தூத்துக்குடிக்காரன் காதல் கவிதை

Advertisement

Sornasandhanakumar.S

Writers Team
Tamil Novel Writer
வீட்டின் முதல் அறைக்கு ஊரில் தார்சா என்று பெயர். சென்னி என்பது சுத்தமான தமிழ்ச்சொல். சிலப்பதிகாரத்தில் சென்னி என்ற சொல் பய்னபடுத்தப்பட்டிருக்கிறது. சென்னி என்றால் உச்சந்தலை என்று பொருள். சென்னியைப் பெயர்த்து எடுத்து விடுவேன் என்று திட்டுவது வழக்கம். இன்று அந்த சொல் வழக்கில் இல்லை. அதுபோல பாட்டிமார் அணியும் பாம்படம் என்ற சொல்லும் புழக்கத்தில் இல்லை. செடிசேத்தை என்றால், பாம்பிரணை போன்ற பூச்சிகளைக் குறிக்கும் சொல். ஊரில் பாம்பிரணையை, சாம்பிராணி என்றுதான் சொல்வார்கள். கோடி என்றால் புத்தாடை என்று பொருள். கோடி என்ற சொல்லும் புத்தாடை என்ற பொருளில் சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்டிருக்கிறது. ஈரக்கொலை என்றால் நெஞ்சு என்று அர்த்தம். ஒடங்காடு என்றால் கருவேலங்காடு. மூதேவி என்ற சொல்தான் சுருங்கி மூதி என்றாகி விட்டது. கறுக்குமட்டை என்றால் பனைமட்டை.
ஊர்விட்டு வந்ததிலிருந்து இந்த வார்த்தைகள் ரொம்ப மிஸ் பண்றேன் என்னோட பாஷையை நானே மறந்து ஃபீல். ஊர் போனால் தான் எம் தமிழ் பேச்சுகளைக் கேட்க முடியும்
 
Sainandhu

Well-Known Member
வட்டார மொழி கவிதை அருமை....
தார்சா என்ற வார்த்தைக்கு தான் அர்த்தம் தேவை...
கவிதையை புரிந்து கொள்வதில் கஷ்டம் ஒன்றும் இல்லை....
 
Rajesh Lingadurai

Active Member
வட்டார மொழி கவிதை அருமை....
தார்சா என்ற வார்த்தைக்கு தான் அர்த்தம் தேவை...
கவிதையை புரிந்து கொள்வதில் கஷ்டம் ஒன்றும் இல்லை....

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. வீட்டின் முதல் அறையை தார்சா என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட ஹால் (Hall) மாதிரி.
 
Suvitha

Well-Known Member
ஹா ஹா ஹா. அருமையா இருக்குங்க. இதுக்கு ஏன் சாரி எல்லாம் சொல்றீங்க. நீங்க சொன்ன கோட்டிக்காரி, கோட்டிக்காரன் போல மேலும் சில வார்த்தைகளை சேர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. பாம்படம் என்ற சொல் அங்கு வழக்கில் உண்டு. பாட்டிமார்கள் அணியும் கம்மல் போன்றது, ஆனால் கம்மலை விட மிகவும் பெரியதாக இருக்கும். அதை அணிந்து காதே ஊஞ்சல் போல நீளமாக தொங்கும். இது போல இன்னும் பல வார்த்தைகள் உண்டு. பாம்படம் என்ற சொல்லை மறந்தது சற்று வருத்தமளிக்கிறது. உங்கள் பாராட்டுகளுக்கு மிகவும் நன்றி.
ஹாய் bro பாம்படம் எங்க அப்பாமை போட்டு இருப்பாங்க.
 
Suvitha

Well-Known Member
அருமையான வட்டார மொழி கவிதை சகோதரரே...
நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்கப்பட்டவ.
எனக்கே ஆரம்பத்தில் நிறைய வார்த்தைகள் புரியாது.
கோட்டிகாரன்,கோட்டிக்காரி, தார்சா,தவசிபிள்ளை இப்படி நிறைய வார்த்தைகள் தெரியாது.
தவசிபிள்ளை னா ஏதோ ஒரு ஆளோட பெயர் என்று நினைத்திருந்தேன்.
கடைசியில் தான் தெரியவந்தது cook என்று.இப்போ எல்லாம் நன்றாக புரிகிறது.
என்ன நான் பேசுவது தான் இங்கு உள்ளவர்களுக்கு இன்னமும் கொஞ்சம் புரிவதில்லை.
 
ரொம்ப நன்றி. நீங்க சொன்ன மாதிரி தவசிப்பிள்ளை என்ற வார்த்தை பிற ஊர்களுக்கு புரியாது. நீங்கள் கன்னியாகுமரி வட்டார வார்த்தைகளை பயன்படுத்தி கவிதையோ, கட்டுரையோ எழுதலாம். எங்களுக்கு கன்னியாகுமரி மொழிநடை அதிகமா தெரியாது. நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்வோம்.
 
Rajesh Lingadurai

Active Member
ஹாய் bro பாம்படம் எங்க அப்பாமை போட்டு இருப்பாங்க.

ஓ.. அருமை.. செவுள் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தூத்துக்குடி, திருநெல்வேலியில் கன்னத்தைதான் செவுள் என்று சொல்வார்கள்.
 
Suvitha

Well-Known Member
ஓ.. அருமை.. செவுள் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தூத்துக்குடி, திருநெல்வேலியில் கன்னத்தைதான் செவுள் என்று சொல்வார்கள்.
கேள்வி பட்டிருக்கிறேன் சகோதரரே.
 
Suvitha

Well-Known Member
ரொம்ப நன்றி. நீங்க சொன்ன மாதிரி தவசிப்பிள்ளை என்ற வார்த்தை பிற ஊர்களுக்கு புரியாது. நீங்கள் கன்னியாகுமரி வட்டார வார்த்தைகளை பயன்படுத்தி கவிதையோ, கட்டுரையோ எழுதலாம். எங்களுக்கு கன்னியாகுமரி மொழிநடை அதிகமா தெரியாது. நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்வோம்.
முயற்சி செய்கிறேன் சகோ.
கன்னியாகுமரி மாவட்ட மக்களிடமிருந்து மக்ளே என்றும் குட்டா என்றும் தன் பிள்ளைகளை அழைக்கும் வார்த்தைகளை பிரிக்க முடியாது சகோ.
உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் இந்த வார்த்தைகளாலேயே பிள்ளைகளை கூப்பிடுவாங்க சகோ.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top