தீராத தேடல்... அத்தியாயம் 13

Bharathi Nandhu

Writers Team
Tamil Novel Writer
#1
தீராத தேடல்

அத்தியாயம் 13

இரம்மியமான காலைப்பொழுதில் பறவைகளின் கீச் குரலின் இசையோடு , மேனியை நடுங்க வைக்கும் குளிர் உடன் அழகான காலைப்பொழுது துவங்கியது...

தாரா சமையல் அறையில் இருக்க , அவளைத் தேடிக் கொண்டு துருவ்வும் போக, அவனுடைய அம்மாவும் இருப்பதால் எவ்வித சேட்டையும் செய்யாமல் அமைதியாக அருகில் சென்றான்‌..தாரா அவனை பார்த்து மர்ம புன்னகையை சிந்தினாள்..

தாரா ஒருபுறம் சமையல் செய்ய, துருவ் அவளை அழைக்க, கண்களால் அவனை மிரட்டலுடனும் கெஞ்சலுடனும் கேட்க , அதனை காதில் வாங்காமல் அவளை இம்சித்தான்..இடை இடையே துருவ் அம்மா வர,

" துருவ் ஆஃபீஸ் போகனுல இன்னும் ரெடி ஆகல...?? "

" போறேன் மா " என்றான் சலிப்பாக..

" தாரா..நீ வந்ததும் இந்த வீட்ல அதிசயம் நடக்கது டா.."

" என்ன அத்தை " என்றாள் புரியாமல்..

" கிட்சன்‌ எங்க இருக்குனு தெரியாதவங்க எல்லாம் இங்க வராங்க..நான் வேலைக்கு லேட்டா போலாம்னு சொன்னா கூட கரெக்ட் டைம்க்கு போகனும்னு எனக்கு க்ளாஸ் எடுப்பாங்க " என்றே கேலியாக கூற , தாராவின் புரிதல் வெகு சீக்கிரத்தில் வேலை செய்து துருவ்வை பார்க்க, அவனோ அசடு வழியும் புன்னகையை தூவினான்..

" காஃபி வேணும் "

" காஃபி வேணும்மா..இல்ல நான் போகனும்மா..?? "

" ஆப்சன்னே இல்ல நீங்க தான் " என்று முணுமுணுத்தான்..அது மிகத் தெளிவாக தாராவின் காதுகளில் பதிய அவனை கண்களால் மிரட்டிக் கொண்டிருந்தாள்..

துருவ் அம்மா இன்னொரு புறம் காய்கறிகளை நறுக்க, துருவ்விடம் இருந்து விலகி
நின்றவளிடம் கிஸ் வேணும் என்பதை மெளனமாக உணர்த்த, அவனின் அம்மாவை பார்த்து முடியாது என்று தலை அசைத்தாள்...

அவளை நெருங்கும் சமயத்தில் பின்னால் நகர்ந்தவளை பிடிக்கும் முயற்சியில் வேகமாக அவளின் பக்கத்தில் போகும் போது சற்றும் எதிர்பாராமல் வந்த அவன் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு, முழித்தவனை கண்டு தாரா குறும்பாக சிரித்தாள்.. அவனின் அம்மா,

" துருவ் என்னப்பா..?? "

" லவ் யூ மா " சமாளிக்கும் பொருட்டில் கூற,

மகனின் நிலையை அறியாத தாய் இவ்வுலகில் உண்டோ..???
அவன் சமாளித்த விதம் பிடித்துப்போய், பொய்யாக அவனை முறைக்க, மழுப்பிக் கொண்டே அவ்விடத்தை விட்டு வெளியேறினான்.. இருவரின் சந்தோஷத்தை எண்ணி அவரின் உள்ளம் குளிர்ந்து போனது...

அவன் சொதப்பிய நிலையை எண்ணி புன்னகைக்க, அதனை கலைக்கும் விதமாக அவனுக்கு கால் அழைப்பு வந்ததது..அதில் பேசியவனின் முகம் வாட, அறைக்கு வந்த தாரா அதனைக் கவனித்துக்கொண்டே அருகில் சென்றாள்..

" என்ன ஆச்சு "

" 1 வீக்.. மீட்டிங் விஷயமா டெல்லி போகனும் " வாடிய முகத்துடன் கூற, அவனை மேலும் நோகடிக்கும் மனம் இல்லாமல் பெருந்தன்மையுடன்,

" இதுக்கா..ஃபீல் ஆகுறீங்க..?? நீங்க போய்ட்டு வாங்க.. நானும் அத்தையும் ஜாலியா இருப்போம்.." என்று கூறினாள்..

