தீராத தேடல்... அத்தியாயம் 7

Bharathi Nandhu

Writers Team
Tamil Novel Writer
#1
தீராத தேடல்

அத்தியாயம் 7


தாராவின் கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் நிறைய மாற்றங்கள் உள்ளன..அவளோட கடந்த கால நினைவுகளை நோக்கி மனம் நகர்ந்தது..

அவளே துருவ் நினைக்க மறந்தாலும் அவனோட மெசேஜ் நியாபக படுத்தும்.. அவன் கிட்ட கெஞ்சியும் பாத்துட்டா மிரட்டியும் பாத்துட்டா பட் அவன் மெசேஜ் மட்டும் அனுப்பிட்டு இருப்பான்..‌

அவள கட்டுபடுத்த முயற்சி செய்து முடியாமல் அவனிடமே மீண்டும் வருவாள்..அவனின் காதலை தாண்டி அவனுடைய உரிமை பிடித்து போயிற்று..துருவ்ன் நினைவுகள் தொடர்ந்து அவளை வதைத்தது..

கரிசனை பார்வை மட்டுமே பார்த்த அவளுக்கு அவனின் காதல் பார்வை அவளை இம்சை செய்ததது.. மனிதர்கள் மற்றவர்களின் மீது கருணை பார்வை மட்டுமே பார்த்த பழகி விட்டனர்.. அவர்களின் நிலையையும் கருணை பார்வையின் வலியையும் அவர்கள் உணர்ந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றே சொல்லலாம்.. அப்படி பட்ட பார்வையின் பிடியில் தாராவும் தப்பவில்லை.. படிக்கும் போது நட்பு எதிர்பார்த்த அவளுக்கு அதற்கு மாறாக கருணை பார்வை அவள் மீது வீசி
சென்றனர்..அதனாலையே அவளது மனம் தனிமையை தேடி சென்றது..

கல்லூரி நாட்களில் கூட அவளுக்கு நெருங்கிய தோழிகள் யாரும் இல்லை.. யாருக்கும் இடையூறு தராமல் அவளுடைய படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினாள்..வேலை செய்யும் இடங்களிலும் நட்பு வட்டாரத்தை தவிர்த்தாள்..அவளது தனிமையும் அவளை பின் தொடர்ந்தது..

துருவ் முதன் முதலில் அவனுடைய காதலை சொல்லும் தன்னிலை மறந்தாள்..அவன் சிவ சுந்தரின் மகன் என தெரிந்தது அவர் மேல் உள்ள மரியாதையின் காரணமாக அவனை நிகாரித்தாள்.. உதவி செய்த இடத்தில் அவர்களுக்கு நன்மை தரவில்லை எனினும் துரோகத்தை ஒருபோதும் தர கூடாது என மதர் கூறிய வார்த்தைகள் அவளது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது..

. ஒருவேளை துருவை காதலித்தால் சிவ சுந்தர்க்கு செய்யும் துரோகம் என எண்ணி அவளே விலகி இருந்தாள்..ஒரு பக்கம் மனம் கொஞ்சம் கொஞ்சமா அவன் பாக்க சாயத் தொடங்கியது..அவ்வபோது மூளை அவளது நிலையை விலக்கும் போது விலகி நிற்க முடிவு எடுப்பாள்..பல மணி நேரம் மூளையுடனும் மனதுடனும் போராடவே நேரம் இருந்தது..

மூளையும் மனதும் எப்பொழுதும் முரண்பட்டே இருக்கும்.. குழப்பமான சூழ்நிலையில் முடிவு எடுக்க தடுமாறும் இவை இரண்டும் வெவ்வேறு நிலையை கூறி இன்னும் பலவீனம் அடைந்து முடிவு எடுக்க தடுமாறும்..‌


துருவ் பற்றிய நினைவுகளில் மூழ்கி இருந்தாள்.. எப்பொழுதும் தவறாமல் மெசேஜ் வரும் இந்த முறை அவளது நினைவை அதிகமாக்க துருவ்விடம் இருந்து மெசேஜ் வந்து கொண்டே இருந்தது..அதை எடுக்க தடுமாறி மனமும் அவளை பார்க்க சொல்லி இம்சிக்க அதற்கு மேலும் அவளை கட்டுபடுத்த முடியாமல் பார்த்தாள்..

