தூரம் போகாதே என் மழை மேகமே!! -16

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 16

“ஆதிமா. அது தான் இங்கே இன்று தங்கியிருந்து போவதாக முடிவெடுத்துவிட்டாகியாயிற்று. அதனால் , ராஜா எழுந்ததும் , நீயும் வா, இந்த theme park -ஐ ஒரு சுற்று சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்.” என்றார் சேகர்.

மனசு லேசானதால், “ சரிங்க அங்கிள்" என்றவள், அவளும் கையோடு கொண்டுவந்திருந்த சில ரொட்டி துண்டுகளை அனைவருக்கும் பகிர்ந்து சாப்பிட்டாள். அனைவரும் சாப்பிட்ட பிறகும் சில ரொட்டி துண்டுகள் மீதமானது. 'ஆமாம். அந்தக் கடுவன் பூனைக்கும் சேர்த்தே இந்திரா enterprice – ல் இருந்து ரொட்டிகளைக் கேட்டு கொண்டு வந்தேன். அவனும் சாப்பிட்டிருக்க மாட்டாந்தானே!’ என்று இரக்கம் கொண்டது அவள் மனது. மீண்டும் 'அவன் சாப்பிட்டால் என்ன சாப்பிட வில்லையென்றால் எனக்கென்ன' என்று தோளை குலுக்கினாள் ஆதிரை.

சில பல நிமிடங்கள் மெதுவாக நகர்ந்தது. ராஜாவை ஒரு மரத்தினடியில் ஒரு விரிப்பினை விரித்துப் படுக்க வைத்திருந்தாள் ஆதிரை. ஒரு கை ராஜாவின் மீதும் , மறுக்கை phone மிதுமாக அமர்ந்திருந்தாள். அப்போது யாரோ அவள் பெயரை சொல்லி அழைப்பது போல் உணர்ந்தாள்.

“ஆதிரை…" அசரீரி.

அங்கிள்களாக இருக்கும் என்று நினைத்தவள், அவர்களும் ஆளுக்கொருபுரமாக வெயிலில் அலைவதை விடுத்து அந்த மர நிழலில் உணவருந்தியதும் ஓய்வாகச் சாய்ந்து படுத்திருந்தனர். அதனால் அவர்கள் இல்லை. அதுவும் ஆதிரையை அழைப்பது ஒரு பெண்ணின் குரல். குழப்பத்துடன் அங்கும் இங்கும் பார்த்தவள், அவளை நோக்கி அழைப்பது யாருமில்லை என உணர்ந்தாள். 'யாருமில்லாமல் ஏன் எனக்கு இப்படியெல்லாம் தோன்றுகிறது' என்று யோசித்தவள் அவளும் அந்த அருகிலிருந்த சிறு கல்லின் மீது சாய்ந்து phone -ல் ஒரு கதையினை தேடி படித்துக் கொண்டிருந்தாள். ராஜா எழுந்ததும் கொஞ்சம் இந்த இடத்தைச் சுற்றி பார்க்கலாம். அந்த ரங்கராட்டினங்களையெல்லாம் மதுரை திருவிழாக்களில் அண்ணனோடு பார்த்தது. ஆனால் மதுரையை விட இங்கு இன்னும் எவ்வளவு உயரமாக இருக்கிறது என்று வியந்து பார்த்த வண்ணம் மீண்டும் கதையில் ஆழ்ந்தாள்.

அந்த theme park, beach உடன் இணைந்த வண்ணம் அமைந்திருந்தது. ஆதிரையும் சேகர் மற்றும் காதம்பரனும் இருந்தது கடற்கரைக்கு மிக அருகில்தான். அலையின் ஓசையும் மெல்ல கேட்டுக் கொண்டு தான் இருந்தது. இப்போது இரண்டாம் முறையாக ஆதிரையை யாரு அழைத்தார்கள்.

“ஆதிரை..!!”

விழுக்கென்று நிமிர்ந்தவள், 'யாரு தன் காதின் மிக அருகில் தன் பெயரை உச்சரிக்கிறார்கள்' என்றுணர்ந்த ஆதிரை, அவள் அருகில் யாரேனும் இருக்கிறார்களா? என நோக்கினாள். யாருமற்ற அக்கம்பக்கத்தைப் பார்த்த சில வினாடிகளில் ஆதிரையின் உடலெல்லாம் வியர்க்க ஆரம்பித்தது. உள்ளங்கை உள்ளங்கால்கள் சில்லிட்டது. அருகிலிருந்த bottle -ல் இருந்து தண்ணீரை எடுத்து அருந்தியவள். மீண்டும் கதையினை படிக்க முயன்றாள். ஆனால் பயனில்லை. அவளுள் அந்த அசரீரி மீண்டும் மீண்டும் ஒளித்துக் கொண்டே இருந்தது.