அவளின் புரிதல் இவனின் முகவாட்டத்தை கண்டு மனதின் வலியை மறைத்ததோ..அதே புரிதல் அவளின் நிலைமையும் உணர்த்தியது..சில நிமிடம் அமைதியாக நின்றவளை ஆரத் தழுவினான்..அந்த பிணைப்பை விட மனம் மறுத்தது.. இருந்தும் அதில் மீண்டவள்,

" எப்போ போகனும்.. ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைக்கனும் " என பேச்சை மாற்றினாள்..

" இன்னும் 2 மணி நேரத்தில் "

" உங்களுக்கு இந்த வீக் மட்டும் தான் டைம்.. இனிமேல் எங்கையும் போகக்கூடாது "

" ம் " ஒற்றை முனுகலுடன் முடித்தான்..

ஆனால் வேலையோ இனிமேல் தான் அதிகம் செல்வான் என்பதை அழுத்தமாக உணர்த்தியது...

தாரா, அவனுக்கு தேவையான அனைத்தும் எடுத்து வைக்க, அதைத் தவிர வேறு என்னென்ன வேண்டும் என்பதை துருவ் கூறினான்.. அரைமணி நேரம் அவனை பேச விடாமல் இறுக அணைத்திருந்தாள்..

நேரம் அதிகமாவதால் அவனிடமிருந்து விலகி நின்றவளின் தவிப்பை உணர்ந்தவன் நெற்றியில் முத்தமிட முயன்றவனை கைகளால் தடுத்தவள்,

" நீங்க நெத்தியில கிஸ் பண்ணா.. என்னால உங்கள விட முடியாது.."

புரியாமல் அவளைப் பார்வையால் கேட்க,

" உங்களோட முத்தமும் , அரவணைப்பும் எப்பவும் உங்க பக்கத்துல இருக்கும் போது மட்டும் தான் கிடைக்கனும்.."

அதில் புரிந்தவன்‌ புன்னகையோடு சம்மதிக்க , பின்பு லக்கேஜ் எடுத்துக் கொண்டு கீழ் இறங்கி வந்தவனை, துருவ்வின் அம்மா கோபத்தில் எரித்து விடும் பார்வையை வீசினார்..

துருவ் அம்மா, " இப்போ தான் மேரேஜ் ஆச்சு.. அதுக்குள்ள எங்க டா போற..??? "

" ரொம்ப முக்கியமான மீட்டிங் மா..நான் கண்டிப்பாக போகனும் "

" எங்க உன்னோட அப்பா..?? " என்று சுற்றிலும் பார்த்தவர், அதே நேரம் அவர்களின் அறையில் இருந்த வந்தவரிடம்,

" உங்களுக்கு தான் பொறுப்பு இல்ல..??? எங்க கூட பேச டைம் இல்ல..?? இவனையும் மாத்தி வச்சிருக்கீங்க.. அப்படியே அப்பா மாதிரி வந்து இருக்கான்..நான் சொன்ன மட்டும் கேட்கவா போறீங்க...?? " என கோபத்தில் பொறிந்து தள்ளியவரை துருவ் அப்பா புரியாத புதிராக பார்த்தார்.. ஏனெனில் துருவ் டெல்லி போகிறான் என்பது அவருக்கு தெரியவில்லை..

" மா..நான் சொல்றத.."

" எதுவும் வேணாம்..தாரா இவன் போகட்டும் அப்படியே அப்பாவையும் கூட்டிட்டு போய் அங்கயே செட்டில் ஆகச் சொல்லுடா.. நாம மட்டும் இங்க இருக்கலாம்..தனியா இருந்தா தான் இவங்களுக்கு நம்ம அருமை புரியும்.."

துருவ் அப்பா, " தாரா எங்க மா போக சொல்றா..??? " என கேட்டவரை தாரா பரிதாபமாக பார்த்தாள்..

" நான் தான் தப்பு பண்ணிட்டேன்...இவனை உங்க கூட விட்டு இருக்க கூடாது.." என இடைவெளி விடாமல் பேசியவரை,

" தாரா உன்னோட அத்தைக்கு என்ன ஆச்சு...??? " கேட்டவரை துருவ் அம்மா முறைக்க, பின்பு துருவ் டெல்லி போகிறான் என்பதை கூறினாள்...