‌ " நாளைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..ரெடிஆ இருடி பொண்டாட்டி " னு மெசேஜ் வந்தது.. இன்னும் ‌என்ன எல்லாம் நடக்க போகுதோனு பயந்துட்டு இருந்தாள்..

‌ சூரியன் தன்னுடைய கதிர்களை மெல்ல மெல்ல வெளிக் கொண்டு வந்து இருந்த நேரம்..இந்த விடியல் நிச்சயம் அவர்களின் வாழ்வை மாற்றும் என்ற நம்பிக்கையில் துருவ் எப்போதும் இல்லாத புத்துணர்வு அதிகமாகவே இருந்தது.. ஏனெனில் அவனின் காதலை பார்க்க மீண்டும் நாமக்கலுக்கு பயணம் செய்தான்..விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தால் இன்னும் அவனுடைய காதல் வலிமை ஆகும் என்ற நம்பிக்கையில்..அவனின் பயணம் தொடர்ந்தது..

தாரா மொபைலை கையில் வைத்து அவனுடைய மெசேஜ்க்குகாக வெய்ட் பண்ணிட்டு இருந்தா.." தாரா உனக்கு என்னாச்சு நீ ஏன் அவரோட மெசேஜ்க்கு வெய்ட் பண்ணிட்டு இருக்கா‌‌..தாரா நீ சரி இல்ல " னு அவளோட மனசு கிட்ட சண்டை போட்டுக் கொண்டு இருந்தாள்.. எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக அவனுடைய நினைவு அவளை வாட்டி வதைத்தது..

ஆசிரமத்தில் இருந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து அவனுடைய நினைவில் மூழ்கி இருந்தாள்..அப்பொழுது

" ரொம்ப மிஸ் பண்ற போல "

தாரா குரல் வந்த திசையை பார்த்தாள்..காண்பது கனவா நிஜமா என்று பிரம்மிப்புடன் அவனை பார்த்தாள்.. அவளின் கன்னத்தை கிள்ளி விட்டு அவளை தீண்டினான்..பொய்யாக மொறைத்து விட்டு விலகி நடக்க ஆரம்பித்தாள்..

துருவ்.. அவன் நினைத்தது தான் என்று அவ பின்னாடியே போனான்..அவ திரும்பி பாத்துட்டே வேகமாக நடந்து போனா முன்னாடி யாரு இருக்காங்க கூட தெரியாம இடிச்சு நின்னா..அங்க மதர் இருந்தாங்க..

" தாரா என்னாச்சு "

பதில் சொல்லு முடியாம தினறினாள்..

துருவ், " மதர் உங்கள பாக்க தான் கூப்ட்டு போக சொன்னேன்.."

மதர், " நீங்க வரதா சார் சொன்னாரு..உள்ள வாங்க ..தாரா‌ அவர கூப்ட்டு வாடா " னு உள்ள போய்ட்டார்..

தாரா திரும்பி அவன பாத்த இதுக்காகவே வெய்ட் பண்ண அவனுக்கு அவள பாத்து ஸ்மைல் பண்ணான்.. வேணும்னே தடுமாறி விழு மாதிரி போனான்..தாரா அவன புடிச்சு உள்ள கூட்டிட்டு போனாள்..அவளோட கை கோர்த்து டைட்அ புடிச்சான்..மதர்அ பாத்ததும் கைய விட்டு தள்ளி நின்றான்..