“ஆதிரை…!!”

“ஆதிரை.. நான் இங்கே இருக்கிறேன். இங்கே வா..” என்று மீண்டும் ஒரு குரல் ஒலித்தது. அதன் பின் ஆதிரை தன் வசம் இழந்தாள்.
கையிலிருந்த phone நழுவி கீழே விழுந்தது. அவளையும் அறியாமல் , எழுந்து நின்றவள் , அவள் மீது போட்டிருந்த துப்பட்டா விழுவதையும் உணர்ந்தவளாக இல்லை. மெதுவாக அலையோசையை நோக்கி நடக்கலானாள்.

“ஆதிரை..” என்று மீண்டும் மீண்டும் அசரீரி அவளின் காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது. கடலினை அடைந்ததும் ஆதிரையின் கால்கள் கடலின் நீரில் பதிந்தது. ஆதிரையின் விழிகள் பரந்த அந்தக் கடலையே கண்டது. சில வினாடிகள் அப்படியே கடல் கரையில் நின்ற ஆதிரை. கடலை நோக்கி நடக்கலானாள்.

கடல் அலைகள் அவளை வரவேற்பது போல தலையசைத்து அவள் உள் நோக்கி வருவதற்கு வழிவகை செய்தது. அவளையும் அறியாத ஒரு ஈர்ப்பு விசை அவளை முன்னேற்றிச் சென்றது. வெயிலின் தாக்கத்தால் அதிகம் யாருமில்லா அந்த theme park – ன் beach -ல் நடந்து சென்ற ஆதிரை கடல் நீரில் கால்கள், இடுப்பு, என அவள் உடல் முழுதுமே மூழ்கி கடைசியில் மறைந்தே போய்விட்டாள்!

ஆதிரையின் இந்த நிலையை மர நிழலில் படுத்திருந்த யாருமே அறிந்திருக்கவில்லை.

சில நிமிடங்களுக்குப் பின் தூக்கத்திலிருந்து எழுந்த ராஜா தன் ஆசை அம்மாவைக் காணாமல் மீண்டும் அழுக ஆரம்பித்தான். அவன் அழு குரலிலே விழித்த சேகரும் , காதம்பரனும் ஆதிரையைக் காணாமல் இங்கும் அங்கும் பார்த்தனர். ஆதிரையின் phone -ம் அவளின் துப்பட்டாவும் கீழே விழுந்திருப்பதைப் பார்த்து விதிர்விதிர்த்து போயினர். அவளுக்கு ஏதேனும் நேர்ந்திருக்குமோ! என அஞ்சி இங்கும் அங்கும் ராஜாவைத் தோளின் மீது தூக்கிக் கொண்டு தேடலாயினர்.

சில நிமிடங்கள் அழுத ராஜா பின் அமைதி அடைந்து கடற்கரையை நோக்கி கைகாட்டினான். சேகரும் , காதம்பரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு விரைந்து கடலை நோக்கி விரைந்து நடந்தனர். அங்கும் யாருமில்லை. ராஜா மீண்டும் கடலை நோக்கி கைகாட்டி, “அம்மா..” எனவும் சேகரும் குழப்பமடைந்தனர்.

அர்ஜூனுக்கு உடனே காதம்பரன் phone செய்தார். இங்கு இருக்கும் நிலையை உடனடியாக எடுத்துச் சொன்னதும் அர்ஜூன் சலிப்புற்று, “ இந்தப் பெண்ணிற்கு பைத்தியமா? மீண்டும் மீண்டும் கடலில் முழுக! இல்லை தற்கொலையென்னமா! என் குழந்தை என் குழந்தை என்று பிதற்றும் அவளுக்கு இந்தக் குழந்தை மீது கொஞ்சமும் அக்கறையில்லை" என்று தன் எண்ணப் போக்கை எடுத்துரைத்தான்.

"அர்ஜூன், அவள் உண்மையில் கடலில் குதித்தாளா என்று தெரியவில்லை. ஆனால் ராஜா கடலை நோக்கியே கை காட்டுகிறான். நாம் இந்தப் பீச்சின் அருகிலிருக்கும் cc camera -ல பார்க்க முடியுமா! “ குரல் தாழ்ந்து கேட்டார் காதம்பரன்.

அவரின் குரலில், ஏற்கனவே குழப்பமடைந்திருக்கும் அவர்களை நாமும், துன்புறுத்த கூடாதென்று,” சரி.. வருகிறேன். நீங்க theme park camera அறைக்கு கேட்டுக் கொண்டு வந்துவிடுங்க " என்று விட்டு அவசரமாகக் கிளம்பினான்.

அதன் பின் சேகரும் , காதம்பரனும், camera அறைக்கு வந்தனர். என்ன மாயமோ ராஜா அதன் பின் அழவில்லை. அவர்களுக்குத் தொந்தரவும் செய்யாமல், நடப்பவற்றைக் கவனிக்கும் சிறு பிள்ளையானான். camera -ல் அவன் அம்மாவைக் கண்டதும், “அம்மா! அம்மா!” என கை தட்டிச் சிரித்து குதித்தான்.

ஆனால் ஆதிரை கடலை நோக்கிச் சென்று மூழ்கியதைப் பார்த்து, சேகரும், காதம்பரனும் அச்சத்தில் ஆழ்ந்தனர். அர்ஜூனும் ஏதோ விளையாட்டு செய்துக் கொண்டிருக்கிறாள் என்றுதான் எண்ணினான். ஆனால் கடலில் மூழ்கும் அளவுக்கு என்ன நிகழ்ந்தது. அர்ஜூன் அதிர்ச்சியின் உச்சியில் இருந்தான். அந்த நாளின் camera print முழுதையும் அவனுடை laptop – ல் ஏற்றிக் கொண்டவன், 100 – ல் ஒரு பங்கு வேறு ஏதும் குறிப்பு கிடைக்கக் கூடுமோ! என்று அந்த video clip – காளை ஆராய எண்ணினான்.

சேகர், “அச்சோ! ஊருக்கு கிளம்புகிறேன் என்றவளை இன்று இருந்துவிட்டு நாளைப் போ என்று நானே அவள் இழப்பு காரணமாகிவிட்டேனே!. இவன்... இந்த குழந்தைக்கு துணையற்று ஆக்கிவிட்டேனே!” எனப் புலம்பலானார்.

அவரின் குரலில் திரும்பிய அர்ஜூன், “ அங்கிள் கவலை படாதீர்கள். அவள் போனவிதத்தை பார்த்தால், ஒரு சிறு பயமும் தெரியவில்லை. கடலில் மூழ்கித் தத்தளிக்கவும் இல்லை. எல்லாம் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. நா நம்ம ship captan - யிடம், பேசி இந்த எல்லைக்குள்ள சில mini boats அனுப்ப சொல்றேன். நாம, கடலோரங்கள் தேடி பார்ப்போம். ஒரு வேளை அவள் உள் நீச்சல் கொண்டு வேறு கரையில் ஒதுங்கியிருக்கலாம். இல்லை என்றாலும் , நமக்கு ஏதேனும் தகவல் கிடைக்கக் கூடும். எப்படியும் கண்டு பிடித்துவிடலாம். இப்போது நீங்க தயாரா இருங்க , நா குழந்தையை பார்த்துக் கொள்ள உடனடியாக ஏதேனும் ஏற்பாடு செய்கிறேன். நாம் எல்லோருமாகத் தேடினால் , விரைவில் அவளை மீட்டுவிடலாம்" என்றான். இவ்வாறு அவர்களுக்கு ஆதரவு கூறியவன், ‘ உயிருடன் இருக்க வேண்டுமே! மனமே தவறுதலாக ஏதும் நினைக்காதே.!! இல்லை.. இல்லை!. அப்படி ஏதும் நடக்காது. கண்டு பிடித்தாக வேண்டும்' என்று அவனுள் ஏற்பட்ட இனம் புரியாத தவிப்புடன் அவனுக்கு அவனே தைரியம் சொன்னான்.

அர்ஜூன் சொன்ன படி , ராஜாவை அழைத்துச் செல்ல , ஒரு பணிப்பெண் ECR -ல் இருந்தே வந்தாள். "குழந்தையை நா பாத்துக்கிறேன் ஐயா!. நீங்க எனக்கு எப்போ phone பண்ரீங்களோ! அப்போ இவன கூட்டினு வந்துட்றேன்" என சொல்லிக் கொண்டும் கிளம்பினாள். ராஜாவும் அவனுடன் ஒரு பொம்மை காருடன் சேட்டை எதுவும் செய்யாமல் கிளம்பினான்.

அர்ஜூன் சொன்னபடி அங்கே இரண்டு mini boat ஓட்டுநருடன் வந்தது. "அங்கிள் நீங்க இருவரும் அதில் சென்று, அந்த பக்கம் தேடுங்க. நான் இதில், இந்த பக்கம் செல்கிறேன். ஏதேனும் தகவல் கிடைத்தால், உடனே தகவல் சொல்லுங்க. “ என்றுவிட்டு, “தம்பி பார்த்து போக வேண்டும். வயதானவர்கள். அடிக்கடி கடல் பயணமும் பழக்கமற்றவர்கள். சரியா? முதலுதவிக்கு தேவையானவற்றை இந்தப் படகில் இருக்கிறதுதானே!. படகுக்குத் தேவையான எரிபொருளும் சரியாக இருக்கிறது தானே" என்று அனைத்தையும் சரிபார்த்துக் கொண்டு, அவனும் ஒரு boat -ல் ஏறிக் கொண்டான்.

முதலில் சேகர் மற்றும் காதம்பரனின் படகே நகர்ந்தது. அந்தச் சமயம், அர்ஜூனின் படகு ஓட்டுநருக்கு ஒரு phone வந்தது. Phone – ல் பேசுவதற்காகக் காத்திருந்த அர்ஜூன் தன் கைக்கடிகாரத்தை பார்த்தான். "என்னப்பா நேரமாகுமா?” என்று கேட்டான்.

“இல்ல சார். என் மனைவிக்குப் பிரசவ வலியில் hospital – ல்ல சேர்த்திருக்காங்க. கொஞ்சம். நான் உடனே கிளம்ப வேண்டும். என்று தன் கைகளைப் பிசைந்த வண்ணம் நின்றான்" அந்த ஓட்டுநர்.

நெற்றி பொட்டில் கையை வைத்தவன், சில வினாடிகளில், சரி நீ கிளம்பு, அருகில் எங்கே நம்ம கப்பல் இருக்கு ? அங்கே யாரும் back up இருக்காங்களா! “ என்று கேட்டான்.

“ஆன்.. இருக்கான் சார். மூர்த்தி இருக்கான் சார். நான் phone பண்ணி சொன்னா, உடனே ready ஆகிடுவான். “ என்றான் , கிளம்பிவிடும் ஆர்வத்தில்.

"சரி சரி , விடு . நா நம்ம கப்பல் வரை போய்கிறேன். அங்கிருந்து அவனை அழைத்துக் கொள்கிறேன். நீ கிளம்பு. நானே, நம்ம captan- ட்ட பேசிக்கிறேன்" என்றான் அர்ஜூன்.

வாயெல்லாம் பல்லாக, “ ரொம்ப நன்றி சார்.” ஒரு அடி திரும்பி எடுத்து வைத்தவன், பின் சட்டென திரும்பி, “ நேரம் நல்லதாக அமையும். கவலை வேண்டாம். நீங்கள் விரும்புவது நலமுடன் இருக்கிறது. நீங்கள் தேடி போவது உங்களுக்கு விரைவில் உங்களுக்குக் கிடைக்கும். அதில் ஐயம் இல்லை" என்று திடீரென்று தூய தமிழில் பேசிவிட்டு, ஒரு நொடியும் யோசிக்காமல் அங்கிருந்து கிளம்பினான்.

விசித்திரமாக அவனை ஒரு வினாடி நோக்கிய அர்ஜூன், கடற்கரையிலிருந்த படகில் ஏறி , தானே இயக்கினான். ஏதோ வேடிக்கையாகக் படகு ஓட்ட கற்றது, இன்று இப்படி உண்மையில் பயன் படுமென்று அவன் எண்ணவில்லை. படகினை ஓட்டிய அர்ஜூன், ஒரு பெருமூச்சுடன் , அங்கும் இங்கும் . கடல் நீரையும் , அவன் சென்று கொண்டிருந்த பாதையின் கரைகளையினை ஒரு பைனாக்குளர் மூலம் ஆராய்ந்தும் , அவனுடைய கப்பல் நோக்கி மெதுவாகச் படகினை செலுத்தினான்.
 

banumathi jayaraman

Well-Known Member
என்னம்மா ஆதிரை எங்கே போனாய்?
சும்மா இருந்த பெண்ணைக்
கடலுக்கு அழைத்தது யாரு?
ஆதிரையின் அம்மாவா?

இதோடு இரண்டாவது தடவை
யாரோ கூப்பிட்டு ஆதி கடலுக்குள்
போகிறாள்

அர்ஜுனின் மலைக் கிராமத்துக்கு
ஆதிரை போவதில் அவளோட
அம்மாவுக்கு விருப்பம் இல்லையா?
அதனால அவளைத் தடுக்குறாங்களா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top