தீராத தேடல்... அத்தியாயம் 4

Bharathi Nandhu

Writers Team
Tamil Novel Writer
#1
தீராத தேடல்

அத்தியாயம் 4

துருவ் கிட்ட இருந்து தாரா வெளிய வர ட்ரை பண்ணிட்டு இருந்தா...பட் துருவ் அவள விடாம டைட்அ பிடிச்சுக்கிட்டான்....அத பாத்ததும் ஆதவ்க்கு கோவம் அதிகமாகிடுச்சு..

" தாராவ விடு னு அவன் பக்கம் இழுத்தான் "

தாரா பயத்துல ஆதவ் டைட்அ ஹக் பண்ணிகிட்டா...
துருவ் அவள இழுக்க பாத்தான் இப்போ அவ வரல... மறுபடியும் ரெண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருந்தாங்க.மதர் என்ன பண்றதுனு புரியாம இருந்தாங்க...

" சார் இங்க எதுக்கு சண்ட போட்டுட்டு இருக்கீங்க... அமைதியா இருங்க இல்லைனா வெளிய போங்க " அங்க இருந்த நர்ஸ் சொன்னாங்க...

" நான் ஏன் வெளிய போகனும்..இவ என்னோட பொண்டாட்டி...இவன முதல்ல போக சொல்லுங்க " அந்த இடமே அமைதியாகர மாதிரி கோவத்தின் உச்சியில் இருந்து சொன்னான்..

நர்ஸ் அவனோட கோவத்த பாத்ததும் அமைதி ஆகிட்டாங்க.. இவ்வளவு நேரம் பேசின போர்ஸ் அவன் பேசுனது வாய்ஸ் டோன் குறைஞ்சது....

" அப்போ நீங்க இவங்களுக்கு என்ன வேணும் " ஆதவ் பாத்து கேட்டாங்க...

" நான்..நான் " பதில் பேச தடுமாறினான்

தாராவோட பார்வை ஆதவ் விட்டு விலகல... ஏதாவது சொல்ல சொல்லி அவளோட பார்வையே கெஞ்சியது... சில நிமிடங்களிலேயே அங்கு நிசப்தம் நிலவியது..ஆதவ் ரொம்பவே தடுமாறினான்.. அப்படியே சொன்னாலும் துருவ் நம்ப மாட்டேன்னு அவனோட தோரணையே சொல்லியது... சில நிமிடங்களிலேயே அவனோட வாய்ஸ் கேட்டு அவன பார்த்தாங்க...

" இவ என்னோட ஃப்ரன்ட்... நானும் இவளும் ஒரே ஆசிரமத்தில தான் வளர்ந்தோம் "

" இத சொல்ல இவ்வளவு நேரமா " கேள்வி குறியோடு இருந்த பார்வை ஆதவ் நோக்கி நகர்ந்தது‌‌.

ஆதவ் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்... சூழ்நிலையை சரி பண்ண மதர் பேச தொடங்கினாங்க..

‌ " ஆதவ் இங்க எப்படி வந்த "

" உங்கள பாக்கனும் ஆசிரமத்துக்கு கால் பண்ணேன்.. அப்போ நீங்க இங்க வந்து இருக்கராத சொன்னாங்க... நானும் இன்னக்கி தான் தேனிக்கு வந்தேன்..... அதான் உங்களையும் பாத்துட்டு போலாம்னு வந்தேன் " நம்பற அளவுக்கு பொய் சொல்ல முயற்சி செய்தான்...

ஆதவ்... வந்ததும் தாராவ பாத்து விசாரிக்கனும் நினைச்சான்... தாரா னு மட்டும் இல்ல அந்த இடத்தில வேற எந்த பொண்ணு இருந்தாலும் கேள்வி கேட்க முடியாது மாறாக கருணை பார்வை மட்டுமே அவங்கள மேல விழும்..அந்த அளவுக்கு உடைஞ்சி போய்ருந்தாங்க...

இத எல்லாத்துக்கும் மேல அவனோட சின்ன வயத அழகாக்குன தாரா அங்க இருக்கறத பாத்ததும் பதறிட்டான்...அந்த பொண்ணு தாரா தான் தெரியாமலேயே அவ கிட்ட போனான்...

ஆதவன்.. இரண்டு வயதில் ஆசிரமத்தில சேர்ந்தான்.. கோவில் பக்கத்துல மயக்கம் போட்டு இருந்தான்னு‌ கொண்டு வந்து விட்டுட்டு போனாங்க... மயக்கம் தெளிந்தும் அவன் கேட்ட முதல் வார்த்தை.."சாப்பாடு வேணும் " ...மதர் அவனேட முகத்த பாக்கும் போதே ரொம்ப நாள் சாப்படலனு புரிஞ்சது...ஆதவ் ஐந்து வயதுல தாரா பிறந்து பத்து நாள்ல இங்க வந்தா...

அதுக்கு அப்புறம் தாரா கூட தான் அவனும் இருப்பான்... தாராவோட ஐந்து வயதுல ஆதவ்அ ஒரு குடும்பம் தத்தெடுத்துட்டு போய்ட்டாங்க.... தாராவோட அழுகை நிக்கவே ரொம்ப நாள் தேவைப்பட்டது...

அப்பறம் ஆதவ் சென்னை வந்துட்டான்.. அவனோட அப்பா அம்மா நல்லாவே பாத்துகிட்டாங்க..‌அவங்களோட பாசம் முதல்ல புதுஷா இருந்துச்சு அதுக்கு அப்புறம் அவங்களோட உண்மையான பாசத்துல இவனும் இணைஞ்சிட்டான்...


தாராவோட நினைவே இல்லாதவனுக்கு இந்த டைம்ல பாத்ததும் பழசு எல்லாம் நினைவுக்கு வந்தது... அப்போ மதர் அவன டச் பண்ணாங்க... தாரா இன்னும் பயந்து அழுதுட்டு இருந்தா...அவள சமாதானபடுத்தி படுக்க வச்சான்... தாரா அவனோட கையை விடாம புடிச்சிட்டு இருந்தா..

இவங்க பண்ணதுல மதர் அவளுக்கு சாப்பாடு கொண்டு வந்தத மறந்துட்டாங்க..ஆதவ் அத பாத்துட்டு அவளுக்கு ஊட்டுனான்.. அவளும் எதுவும் சொல்லாம சாப்ட்டா..‌.மதர் இரண்டு நாளா அவளுக்கு சாப்பாடு கொடுக்கும் போது சிரமப்படுவாங்க... இப்போ அவ சாப்டதும் ஆச்சரியமா பார்த்தாங்க...

துருவ்... அவளோட நெத்தியில அழுத்தமா கிஸ் பண்ணான்... தாராவுக்கு கண்ணீர் மட்டும் நிக்காம வந்தது.. கொஞ்சம் நேரம் அப்பறம் மதர் கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டான்...

தாராவ கூட்டிட்டு வெளிய நடந்துட்டு இருந்தான்.. அவளோட பார்வை எங்க எல்லாம் போகுதோ அவனும் அங்கேயே பாத்துட்டு இருந்தான்... சில சமயம் அவளோட பார்வை ஆச்சரியம் ஆகும் பல சமயம் சோகம் ஆகும்..அவளோட பார்வையே அவளுக்கு உள்ள இருக்க வலிய மறைக்க நினைக்குதுனு தெளிவா தெரிந்தது....


தூக்கம் வந்ததும் அவள உள்ள கூட்டிட்டு போய் படுக்க வச்சான்..அவ தூங்க நினைச்சாலும் அவளோட கடந்த காலம் அவள விடல...


துருவ்‌ அவனோட லவ் சொல்லிட்டு உள்ள போய்டான்..அவன பத்தி நினைச்சிட்டு இவளும் உள்ள போன....அந்த நாள் முழுவதும் சிவ சுந்தர் குடும்பம் அங்க தான் இருந்தாங்க..... கடைசியா டைம் ஆகுதுனு கிளம்பறேனு சொன்னாங்க..

" தாரா உன்னோட மொபைல் நம்பர் கொடுமா " சிவ சுந்தர் கேட்டார்..

அவருக்கு பக்கத்துல மர்ம புன்னகையோடு துருவ் உட்கார்ந்து இருந்தான்..‌அவன் தான் கேட்க சொல்றான் .. அதுவும் துருவ் கேட்டா கொடுக்கமாட்டானு அவனுடைய அப்பாவவே கேட்க சொல்றான்னு தாராவுக்கு நல்லா புரிஞ்சது.. அவளும் மறுக்காம சொன்னா...

அவங்க கிளம்பிய சில நிமிடங்களிலேயே அவளோட மொபைல்க்கு‌ மெசேஜ் வந்தது...

" லவ் யூ டி பொண்டாட்டி...மாமா போய்ட்டு சீக்கரமே உன்ன பாக்க வரேன்.. மிஸ் யூ "

அந்த மெசேஜ் பாத்துட்டு ரிப்ளை பண்ணல..துருவ் எதிர்பார்த்து தான் அவள முதல்ல எங்க பாத்தான்...லவ் பண்ணத எல்லாம் நெனைச்சுட்டு இருந்தான்...

ஒரு நாள்....அவனோட அப்பா கேபின்ல உட்கார்ந்து வேலை பண்ணிட்டு இருந்தான்... டேபிள் மேல நிறைய ஃபைல்ஸ் பேப்பர்னு அதிகமா இருந்துச்சு...அத எல்லாம் கீழ தள்ளிவிட்டான்..மீட்டிங் சீக்கிரம் போகனும் சோ அப்பறம் அரேஞ்ச் பண்ணிக்கலாம்னு விட்டுட்டான்.. அந்த இடத்த அவன் தான் அரேஞ்ச் பண்ணனும் ஏன்னா வேலை செய்யறவங்க யாரையும் பண்ண விடமாட்டாரு

‌ அவனும் மீட்டிங் முடிச்சிட்டு அவரோட கேபின்க்கு போனான்.. ஃபைல்ஸ் எல்லாம் டேபிள் மேல எடுத்து வச்சான்... அப்போ தான் தாரா அப்ளிகேஷன் பாத்தான்...

" தாரகை " னு சொல்லும் போது அவன‌ அறியாம இதழ் ஓரத்தில் புன்னகை...அவளோட போட்டோ பாத்ததும் இன்னும் அதிகம் ஆச்சு..அதுல தாரா ஸ்கூல் போட்டோ இருந்துச்சு...அவளோட கண்ணு போட்டோல பெரிசா இருந்தது...பட் அவன் நேர்ல பாக்கும் போது குட்டி கண்ணு..

ஸ்காலர்ஷிப்க்கு அப்ளே பண்ணி இருந்த.... அடுத்து அடுத்து மீட்டிங் சோ அத கவனிக்கவே இல்ல..உடனே பிஎ கிட்ட சொல்லி அரேஞ்ச் பண்ணான்...இத பத்தி அவனோட அப்பா கிட்டயும் இன்ஃபார்ம் பண்ணான்..‌‌.

அதுக்கு அப்புறம் அவளோட நினைப்பு அப்போ அப்போ வரும்..அத சோதிக்கர மாதிரி அவனோட அப்பாவும் அவளோட ஸ்காலர்ஷிப் பத்தியும்‌ அவள பத்தியும் பேசிட்டு இருப்பாரு.. இது எல்லாத்தையும் தாண்டி லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்..

ஒருநாள் தாரா சிவ சுந்தர்க்கு கால் பண்ணா..அவரு பிசியா இருந்தனால இவன் அட்டெண்ட் பண்ணான்..அவளோட நேம் சொன்னதும் கட் பண்ணாம பேசிட்டு இருந்தான்.. அவளும் அவர் மேல மரியாதைனால கட் பண்ணல‌....

எதுவுமே நடக்காத வரைக்கும் அந்த விஷயத்துல நம்பிக்கை வராது..துருவ் மட்டும் விதிவிலக்கு அல்ல..லவ்ல நம்பிக்கை இருக்கு பட் லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்ல இல்ல..அவன அறியாமையே மெல்ல மெல்ல அவனோட மனசு தாராவ நோக்கி பயணித்தது...

அவள பாக்கனும்னா அவங்க அப்பா நினைச்சா மட்டும் தான் முடியும் சோ அவரையே தாராவ பாக்க போலாம்னு சொல்ல வச்சான்..

அவனோட மூளையும் மனசும் ஒரே நேர்கோட்டில இருந்து லவ் சொல்ல வச்சிது.. அவள நேர்ல பாத்ததும் அவனோட லவ்அ சொல்லிட்டான்..இத தாரா மட்டும் இல்ல துருவ் கூட எதிர்பாக்கல..
நேரம் போனதே தெரியமா அவள பத்தி நினைச்சிட்டு இருந்தான்..

பல மணி நேரங்களுக்கு பிறகு ‌துருவ் குடும்பம் சென்னை ரீச் ஆகிட்டாங்க... அவளுக்கு மறுபடியும் மெசேஜ் பண்ணிட்டு அவனோட வேலைய பாத்துட்டு இருந்தான்...

இன்னொரு பக்கம் தாராக்கு அவன்‌ பண்றது புடிச்ச மாதிரியும் புரியாத மாதிரியும் அவன் கிட்ட புடிக்காத மாதிரியும் இருந்தா..அவன பாத்ததுல இருந்தும் சொன்னதுல இருந்தும் குழப்பத்தோட சுத்திட்டு இருந்தா.