‌‌. துருவ், " மதர் த்ரீ டேஸ் இங்க தான் இருக்க போறேன்..வேலை வேலைனு ரொம்ப ப்ரஷசர்ஆ இருக்கு..வெளிய போகனும்னு நினைச்சேன்..அம்மா தான் இங்க போக சொன்னாங்க.. எனக்கு இங்க எந்த இடமும் தெரியாது‌..சோ இங்க சுத்தி பாக்கலாம்னு வந்தேன் "

மதர், " சரி பா..உன்ன கூட்டிட்டு போக " னு யோசித்தார்

தாரா " ப்ளீஸ் கடவுளே..மதர் என்ன சொல்ல கூடாது " முனுமுனுத்துட்டு இருந்தாள்.. கடவுள் அவளுடைய வேண்டுதலை நிராகரித்து ," தாரா நீ கூட்டிட்டு போடா.." கடவுளை திட்டி தீர்த்து விட்டு துருவ்வை எரிக்கும் பார்வையில் பார்த்தாள்.. ஆனால் அவளுக்கு கிடைத்தது காதல் பார்வை மட்டுமே..

துருவ் , " நான் ப்ரஷ் ஆகிட்டு வரேன்.. இன்னும் ஹோட்டல் கூட போகல.. ரெடி ஆகிட்டு நானே வந்து கூட்டிட்டு போறேன் " சொல்லிட்டு கெளம்பிட்டான்..

மதர் , " தாரா நீயும் போய்ட்டு ரெடி ஆகுமா.."

ஒரு பக்கம் சந்தோஷமும் இன்னொரு பக்கம் சோகமும் கலந்து ரெடி ஆகிட்டு வந்தா..துருவ் அவள கூட்டிட்டு போனான்..

துருவ் , " எங்க ஃபர்ஸ்ட் போலாம் " தாரா அமைதியா இருந்தாள்.

துருவ் , " ஹே நிஜமாக இங்க எந்த இடமும் தெரியாது டி.. நீயே சொல்லு டி.. ஃப்ளீஷ் "

தாரா , " ஃபர்ஸ்ட் டைம் வெளிய வந்து இருக்கீங்க.. கோவிலுக்கு போலாம் "

துருவ், " எந்த சைடு போகனும் "

தாரா , " ரைட்ல டேர்ன் ஆகுங்க.. ஆஞ்சநேயர் கோவில் இருக்கு‌.அதுக்கு நேரா நரசிம்மர் கோவில் இருக்கு "

துருவ்..தெய்வ அருள்வெளிப்பாட்டில் நம்பிக்கையற்ற தன்மையில் இருப்பவன்..தாயின் கட்டாயத்தின் பேரில் அவ்வபோது தெய்வ வழிபாடுகளில் பங்கேற்பான்.. அதற்கு அடுத்து தாரா சொன்னதால் கோவில் போனான்..இரு கோவில்களிலும் வழிபட்டு விட்டு சன்னதி சாதனத்தில் அமர்ந்தனர்..

துருவ் , " மலைக்கோட்டைக்கு போலாமா "

தாரா , " இப்போ வேணாம்.. வெயில் அதிகமா இருக்கு.. நீங்க நடக்க மாட்டீங்க "

துருவ் , " நான் நடப்பேன்..போலாமா " னு மலைக்கோட்டையை நோக்கி நடந்தான்..

வெயிலின் தாக்கத்தினால் வேகம் குறைந்தது.. சூரியன் மேலும் கதிர்களை அதிகரிக்க ஒரு வழியாக மலைக்கோட்டையின் உச்சிக்கு சென்றனர்..நாமக்கலின் அழகை இரசிக்க இந்த இடமே போதுமானதாகஇருந்தது..
அதனை இரசித்து விட்டு நிழல் இருந்த இடத்தில் அமர்ந்தனர்..

