தூரம் போகாதே என் மழை மேகமே!! -13

Advertisement

Yogiwave

Writers Team
Tamil Novel Writer
அத்தியாயம் - 13
main-qimg-624c51f7bbaee0b441e15b97c59d36e9-c.jpeg
ராஜேந்திரரின் குடும்ப வழக்கபடி அவர் குடும்ப வாரிசுகளுக்கு இந்திரன் என்று முடியும்படியே பெயர் வைப்பர். அர்ஜூனுக்கும் அப்படியே வேறு பெயரிட்டார் ராஜேந்திரர். ஆனால் கஜேந்திரனுக்கு இவற்றிலெல்லாம் விருப்பமில்லை.

"பழமை அது இதென்று என் பிள்ளைகளுக்கு இது போல பெயர் வைக்க வேண்டாம். சாபம் என்று சொல்லி இவ்வளவு காலம் அந்த ஊர் மக்களையும் ஊரிலே அடைத்து வைத்திருந்தீர்கள். முதலில் நானாக வெளியில் வரவில்லையென்றால் இன்னும் எத்தனைக் காலம் இப்படி எந்த வசதியுமற்ற அந்த நடுக்காட்டில் இருந்து கொண்டிருப்போமா தெரியவில்லை!? இப்போதாதவது மக்களுக்கு வெளியுலகம் இருப்பது தெரிந்ததே! அதுவரை சந்தோஷம். அதனோடு நமக்கும், ஒரு பெண் குழந்தையாக அம்முவும் பிறந்துவிட்டாள். இனி அந்தச் சாபமெல்லாம் முறிந்துவிட்டது. இனியாவது ஏதும் பிதற்றாமல் ஊருக்குள் வந்து வாழுங்க. ஊர் மக்களுக்கும் வெளியுலகில் வாழ்வாதாரம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு இங்கு என்னுடன் வந்துவிடுங்க." என்றார் கஜேந்திரன்.

அதற்குப் புன்னகையை பரிசாகத் தந்த ராஜேந்திரன் , ' நானும் சாபம் முடிந்ததாகத்தானே எண்ணினேனடா. ஆனால் அது அப்படி இல்லையே! எல்லாம் என் இறுதிக் காலத்தில் எல்லோரும் அறிந்து கொள்வாய்' என எல்லாம் அறிந்தவராக எண்ணினார். அவருக்குப் பதிலேதும் சொல்லாமல் விலகிச் சென்றார்.

இதனால் கோபம் கொண்ட கஜேந்திரன் அடிக்கடி சிம்லா வருவதை தவிர்த்தார். ஆனால் அர்ஜுனுக்கும் அம்முவுக்கும் எல்லாப் பிள்ளைகளை போல தன் தாத்தா பாட்டி வீடென்றால் கொள்ளை பிரியமாகிப் போனதில் ஆச்சரியமில்லை. அவர்கள் சிறு வயதில் இருக்கும் போது , காதம்பரனே அவர்களை லண்டனிலிருந்து சிம்லா அழைத்து வருவார். சில சமயங்களில் , தன் சகோதரனையும் கஜேந்திரனையும் சந்திக்கச் செல்லும் சேகரும் அவர்களை அழைத்து வருவார். இவ்வாறாக நாட்கள் கடந்து செல்ல அர்ஜுனும் அம்முவும் அவனது கல்லூரி படிப்பை முடிக்கும் காலம் வந்தது. அவர்கள் இருவருமாகவே தனியாக வர ஆரம்பித்திருந்தனர். அப்படி வந்திருந்த போதுதான் தன் பாட்டி அம்முவிடம் சிற்ப கலை, நடன கலை , ஓவிய கலையென தமிழர்கள் சிறந்திருந்தது பற்றியும் அவற்றிற்கான தடயங்கள் தமிழத்தில் இருப்பதாகவும் கூறினார். ராஜந்திரனும் அர்ஜூனிடம் தன் முத்தெடுக்கும் தொழிலை பற்றிக் கூறினார். தங்களுக்கென்று சொந்தமாக 4 கப்பல்கள் சென்னையில் இருப்பது குறித்தும் கூறினார். இதனால் ஆர்வமான அர்ஜூனும் அம்முவும் தமிழகத்திற்கு புறப்பட்டனர்.

தமிழக மக்களின் கலாச்சாரத்தை அறிய விரும்பிய அம்மு முதலில் அர்ஜுனுடனே தன் camera வுடன் சென்றாள். ஆனால் அதிலெல்லாம் ஆர்வமற்ற அர்ஜூன் மாமல்லபுரத்தோடு நின்று கொண்டான். 'எனக்கு ரொம்ப போர் அடிக்குது. நீயே யோய்ட்டு வா அக்கா. நா தாத்தா கூட கப்பல போய் பாத்துட்டு வரேன். எப்படி முத்தெடுக்கிறாங்க! ஆச்சரியமாக இருக்குல! ' எனச் சொல்லி தானாக நழுவிக் கொண்டான் அர்ஜூன். ஆனால் அதுவே தன் அக்காவைப் பிரிவதற்கும் காரணமாகக் கூடுமென்று அப்போது அர்ஜூனுக்கு தெரியவில்லை..
தன் தம்பியை நன்கு அறிந்திருந்த அம்முவும் " சரிடா தம்பி. உன் விருப்பம். ஆனால் நான் இங்கு சில மாதங்கள் research பண்ண போரேன். நீ வேண்டுமென்றால் லண்டன் போயேன். இங்கு எனக்கு என்னோட fashion வேலைக்கு நிறைய idea கிடைக்கும் போல இருக்கு. பாரு! ஒரு இடத்துக்குப் போனதற்கே எனக்கு எவ்வளவு மாடல் தோன்றியிருக்கு. பாரு" என்று தன் laptop -ஐ காட்டினாள்.

"அது சரி உனக்குப் பிடித்ததை என்னிடம் காட்டினால் எனக்கென்ன தெரிய போகுது. உன் விருப்பம் போல செய்யக்கா. நான் இதிலெல்லாம் தலையிட மாட்டேன். " என்று ஆர்வமற்று கூறினான் அர்ஜூன். அர்ஜூனின் மனக் கண்ணில் தான் சென்று வந்த கடல் பயணமும், கப்பல் ஓட்டியவர் சொன்ன வழிமுறைகளுமே புத்துணர்ச்சி தருவதாக இருந்தது. அந்தக் கற்பனையில், தன் அக்காவின் ஆர்வம் கண்ணில் படவில்லை. ஆனால் அந்த விட்டேற்றியான செய்கையே அவன் அக்காவின் முக்கிய முடிவைக் கூட தன்னிடமிருந்து மறைக்கும் சூழலை ஏற்படுத்தக் கூடுமென்று அர்ஜூனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

தன் அக்கா தமிழ் நாட்டில் தன்னிடம் சொல்லாமல் யாரையோ திருமணம் செய்து கொண்டதை கேட்ட பிறகு அவன் அக்கா மீதும், அவன் அக்காவை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட அந்தக் குடும்பத்தின் மீதும் அர்ஜூனுக்கு தீராத கோபம் உண்டானது. தன் மீது அளவில்லா பாசம் கொண்டிருந்த தன் அக்கா தன் திருமணத்தையே தன்னிடம் மறைக்க என்ன காரணம். என்னைவிடவும் அந்த அந்நியர்கள் மீது அவ்வளவு பாசம் வந்துவிட்டதா!. என்று அவர்கள் மீது இருந்த கோபம் இரண்டு மடங்கு அதிகனது. தன்னிடம் சொல்லியிருந்தால் நானே அவர்களைப் பற்றி விசாரித்து நல்லவரென்றால் திருமணம் செய்து வைக்க எல்லோருடைய அனுமதி பெற்று தந்திருப்பேனே. நான் அவ்வளவு தூரமாகிவிட்டேனா. என் அக்காவிற்கு' என்று ஆதங்கம் கொண்டிருந்தான் அர்ஜூன்.

அவன் அக்காவின் திருமணத்திற்கு பின்பு ,சிம்லா வராமலே இருந்த அர்ஜூன் இப்படி தன் தாத்தா பாட்டியை விட்டு விலகி இருப்பது சரியாகாதென்று ஒரு வருடத்திற்குப் பின் மீண்டும் சிம்லா வந்தான். ஆசையாக தன் தாத்தாவுடன் கப்பலேறி செல்லலாமென்று வந்தவனுக்கு பெரும் அதிர்ச்சியாகிப் போனது.