ஆதவ்.. அடுத்த நாள் காலையில தாராவ பாக்க சீக்கிரமே எழுந்து ரெடி ஆகிட்டு இருந்தான்.ஹாஸ்பிடல் போனதும் அவனுக்கு முன்னாடியே துருவ் இருந்தான்..துருவ்க்கு ஆதவ் பாத்ததும் கோபம் வந்துடுச்சு.மதர் இருந்த நாள அவன் எதும் பேசல

‌‌ தாராக்கு சாப்பாடு ஊட்ட ட்ரை பண்ணாங்க.பட் அவ சாப்படல.. ஆதவ் இத எல்லாம் பாத்துட்டு அவ பக்கத்துல போய்ட்டு சாப்பாடுஊட்டி விட்டான்..
அமைதியா சாப்டா போதும்னு கூட சொல்லாம சாப்ட்டுட்டு இருந்தா..அவ ரொம்ப நாள சாப்படலனு ஆதவ் புரிஞ்சுது..

தாரா போதும்னு சொல்ற மாதிரி அவன பாத்தான்.அவளோட பார்வையோட அர்த்தம் புரிஞ்சி விட்டுட்டான். வாய் துடைச்சி விட்டு பெட் சீட் போத்தி விட்டான்..அவ வெளிய பாத்த சோ இவனும் அவள கூப்ட்டு போனான்..துருவ் அவங்க கூட போகல..

ஆதவ் அவ கூட பேசிட்டு நடந்துட்டு இருந்தான்.. அப்போ அவளோட முகத்தில சின்னதா புன்னகை எட்டி பாக்கும்..ஆனா இவன் பாக்கறதுக்குல அது மறைஞ்சிரும்..ஃபோன் கால் வந்ததும் கொஞ்சம் தள்ளி நின்னு பேசிட்டு இருந்தான்.

தாரா ரொம்ப நேரமா ஒரு பக்கம் பாத்துட்டு இருந்தா..ஆதவ் எங்க பாக்கறானு பாத்தான்..அவ பானிபூரி கடையை பாத்துட்டு இருந்தா.. இவனும் அவளுக்குகாக பானிபூரி வாங்கிட்டு வந்தான்..

அவளோட கண்ணுலேயே அவ்ளோ சந்தோஷம்..ஆனா அது கொஞ்சம் நேரம் கூட நீடிக்கல..ஆதவ் அவளுக்கு ஊட்ட போகும் போது வேகமா ஒரு கை தட்டிவிட்டு அவன பார்த்தாங்க..அத பண்ணது துருவ் தான்..

" இத எல்லாம் கொடுக்க கூடாது..நீ பண்றத எல்லாம் பொறுத்துட்டு இருப்பேன்னு மட்டும் நினைக்காத " சொல்லிட்டு தாராவ கூப்பிட்டு உள்ள போய்டான்.. தாரா கீழ கிடந்தத பாத்துட்டு போய்ட்டா..

துருவ் அவளோட இருந்துட்டு எப்பவும் போல கிளம்பிட்டான்.. தாரா படுத்துட்டு இருந்தா.. அவளுக்கு முன்னாடி அவனோட கையை நீட்டுனான்..அவ நிமிர்ந்து பாத்தா..ஆதவ் கண்ணுலயே ஓப்பன் பண்ணுனு சைகை பண்ணான்‌.. அவளும் ஓப்பன் பண்ணா அதுல பானிபூரி இருந்துச்சு..

" இப்போ யாரும் தட்டிவிட மாட்டாங்க.. " அவளுக்கு ஊட்டி விட்டான்..அவ சாப்டதும் அவ கிட்ட சொல்லிட்டு கிளம்பிட்டான்..அவன் போகற வரைக்கும் அவனையே பார்த்துட்டு இருந்தா..

மனசே இல்லாம அந்த இடத்த விட்டு போனான்..அவனுக்குகாக வெயிட் பண்ணிட்டு இருந்த கார்ல போனான்..போகும் போது அவனோட மனசுல

" என்க்கு புரியர விஷயம் கூட ஏன் துருவ்க்கு புரியல..அவளோட பார்வையே அவளுக்கு என்ன‌ வேணும்னு கரெக்ட் சொல்லுது.. இருந்தும் துருவ் ஏன் அவள புரிஞ்சாக்காம இருக்கான் "

‌ மனசு முழுக்க குழப்பத்தோடு போனான்... தாராவ பாத்ததுல இருந்து அவ எதுமே பேசல..பட் அவ சொல்லாமையே தேவையை புரிஞ்சிகிட்டு அவளோட கண்ணுல இருந்த ஏக்கத்த புரிஞ்சிகிட்டான்‌.. இவனுக்கு மட்டும் இல்ல தாராக்கும் இவன் கூட பேசலைனாலும் இவனோட அருகாமை தைரியத்த கொடுத்தது...

அடுத்த நாள் இவங்களோட நிலைமையை சதி செய்து விளையாட காத்துட்டு இருந்தது...
 
Advertisement

New Episodes