துருவ் அவளோட கைய புடிச்சான்..." உன் கிட்ட லவ் சொல்லி த்ரீ மன்த் ஆகுது டி..என்ன தான் பிரச்சினைனு சொல்லு "

தாரா , " சொன்னா விட்டு போய்டுவீங்களா "

துருவ் , " சரியா இருந்தா போறேன் "

தாரா , " என்ன விட்டு விலகி போய்டுங்க.. யாரும் என்னோட லைஃப்ல வேணாம்.. இப்போ இருக்க மாதிரியே தனியாவே இருக்கேன் "

துருவ் , அவளோட கண்ணத்தை பிடித்து அவனின் கண்களை பாக்க செய்தான்.." இப்போ வரைக்கும் இருக்கறது உன்னோட தப்பு இல்லடி.. இதுக்கு மேல இருக்க கூடாது.. உனக்கு ஆசை இல்லையா??? உன்ன மட்டும் நேசிக்கற நான்..நம்ம காதலுக்கு அடையாளமா நம்ப‌ குழந்தைங்க..உன்ன மகளா பாத்துக்க என்னோட அப்பா அம்மா இருக்காங்க.."

தாரா‌ அமைதியா அவனோட கண்ண மட்டும் பாத்துட்டு இருந்தாள்..

துருவ் , " எனக்காக நீயும் நம்ம பொண்ணும் சண்டை போடும் போது உங்கள இரசிக்கனும்..எப்பவும் உன்ன இரசிச்சிட்டு இம்ச பண்ணிட்டு இருக்கனும்.. காற்று கூட போகாத அளவுக்கு ஹக் பண்ணி தூங்கனும்.. உன்னோட சின்ன சின்ன ஆசையை கூட நிறைவேற்றனும்.. கல்யாணம் பண்ணிக்கலாமா ???? "

அவனுடைய கண்களில் இருந்த காதலை கண்டு தன்னிலை மறந்த நிலையில் அவனின் ஆசையை சொன்னதும் வேற உலகத்தில் இருந்தவளை கடைசி வார்த்தை இன்னும் ஆழமாக மனதில் ஊன்ற அவன்‌ மீதான காதலும் துளிர் விட்டு வேகமாக எழுந்தது.. அவனின் ஏக்கத்தை புரிந்துகொண்டு சம்மதம் சொல்ல வந்தவளை அவனது கைப்பேசி தடுத்து நிறுத்தியது..

அவனுடைய கைகளில் இருந்த அவளது கையை வேகமாக எடுத்தாள்.. கண்களில் வரும் கண்ணீரை மறைத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள்..அவளின் நிலையை எண்ணி அவளே நொந்து கொண்டாள்.. தனக்கும் துருவ்க்கும் சிறிது கூட பொருத்தமில்லாத நிலையை எண்ணி மனம் இரணமாகியது.. அப்படி இருக்கையில் அவன் மீது கொண்ட காதலை தவிர்க்க முடியாமலும் ஏற்றுக் கொள்ள முடியாமலும் தவித்த நிலையை மனது வருந்தினாலும் திரும்பவும் மூளையுடன் சண்டை இட்டது..


துருவ் மொபைலை கட் செய்து விட்டு அவ பின்னாடியே போனான்..அவளின் காதலை புரிந்த அவனால் விலகலுக்கான நிலையை புரிந்து கொள்ள முடியாமல் போயிற்று.. மலைக்கோட்டையின் கீழே வந்தவன் அவளை காணாமல் திகைத்தான்..

அவனின் நிலை அறிந்தவளோ மதரிடம் வெளியில் வேலை இருப்பதால் உடனடியாக செல்ல வேண்டிய சூழ்நிலை என்று துருவ்விடம் சொல்லச் சொன்னாள்..மதர் உம் அவனிடம் அவள் சொன்னதை சொல்லிவிட்டார்..பின்பு அவன் தங்கி இருந்த ஹோட்டல்க்கு சென்று விட்டான்..

தாரா நேராக ஆசிரமத்தில் இருந்த அவளது அறைக்கு சென்றாள் யார் கண்களிலும் படாமல்.. இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை தனிமை கிடைத்ததும் கண்ணீர் கரை புரண்டு ஓடியது..அவளோ துருவ்வை மறக்க முயன்று முயன்று தோற்று போய்க்கொண்டே இருந்தாள்..

துருவ் அவனின் காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தீவிர சிந்தனையில் மூழ்கி இருந்தான்..

அடுத்த அத்தியாயத்தில் சந்திப்போம்....
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement