதமானால் , அதில்தான் நாம் இருவரும் காத்திருக்க நேரிடும். உடனே வா" என்று அவளை கையுடன் இழுத்துக் கொண்டு அந்தப் படகினை நோக்கி நகர்ந்தான்.


படகினை கண்டதும் ஆதிரைக்குச் சீக்கிரமாக வீட்டுக்குப் போய்விடலாம் என்ற நம்பிக்கை வந்தது. ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன? அப்படிதான் ஆதிரையின் எண்ணமும் பொடிப்பொடியாகி போனது.


“படகுதான் இருக்கிறதே சார். உங்களுக்குப் படகு ஓட்டத் தெரியுமென்றால் நாம் கிளம்பிவிடலாமே!” என்று துள்ளலுடன் கூறினாள் ஆதிரை.


அவளைக் கோபமுடன் முறைத்த அர்ஜூன் , பின் முகம் மாற்றி "கிளம்பலாம் கிளம்பலாம் , முதலில் எனக்கு உதவி செய்" என்றான் அர்ஜூன்.


அவனது குரலில் , ‘இப்போது நான் என்ன தப்பு செய்தேன். எதற்கு இந்தக் கடுவன் பூனை என்னை முறைக்கிறது' என்று எண்ணியவள் அர்ஜூன் சொன்னபடியே செய்யவும் செய்தாள்.


அர்ஜூன் கடல் நீரிலும் , அலையின் வலிமையிலும் மாறுதலை உணர்ந்தான், சூரியனும் கிட்டத்தட்ட மறைந்துவிட்ட நிலையில் , இந்தப் படகினை எப்படியும் மீட்டாக வேண்டும். வேறு வழியில்லையென்பதை அர்ஜூன் நங்கு உணர்ந்தான். முயன்று படகினை கடல் நீரிலிருந்து கடற்கரைக்கு சற்று உள்ளாக நங்கு நடர்த்துவிட்டான். இவ்வாறு செய்து கொண்டிருந்த போதும் , ஆதிரையின் மீதிருக்கும் கவனத்தையும் போக்கினான் இல்லை. ஒருவாறாகப் படகினை மீட்டவிட்ட நிம்மதியில் ஆதிரையை நோக்கி, “ரொம்ப thanks” என்றான்.


அவளும் படகினை தள்ளியவதால், மூச்சு வாங்கிக் கொண்டே , “ பரவாயில்லை சார்" என்றாள்.


“இன்று பௌர்ணமி போலத் தெரிகிறது , கடல் கொஞ்சம் கரையைக் கடந்து உள்னோக்கி வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். நாம் இன்னும் கொஞ்சம் உள் நோக்கி இந்தப் படகை நகர்த்த வேண்டும். ஒருவேளை யாரும் இன்று வர முடியவில்லையென்றால், நாளைக் காலை நாமே இந்தப் படகில் கிளம்பிவிடலாம். அதனோடு , நான் படகு ஓட்டுவதற்கு அதிக பழக்கமற்றவன், நாம் இப்போது கிளம்பினால் , கண்டிப்பாக இரவில் கடலில் தொலைந்து போக வாய்ப்பிருக்கிறது, அதனால் நாம் இங்கே இந்தப் படகில்தான் இன்று தங்க நேரும் என்று நினைக்கிறேன். மற்றும் உன் குழந்தையை பற்றி கவலைப்பட வேண்டாம். அவன் பாதுகாப்பாகவும் சேட்டைச் செய்யாமலும் இருப்பதாக அங்கிள் whats app -ல் photos உடன் message அனுப்பியிருக்கிறார்.” என்றுவிட்டு அவளிடம் phone -ஐ கொடுத்தான்.


அர்ஜூன் சொல்வதை விழி விரித்து பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த ஆதிரையின் தலை முதல் கால் வரை அச்சத்தினால் உறையத் தொடங்கியது. அதனை உணர்ந்ததாலோ என்னமோ அர்ஜூன் ராஜாவைப் பற்றி பேசி அவளது பயத்தை குறைக்க முயன்றான். அதன் பலனாக ஆதிரை ராஜா சேகர் மற்றும் காதம்பரனுடன் இருப்பது போல் சில photos இருந்தது. அதனைப் பார்த்து ஆதிரை பெருமூச்சுவிட்டாள்.


பின்,”உங்க கேப்டன் , வந்துவிட்டால் பரவாயில்லை சார். எனக்கு இங்கே கொஞ்சம் பயமாக இருக்கிறது சார். அதனோடு...” என்று பேச்சினை இழுத்தாள் ஆதிரை.


அவளை உணர்ந்த அர்ஜூன் “அதனோடு… என்னுடன் தனியாக தங்க நேரிவிடும் என்று கவலையா!” என்று அவளை முறைத்துக் கொண்டே கேட்டான். “ இங்கே பார். நான் ம்ம்.. என்றால் என் மடியில் சாய பல பெண்கள் இருக்கிறார்கள். இப்படி இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளும் ஈனப் புத்தியுள்ள ஆண் நானில்லை. உன்னைப் பார்த்தால் ஏதோ ஆண்களினால் மிகவும் துன்புற்றவள் போலத் தெரிகிறது. அதனால் கடைசிமுறையாக இது போல் எண்ணியதற்கு உன்னை மன்னிக்கிறேன். இது போல் இனி ஒருமுறை நினைத்தாயென்றாலும் என்னால் உன்னை மன்னிக்க முடியாது. முதலில் இந்த video – ஐ பார். “ என்று ஆதிரை theme park -லிருந்து கடலில் இறங்கி மறைந்த video clip – ஐ phone -ல் இருந்து காட்டினான். அதனைப் பார்த்த ஆதிரை, “நான்… நானேவா சார் இது" என்று ஆச்சரியமுடன் கேட்டாள்.


