தூரம் போகாதே என் மழை மேகமே!! -15

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 15
69e9fb367db476a4bdee39ea645d3a6d--tamil-girls-indian-art.jpg
'என் கண்ணா! என் அண்ணனுக்கும் மேலான துணை நீதானடா!’ என்று தாய்மையின் தாபத்தில் , தன் மீது உறங்கிக் கொண்டிருந்த குழந்தை ராஜாவின் தலை முடியை லேசாகக் கோதியபடி பல நிமிடங்கள் அமர்ந்திருந்தாள்.

அப்போது , “ என்னமா ஆதிரை. எப்போதோ வரச் சொன்னேன். இவ்வளவு தாமதமாகவா வருவது. ஒரு மணி நேரத்திலே உன்னைக் காணாமல் ராஜா தவித்துப் போனான். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அர்ஜூனுக்கு phone செய்தால் இதோ கிளம்பிவிட்டோம் என்றான். பார்த்தால் 2 மணி நேரம் கழித்து இருவரும் வருகிறீர்கள். " என சலித்துக் கொண்டார் சேகர்.

“என்ன! “ என்று ஒன்றும் புரிபடாமல் அர்ஜூனை திரும்பிப் பார்த்தால் ஆதிரை. தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் " என்னைப் பார்த்தால் , நான் என்ன செய்ய முடியும்? கதவைத் தட்டியவுடன் திறந்து, உடனே என்னுடன் கிளம்பியிருந்தால் விரைவில் இங்கே வந்திருக்கலாம்" என்றான் அர்ஜூன்.

'அவன் சொல்வதும் உண்மைதானே. அவனும் எவ்வளவு நேரம் கதவை தட்டிக் கொண்டு நின்றானோ!’ உள்ளூர அவனின் தரப்பு நியாயம் உணர்ந்தாள் ஆதிரை.

“ம்ம். சரிங்க அங்கிள். ஆனால் ஏன் என்னிடம் சொல்லாமல் ராஜாவை இவ்வளவு தூரம் அழைத்து வந்தீங்க. அதனோடு அவனுக்கு எதுவும் சாப்பிட கொடுக்கவில்லையா? பசியோடு இருந்திருப்பான் போலிருக்கு. இது வரை அவன் இவ்வளவு insecure ஆக உணர்ந்ததில்லை. எப்படி என்னிடம் வந்து ஒட்டிக் கொண்டான் பாருங்க. தானாக சாப்பிடக் கூடியவன்,யாரோ அவனை என்னிடம் பிரித்துவிட போவது போல் என் கையை விடவேயில்லை. தூங்கும் போதும் கூட.. இங்கே பாருங்கள்" என்று ராஜாவின் கையை காட்டினாள்.

“அதில்லை ஆதிமா.. சாப்பிட எது கொடுத்தும் ராஜா சாப்பிட மறுத்துவிட்டான். ஏதோ இந்த car section -ல் உண்மையான காரில் இருப்பது போல அவனை அமரவைத்து அவனே ஓட்டுவது போல Remote control மூலமாகச் சிறிது நேரம் சமாளித்தோம்." என்றார் சேகர்.

ராஜா எப்படித் தவித்திருப்பான் என்பதை உணர்ந்த ஆதிரை"என்ன இருந்தாலும், நீங்க என்னைக் கேட்காமல் இவ்வளவு தூரம் அழைத்து வந்தது சரியாகாது அங்கிள்" என்றாள் கொஞ்சம் காரமான குரலுடன்.

"நான் உனக்கு phone செய்யலாமென்றால் அது தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதென்றே வந்து கொண்டிருந்தது. ராஜாவும் நான் கார் ஓட்டுரேனென்று ஒரே அடம். சரி காதமிடம் உன்னைக் கேட்டு சொல்லச் சொன்னேன். உன்னிடம் கேட்டதாக காதம் சொன்னானே அம்மா. உனக்கு எதுவும் தெரியாதா நான் ராஜாவை அழைத்துவருவது.” என்றார் சேகர்.

ஆதிரை எதுவும் பேசுமுன்பே, அர்ஜூன் "அங்கிள், அவர் என்னிடம் சொன்னார். நான் தான் குழந்தைக்குப் பொழுது போக்காக இருக்கட்டுமே என்று சொன்னேன். அப்போது ஆதிரை அங்கில்லை. அவளது அறையிலிருந்தாள். அவளிடம் சொல்லி அழைத்து வருவதற்குள் இவையெல்லாம் அறங்கேறிவிட்டது" என்றான் .

அவனை எரித்துவிடுபவள் போல பார்த்த ஆதிரை அவனைத் தவிர்த்து, “அங்கிள் என்னுடைய முடிவுகள் முடிவெடுக்க எனக்குத் தெரியும். எனக்காக யோசித்து யாரும் இனி என் விஷயத்திலும் சரி என் ராஜா விஷயத்திலும் சரி முடிவெடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது அங்கிள். இது சரி படுமென்று எனக்குத் தெரியவில்லை. நான் ஊர் கிளம்புகிறேன் எனக்கு இந்த வேலை வேண்டாம். நான் அரசாங்கத்திற்கு ஏற்கனவே email அனுப்பியிருக்கிறேன். ஒருவேளை அரசாங்க முடிவு எனக்குச் சாதகமாக வரவில்லையென்றால் , நான் தனியார் மருத்துவமனை எதிலாவது பணிக்கு apply பண்ணிக்கிறேன். என்ன மன்னிச்சிடுங்க அங்கிள். இவர், இவரின் ஊருக்கு நான் செல்லுமுன்னரே , என் விஷயத்தில் தலையிடுகிறார். இன்னும் அங்கே சென்றேனென்றால் அது எனக்கும் நல்லதல்ல என் ராஜாவுக்கும் நல்லதாக இருக்காது." என்று அர்ஜூனை கை காட்டிச் சொன்னவள் தொடர்ந்து, "அடுத்த train எப்போது என்று பார்க்க வேண்டும்" என்று கோபம் குறையாமல் பேசிவிட்டு, இனி இது குறித்து பேசுவதற்கு எதுவுமில்லை என்பது போல், வேலுருக்கு அடுத்த train எப்போது என்று தன் phone -ல் பார்க்கச் செய்தாள் ஆதிரை.

அடைமழை பெய்ந்து ஓய்ந்தது போல, ஆதிரையின் தொடர்ந்த ஆவேசம் நின்றதும் , அங்கே சில நிமிடங்கள் அமைதி நிலவியது. ஏதோ பேச வாயெடுத்த சேகரின் கையை பற்றி காதம்பரன் நிறுத்தினார். அவர்கள் இருவரும் ஆதிரையின் தீவிரத்தை முழுதுமாக உணர்ந்தனர்.

ஆதிரையின் இந்த அந்நியாய குற்றாசாட்டை அர்ஜூன் பதில் பேசாமல் , கை முஷ்டி மடங்க அவளை வெறித்தான். பின் அது குறித்து எதுவும் பேசாமல், காதம்பரனை பார்த்து , “அங்கிள் நான் Marine Manager -ஐ பார்த்துவிட்டு வருகிறேன். அதற்காகத்தான் இங்கே இவ்வளவு தூரம் வந்தது. எனக்கு இனி ஒரு நிமிடம் கூட நேரத்தை வீணாக்க முடியாது. யாரோ எப்படியோ போகட்டும். நான் வருகிறேன்" என்று அலட்சியமாகப் பேசிவிட்டு அங்கிருந்து விலகிச் சென்றான்.

அவன் குரல் கேட்ட ஆதிரை வெடுக்கன்று முகத்தைத் திருப்பிக்கொண்டு, ‘இதற்கு ஒன்றும் குறையிருப்பதாக தெரியவில்லை. கடுவன் பூனை என்று நினைத்தது தவறு. இது காட்டு பூனை. இங்கிதமற்ற காட்டு பூனை' என்று மனதினுள் தூற்றி தீர்த்தாள்.
அர்ஜூனும் ஆதிரையும் ஆளுக்கொரு பக்கமாக முகத்தை திருப்பிக் கொள்ள காதம்பரனும் , சேகரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பின் ஆதிரைக்கு அருகில் இருவரும் அமர்ந்தனர்.