" ஏன்...?? நீங்க போலாம்ல‌ " என சொல்லியவரிடம் துருவ் அப்பா பேச முயல, இடைமறித்து, துருவ்

" மா.. அப்பாவுக்கு அந்த க்ளைமேட் செட் ஆகாது "

" அத்தை கோபப் படாதீங்க..இந்த டைம் மட்டும் தான் போகனும் சொன்னேன்..அடுத்த முறை நடக்காது " என்று கூறியவளின் வார்த்தையில் சற்று அமைதியானார்..

அவனும் பிரியாத மனதுடன் விடைபெற்று டெல்லி சென்றான்..பிரிவு அவர்களுக்கு பழகி இருந்தாலும் திருமணத்திற்கு பின்பு கண்ட இப்பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் கலங்குகின்ற மனதுடன் போராடினர்..

அவனுக்கான ஹோட்டல் அறையில் நுழைந்ததும் தாராவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான்..அதன் பின்பு சில குறுஞ்செய்தி மட்டும் தான் அவனிடம் இருந்து கிடைத்தது ஏனெனில் இவள் அனுப்பிய நிறைய குறுஞ்செய்திக்கு எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை...

மாறாக அவனின் வேலையில் முழுமையாக மூழ்கிக் கொண்டிருந்தான்..இடை இடையே கம்பெனி விஷயமாக சில நண்பர்களை சந்தித்துடன் மட்டும் இல்லாமல் அதைத் தவறாமல் வாட்ஸப்பில் அப்லோடு செய்ய, இரவில் அவனுக்காக நெடு நேரம் காத்திருந்த அவள் இவனின் செய்கையில் ஏமாற்றம் அடைந்தாள்.. அவனின் நிலையை புரிய முயன்று தோற்றுப்போனாள்..

ஒரு வாரம் நிம்மதி இல்லாமல் ஓடியது..அது முடிந்தும் தாமதமாக வந்தவனை துருவ்வின் அம்மா திட்ட, அவரிடம் இருந்து தப்பித்து அவனது அறைக்கு போக, இவனின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த தாரா அவனைக் கண்டதும் தாயைக் கண்ட குழந்தையாக முகமெல்லாம் மலர்ந்து அவனை கட்டியணைத்தாள்..

ஒரு வாரமாக அவனின் அருகாமை, அதில் இருந்த வாசம் இல்லாமல் தவித்தவளை இப்பொழுது அவனின் வசமும்,வாசமும் ஒரு சேர இணைத்தது..

துருவ், " நான் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன் " என்று நகர முயன்றவனை விடாமல் அணைத்துக் கொண்டாள்..

துருவ், "‌ஒரு வாரத்துல மாமா மேல இவ்வளவு பாசமா.. அப்போ இனிமேல் மாசம் மாசம் போக வேண்டியது தான் " என்று எதார்த்தமாக சொல்லியவனின் கைகளில் நறுக்கென்று கிள்ளினாள்..அதில் அவன் அலற,

தாரா, " ஷ்ஷ்ஷ்...நான் தான் உங்கள மிஸ் பண்ணிட்டு இருந்தேன்..நீங்க ரொம்ப ஜாலியா ஊர் சுத்திட்டு இருந்தீங்க!!..." என கூறியவளை‌ கடந்து ரெஃப்ரஷ் ஆகிவிட்டு இரகசிய புன்னகையுடன் அவளருகில் வந்தடைந்தான்..

துருவ் ," இந்த ஒன் வீக்ல நைட் அண்ட் டே என்ன பத்தி மட்டும் தானே நினைச்ச "

" ஆமா...அது தெரிஞ்ச நாள தானே வெறுப்பு ஏத்துனீங்க "

" இல்ல டி ராட்ஷசி..என்ன இன்னும் அதிகமா மிஸ் பண்ண வச்சேன் "

" என்ன சொல்றீங்க...புரியல "

" டெய்லியும் லேட் நைட் சேட்‌ , அப்பறம் மார்னிங் உன்கிட்ட பேசிட்டு இருந்தா..என்ன இவ்வளவு மிஸ் பண்ணி இருப்பியா...??? "

" இல்ல " என்று மேலும் கீழும் தலை ஆட்டினாள்..