“ஆமாம். நீ தான். நீ ஏன் இப்படிச் செய்தாய் என்று எங்க யாருக்கும் புரியவில்லை. ஆனால் காதம்பரன் அங்கிள்தான் உன்னிடம் இது பற்றி வீடு வரும் வரை சொல்ல வேண்டாம் என்றார். ஏனென்று தெரியவில்லை. நீயானால் என்னை உன் சந்தேக கண்ணால் பார்த்து உயிரை வாங்குகிறாய். அதனோடு நேற்றும் இப்படிதான் கடலில் குதிக்கச் சென்றாய். அப்போது நல்ல வேளை நான் அருகிலிருந்தேன், அதனால் உன்னை மீட்டு முதலுதவி செய்தேன். இவை எதுவும் தெரியாமல் என்னைப் பற்றி உன் மங்கிப் போன மூளையை வைத்துக் கொண்டு தப்பு தப்பாக கற்பனை செய்யாதே! நான் உன்னை சேகர் அங்கிளிடம் சேர்க்கும் வரை, இதோ இந்த உன் கையை தவிர, வேறேங்கும் தொட மாட்டேன் போதுமா!” என்று ஆவேசமாகக் கூறினான் அர்ஜூன்.


அவனது சூழ்நிலையை புரிந்து கொண்ட ஆதிரை, தனக்குள் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கவலையுற்றாள். பின் "சாரி சார். நீங்கச் சொல்வது சரிதான். எனக்கு நல்லது செய்வது போல் பேசி என்னிடம் தவறாக நடக்க முயன்றவர்கள் அதிகம் பேர். நல்ல வேளையாக என்னை தற்காத்துக் கொள்ளுமளவுக்கு என்னை என் அண்ணன் பயிற்சி கொடுத்திருந்ததால் என்னை அப்படிப்பட்ட மோசமானவர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முடிந்தது. சூடுபட்ட பூனை நெருப்பைக் கண்டு அஞ்சும் என்பது போல யாரையும் எளிதில் நம்ப முடிவதில்லை. அதனோடு , இன்று காலை நீங்க பேசியவிதமும் கொஞ்சம் உறுத்த இவ்வாரெல்லாம் பேசிவிட்டேன்" என்று உண்மையான வருத்தம் குரலில் தெரிய எங்கோ பார்த்தபடி ஆதிரை பேசினாள்.


அவளை புரிந்து கொண்ட அர்ஜூன், “கவலை வேண்டாம் ஆதிரை. நான் இருக்கும் வரை உனக்கு எதுவும் நேராது" என்றான்.


அவனது குரல் எங்கோ கேட்பது போல உணர்ந்த ஆதிரை அவனது வார்த்தைகளின் உண்மை அறிந்தபின் “என்ன சார் சொன்னீங்க..” என்று அவன்புரம் திரும்பிக் கேட்டாள்.


அதற்கு புன்னகித்த அர்ஜூன், “ ஒன்னுமில்ல. ஆதிரை. நான் கேப்டனுக்கு phone செய்றேன்" என்றான் .


ஆதிரையின் பதிலுக்கு காத்திராமல் , அவன் phone செய்ய முயன்றான். ஆனால் signal முழுதும் போய்விட்டது. அப்போதுதான் அந்தச் சப்தம் கேட்டது. அந்தத் தீவே சந்திரனின் ஓளியில் மின்னியது. மெதுவாக அவர்கள் இருந்த தீவு தண்ணீருக்குள் மூழ்கியது. இதனைத் துளியும் எதிர் பார்த்திராத ஆதிரையும் அர்ஜூனும் விக்கித்து போயினர். என்ன செய்வதென்று புரியாமல் நின்றது ஒரு சில வினாடிகளே!


“ஆதிரை.. சீக்கிரம் வா படகில் ஏறு. சீக்கிரம் சீக்கிரம்" என்றான் அர்ஜூன். இருவரும் விரைந்து படகினில் ஏரிக் கொண்டனர். ஆனால் விந்தையாக அந்தத் தீவின் நிலப்பரப்பிலிருந்த அனைத்தும் கடல் நீரில் முழுகக் கூடுமென்று அவர்கள் எண்ணவில்லை.


ஆம். அவர்கள் இருந்த படகும் கடல் நீரின் மேல் பரப்பில் மிதப்பதற்குப் பதிலாக அந்தத் தீவின் நிலப்பரப்பிலே ஒட்டியபடி நீரினுள் மூழ்கியது. அந்தத் தீவே ஒரு காற்றின் குமிழ் நீரில் இருப்பது போல காற்றால் மூடப்பட்டது. அவர்களும் அந்தத் தீவின் பாகமாக மாறி நீரினுள் மூழ்கிப் போய் அந்தத் தீவின் வன பகுதியை போலவே அந்த காற்றுகுமிழால் பாதுகாக்கப்பட்டனர்.


ஆதிரையும் , அர்ஜூனும் இந்த விந்தையான இயற்கைக்கு மாறான நிகழ்வைப் பயத்துடன் ஆச்சரியம் தோன்ற பார்த்தனர். கடல் நீரினுள் மூழ்கியபடியே, செய்வதறியாது, மேல் நோக்கி கடல் நீரின் மேற்பரப்பையும் , கலங்கியபடி தெரிந்த அந்தச் சந்திரனையும் கண்டனர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top