அவர்களை பொருட்படத்தாமல் , ஆதிரை train ஐயே தேடிக் கொண்டிருந்தாள். ஆனால் எல்லா train களும் இரவு நேரத்தில் வீடு சேர்வதாக இருந்ததால், பொறுமையற்று என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டே அனைத்து வண்டிகளின் நேரப் பட்டியலை அலை பாய்ந்தாள்.
சில நிமிட தேடலுக்குப்பின்., “ என்ன அங்கிள். இன்னிக்கு எந்த train -ம் எனக்குத் தகுந்தார் போல இல்லை" என்று சலித்துக் கொண்டாள் ஆதிரை.

அவளே பேசட்டுமென்று அமைதியாக இருந்தவர் “ஆதிமா. கோபத்தில் எடுக்கும் முடிவு சரியாகாது.” என ஆரம்பித்த சேகரை, அதற்குப் பதிலாக அவரை ஒரு பார்வை பார்த்தாள் ஆதிரை. அதன் பொருள் , 'என்னை அங்குப் பணி புரியச் சம்மதிக்க முயற்சி செய்யாதீர்கள்' என்று எச்சரிக்கை விடுவதாகவே இருந்தது.

அதனைத் தொடர்ந்து சேகரே பேசினார், “இல்லை ஆதிமா.. நீ அங்கே பணி புரிய வேண்டுமென்று கட்டாய படுத்த எனக்கு விருப்பமில்லை.. ஆனால் இப்போதே கிளம்ப வேண்டுமென்று அடம்பிடிப்பது தான் சரியாகாதென்று சொன்னேன். உனக்கு நாளைக் காலை 11.30 மணிக்குதானே train book செய்திருக்கிறாய். இப்போதென்ன அவசரம். ஒரு நாள் பொறுத்து போவதில் என்ன தவறு" என்று பொறுமையாக கேட்டார்.

சேகரின் பொறுமையான பேச்சு, ஆதிரையை சில நிமிடங்களில் நிதானத்திற்குக் கொண்டு வந்தது. “ஆமாம் அங்கிள் நீங்க சொல்வது சரிதான். நான் ஏன் அவசரப் பட வேண்டும். ஆனால் அவரின் company-ல் தங்க மாட்டேன்.” என்று அர்ஜூன் சென்ற திக்கைக் காட்டி ஆதிரை சொன்னாள்.

அதற்குப் புன்னகை செய்த காதம்பரன், “ அது அர்ஜூனின் company இல்லையம்மா. அவன் மேற்பார்வைக்கு மட்டுமே !!. அதன் உரிமையாள் அஸ்மிதா!!” என்றார்.

“என்ன அஸ்மிதாவா!. அவங்க யார்! “ என்றாள் ஆதிரை.

“அதை விடுமா! நீ தான் எங்க கிராமத்திற்கு வருவத்ற்கில்லையே. அதனால் அஸ்மிதா பற்றிய கவலை வேண்டாம். அஸ்மிதா ஒரு நாளும் உன்னை அந்த company-ல் தங்கக் கூடாதென்று சொல்ல மாட்டாள். அதனோடு அவள் மிகவும் அன்பானவள். இப்படி இருக்க நீ அர்ஜூனின் company-ல் தங்கக் கூடாதென்றால் சரி. ஆனால் அஸ்மிதாவின் company-ல் தங்கலாம்" என்று கோர்வையாக சொன்னார் காதம்பரன்.

“ஓ.. அப்படியா. நான் இதோ இப்படிப் போனாரே அவரின் company என்று நினைத்தேப். சரிங்க அங்கிள். எனக்கு இப்போது எந்த பிரட்சனையும் இல்லை" என்றவள், 'யாரிந்த அஸ்மிதா!. அர்ஜூனின் அக்காவாக இருக்குமோ, இல்லை மனைவி! யாராக இருந்தால் என்ன, இனி அந்தக் கடுவன் பூனையைத் திருப்பி கேட்கமுடியும் ,’ நான் இருப்பது உங்க company – ல் இல்லை. அதனால் என்னிடம் அதிகாரம் செய்ய உங்களுக்கு அதிகாரமில்லையென்று' என் மனதுள் நிம்மதியுற்றாள்.

ஒருவாறு ஆதிரை அமைதி அடைந்ததை எண்ணி காதம்பரன் மற்றும் சேகர் ஒரு நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஆதியிடமிருந்து ராஜாவைப் பிரித்து அவனை பட்டினியாக விட்டது தப்பு
ஆதிரையின் கோபம் நியாயம்தான்
அஸ்மிதா யாரு?
புதுசா இருக்கே
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top