" லேட் நைட் ப்ரண்ட்ஸ் மீட் பண்ண‌ தெரிஞ்ச எனக்கு , ஏன் வாட்ஸப்பல உனக்கும் பார்க்கற மாதிரி அப்லோடு பண்ணனும் "

" ஏன்...??? "

" ஏன்னா...நீ தூங்க போகறதுக்கு முன்னாடி என்ன பத்தின நினைவோடு தான் தூங்கனும்.. அப்போ தான் அடுத்த நாள் காலையிலும் என்ன பத்தின நினைப்பு இருக்கும் "

" இதுக்கா.. இப்படி பண்ணீங்க..??? "

"‌ மிஸ் பண்றேன் னு சொல்றத விட ஃபீல் பண்ணா வச்சேன் " காதலுடன் கூறினான்..

" ம்கும்.. அப்போ நான் மட்டும் தான் மிஸ் பண்ணேன் போல " முகத்தை சுழித்தவாறு கூறினாள்..

" என்ன சுத்தி நிறைய பேர் இருந்தாங்க.. ஆனாலும் உன்னோட அருகாமையை ரொம்ப மிஸ் பண்ணேன் டி..மிஸ் யூ பேட்லி "

அவன் கூறியதும் இமை இமைக்காது பார்த்த அவளை ,

" க்ளோஸ் யுவர் ஐஸ் " என்று அன்பு கட்டளையிட,

" மாட்டேன் " என்று மறுக்க, அதட்டலான பார்வையில் அவளின் விழியை மூடவைத்தான்..

அவளின் மென்மையாக விரல்களுக்கு இடையில் அவனது விரல்களை கோர்த்து அவளைப் பார்க்க, நாணத்தில் திணறி நின்ற அவளை இரசித்துக் கொண்டே மேலும் விரல்களுக்கு இடையே இறுக்க, அவனது. கண்களை பார்க்காமல் இருந்த விழியின் மீது பார்வை படர்ந்து கொண்டே அவளின் கைகளில் கண்ணாடி வளையல்களை அணிந்தான்..

அதில் மகிழ்ந்தவள் அவனைப் பார்க்க, விழிகளில் வசியம் செய்துக் கொண்டிருந்தான்..கைகள் விடுபட்டும் விலக்க விருப்பமில்லாமல் கைக்கோர்த்தாள்..

" பொண்டாட்டி "

" ம்ம்.. சொல்லுங்க "

" அது வந்து "

" வந்து..."

" அதான் டி அது‌ "

" என்ன " அவனது நெஞ்சினுள் புதைந்து கூற,

" ரொம்ப பசிக்குது டி "

" போடாங்க..." அவனை விட்டு வேகமாக விலகினாள்..

" ஏன் டி.. நிஜமாகவே ரொம்ப பசிக்குது " என்று பாவமாக கூறியவனை கண்டு மனமோ துடித்தது..

" நான் போய்ட்டு எடுத்துட்டு வரேன் " என நகர்ந்தவளை ஒரே எட்டில் அவளின் இடையை பற்றி, நெருக்கமாக நிற்க வைத்தான்..
முகப் பாவனைகளை மாற்றிக் கொண்டே இருந்தவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தத்தை பதித்தான்‌‌..

" புருஷன டா எல்லாம் சொல்லக்கூடாது "

அவனிடம் இருந்து விலகி கதவுக்கு அருகில் சென்று,

" அப்படி தான் டா கூப்டுவேன்...என்னடா பண்ணுவா..?? டால்டா.. " சொல்லிக்கொண்டே கிட்சனுக்கு சென்றவளை கண்டு மனம் மகிழ்ந்தது..

அவளுக்காக தேடித் தேடி வாங்கிய அனைத்தையும் அவனே பிரித்துக்காட்ட, அதில் மகிழ்ந்தவளை கண்டு அவனின் உள்ளமும் இன்பம் கொண்டது...

அடுத்த அடுத்த நாள் முழுவதும் அவளுடன் கழிய, தாராவை விட துருவ் அம்மா அதீத மகிழ்ச்சியில் சுற்றித் திரிந்தார்..

பிடித்தமானவர்களோடு இருக்கையில் நேரம் வேகமாக நீண்டு செல்லும் என்பது போல அவர்களின் நேரமும் காதலும் நீண்டுகொண்டே சென்றது..

சோகமும் மகிழ்ச்சியும் கலந்த வாழ்க்கையில் சோகத்திற்கு மட்டுமே நிரந்தர இடமில்லை..சோகமுடன் கழிந்த நாட்கள் விரைவில் பெரும் இன்பத்தை தரும் நேரம் வந்தது...

என்ன என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்...
 
Last edited:

Advertisement

Sponsored