அவனது தாத்தா உடல் சுகமில்லாமல் படுத்தப் படுக்கையாக போயிருந்தார். அம்முவின் திருமணத்திற்கு பிறகு கஜேந்திரன் தன் பெற்றோரை மிகவும் வெறுக்க ஆரம்பித்திருந்தார். கஜேந்திரன் காதல் மணம் புரிந்தவர் என்ற போதும் , தன் குடும்பத்திற்கே ஒரே பெண்ணான அம்முவிற்கு வீட்டோடாக மாப்பிள்ளை பார்க்கவே எண்ணம் கொண்டிருந்தார். ஆனால் அம்முவின் மணமாறி இப்படியெல்லாம் நடக்கத் தன் பெற்றோரே காரணமென்று அவர்கள் மீது மிகுந்த கோபம் கொண்டிருந்தார், அதனால் கொஞ்சம் கொஞ்சமாக phone பேசுவதையே குறைத்திருந்தவர். சில மாதங்களுக்கு முன்பு பேசுவதையே நிறுத்திவிட்டார். அர்ஜூனும் அவர்களுடன் பேசுவதை வெகுவாக தடை செய்திருந்தார். திடீரென்று அர்ஜூன் இந்தியா செல்ல போவதாகச் சொன்ன போது வியப்பாக கஜேந்திரன் அர்ஜூனை நோக்கினார். பின் உன் விருப்பம் போல் செய் என்றார். அவ்வாறாகவே அர்ஜூன் இங்கு வந்திருந்தான்.

அர்ஜுனை காண்பதற்காகவே உயிரை வைத்திருந்தவர் போல படுக்கையிலிருந்த ராஜேந்திரன் , அர்ஜூனிடம் சில சத்தியங்களை வாங்கிக் கொண்டார்,. சிவசக்தி பாட்டி உயிருடன் இருக்கும் காலம் வரை இந்தக் கிராமத்திலே அர்ஜூன் இருக்கும்படியும் , அவருக்குப்பின் இந்த ஊர் மக்களுக்கு காஞ்சிபுரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஏக்கர் நிலம் என்றவகையில் நான் ஒரு பெரிய இடம் வாங்கி வைத்திருக்கிறேன். அவற்றை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அந்த முத்தெடுக்கும் தொழிலை முடிந்தவரைத் தொடர வேண்டுமென்றும் சத்தியம் வாங்கிக் கொண்டார். சாகும் தருவாயில் அவர் கேட்டதை அர்ஜூனால் மறுக்கவும் முடியவில்லை.

அர்ஜூனை பேலல்லாமல் அம்முத் தன் தாத்தாவையும் பாட்டியையும் பார்க்காமல் இல்லை. அடிக்கடி phone – ல் பேசுவதும் , சில சமயம் தன் தாத்தாவை நேரில் காண இந்திரா enterprises க்கு செல்வதும் வழக்கமாகக் கொண்டிருந்தாள். சில மாதங்களாக தன் தாத்தா சென்னை வராததால் phone செய்தவள் , தன் தாத்தா உடல் நிலை கேள்வி பட்டு உடனே கிளம்பி வர எத்தனித்தாள். டெல்லி வரை பாதுகாப்பாக வந்த அவள், அதன் பின் வர முடியாமல் அந்த விபத்து இதோ அதோ என்று நடந்தே விட்டது. அர்ஜூனின் தாத்தா போகும் முன்பே அவள் அக்காவை இழந்துவிட்டான் அர்ஜூன்.. இதனை கேள்வியுற்ற ராஜேந்திரரும் தன் உயிரைவிட்டார்.

அதன்பிறகு தன் தாத்தாவிற்குக் கொடுத்த வார்த்தையைக் காப்பாற்றும் விதமாகவும் முத்தெடுக்கும் தொழிலில் இருந்த ஆர்வமும் அர்ஜூனை இந்தியாவைவிட்டு வெளியில் செல்ல விடவில்லை.
 

banumathi jayaraman

Well-Known Member
அர்ஜுனுக்கு தாத்தா வைத்த பெயர் "திகேந்திரன்?"
அதனாலதான் அன்னிக்கு கடலில்
ஆதிரை இவனை "திகேந்த்'"-ன்னு கூப்பிட்டாளா?

ஆதிரையை கடலுக்கு கூப்பிட்டது
யாரு?
ஆதிரையின் அம்மாவா?
இல்லை ரித்திகாவா?

தாத்தாவைப் பார்க்க வந்த அம்மு @ ரித்திகாவுக்கு எப்படி விபத்து ஏற்பட்டது?
ஏன் அந்த விபத்து நடந்தது?
அம்முவுடன் அரவிந்த்தும் வந்தானா?
அந்த விபத்தில் இவர்கள் இருவரும்
இறந்து விட்டார்களா?

தன் ஊர் மக்களுக்கு நல்லதே
செய்யும் கஜேந்திரனின்
குடும்பத்துக்கும் எதிரிகள்
இருக்காங்களா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top